Thottal Thodarum

Dec 12, 2008

பொம்மலாட்டம் - திரை விமர்சனம்


ரொம்ப நாளைக்கு அப்புறம் ஓரு பாரதிராஜாவின் படம்.. வழக்கமான கிராமம் இல்லை, தேவதைகள் இல்லை.. இது ஓரு திரில்லர் படம். அதிலும் சினிமா உலகத்தை சுற்றி நடக்கும் சம்பவங்களை அடிப்படையாக கொண்டு எழுதப்பட்ட திரைக்கதை.. என்று பலமாய் எதிர்பார்த்து உட்கார்ந்தால்..

புகழின் உச்சியில் இருக்கும் டைரக்டர் ராணா.. அவர் ஓரு எக்ஸென்டிரிக். என்று எல்லாராலும், ஏன் அவரின் மனைவியினாலேயே சொல்லப்படுபவர்.. அவரின் படப்பிடிப்புகளின் நடுவில் நடக்கும் கொலைகள், அதை கண்டுபிடிக்க வரும் சி.பி.ஐ அபிசர் அர்ஜுன். அவரின் காதலி கவிதாயினி அனிதா. ராணாவின் புது கதாநாயகி திரிஷ்னா.. இவர்களை சுற்றி வரும் திரைக்கதை..

படம் ஆரம்பத்திலிருந்து ஜம்ப் கட்டில் கதை சொல்லும் முறையில் பாரதிராஜாவின் இளமை தெரிகிறது.. ஏனோ தெரியவில்லை.. சினிமா இயக்குனர்களின் கதை என்றாலே ஏதோ அவர்கள் எல்லாம் வானத்திலிருந்து குதித்தவர்கள் போல, படத்தின் இயக்குனர்கள் ஃபீல் பண்ணுவது, தங்களுக்கு கிடைக்காத அதிகாரத்தை அட்லீஸ்ட் படத்திலாவது காட்டிக் கொள்வோமே என்ற ஆசையோ..

நானா படேகர் நன்றாக நடித்துள்ளார் என்று சொன்னால்.. சூரியனுக்கே டார்ச் அடித்த மாதிரி.. ஆனால் அவர் இந்த படத்தில் அப்படி என்ன நடித்துவிட்டார் என்று கேட்டால்.. சொல்வதற்கு ஒன்றுமில்லை.. அர்ஜூன் கேரக்டரும் அது போலத்தான் பெரிதாய் அலட்டி கொள்ளாமல் நடித்திருக்கிறார்.. திரைக்கதையில் அவரின் கேரக்டருக்கு தேவையான அழுத்தம் கொடுத்திருந்தாலும் ஏனோ தெரியவில்லை. மனதில் ஒட்டவில்லை..

படம் முழுவதும் இந்தியில் எடுக்கப்பட்டிருக்கிறது.. அதனாலோ என்னவோ.. நிறைய இடங்களில் பேசுபவர்களின் லிப் சின்க் இல்லாமல் இருக்கிறது. படத்தின் கதையை சொன்னால் அது படம் பார்பவர்களை பாதிக்கும் என்பதால்... நீங்களே பார்த்து கொள்ளுங்கள்.

ஹிமேஷ் ரேஷ்மையாவின் இசையில் ”செக்..செக்’ என்ற பாடல் பரவாயில்லை ரகம்.. கண்ணனின் கேமராவும் ஓகே. பிண்ணனி இசை மாண்டி.. நன்றாக இருக்கிறது. படத்தில் பல இடங்களில் அபத்தமான காட்சிகள் இருக்கிறது. அர்ஜூன் காதலியாய் வருபவர் ஏற்கனவே லிப் சின்க் இல்லாமல் பேச, பல இடங்களில் கண்களீல் வழியும் கண்ணீருடன், அவர் அழுகிறாரா, அல்லது சிரிக்கிறாரா என்று ஓரே குழப்பம்.. கதாநாயகிகளை நடிக்க வைத்த பாரதிராஜாவா.. இவர்களை இயக்கியிருக்கிறார். ரஞ்சிதா..அம்சமாய் இருக்கிறார்.. நன்றாகவும் நடித்திருக்கிறார்.

இன்னும் கொஞ்சம் திரைக்கதையில் கவனம் செலுத்தியிருந்தால், ஓரு வித்யாசமான ஓரு திரில்லரை பார்த்திருக்க முடியும்..

பொம்மலாட்டம் - கார்டூன்Blogger Tips -பரிசல்காரன் கதை -சிறுகதையை படிக்க இங்கே அழுத்தவும்,


உங்கள் ஓட்டை தமிழ்மணத்திலும், த்மிலிஷிலும் குத்துங்க.. எசமான் குத்துங்க..
Post a Comment

14 comments:

அத்திரி said...

இந்த படம் எப்போ ரிலீஸ் ஆச்சு??????????????!!!!!!!!!!!!!

Cable சங்கர் said...

நேத்து தான் அத்திரி..

பரிசல்காரன் said...

அட!

நேத்து ஒம்பது மணிவரைக்கு என்கூட பேசிட்டிருந்திருந்தீங்க. வீட்லதான் இருந்தீங்கன்னு நெனைக்கறேன்.

எப்போ பார்த்தீங்க?

அத்திரி said...

படம் நல்லா இருக்கு. நான் சொன்னது நிமிர்ந்த நெஞ்சு................

Cable சங்கர் said...

//நேத்து ஒம்பது மணிவரைக்கு என்கூட பேசிட்டிருந்திருந்தீங்க. வீட்லதான் இருந்தீங்கன்னு நெனைக்கறேன்.

எப்போ பார்த்தீங்க?//

நான் படத்தை பார்த்து மாசங்கள் ஆயிருச்சு.. பிரிவுயூல..

Cable சங்கர் said...

//நான் சொன்னது நிமிர்ந்த நெஞ்சு................//

அது நிமிர்ந்து ஓரு நாளாச்சு.. சார் ஊர்ல இல்லையோ.. அதான் உங்க நேத்து உங்க பின்னூட்டத்தை காணோம்.?

Nilofer Anbarasu said...

என்னங்க படம் சரி இல்லன்னு சொல்லுறீங்க..... நான் சில வெப் சைட்ல படுச்சேன் நல்லா இருக்குன்னு போட்டு இருந்தாங்களே? Sify கூட verdict very good அப்படின்னு போட்டத வச்சு படம் சூப்பர் போலன்னு நெனச்சேன்.

Cable சங்கர் said...

//என்னங்க படம் சரி இல்லன்னு சொல்லுறீங்க..... நான் சில வெப் சைட்ல படுச்சேன் நல்லா இருக்குன்னு போட்டு இருந்தாங்களே? Sify கூட verdict very good அப்படின்னு போட்டத வச்சு படம் சூப்பர் போலன்னு நெனச்சேன்.//

நீங்க போய் பார்த்துட்டு வந்து சொல்லுங்க சார்.. எனக்கென்னவோ.. சரியில்லைன்னு தான் தோணுது..

Tech Shankar said...

ஆகா!

வாழ்க வளமுடன்
தமிழ்நெஞ்சம்

Cable சங்கர் said...

//ஆகா!

வாழ்க வளமுடன்//

நன்றி தமிழ்நெஞ்சம்.. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும்.

பாலு மணிமாறன் said...

ம்ம்ம்... இலவசமா பிரிவியூவில் பல மாதங்களுக்கு முன்னால் படத்தைப் பார்த்து விட்டு இப்படிப் போட்டு தாக்குறீங்களே சார், நியாயமா, தர்மமா? :)))

சும்மா ஜோக்குத்தான் சொன்னேன்... நான் இன்னும் படத்தைப் பார்க்கவில்லை. ஆனால், பாலச்சந்தர், பாரதிராஜா போன்ற சாதனையாளர்கள், செல்வராகவன், கெளதம்மேனன், விஷ்ணுவர்த்தன் போன்றவர்களளோடு சமமாக நடக்க முற்படுவதே சாதனைன்னு தோணுது!

Raj said...

http://vinaiooki.blogspot.com/2008/12/blog-post_16.html

இவர் தன்னுடைய ப்ளாகில் படத்தை பற்றி ரொம்ப நல்ல மாதிரி எழுதி இருக்கார்

Cable சங்கர் said...

//சும்மா ஜோக்குத்தான் சொன்னேன்... நான் இன்னும் படத்தைப் பார்க்கவில்லை. ஆனால், பாலச்சந்தர், பாரதிராஜா போன்ற சாதனையாளர்கள், செல்வராகவன், கெளதம்மேனன், விஷ்ணுவர்த்தன் போன்றவர்களளோடு சமமாக நடக்க முற்படுவதே சாதனைன்னு தோணுது!//

அதென்னவோ உண்மைதான்.. பாலு.. நன்றி உங்கள் வருகைக்கும் கருத்துக்கும்.

Cable சங்கர் said...

//இவர் தன்னுடைய ப்ளாகில் படத்தை பற்றி ரொம்ப நல்ல மாதிரி எழுதி இருக்கார்//

நீங்கள் படத்தை பாருங்கள் ராஜ்.. நானும் அதைத்தான் சொல்லியிருக்கிறேன். கொஞ்சம் திரைக்கதையில் கவனம் செலுத்தியிருந்தால் ஒரு நல்ல் திரில்லரை பார்த்திருக்க முடியும்.. அது சரி என்ன ஆளையே காணோம்..