Posts

Showing posts with the label வீட்டுச் சாப்பாடு

சாப்பாட்டுக்கடை - சந்திரா மெஸ் - வளரசவாக்கம்

Image
  பொங்கலுக்கு பிறகு தொடர்ந்து பாய்க்கடை விடுமுறையாதலால் வேறு ஏதாவது குட்டி மெஸ்ஸை தேடுவோம் என்று பார்த்த போது உடன் வந்த சுரேஷ் இதே ரோடுல இன்னொரு மெஸ் இருக்கு ஆனா நான் சாப்டது இல்லை என்றான். சின்னக்கடையாய் இருந்தது. மொத்தமே நான்கைந்து டேபிள்கள் தான். ‘சரி எத்தனையோ பார்த்துட்டோம் இதை பார்க்க மாட்டோமா?” என்று உள்ளே நுழைந்தோம்.  சாப்பாடு 65 ரூபாய் என போட்டிருக்க, உள்ளே போனால் மட்டன் சாப்பாடு 120, சிக்கன் சாப்பாடு, எரா சாப்பாடு. நண்டு சாப்பாடு, சிக்கன் சாப்பாடு  என வகை படுத்தியும் இருந்தார்கள்.  வாரத்தின் ஒவ்வொரு நாட்களுக்கு ஒவ்வொரு மெனு வைத்திருக்கிறார்கள் நார்மல் சாப்பாட்டுக்கு சிக்கன் குழம்பும், கருவாட்டுக்குழம்பு, காரக்குழம்பு, ரசம், சாம்பார், மோர், ஒரு பொரியல் மற்றும் அப்பளம் என வகையாய் தந்தார்கள். சிக்கன் குழம்பு வீட்டுக்குழம்புப் போல இருந்தது. கருவாட்டுக்குழம்பில் முருங்கைக்காய் எல்லாம் போட்டு வாடையில்லாமல் கொஞ்சம் காரம் தூக்கலாய் சுவையாய் இருந்தது. காரக்குழம்பில் நன்கு வதக்கப்பட்ட பூண்டோடு, கெட்டியாய் அட்டகாசமாய் இருந்தது. ரசம், பொரியல் ஓகே ரகம். நான்...