Posts

Showing posts with the label zindagi na Milenge Dobara

Zindagi Na Milenge Dobara

Image
கபீர், அர்ஜூன், இம்ரான் மூவரும் பள்ளி காலத்திலிருந்தே நெருக்கமான நண்பர்கள். த்ரீ மஸ்கிட்டர்ஸ் என்று அழைக்கப்படும் அளவிற்கு. கபீரின் எங்கேஜ்மெண்டில் கதை ஆரம்பிக்கிறது. கபீர் ஒரு பிஸினெஸ்மேன். இம்ரான் ஒரு ஜாலியான ஆட்பிலிம் காபி ரைட்டர். அர்ஜுன் பணம் மட்டுமே வாழ்க்கையை கொடுக்கும் என்று அசாத்தியமான நம்பிக்கையில் அதை நோக்கி பயணப்பட்டுக் கொண்டிருப்பவன். நல்லா சம்பாதிச்சு நாற்பது வயசுல ரிடையர் ஆயிடணும் என்று அடிக்கடி சொல்லிக் கொண்டிருப்பவன். கபீர்- நடாஷாவின் எங்கேஜ்மெண்டுக்கு பிறகு இவர்கள் மூவரும் சேர்ந்து பாச்சுலர் பார்ட்டிக்காக ஸ்பெயினுக்கு போகிறார்கள். இங்கிருந்து ஆரம்பிக்கிறது கதை.  இன்னொரு முறை வாழ்க்கையை வாழ கிடைக்காது என்பதை புரிந்து கொண்டு அவர்களின் வாழ்க்கையை மாற்றும் பயணமாய் அமைகிறது.