எ.வ.த.இ.ம.படம் -Slumdog Millionaire


படம் பார்த்துட்டு ஒரு இரண்டு மணிநேரத்துக்கு என் மனம் முழுவதும் ஜமால் மாலிக், மாலிக், லதிகா என்றே உழன்று கொண்டிருந்தது. What a movie yaar..?


படத்தின் கதை ஜமால் மாலிக் என்கிற 18வயது கால்சென்டரில் டீ பாய்யாக வேலை செய்யும், ஒருவன் நமது கோன் பனேகா குரோர்பதி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு எல்லா கேள்விகளுக்கும் சரியான் பதிலை சொல்லி அசத்துகிறான். நிகழ்ச்சியை நடத்தும் அனில் கபூருக்கு ஒரு சாதாரண குப்பத்தில் அனாதையாய் வளர்ந்த இவனுக்கு எப்ப்டி இந்த பதில்கள் தெரியும், இதற்கு பின்னால் ஒரு சதியிருக்கும் என்று சந்தேகப்பட்டு, கடைசி கேள்வியின் போது நிகழ்ச்சியின் நேரம் முடிய, அன்று இரவு அவனை போலீஸில் பிடித்து கொடுக்கிறார்.

போலீஸ் ஸ்டேஷனில் அவனை டார்சர் செய்யும் காட்சியிலிருந்து படம் ஆரம்பிக்கிறது. டார்சரின் முடிவில், தனக்கு எவ்வாறு அங்கு கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதில் தெரிந்தது என்று தன் வாழ்கையை சொல்கிறான்.

முஸ்லிம்கள் அதிகமாய் வசிக்கும் மும்பை குப்பத்தில் இந்துக்கள் கலவரத்தில் தன் தாயை இழந்து அனாதையான சகோதரர்கள், அவர்களுடன் சேரும் லதிகா என்ற சிறுமி, இவர்கள் மூவரும் ஒரு கொடிய மனமுள்ள குழந்தைகளை வைத்து, அவர்களை அங்கஹீனபடுத்தி பிச்சை எடுக்க வைக்கும் கும்பலின் தலைவனிடம் மாட்டி கொள்கிறார்கள்.. அங்கே கொஞ்சம் கொஞ்சமாய் ஜமாலின் அண்ணன் மாலிக் முக்கிய ஆளாய் ஆகிறான். தன் தம்பிக்கு அங்கே பிரச்சனை வரும் போது அங்கிருந்து தப்பி, ஓடும் ரயிலில் தப்பி ஆக்ராவுக்கு சென்று கைட், திருட்டு என்று பல பட்டறையாகிறாகள். பின்பு தன் பழைய நண்பியான லதிகாவை தேடி மும்பைக்கு வருகிறார்கள், அவளை ஒரு விபசார விடுதியிலிருந்து காப்பாறுகிறான் ஜமாலின் அண்ணன் மாலிக், ஜமாலுக்கும், லதிகாவுக்கும் உள்ளுக்குள்ளே காதல் இருந்தாலும், அவனின் அண்ணன் லதிகாவை நான் தான் காப்பாற்றினேன் என்று சொல்லி அவளை அடைகிறான்.

படம் முழுக்க போட்டியில் கேட்கப்படும் கேள்விகளுக்கு எப்படி அவனுக்கு பதில் தெரிந்தது என்று ஜமாலின் வாழ்க்கை நடந்த சம்பவஙக்ளின் மூலம் காட்டியிருப்பது. சூப்பர். அதிலும் அனில் கபூர் அவனை போட்டியிலிருந்து விலக்க தவறான ஒரு பதிலை பிரேக்கின் போது சொல்லி, அவனை குழப்ப, அவன் தெளீவாக, ஆப்ஷனில் வேறு பதிலை தேர்ந்தெடுப்பது, வாழ்க்கை அவனுக்கு கற்று தந்த பாடம்தான் அவனை வழிநடத்தி செல்கிறது.

அவன் மேல் எந்த குற்றமும் இல்லை என்று போலீஸ் அவனை விடுதலை செய்கிறது, அடுத்த நாள் போட்டியில் அவனுக்கு கேட்கப்படும் கேள்விக்கு அவனுக்கு பதில் தெரியவில்லை,அதனால் தன்னுடய கடைசி ஆயுதமான போன் எ ப்ரண்ட் என்று தனக்கு தெரிந்த ஒரே நம்பரான தன் அண்ணனுக்கு போட, அந்த போனை அவனுடய காதலி லதிகாவிடம் தன் தம்பியுடன் சேர்த்து வைப்பதற்காக தன் முதலாளியின் பிடியிலிருந்து தப்பியோட வைத்து இறக்கிறான்.

இப்போது போன் லதிகாவிடம், ஜாமாலுக்கோ பதில் தெரியாது, அவளுக்காவது தெரிந்ததா..? லதிகாவும், ஜமாலும் ஒன்று சேர்ந்தார்களா..? என்று நம் மனதை உருக்குகிறார்கள்.

ஆங்கில படம் தான் என்றாலும் படம் முழுவதும் விரவிகிடக்கும் ஹிந்தி வசனங்கள், அந்த அந்த காலகட்டங்களில் கேரக்டர்களுக்கும் அவர்கள் நடிகர்களை தேர்தெடுத்த பாங்கும் அசத்தலாயிருக்கிறது. ஜமால், அவன் அண்ணன், லதிகா என்ற மூன்று கேரக்டர்களும் 4 வயது முதல் 18 வயது வரையான நிலைகளில் வருவதால் அதற்கு ஏற்றார் போல சிறுவர்களை தெரிவு செய்திருப்பது அருமை.

படத்தில் நடித்திருக்கும் நடிகர்கள் எல்லாரும் மிக இயல்பான நடிப்பில் நம்மை கட்டி போடுகிறார்கள், தேவ் படேல், கதாநாயகி, இர்பான்கான், சுரப் சுக்லா.

இசை நம்ம ஏ.ஆர்.ரஹ்மான். மனுசன் சும்மா பின்னி பெடலெடுத்திருக்கிறார். ரீ ரிக்கார்டிங்கில் ஆகட்டும், பாடல்கள் ஆகட்டும் என்ன ஒரு காம்போஸிஷன். இந்த வருட கோல்டன் க்ளோப் அவார்ட்டுக்கு சிறந்த இசையமைப்பாளராய் இவரை பரிந்துரை செய்திருக்கிறார்கள்.

படத்தில் குறைகளே இல்லையா..? என்று கேள்வி எழுப்பினால் மிகவும் யோசிக்க வேண்டியிருக்கு, இல்லாமல் இல்லை ஆனால் அதெல்லாம் ஒரு பொருட்டாயில்லை என்பதே உண்மை.

Q&A என்கிற பெயரில் விகாஸ் ஸ்வரூப் எழுதிய நாவலுக்கு, அவரும் சைமன் பிஃபாய் என்பவரும் இணைந்து திரைக்கதை அமைத்திருக்கிறார்கள். இயக்கம் டானி போயலே.. இவரை பாராட்ட வார்தைகளே இலலை. ஏற்கனவே இந்த படம் டொரண்டோ பீப்பிள் சாய்ஸ் அவார்ட்டை வென்றிருக்கிறது. கண்டிப்பாய் இந்த படம் பல உலக பட விருதுகளையும், ஆஸ்கர்களையும் வெல்லும் என்பது நிச்சயம்

Don't Miss it.....

ம்ஹூம்.... எப்ப வரும் தமிழில் இந்த மாதிரி படம்..?

ஏ.ஆர்.ரஹ்மானின் இசை/ பேட்டி
http://moviesblog.mtv.com/2008/12/29/dont-sleep-on-slumdog-millionaire-composer-mia-collaborator-ar-rahman/

Song 1

Song 2

Song 3

Song 4


படத்தின் டிரைலரை பார்க்க..





Blogger Tips -கிங் தெலுங்கு திரை விமர்சனத்துக்கு இங்கே அழுத்தவும்


உங்க ஓட்டை தமிழ்மணத்துலேயும், தமிலிஷிலும் குத்துங்க எசமான்.. குத்துங்க...

Comments

இடையறாத பணிச்சுமையிலும் எப்படித்தான் இத்தனை படம் பாக்குறீங்களோ?
படம் பார்பதும் அதை பற்றி யோசிப்பது என் வேலைகளில் ஒன்றாய் இருப்பதால் கஷ்டம் தெரியவில்லை. இந்த படத்தை நான் நேற்று இரவு 2 மணிக்கு பார்த்து முடித்து இந்த பதிவை எழுதி முடித்தபோது மணி நான்கு.
நான் நடிக்கலை அந்த படத்துல
\\ம்ஹூம்.... எப்ப வரும் தமிழில் இந்த மாதிரி படம்..?\\

தயவு செய்து இது மாதிரி நிராசைகளை விட்டு விடுங்கள்
\\ம்ஹூம்.... எப்ப வரும் தமிழில் இந்த மாதிரி படம்..?

\\

thalaivare i have tremendous faith in you
//நான் நடிக்கலை அந்த படத்துல//

அதானே...பார்த்தேன்.
//தயவு செய்து இது மாதிரி நிராசைகளை விட்டு விடுங்கள்//

அப்படியெல்லாம் விடமுடியாது தலைவா.. முயற்சி செய்யணும்.. அஞ்சாதேயை டிவிடியிலையும், சிவாஜியை தியேட்டர்லேயும் பார்க்கறத விட்டுட்டு தியேட்டருக்கு போய் பார்த்தாங்கன்னா.. நல்ல படங்கள் கண்டிப்பா வரும் தலைவா.
//thalaivare i have tremendous faith in you//

ரொம்ப நன்றி தலைவா.. பார்ப்போம் நமக்கு ஒரு நல்ல புரொடியூசர் கிடைச்சார்னா பின்னி புடலாம்.
உங்க விமர்சனத்தை படிச்சதே படத்த பார்த்தது மாதிரி இருக்கு....!
படம் பாக்காம இருக்க இப்பிடி ஒரு சால்ஜாப்பு...!
ஹி.. ஹி...!
இந்த படம் எப்பொழுது ரிலிஸ் ஆகியது?, படம் பார்க்கும் ஆவலை தூண்டிவிட்டுவிடீர்கள்..

இந்த மாதிரி படம் தமிழில் ..எப்பொழுது வருமா.. அது உங்களை நாங்கள் கேட்க வேண்டிய கேள்வி, முயற்ச்சி செய்யுங்கள்.. உலக சினிமா டைரக்டர் என்றால் எங்களுக்கு வாயில் நுழைதா பெயர் தான் இருக்க வேண்டுமா.. (கேபிள்)சங்கர் என்றெல்லாம் இருக்ககூடாதா?
Raj said…
//எ.வ.த.இ.ம.//

இதுக்கு என்ன அர்த்தம்.
//படம் பாக்காம இருக்க இப்பிடி ஒரு சால்ஜாப்பு...!//
நல்லாருக்கு கதை.. ஒழுங்கா படம் ரிலீஸான உடனே பாருங்க.. வர்ற மாசம் இந்தியால ரிலீஸாக போவுது.. தலைவரே..
//இந்த படம் எப்பொழுது ரிலிஸ் ஆகியது?, படம் பார்க்கும் ஆவலை தூண்டிவிட்டுவிடீர்கள்..//

யு.எஸ்ஸில் ரிலீசாகி கிட்டதட்ட ஒரு மாதமாகிறது.. முதலில் 50 பிரிண்டுகளில் மொத்த அமெரிக்காவிலும் ரிலிஸான படம் இப்பொது 500க்கும் மேற்பட்ட ப்ரிண்டுகளுடன் சக்கை போடு போடுகிறது என்கிறார் எனது நண்பர்.
///இந்த மாதிரி படம் தமிழில் ..எப்பொழுது வருமா.. அது உங்களை நாங்கள் கேட்க வேண்டிய கேள்வி, முயற்ச்சி செய்யுங்கள்.. உலக சினிமா டைரக்டர் என்றால் எங்களுக்கு வாயில் நுழைதா பெயர் தான் இருக்க வேண்டுமா.. (கேபிள்)சங்கர் என்றெல்லாம் இருக்ககூடாதா//

நிச்சயமாய் முயற்சி செய்கிறேன் வினோத்.. ஒரு நல்ல படத்தை தருவேன் என்று என் மீது நம்பிக்கை வைத்தமைக்கு நன்றி.. கண்டிப்பாய் உங்கள் நம்பிக்கையை காப்பாற்ற முயற்ச்சிக்கிறேன். மீண்டும் நன்றி.
////எ.வ.த.இ.ம.//

இதுக்கு என்ன அர்த்தம்//

எப்போது வரும் தமிழில் இந்த மாதிரி படம்?/
நல்ல படம் தேடி, அறிமுகப்படுத்தியிருக்கிறீர்கள்!!!
நன்றி..
தேவா...
shabi said…
PADAM PEYAR ENNA
அண்ணே..

சென்னைல ஓடுதா..? இல்லியா..? எப்ப வரும்..?

தமிழ் படம் பார்க்கவே நமக்கு நேரமில்லை.. இதையெல்லாம் எங்கிட்டு போய் பாக்குறது..?

நோட் பண்ணி வைச்சுக்குறேன்.. குட் விமர்சனம்..
//Cable Sankar said...
படம் பார்பதும் அதை பற்றி யோசிப்பது என் வேலைகளில் ஒன்றாய் இருப்பதால் கஷ்டம் தெரியவில்லை. இந்த படத்தை நான் நேற்று இரவு 2 மணிக்கு பார்த்து முடித்து இந்த பதிவை எழுதி முடித்தபோது மணி நான்கு.//

உங்க கடமையுணர்ச்சிக்கு ஒரு அளவே இல்லீங்களாண்ணா..

வாழ்க சங்கரண்ணே..
///Cable Sankar said...
//எ.வ.த.இ.ம.//
இதுக்கு என்ன அர்த்தம்//
எப்போது வரும் தமிழில் இந்த மாதிரி படம்?///

குமுதம் அரசுக்கு போட்டியா..? நல்லாத்தான் இருக்கு..
//நல்ல படம் தேடி, அறிமுகப்படுத்தியிருக்கிறீர்கள்!!!
நன்றி..
தேவா...//

நன்றி தேவன் உங்கள் வருகைக்கும், பாராட்டுக்கும்..
//PADAM PEYAR ENNA//

Slumdog millionaire ஷாபி..
//அண்ணே..

சென்னைல ஓடுதா..? இல்லியா..? எப்ப வரும்..?

தமிழ் படம் பார்க்கவே நமக்கு நேரமில்லை.. இதையெல்லாம் எங்கிட்டு போய் பாக்குறது..?

நோட் பண்ணி வைச்சுக்குறேன்.. குட் விமர்சனம்..//

சென்னையில அடுத்த மாசம்தான் வரும்னு நினைக்கிறேன். நான் டிவிடில தான் பார்த்தேன். உஙக பாராட்டுதலுக்கும், வருகைக்கும் நன்றி தமிழன் சார்.
//உங்க கடமையுணர்ச்சிக்கு ஒரு அளவே இல்லீங்களாண்ணா..

வாழ்க சங்கரண்ணே..//

ஆனாலும் ரொம்பத்தான் பாராட்டுறீங்க.. வெட்கமாயிருக்கு..
//எ.வ.த.இ.ம.//
இதுக்கு என்ன அர்த்தம்//
எப்போது வரும் தமிழில் இந்த மாதிரி படம்?///

குமுதம் அரசுக்கு போட்டியா..? நல்லாத்தான் இருக்கு..//


சரியா கண்டுபிடிச்சீட்டீங்க சார்.. நாம எங்கே குமுதம் எங்க சார்..? ஏதோ நம்மாள ஆன ஒரு சுருக்கம்.
ஜூர்கேன் என்பவரை காணவில்லை.. யாராவது பார்த்தா சொல்லுங்கப்பா. கேபிள் சங்கர் தேடுறாருன்னு..
உங்களது இயக்கத்தில் வெளிவரும் படத்தை பார்க்க ஆவலாய் காத்து கொண்டிருக்கும் பல பேரில் நானும் ஒருவன்... கூடிய விரைவில் இதேபோல் ஒரு படத்தை தமிழில் எதிர்பார்க்கலாம்தானே....
ரொம்ப நன்றி ஹக்கீம்.. உஙக்ளின் எதிர்பார்ப்பை நிறைவு செய்ய முயற்சி செய்கிறேன். புத்தாண்டு வாழ்த்துக்கள்
Raj said…
ஹி ஹி...dvd எங்கே கிடச்சுதுன்னு சொன்னீங்கன்னா நாங்களும் வாங்கி பார்ப்போமில்ல
Murugesh said…
ஹலோ சங்கர்,
இன்னிக்கு தான் முதன்முதலா, தமிழிஷ்.காம் வழியாக, ஒரு ஒரு லிக்-கா போயி பார்த்தேன். அதில் உங்களுடைய இந்த ஆர்டிகளையும் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

நன்றாக இருந்தது.

நீங்கள் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொண்ட கமெண்ட்ஸ்-ல் இருந்து, நம் இருவருக்கும் இடையே ஒத்து போக கூடிய கருத்துக்கள் சில இருப்பதாக நான் நினைக்கிறேன்.

நேரம் கிடைக்கும் போது, எனது இந்த படைப்பை படிக்கவும்.
http://www.tamilish.com/story/21684

You can mail me at s.murugesh.k@gmail.com
Unknown said…
"கர்மா கரம் சாய் தேனேவாலா" என்று ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் வெளிப்படையாக அசிங்கப்படுத்துகிறார்.
எப்படி பதில் தெரியும் என்று விசாரிக்கும் காவல்துறை கட்டி தொங்கவிட்டு, மின்சாரத்தை செலுத்தி விசாரிக்கிறது. கொஞ்சம்கூட இயல்புக்கு பொருந்தாத காட்சிகள். இதற்குப்போய் எ.வ.த.இ.ம.படம் என்று அங்கலாய்க்கிறீர்கள்.
This comment has been removed by the author.
Anonymous said…
Jamaal's Childhood days scenes with AR Rahman music is pictured well. Nice Film. ARR Rocks..
//ஹி ஹி...dvd எங்கே கிடச்சுதுன்னு சொன்னீங்கன்னா நாங்களும் வாங்கி பார்ப்போமில்ல//

நம்ம கிட்ட இருக்கில்ல..
//"கர்மா கரம் சாய் தேனேவாலா" என்று ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் வெளிப்படையாக அசிங்கப்படுத்துகிறார்.
எப்படி பதில் தெரியும் என்று விசாரிக்கும் காவல்துறை கட்டி தொங்கவிட்டு, மின்சாரத்தை செலுத்தி விசாரிக்கிறது. கொஞ்சம்கூட இயல்புக்கு பொருந்தாத காட்சிகள். இதற்குப்போய் எ.வ.த.இ.ம.படம் என்று அங்கலாய்க்கிறீர்கள்.//

அப்படி அவமானபடுத்தபடுவது, சந்தேகத்தில் போலீஸில் மாட்டிவிடுவதும், மின்சாரத்தை செலுத்தி விசாரிப்பது என்பதெல்லாம் கதையில் நடக்கும் காட்சிகள்.. இதெல்லாம் நடப்பதால்தான் அந்த ஜமாலின் மீது நம் கவனம் மேலும் ஈர்க்க படுகிறது.. அந்த காட்சிகள் எப்படி இயல்பாய் இல்லை என்று சொல்கிறீர்கள்..? என்னை பொறுத்தவரைக்கும், எ.வ.த.இ.ம.படம் தான்.
//Jamaal's Childhood days scenes with AR Rahman music is pictured well. Nice Film. ARR Rocks..//

உண்மைதான் தேவா.. மனுசன் சும்மா புகுந்து விளையாடியிருக்காரு.. நன்றி உங்கள் வருகைக்கும், கருத்துக்கும்.. புத்தாண்டு வாழ்த்துக்கள்
அண்ணே நீங்க உண்மையிலே தீர்க்க தரிசி......... படம் ஆஸ்கார் வாங்கிடுச்சே
//அண்ணே நீங்க உண்மையிலே தீர்க்க தரிசி......... படம் ஆஸ்கார் வாங்கிடுச்சே//

ஹி..ஹி.. ரொம்பத்தான் பாராட்டறீங்க..