Posts

Showing posts with the label தமிழ் சினிமா..

தமிழ் சினிமாவின் 30 நாட்கள்

Image
தமிழ் சினிமாவின் 90 நாட்கள் என்கிற தலைப்பில் சில நாட்களுக்கு முன் எழுதிய பதிவிற்கு பலத்த வரவேற்ப்பை கொடுத்து ஏன் முப்பது நாட்களுக்கு ஒரு முறை எழுதகூடாது என்று கேள்வி எழுப்பிய லட்சகணக்கான வாசகர்களின்( அடங்கு.. அடங்கு,,) ஏகோபித்த ஆதரவிற்கு இணங்க.. இதோ.. தமிழ் சினிமாவின் 30 நாட்கள். அயன் இம்மாதம் பூராவுமே தமிழ் சினிமா காரர்கள் கொஞ்சம் குழம்பித்தான் போய்விட்டார்கள், தேர்தல், IPL, போன்ற ’திருநா’  கோலாகலங்களால் படங்களை வெளியிட தயங்கி கொண்டிருக்கிறார்கள். அதையெல்லாம் மீறி சன் பிக்சர்ஸ் வெளியீட்டில் ஏவிஎம்மின் ‘அயன்” இந்த  வருட சம்மர் ஸ்பெஷலாய் வெளிவந்தது.  வெளிவந்த முதல் நாள் முதல் படம் ஹிட் என்ற செய்தியை வழக்கம் போல் படம் ரீலீஸாகும் முதல் காட்சிக்கு முன்னமே தங்கள் தொலைக்காட்சியில் போட்டு விளம்பரபடுத்தி கொள்ளூம்  சன் டிவிக்கு அந்த வேலையே செய்ய அவசியமில்லாமல் செய்த முதல் நிஜ  வெற்றி படம்.  இந்த ஒரு மாதத்தில் அவர்களின் மார்கெட்டிங்கின் மூலம் அடைந்த வீச்சு அருமை. ஆனந்த தாண்டவம் அடுத்து வந்த ஆஸ்கர் ரவிசந்திரனின் தயாரிப்பில்,  சுஜாதாவின் கதை வசனத்தில்...