Posts

Showing posts with the label ஜில்லா

கொத்து பரோட்டா - 13/01/14 -Dhrishyam, Nenokkadaine, வீரம், ஜில்லா, புத்தக கண்காட்சி

புத்தக கண்காட்சி -3 இன்று என் மகன்களுடன் செல்வதாய் ப்ளான்.  தயாரிப்பாளர் சி.வி. குமாரும் அழைத்திருந்தார். கடந்த வருடம் போலவே இந்த வருடமும். பன்னிரெண்டு மணிக்கு காரில் சென்றால் பார்க்கிங் செய்ய இடமில்லை என்று திரும்ப அனுப்பிக் கொண்டிருந்தார்கள். வேறு வழியேயில்லாமல் வண்டியை யூ டர்ன் செய்து கொண்டு, எதிர் சைடில் இருந்த ஒர் கடையின் பார்க்கிங்கில் பார்க் செய்துவிட்டு உள்ளே சென்றேன். ஞாயிறு என்பதால் சாத்தியமானது. செம கூட்டம். இன்று வெய்யில் கொஞ்சம் இருந்ததால் வியர்த்துக் கொட்டியது. மினிமல்ஸ் அமெரிக்க ஐஸ்கிரீமோடு எங்கள் ஷாப்பிங் ஆரம்பமானது. ஒரு பக்கம் மகன்கள் ஒவ்வொரு கடையாய் சுற்றிப் பார்த்து கொண்டிருக்க, இன்னொரு பக்கம் நானும் சிவியும், தற்கால சினிமா, அவரின் தயாரிப்புக்கள், என் படத்தின் தற்போதையை நிலை என்று தமிழ் சினிமாவை ஒர் அலசு அலசினோம். கவிஞர் கீதாஞ்சலி எங்கள் இருவரையும் அடையாளம் கண்டு வாழ்த்தினார். மூத்த மகன் ஒர் ஆங்கில நாவலை செலக்ட் செய்ய, சின்னவனிடன் கேட்டதில் பார்த்த வரையில் ஏதும் இம்ப்ரஸ் செய்யலை என்றான். முடியலை. @@@@@@@@@@@@@@@@@@@@@@@