வாதை, காமம், வன்புணர்ச்சி, குரூரம், வன்மம், வன்முறை = I Saw The Devil (2010)- korea
வெண் பனி விழும் இரவு. ஹைவேயுமில்லாமல்.. கிராமத்து ரோடாகவும் இல்லாத ஒரு அத்துவான, ரோட்டில் ஒரு வேன் வழுக்கிச் சென்று கொண்டிருக்க, காரில் அழகிய பெண்ணொருத்தி போனில் பேசிக் கொண்டிருக்கிறாள். அவளின் வுட்பீயுடன். ரொமாண்டிக்காக பேசிக் கொண்டிருக்கிறாள்.முகத்தில் காதலும், சந்தோஷமும், வெட்கமும் கூத்தாடுகிறது. அந்த பக்கம் காதலன் பாத்ரூமில் போய் அவளுக்காக பாட்டெல்லாம் பாடுகிறான். அவளுடய வண்டி ரிப்பேரானதால், டோ வண்டிக்காக காத்திருக்கிற நேரத்தில், வேன் டிரைவர் அவளுக்கு உதவ முற்படுகிறான். அவள் வேண்டாம் என்று மறுத்ததும் அங்கிருந்து விலகுகிறான். திடீரென அந்தப் பெண்ணை சுத்தியலால் தாக்கி அவளை இழுத்து தன் வண்டியில் தூக்கிப் போட்டுக் கொண்டு கிளம்புகிறான். ஒரு பாழடைந்த வீட்டின் ஹாலில் அந்தப் பெண் நிர்வாணமாய் உடலின் மேல் ஒரு பாலீத்தீன் கவர் போட்டு மூடி வைக்கப்பட்டிருக்க, குற்றுயிரும், கொலையுருமாய் இருக்கும் அவள் நினைவு வந்து முழிக்கிறாள். அவளின் கையை ஒரு கயிற்றில் கட்டி ஒரு மரத்தூணில் கட்டுகிறான். அவள் உடல் அசைக்க முடியாமல் திக்கித் திணறி, தன்னை கொல்ல வேண்டாம், எனக்கு கருணை காட்டுங்கள் என்று முணுமுணுக்...