
ரொம்ப நாளாச்சு இந்த மாதிரி மனசை அள்ளுற படம் பாத்து. கிட்டதட்ட ஒவ்வொரு அப்பாவும், அதிலேயும் பெண்ணை பெத்த அப்பாவா இருந்து, படம் பார்த்துட்டு அழலைன்னா, நான் என் பேர மாத்திக்கிறேன். பிள்ளைய பெத்த என்னையே கலக்கிருச்சுன்னா..
ஊட்டியில் ஒரு பார்கில் ஒரு பெண் குழந்தையுடன் வரும் பிருதிவிராஜிடம், தன் மகளை பற்றி சொல்வதாய் ஆரம்பிக்கிறது கதை.. என்ன ஒரு இயல்பான கதை சொல்லல் பாணி.. பிரகாஷ்ராஜ் ஒரு பெண்ணுக்கு தகப்பனாய் வாழ்ந்திருக்கிறார்.
சாதாரணமாய் பார்த்தால் எல்லா பெண்ணை பெற்ற அப்பனுக்கு நடக்கும் நிகழ்வுதானே எதற்காக இவ்வளவு எக்ஸாசிரேஷன் என்று கேட்பவர்கள், ப்ளீஸ்.. நீங்கள் வேறு படத்திற்கு போகவும்..
உளவியல் ரீதியாய் ஒரு தகப்பனுக்கும், மகளூக்கும் அவள் பிறந்ததிலிருந்து, அவனுக்கும், அவளுக்கும் நடக்கும் நிகழ்வுகளே படம்.. எவ்வளவு யதார்தமான காட்சிகள், பெண்ணை ஸ்கூல் சேர்க்க, இண்டர்வியூவுக்கு தயாராவதிலிருந்து, சீட் கிடைத்து, அவளை பள்ளிக்கு அனுப்பும் காட்சி, பின்னர் தன் பெண் ஒரு பிச்சைகாரனை வீட்டிற்கு கூட்டி வந்து அவனுக்கு வேலை போட்டு கொடுக்க சொல்ல, பெண் சொல்லிவிட்டாளே என்று பெயரே இல்லாத ஒருவனுக்கு ரவிசாஸ்திரி என்று பெயர் வைத்து வீட்டில் வேலை கொடுக்க, அவனை அழைத்து கொண்டு ஹோட்டலுக்கு செல்கையில் அவன் கண்கலங்கி.. பேசும் காட்சி, என்று சொல்லி கொண்டே போகலாம்..

தன் மகளின் பதினைந்தாவது வயதில் I know what I do என்பதை கேட்கும் தகப்பனுக்கு எப்படியிருக்கும்?.. அவன் உணர்வு எப்படி இருக்கும் என்று உணர்ந்தவர்களுகே புரியும்.
திரிஷா.. அன்பான அப்பாவுக்கேற்ற அழகான, புத்திசாலித்தனமான பெண், குறையில்லாத நடிப்பு. அப்பா எப்போ சொன்னதை ஞாபகம் வைத்து கொண்டு, நட்ட நடு ஏரியில், அவருக்கு பர்த்டே விஷ் செய்து அவரை கத்த சொல்லும் காட்சி, யப்பா..

பிச்சைகாரனாய் வந்து வீட்டின் ஒருவனாய் மாறும் வெள்ளிதிரை முஸ்தபா வாழ்நாள் கேரக்டர், பல இடங்களில் நம் கண்களில் கண்ணீரை வரவழைக்கிறார்.
கணவணையும்,பெண்ணையும் புரிந்து கொண்டு இயல்பான அம்மா ஐஸ்வர்யா, க்ளைமாக்ஸ் காட்சிகளில் சூப்பர்ப்.
இந்த படத்தில் வரும் காட்சிகளை சொல்லிக் கொண்டே போகலாம். செகண்ட் ஆப் கொஞ்சம் இயல்பை மீறின காட்சிகளும், கொஞ்சம் மெதுவாக போகும் போக்கையும் மீறி படம் முடிந்து வெளிவரும் போது கண்ணீரை துடைத்து கொண்டு, இந்நாள் வரை உங்களையே உணராத தகப்பனாய் இருந்திருந்தால்.. உங்கள் பெண்ணை தேடி கொண்டு போவீர்கள்..
அலட்டாத ஒளிப்பதிவு,அருமையான இசை, அதிராத எடிட்டிங், என்று பங்கு பெற்ற அத்துனை கலைஞர்களும் தங்களின் பங்களிப்பை செவ்வனே அளித்திருக்கிறார்கள்.
மிக இயல்பான நகைச்சுவையான வசனங்கள், யதார்தமான காட்சிகள் என்று நம் மனதை கொள்ளையடிக்கிறார். இயக்குனர் ராதாமோகன். ஹாட்ஸ் ஆப்.
வழக்கமாய் நான் எப்ப வரும் தமிழில் இந்த மாதிரி படம் என்கிற தலைப்பில் சில படங்களை பற்றி எழுதியிருக்கிறேன். இதோ அப்படி ஒரு படம் அபியும்.. நானும்.. வெளியே வந்த பின்பும், உங்கள் மனதை விட்டு அகலாத படம்.
படத்தில் பிரகாஷ்ராஜ் அடிக்கடி சொல்லும் வார்த்தை Life is beautiful. படம் பார்த்தபின் நானும் அதைத்தான் உணர்ந்தேன்.
உங்கள் ஓட்டை தமிழ்மணத்திலும், த்மிலிஷிலும் குத்துங்க.. எசமான் குத்துங்க..
Comments
பிறகு இந்த படத்தைதான் தியேட்டர்ல
போய் பார்க்க போறேன்! உங்க விமர்சன
உபயத்தால்!
Nice
பிறகு இந்த படத்தைதான் தியேட்டர்ல
போய் பார்க்க போறேன்! உங்க விமர்சன
உபயத்தால்!//.
நிச்சயமாய் போய் பாருங்கள் ஜீவன்.. உங்களுக்கு மகள் இருந்தால் அவளையும் கூட்டி கொண்டு போங்கள்.. கண்டிப்பாய் தியேட்டரில் பாருங்கள்.. இம்மாதிரியான் படங்களுக்கு நாம் கொடுக்கும் ஆதரவு தமிழில் நல்ல சினிமாக்கள் வர உதவும்..
அதனால என்ன.. எப்படியும் கல்யாணம் பண்ணிகிட்டு பெத்துக்க தானே போறீங்க.. உங்களுக்கும் புரியும்.. இல்லேன்னா உங்க அப்பாவை பற்றி புரியும்..
Nice//
ஆமாம் மணிமாறன் இதை எழுதணும்னு நினைக்கும் போதே.. ரொம்ப உணர்ச்சி வசப்பட ஆரம்பிச்சிருச்சு..
நன்றி ரவி, கண்டிப்பாய் பார்க்கவும்
just came here.. i got the signal..
Greeeen signal..
please look after page html settings..
its getting longer time to load ;)
:(
சங்கர், உங்கள் வலைப்பூவை இப்போது எனது புதிய வலைப்பதிவில் Blogroll செய்து இருக்கிறேன். உங்கள் கருத்துக்களை அங்கு உள்ள பதிவுகளில் பார்க்க ஆசை.
ரஃபிக் ராஜா
ராணி காமிக்ஸ் & காமிக்கியல்
மிக்க நன்றி ராம சுப்ரமணியசர்மா.. உங்கள் வருகைக்கும், கருத்துக்கும்
கண்டிப்பாய்
//just came here.. i got the signal..
Greeeen signal..//
????
//please look after page html settings..
its getting longer time to load ;)//
கண்டிப்பாய் பார்க்கிறேன்.சிமபா
கண்டிப்பாக
:(//
இந்நேரம் ரிலீஸ் ஆகியிருக்க வேண்டுமே இராம்..
மிக்க நன்றி உங்கள் வருகைக்கும், கருத்துக்கும்
நன்றி சாரதி.. உங்கள் வருகைக்கும், கருத்துக்கும்... கண்டிப்பாய் படம் பாருங்கள்..உங்கள் கருத்துக்களை பதியுங்கள்..
அழகு அருமை.
நன்றி கதிர்.. கண்டிப்பாய் உஙக்ள் பதிக்கும் போது தெரிவிக்கவும்..
படத்தில் பிரகாஷ்ராஜ் அடிக்கடி சொல்லும் வார்த்தை Life is beautiful. படம் பார்த்தபின் நானும் அதைத்தான் உணர்ந்தேன்.
//
Life is beautiful.இதே பேரில் ஒரு படம் இருக்குங்க, அதுவும் நல்ல படமே.
எல்லாரும் படம் நல்லாருக்குனு சொல்றீங்க, ராதாமோகனையும் நம்பலாம், ப்ரகாஷ்ராஜையும் நம்பலாம்... பாத்துட வேண்டியது தான்
மிக்க நன்றி செந்தில், அபியும் நானும் பார்த்துவிட்டீர்களா..?
வில்லு விமர்சனம் இங்கே..
http://venkatx5.blogspot.com/