Duel –(1971)
ஸ்டீவன் ஸ்பீல்பெர்க இயக்கிய முதல் படம். மிக குறைந்த கேரக்டர்களை வைத்து எடுக்கப்பட்ட படம். நம்மை சீட்டின் நுனியில் உட்கார வைத்துவிடும். 0 தொழிலதிபரான டேவிட்மான் ஒரு மீட்டிங் விஷயமாய் கலிபோர்னியா பாலைவன ரோட்டில் வேறு ஒரு ஊருக்கு அவசரமாய் போய் கொண்டிருக்க, தன் முன்னே ஓடும் ஒரு பழைய அழுக்கடைந்த டாங்கர் லாரி மிக மெதுவாக செல்ல, அதை முந்துகிறார். அதிலிருந்து ஆரம்பிக்கிறது கதை. தன்னை முந்திய காரை, மீண்டும் முந்தி வந்து, பழையபடி மெதுவாக செகிறது அந்த டாங்கர் லாரி, மீண்டும் மான் டாங்கரை முந்த, இம்முறை அந்த டாங்கர் மானின் காரை இடித்து அவரை கொல்ல முயற்ச்சிக்கிறது. என்னை செய்வது என்று தெரியாமல் மிரண்டு போகிறார் மான். மிக வேகமாய் வண்டியை ஓட்டி போய் விடலாம் என்று மிண்டும் ஓவர் டேக் செய்து போக, எமன் வேகத்தில் டாங்கர் துரத்த, மயிரிழையில் தப்பிக்கிறார். சரி போகட்டும் அவன் என்று ஒரு பாரில் நிறுத்தி இளைபாறிவிட்டு போகலாம் என்று நினைத்து, பியர் சாப்பிட்டு க்கொண்டிருந்தால் மீண்டும் அந்த டாங்கர் ரிவர்ஸ் வந்து பாரின் வாசலில் காத்திருக்கிறது. பயத்தின் உச்சத்தில...