மீண்டும் ஒரு பக்காவான ஃபார்முலா மசாலா படம். காளை படத்தின் பெரிய தோல்விக்கு பிறகு சிம்பு நடித்து வெளிவ்ந்திருக்கும் படம். முழுக்க, முழுக்க ஒரு சூப்பர் ஹீரோ கேரக்டருக்காக சிம்பு நிறையவே உழைத்திருக்கிறார்.
நன்றாக ஆடுகிறார்.. சண்டை போடுகிறார், அவ்வப்போது நடிக்கவும் முயற்சிக்கிறார், பழைய விரல் வித்தைகளை மீண்டும் எடுத்துவிடுகிறார், தனக்கு மூன்று மொழிகள் தெரியும் என்பதற்காகவே, தமிழ், தெலுங்கு, இந்தி என்று பேசுவதற்காக, ஒரு டுபாகூர் காட்சியமைத்து, அதில் பில்லா காஸ்டியூமில் வலம் வருகிறார்.
அம்மாஞ்சியாய் தன் தாத்தாவால், சாப்பாட்டில் கூட உப்பு, காரம் சேர்காமல் வளர்க்கபடும் பேரன் சிம்பு, எங்கே அவனுக்கு சுரணை வந்துவிட்டால் அவனுக்கு கோபம் வந்துவிடுமோ என்று தாத்தா பயப்படுகிறார்.
அவரை சுற்றி, சுற்றி வளைய வரும் சனாகான்.. சும்மா சொல்ல கூடாது நல்ல பெங்களூர் தக்காளி மாதிரி பளபள், தள தளன்னு இருக்காங்க.. ம்ஹூம்..
அவரை ஏன் இப்படி வளர்கிறாருன்னு நமக்கு டென்சன் ஏறிக்கிட்டே இருக்கிறதா.. டைரக்டர் நினைச்சிகிட்டு இன்னும் ரெண்டு சீன் வச்சு நம்ம படுத்துறாரு. இதெல்லாம் நாங்க பாட்ஷாவிலேயே பாத்துட்டம்னு சொன்னாலும் புரியாது போலருக்கு. திடீருன்னு அம்மாஞ்சிக்கு வீரம் வந்து ஒரு சூப்பர் பைட் போட்டு நம்ம நிமிர்ந்து உட்காரவைக்கிறார். ஆனா அது பைட்டுக்கு மட்டும் இல்ல.. அப்பாடா ஒரு வழியா இண்டர்வெல் விடப் போறாங்கன்னு தெரிஞ்சு ரெடியாகறுத்துக்காக..
இப்படி போயிட்டிருந்த கதையில, ப்ளாஷ் பேக்கில், அம்மாஞ்சி விச்சுவின், அப்பா தமிழ் அதுவும் சிம்பு, வழக்கம் போல ஒரு தமிழன் பாட்டு பாடி சுயபுராணம் பாடிட்டி, இரண்டு குடும்பம், பகை, அதுல ப்ரச்சனை, என்று பரபரப்பாக போகிறது. அதில சிறுவனின் பழிவாங்குதல் அதிர்சியூட்டத்தான் செய்கிறது. அதில் இனிமையானது சிநேகா, சிம்பு, காதல் காட்சிகள், அந்த நடுஇரவும், ஓடுகிற டிரைனும், அந்த டனலும் அதை ஒளிப்பதிவு செய்த மதிக்கு பாராட்டுகள். இளையராஜாவின் குரலில் வரும் பாடல் சூப்பர்.
காமெடி என்கிற பெயரில் குசு, குண்டி போன்றவற்றை பேசி நம்மை இம்சை பண்ணும் சந்தானத்துக்கு அது காமெடியில்லை என்று யாராவது சொல்ல மாட்டார்களா..?
அதே போல் கருணாசின் காமெடி.. அவர் மைண்ட் வாய்ஸில் பேச என்னுவதை, உடனே மற்றவர்கள் பேசி முடிக்கும் காமெடி சூப்பர். மனுசன் அவ்வளவா பேசாமயே காமெடி பண்ணியிருக்காரு. ஆன இதுக்கு க்ரெடிட் டைரக்டரைதான் சாரும்..
படத்தின் மிகப் பெரிய பலம் யுவன், ஏற்கனவே ஹிட் சார்டில் பாடல்கள் எல்லாமே நி முந்தி, நான் முந்தின்னு போயிட்டுருக்கு. பிரபுவை இப்படி ஓரு ஜூனியர் ஆர்டிஸ்ட் ரேஞ்சுக்கு நடிக்க வைக்கணும்னு ஏதாவது வேண்டுதலா..? தவிர்கலாமே.. பிரபுசார்..
சிம்பு தன்னை அடுத்த ரஜினி, அஜித் போன்ற பெரிய நடிகர்களின் வட்டத்துக்குள் வர ரொம்ப நாளாவே போராடுறாரு. பஞ்ச் டையலாக், மற்ற நடிகர்களை வச்சு துதி பாடறதுன்னு எல்லா வழக்கமான் விஷயங்களையும் படத்துல வச்சிருக்காங்க.. ஆனா ஒரு விஷயம் ரொம்ப சொதப்பல
சிலம்பாட்டம் - குத்தாட்டம்
படித்ததில் பிடித்தது
வேண்டுதல்
திரைப்படம் எடுக்கணும்
தொலைகாட்சி
தொடங்கணும்
பத்திரிகை நடத்தணும்,
பாராளுமன்றம் போகணும்
மந்திரியாகணும்
மாநிலம் ஆளணும்
கடவுளே! என்னை
அடுத்த ஜென்மத்திலாவது
முதல்வரின் பேரனாக்கு!
திரு. ஏ.பி.வள்ளியப்பன் குமுதத்தில் எழுதிய கவிதை.
உங்கள் ஓட்டை தமிழ்மணத்திலும், த்மிலிஷிலும் குத்துங்க.. எசமான் குத்துங்க..
Post a Comment
30 comments:
பாக்கலாமா????????//////
//கடவுளே! என்னை
அடுத்த ஜென்மத்திலாவது
முதல்வரின் பேரனாக்கு!//
நானும் இதைத்தான் வேண்டிக்கிட்டு இருக்கேன்.ஹிஹிஹிஹிஹி.............
நானும் இதைத்தான் வேண்டிக்கிட்டு இருக்கேன்.ஹிஹிஹிஹிஹி.............
மொத்தத்துல ஏ.பி.வள்ளியப்பன் கவிதைதான் சூப்பர்.
//பாக்கலாமா????????////////
மசாலா படம் பாக்கிற இஷ்டமிருந்தா. பாக்கலாம்
//நானும் இதைத்தான் வேண்டிக்கிட்டு இருக்கேன்.ஹிஹிஹிஹிஹி........//
உஙக ஆசை நிறைவேற நான் வாழ்த்துகிறேன்.
//மொத்தத்துல ஏ.பி.வள்ளியப்பன் கவிதைதான் சூப்பர்.//
நன்றி இளைய பல்லவன்.. உங்கள் வருகைக்கும், கருத்துக்கும்
இன்னைக்கு தானே பாஸ் படம் ரிலிஸ்? ரொம்ப பாஸ்டாதான் இருக்கீங்க.
Where is the Party பாட்டைப் பற்றிச் சொல்லவே இல்லையே...
ஐயோ!
இந்த கதையை படித்ததர்கெ எனக்கு தலைய
சுத்துது நீங்க எப்படி இரண்டரை மணிநேரம் படம் பார்த்து விமர்சனம் எழுறீங்க!
ஆனாலும் நீங்க ரொம்ப நல்லவரு!
சிம்பு படதில் இதை தானே எதிர்பார்க்க முடியும். உங்கள் விமர்சனம் அருமை. அழகாக விமர்சனம் செய்து இருக்கிறீர்கள்.
//இன்னைக்கு தானே பாஸ் படம் ரிலிஸ்? ரொம்ப பாஸ்டாதான் இருக்கீங்க.//
நன்றி சரவணகுமார். உங்கள் வருகைக்கும், கருத்துக்கும்
//ஆனாலும் நீங்க ரொம்ப நல்லவரு//
ரொம்ப தாங்ஸுங்க...
பாட்டு எல்லாமே தூள் பரிசல்.. எதையும் தனியா சொல்ல முடியல. இருந்தாலும் அந்த பாட்டு நான் எதிர்பார்ததைவிட கொஞ்சம் குறைச்சல்தான்.
//சிம்பு படதில் இதை தானே எதிர்பார்க்க முடியும். உங்கள் விமர்சனம் அருமை. அழகாக விமர்சனம் செய்து இருக்கிறீர்கள்//
நன்றி கடயம்... உங்கள் வருகைக்கும், கருத்துக்கும்
//பிரபுவை இப்படி ஓரு ஜூனியர் ஆர்டிஸ்ட் ரேஞ்சுக்கு நடிக்க // பிரபு மட்டுமல்ல, வேறொரு படத்தில் கவுன்டமணியையும் இப்படித்தான் நடிக்க விட்டிருந்தார்.
திண்டுக்கல் சாரதி எப்படி ?>>
கவிதை சூப்பர்...
என்னை மீண்டு காப்பத்தியதுக்கு நன்றி
//திண்டுக்கல் சாரதி எப்படி ?>>//
இன்னமும் பார்கலை ரவி..
//கவிதை சூப்பர்...//
நன்றி அக்னிபார்வை..
//என்னை மீண்டு காப்பத்தியதுக்கு நன்றி//
ஏதோ நம்மாள முடிஞ்சது..
சங்கரன்னா,
கதைய பத்தி ஒண்ணும் சொல்லலையே. . .
ஓ. . . அப்படி ஒண்ணும் இல்லையோ. . .!!!:)
எப்படி இருந்தாலும் சூட்டோட விமர்சனம் போட்டதுக்கு பிடிங்க Vote-அ. . .
சங்கர் தாதா,
எல்லாத்தையும் பத்தி சொன்னீங்கலே,கதைய பத்தி ஒண்ணும் சொல்லலையே. . .
ஓ. . .அப்படி ஒண்ணும் இல்லையோ
:)
இருந்தாலும் சூட்டோட விமர்சனம் போட்டதுக்கு பிடிங்க Vote-அ.
நன்றி செவ்வானம்.. உங்கள் வருகைக்கும்,கருத்துக்கும்
நன்றாக இருந்தது விமர்சனம். பொதுவாக சிம்புவின் படங்கள் நான் பார்ப்பது குறைவு. மனுசனிட்ட நல்ல திறமை இருக்கிறது. அப்படித்தான் அவர் அப்பா வளர்த்தார். ஆனால் அப்பன்காரன் தன்னோட வாயையும் சேர்த்து வளர்த்துட்டார். அதுதான் சிக்கல்.
கடைசில கவிதை சும்மா 'நச்' சுனு இருந்திச்சு.
//நன்றாக இருந்தது விமர்சனம். பொதுவாக சிம்புவின் படங்கள் நான் பார்ப்பது குறைவு. மனுசனிட்ட நல்ல திறமை இருக்கிறது. அப்படித்தான் அவர் அப்பா வளர்த்தார். ஆனால் அப்பன்காரன் தன்னோட வாயையும் சேர்த்து வளர்த்துட்டார். அதுதான் சிக்கல்.//
அது என்னவோ உண்மைதான் கதியால்..
நன்றி உங்கள் வருகைக்கும், கருத்துக்கும்...
இப்படி ஒரு கொடுமையான படத்தை சமீப காலங்களில் பார்கவே இல்லை. காலை படம் சிம்பு'வுக்கு சிறு சறுக்கல் என்று நினைத்தேன்... ஆனால், அவர் தானே விரும்பி இப்படி பட்ட கதைகளை தேர்ந்து எடுக்கிறார் என்று இப்போது தான் தெரிகிறது.
விடலை பயன் range' ல் இருக்கும் ஒருவன், அப்பா வேடத்திலும், மகன் வேடத்திலும் நடிப்பது, சின்ன சிம்பு 19 வயது என்று சொல்ல 20 வருடம் முன் என்று போடுவது, முகத்தில் புலி ஒப்பன்னை இட்டு மக்களை பயப்பட செய்வது, குசு குண்டி என்று இங்கீதம் தெரியாத காமெடி, double meaning வசனங்கள் (அதுவும் அந்த பஞ்சாமிர்தம் scene உண்மையில் கொடுமை), 5 நிமிடத்துக்கு ஒருக்க 20 பேரை பெண்டு நிமிதுவது, சினேகா போன்ற அக்கா நடிகையுடன் சிந்து பாடுவது, கடைசியில் பில்லா range' கு ஒரு getup change வேற ... போதுமையா போதும்..... இனியும் சிம்பு படத்தை பார்க்க நான் சென்றால் என்னை ஏன் என்று கேளுங்கள்...
அப்பவே பசங்க சொன்னாங்க.... கேட்டா தானே.... பட்டால் தன் புத்தி வரும் போல நமக்கு.....
ஆனால் சங்கர், இப்படி ஒரு படத்தை பார்த்து விட்டும், எப்படி தான் அதை நல்ல முறையில் விமர்சிக்க உங்களால் மட்டும் முடியுமோ.............
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் :(
ரஃபிக் ராஜா
காமிக்கியல் & ராணி காமிக்ஸ்
ஒன்று சொல்ல மறந்துட்டேனே, படத்தின் ஒரே ஆறுதல், சனா கான் என்ற ஒரு சூப்பர் பிகுரை தமிழுக்கு அறிமுகம் பண்ணி இருப்பது.... ஹீ.ஹீ.ஹீ.ஹீ.ஹீ..
//ஆனால் சங்கர், இப்படி ஒரு படத்தை பார்த்து விட்டும், எப்படி தான் அதை நல்ல முறையில் விமர்சிக்க உங்களால் மட்டும் முடியுமோ.............//
எல்லாம் ஒரு கடமை உணர்ச்சிதான்.. என்னய நம்பி எவ்வளவு பேர் இருக்காஙக்.. அவங்கள காப்பாத்த வேணாமா..?
//அவரை சுற்றி, சுற்றி வளைய வரும் சனாகான்.. சும்மா சொல்ல கூடாது நல்ல பெங்களூர் தக்காளி மாதிரி பளபள், தள தளன்னு இருக்காங்க.. ம்ஹூம்..//
அதிலெல்லாம் சிம்பு ஜித்தன்.. பாவம் அவருக்கு தான் ஒண்ணுமே தெரியாதே..? அப்படின்னு அவரு அப்பா சொல்லுறாரு...
1000 sollungapa... simbu dance-kkaga padam 1 time pakkalam...
Post a Comment