இப்படி ஆரம்பிக்கிறது படத்தின் முதல் காட்சி. அப்படியே நடு முதுகில் சில்லென ஓடுகிறது.
சந்தேக லிஸ்டில் இருக்கும் நான்கு பேரில் ஒவ்வொருவனையாய் டிஸ்கார்ட் செய்து நம் வில்லனை கண்டுபிடிக்கிறான். வில்லனின் இருப்பிடத்தையும், கொலை செய்யும் களத்தையும், அங்கிருக்கும் ரத்தத்தையும் பார்த்து கதறுகிறான். தன் காதலியின் கையில் போட்ட நிச்சயதார்த்த மோதிரத்தை கண்டுபிடிக்கிறான். தன் காதலியை கொன்ற சைக்கோ இவன் தான் என்று முடிவு செய்து வில்லனைப் பிடிக்க முயற்சிக்கிறான். வில்லன் ஒரு பெண்கள் பள்ளியில் வேன் டிரைவராய் வேலை செய்ய, இவர்கள் அங்கு போகும் போது ஸ்கூல் பெண்களுடன் வண்டியில் கிளம்பி விடுகிறான். எல்லோரையும் இறக்கிவிட்டு, ஒருத்தியை மட்டும் கடத்தி, அவளை வன்புணர்ச்சி செய்ய முயற்சி செய்யும் போது, கதாநாயகன் அவனை கண்டு பிடித்து ஒரு பெரிய சண்டை நடக்கிறது. அந்த சண்டையின் முடிவில் அவனின் வாயில் ஒரு டாப்லெட் போன்ற ஒன்றை செலுத்தி விழுங்க வைக்கிறான். இத்துடன் படம் முடிந்து விட்டது என்றால் இல்லை. இதற்கப்புறம் தான் படம்.
அவன் வயிற்றில் அனுப்பிய டாப்லெட் ஒரு ஜிபிஆரெஸ் வஸ்து. அவனை குற்றுயிரும் கொலையுருமாய் விட்டுவிட்டு, கொஞ்சம் பணத்தையும் போட்டு விட்டு செல்கிறான். அவன் வயிற்றில் இருக்கும் டாப்லெட் அவன் எங்கு செல்கிறான் என்று கதாநாயகனுடய போனில் தெரிகிறது. அவன் எங்கெங்கெல்லாம் இம்மாதிரியான் முயற்சியில் இருக்கிறானோ அங்கெல்லாம் போய் கொஞ்சம், கொஞ்சமாய் அவனை டார்ச்சர் செய்து அவனை அங்க ஹீனப்படுத்திவிட்டு, உயிரோடு விட்டு விடுவான். மீண்டும் அவன் தட்டுத்தடுமாறி அடுத்த இடத்துக்கு போகும் போது அவன் வயிற்றில் டாப்லெட் இருப்பது தெரிய வந்து கான்ஸ்டிபேஷனுக்கு மருந்து சாப்பிட்டு மலத்தினூடே கையை விட்டு, எடுத்துவிடுகிறான். இப்போது போலீஸ் கதாநாயகனுக்கும், சைக்கோ வில்லனுக்குமான ஆட்டம் ஆரம்பம். இண்ட்ரஸ்டிங் ப்ளாட்.
படத்தின் முதல் காட்சியில் ஆரம்பித்து, படம் முழுவதும் வன்முறையும், காமமும் வழிந்தோடுகிறது. முழுக்க, முழுக்க, மனம் இறுகியவர்கள் மட்டுமே பார்க்க முடியும். அதிலும் ஒவ்வொரு பெண்ணையும் அவன் துண்டு துண்டாய் அறுத்து கொல்லும் காட்சிகளின் விவரிப்பு ஒரு சைக்கோவின் பார்வையில் படமாக்கப்பட்டிருப்பதால் ரொம்பவும் டீடெயிலிங். அதே போல லட்டுப் பாப்பா போலிருக்கும் கொரிய பெண்களும் அவர்களின் உடல்களையும், அவர்களுடய வெளிர் மார்பகங்களையும் நீள் தொடைகளையும் காட்டும் போது கிளர்ச்சியே வராமல் பரிதாபம் வருவது இயக்குனரின் வெற்றி என்றே சொல்ல வேண்டும். சைக்கோ வில்லனின் இன்னொரு சைக்கோ நண்பனின் கூட இருக்கும் பெண்ணை செக்ஸ் இல்லாமல் காய்ந்து கிடக்கும் வில்லன் வன்புணர்ச்சியாய் ஆரம்பித்து ஒரு அக்ரசிவ் செக்ஸாய் மாறும் காட்சி மட்டும் விதிவிலக்கு.
எங்கெங்கு காணினும் ரத்தம் அருவியாய் ஓடுகிறது. பெண்களை துண்டு துண்டாய் வெட்டுவதில் ஆரம்பித்து, சைக்கோ வில்லனின் குதிகால் எலும்பை கத்தியை விட்டு துழாவி உடைப்பது, இன்னொரு சைக்கோவின் சிரிக்கும் வாயை தன் இரு கைகளாலேயே பிரித்திழுத்து கிழிப்பது, சுத்தியலோ, அல்லது கம்பியோ எது கிடைக்கிறதோ அதை வைத்து மடேல் மடேலென மண்டையில் அடித்து ரத்தம் பீரிடுவது, மலம் கழித்துவிட்டு, அதில் கையை விட்டு அந்த ஜிபிஆரெஸ் வஸ்துவை எடுப்பது என்று முகம் சுளிக்கவும், குமட்டல் வரும் அளவுக்கு வதைகளையும், அதன் வீரியத்தையும் சொல்லும் படம்.
இப்படத்தின் வயலன்ஸுக்காகவே கொரியாவில் பெரிய எதிர்ப்பு எழுந்ததாய் சொல்லப்படுகிறது. Kim Ji-Woon மிகப் பிரபலமான இயக்குனர். அதே போல சைக்கோ வில்லனாய் நடித்தவர் பிரபல கொரியப்படமான ஓல்ட்பாயின் ஹீரோ Choi Min-sik.
மேக்கிங் என்று பார்த்தால் இந்த இயக்குனரிடம் நம் தமிழ் பட இயக்குனர் மிஷ்னின் பாதிப்பு நிறைய இருக்கிறது. முக்கியமாய் நீளமான காட்சிகள், கால்களுடனான ஷாட்டுகள். மிகக் குறைவான டயலாக்குகள் என்று இருப்பதை மறுக்க முடியாது. அதே போல ஏதோ.. வாதை, வன்மம், வன்புணர்ச்சி, டார்ச்சர் என்பதை பற்றி அப்படி எழுதியிருக்கிறார்கள் இப்படி எழுதியிருக்கிறார்கள் என்று சொல்பவர்கள் இப்படத்தில் வரும் காட்சிகளை பார்க்க வேண்டும். வாதை மற்றும் டார்ச்சரின் உச்சபட்ச விஷுவல் வடிவம். என்ன ஆளாளுக்கு மண்டையில் அடித்தாலும் அடுத்த காட்சியில் எம்.ஜி.ஆர் பட மரு போல ஒரு ப்ளாஸ்திரியையோ, அல்லது ஒரு ரிப்பன் ஒன்றைக் கட்டிக் கொண்டு அடுத்த ரேப்புக்கு போவது போன்ற லாஜிக் மீறல்களை மீறி ஒரு வித்யாசமான செக்ஸ், டார்ச்சர் படம்.
Comments
மிஷ்கின்னுக்கு கொரியன் பட பாதிப்பு அதிகம் உள்ளது..
தலைவரே.. உங்களுக்கு பகடி பற்றி ஏதும் தெரியாதா? :))
தல உங்களுக்கு ரொம்பவே இறுகுன மனசுதான்.