Posts

Showing posts with the label தமிழ் திரைப்படம்

பொம்மலாட்டம் - திரை விமர்சனம்

Image
ரொம்ப நாளைக்கு அப்புறம் ஓரு பாரதிராஜாவின் படம்.. வழக்கமான கிராமம் இல்லை, தேவதைகள் இல்லை.. இது ஓரு திரில்லர் படம். அதிலும் சினிமா உலகத்தை சுற்றி நடக்கும் சம்பவங்களை அடிப்படையாக கொண்டு எழுதப்பட்ட திரைக்கதை.. என்று பலமாய் எதிர்பார்த்து உட்கார்ந்தால்.. புகழின் உச்சியில் இருக்கும் டைரக்டர் ராணா.. அவர் ஓரு எக்ஸென்டிரிக். என்று எல்லாராலும், ஏன் அவரின் மனைவியினாலேயே சொல்லப்படுபவர்.. அவரின் படப்பிடிப்புகளின் நடுவில் நடக்கும் கொலைகள், அதை கண்டுபிடிக்க வரும் சி.பி.ஐ அபிசர் அர்ஜுன். அவரின் காதலி கவிதாயினி அனிதா. ராணாவின் புது கதாநாயகி திரிஷ்னா.. இவர்களை சுற்றி வரும் திரைக்கதை.. படம் ஆரம்பத்திலிருந்து ஜம்ப் கட்டில் கதை சொல்லும் முறையில் பாரதிராஜாவின் இளமை தெரிகிறது.. ஏனோ தெரியவில்லை.. சினிமா இயக்குனர்களின் கதை என்றாலே ஏதோ அவர்கள் எல்லாம் வானத்திலிருந்து குதித்தவர்கள் போல, படத்தின் இயக்குனர்கள் ஃபீல் பண்ணுவது, தங்களுக்கு கிடைக்காத அதிகாரத்தை அட்லீஸ்ட் படத்திலாவது காட்டிக் கொள்வோமே என்ற ஆசையோ.. நானா படேகர் நன்றாக நடித்துள்ளார் என்று சொன்னால்.. சூரியனுக்கே டார்ச் அடித்த மாதிரி.. ஆனால் அவர் இந்த படத்தி...