தோஸ்தானா - திரை விமர்சனம்
ஹிந்தி திரையுலகின் முக்கிய நாயகர்கள் ஓரின சேர்கையாளர்களாய் நடிக்கும் படம் என்றதும் ஓரு ஆர்வம் ஏற்படத்தான் செய்தது. படத்திலும் அவர்கள் வீடூ வாடகைக்கு எடுப்பதற்காக, ஓரின சேர்கையாளர்களாய் நடிக்கிறார்கள். மியாமியில் ஆண் நார்சாய் பணிபுரியும் அபிஷேக், மாடல் போட்டோகிராபரான ஜான் அபிரஹாமும் வீடு தேடும் படலத்தின் போது பேச்சிலர்களுக்கு இடம் கிடையாது என்றதால், தாங்கள் இருவரும் ஓரின தம்பதிகள் என்று பொய் சொல்லி வீட்டை பிடிக்கிறார்கள். ஆனால் அவர்கள் இருவரும் அங்கேயே இருக்கும் வீட்டு ஓனரின் அண்ணன் மகளான பிரியங்காவுடன் தங்க வேண்டும் என்றதும், ஓருவரை ஓருவர் மாற்றி பிரியங்காவை இம்ப்ரஸ் செய்ய பார்கிறார்கள். அவர்களின் போட்டி பிரியங்காவை காதலிக்கும் வரை போகிறது. பிரியங்காவின் பத்திரிக்கை ஆபிஸில் எடிட்டராக வரும் டைவர்ஸி பாபி டியோலுக்கும், பிரியங்காவுக்கும் காதல அரும்ப, அதை கெடுப்பதற்காக, மின்சார கனவு போல பாபி டியோலுக்கு, பிரியங்காவை இம்ப்ரஸ் செய்ய தப்பு தப்பான ஜடியாக்களை சொல்லி, அவரை ஓரு மாதிரி கோமாளீயாய் சித்தரிக்கிறார்கள்.. அப்படியும் அவர்களின் காதல் நிச்சயதார்த நிலைக்கு வர, அதை கெடுக்க பாபியின் ஐந்து வயத...