Thottal Thodarum

Feb 14, 2011

கொத்து பரோட்டா-14/02/11

காதல் ஒரு அருமையான உணர்வு, அதை அனுபவித்தவன் மட்டுமே உணரக்கூடிய இனிய வலி. காதல் எதில் முடிந்தாலும் அது தரும்  நினைவுகள் மட்டுமே சாஸ்வதம். நிறைய பேருடைய வாழ்க்கையை பல நேரங்களில் வயது வித்யாசமில்லாமல் காதல் தாக்கும், அடித்து வீழ்த்தும், என்ன தான் காதல் முடியுமிடம் காமம் என்று நிதர்சன தத்துவம் பேசினாலும், காதலுடனான காமத்தில் இருக்கும் சுவாரஸ்யமே வேறு. அதனால் தான் காதலுக்கு வயது ஒரு தடையாய் இருப்பதில்லை. பல நேரங்களில் செர்ரியின் தித்திப்பைப் போல் காதல் இருந்தாலும், கடைசியில் நெருடும் கொட்டையைப் துப்புவது போல் தான் தோல்விகளும். இன்று காதலர் தினமாம். காதலிப்பவர்கள் பிங்கும், தோற்றவர்கள் கருப்பும், ஒன் சைட் காதலர்கள் சிகப்பு நிறத்தில் உடையணிய வேண்டுமாம். நான் மீண்டும்  காதலிக்க ஆரம்பித்திருக்கிறேன்
######################################


ஒரு பெண்ணைப் பார்த்து அவளின் உடலழகை பார்த்து காதலிக்கிறேன் என்பது காதல் அல்ல.. காமம். அவளுடய புத்திசாலித்தனம், ஆட்டிட்யூட்டை பார்த்து காதலிப்பாயானால் அதன் பேர் காதலல்ல, அட்மைரேஷன். அவளுடய சோகத்தையோ, அழுகையையோ பார்த்து அவளின் மீது பாசம் கொண்டு அவளை காதலிப்பாயானால் அதுவும் காதலல்ல, பரிதாபப்படுவது.  உன் கவனத்தை அவள் கவர்கிறாள் என்பதற்காக அவளை காதலிப்பதாக சொன்னால் அதுவும் காதலல்ல.. இன்பாச்சுவேஷன். அப்ப நிஜ காதல்னா என்ன பாஸ்? தெரியலையே.. மச்சி ஒரு குவாட்டர் சொல்லேன்
############################################# 
10-15 வயசுல லவ் பண்ணா முளைச்சு மூணு இலை விடலை அதுக்குள்ள காதலா?
16-21 வயசுல லவ் ப்ண்ணா “படிக்கிற வயசுல லவ் என்னடா வேண்டியிருக்கு?’
22-27 வயசுல லவ் பண்ணா “ஒழுங்கா ஒரு வேலை தேடி சம்பாரிக்கிற வழியக்காணும் காதல் கேட்குதோ.. காதல்”
28-32 வயசுல லவ் பண்ணா “ கழுதை வயசாவுது இந்த வயசுல காதல் என்னடா காதல்ன்னு” கேட்குறாங்க.. பின்ன நாங்க எப்பத்தான் லவ் பண்ணுறதாம். மச்சி இன்னொரு குவாட்டர் சொல்லேன்.
##################################################
கறை நல்லது போட்டிக்கான செலக்‌ஷனை இன்று விஜய் டிவியில் காட்டினார்கள். நேரடியாய் எழுதிய போட்டியில் ஒரு பத்து குழந்தைகள் வெறும் வெள்ளைப் பேப்பரில், பேர், க்ளாஸ் மட்டும் போட்டுக் கொடுத்திருந்தார்கள். வீடியொவில் வந்து கதை சொன்ன் குழந்தைகள் செம க்யூட். அதில் ஒரு பெண் குழந்தை அஞ்சு நிமிஷம் வெறும் காற்றாய் சத்தமிட்டுவிட்டு, அவ்வப்போது அம்மாவின் பக்கம் பார்க்க, அம்மா வந்து அவளின் காதில் ஏதோ சொல்லிவிட்டு போக, பின்பு அவள் பெயரையும், க்ளாசையும் சொல்லிவிட்டு, கதை மறந்துபோச்சென சொன்னது அதைவிட க்யூட். ஒரு சிறுவன் விஜய் போல பக்கத்திலிருந்தவர்களை பார்த்து சைலன்ஸ் என்று அதட்டிவிட்டு கதை சொல்ல ஆரம்பித்தது.. அட்டகாசம். கறை நல்லதோ இல்லையோ.. இந்த நிகழ்ச்சி நல்லாருக்கு. என்ன வழக்கம் போல ரொம்ப இழுக்காம காட்டினாங்கன்னா நல்லாருக்கும்.
#######################################
சென்ற ஆண்டு இதே தினம் என்னுடய முதல் புத்தகமான “லெமன் ட்ரீயும் ரெண்டு ஷாட் டக்கீலாவும்” வெளிவந்தது. இதோ வருட முடிவுக்குள் மூன்று புத்தகங்கள். எல்லாவற்றிக்கும் காரணம் உங்கள் அன்பும் ஆதரவும்தான். நன்றி..நன்றி..நன்றி
#######################################
அள்ளிக்கோ.. அள்ளிக்கோ
கிழக்கு பதிப்பகம் அவர்களுடய புத்தகங்களை ஸ்டாக் கிளியரன்ஸ் சேல் போட்டிருக்கிறார்கள்.பத்து பதினைந்து ரூபாய்க்கெல்லாம் சல்லீசாய் அரைகிலோ வெயிட் உள்ள புத்தகமெல்லாம் கிடைக்கிறது. நான் என் பங்குக்கு யுவன் சந்திரசேகரின் சிறுகதை தொகுப்பு, இரா.முருகனின் சிறுகதை முழு தொகுப்பு, அரசூர் வம்சம், பாக்யம் ராமசாமியின் அப்புசாமி கதைகள், அசோகமித்ரனின் நாவல், ஆதவனின் நாவல், கிரேஸி மோகனின் சிரிப்பு ராஜ சோழன் என்று அள்ளிக் கொண்டு வந்தேன். இந்த வாரமும் எக்ஸ்டெண்ட் செய்கிறார்கள் என்று சொன்னார்கள். இடம் தி.நகர் சிவா விஷ்ணு கோயில் எதிரில் உள்ள் எல்.ஆர்.சாமி ஹாலிலும், மைலாப்பூர் குளத்து ரோட்டில் உள்ள ஒரு ஹாலிலும்.. அள்ளிக்கோ.. அள்ளிக்கோ..
###############################################
செவிக்கினிமை
எங்கேயும் காதல் படப்பாடல்கள் “கோ” அளவிற்கு பெரிதாய் கேட்கப்படவில்லை என்பது போல தோன்றினாலும், அப்படத்தில் வரும் “எங்கேயும் காதல்” பாடல் ஒரு ஸூத்திங் மெலடி. அல்டாப்பின் குரலில், தாமரையில் வரிகளில் வழுக்கிச் செல்கிறது. அதே போல கோ படத்தில் வரும் நகநக பாடல். நடுவில் வரும் தெலுங்கு பிட் குரல் ஹாண்டிங். ஆனால் என்ன ஒண்ணு ராஜேந்தர் ஒரு காலத்தில் பத்து டியூன்களை மட்டுமே வைத்துக் கொண்டு சூப்பர் ஹிட் இசையமைப்பாளராய் இருந்தது  போலவே ஹாரிஸும் ஆகிவருகிறார். எல்லா பாடல்களும் ஏற்கனவே கேட்ட எபெக்டை கொடுக்கிறது. ஒரு வேளை அதுனால்த்தான் ஹிட்டாவுதோ.. மைக்கேல் ஜாக்ஸனின் “Bad”டிலிருந்து சுட்டது ரொம்ப ஆபியஸ்.
$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$
ஜிமெயிலின் பஸ் வந்த காலத்தில் எல்லோரும் என்னவோ ப்ரைவசி போயிருச்சு, அது இதுன்னு ஃபீல் பண்ணாலும், கடந்த ரெண்டு நாளா, ஏர்டெல்லின் கனெக்‌ஷனில் எல்லாம் ப்ளாக்ஸ்பாட் தளங்கள் ஓப்பன் ஆகாமல் இருந்ததால், பஸ் ஓட்டினேன். செம இண்ட்ரஸ்டிங்.. அப்புறம் தான் தெரிஞ்சிச்சி, நிறைய பேர் ப்ளாக் எழுதாம ஏன் பஸ் ஓட்டுறாங்கன்னு.. நீங்களும் பஸ் ஓட்ட வாங்க..
#############################################
இந்த வார வீடியோ
இந்த வீடியோவை பார்த்து அசந்துவிட்டேன். பாரம்பரிய நடனக் கலைகள் அழிந்து வருகிறது என்று சொல்லிக் கொண்டிருக்கும் காலத்தில், அக்கலைகளை இன்னும் உயிர்ப்புடன் வைக்க, சில பல புதுமைகளை அறிமுகப்படுத்தி ஒரு பெரிய அதிர்வை ஏற்படுத்துவார்கள். அவ்வகையில் ஐஐடி கோரக்பூரில் நடந்த ஸ்பிரிங் பெஸ்ட் எனும் விழாவில் ஒரிசாவை சேர்ந்த சிறுமிகளை வைத்து நடந்த பாரம்பரிய நடனம் கலந்த ஒரு ஜிம்னாஸ்டி நடனம். குழந்தைகளில் திறமையை பாராட்டாமல் இருக்க முடியவில்லை.
###########################################
ப்ளாஷ்பேக்
கிஷோரின் மயக்கும் குரல், எஸ்.டி.பர்மனின் அற்புதமான ட்யூனில், சஷிகபூரின் ஸ்கிரீன் ப்ரெசென்சும், மனதை கலைக்கும் ராக்கியின் அழகும் இன்றும் கட்டிப் போடும் பாடல். இதே பாடலை “ராதையின் நெஞ்சமே” என்று தமிழில் போட்டிருக்கிறார்கள். வழக்கமாக இம்மாதிரி இந்தி தமிழ் உட்டாலக்கடியை வேதா என்று ஒரு இசையமைப்பாளர்தான் செய்வார். ஆனால் இந்த பாடல் எம்.எஸ்.வி என்று நினைக்கிறேன். கொஞ்சம் கேட்டுச் சொல்லுங்கள்.
###########################################
குறும்படம்
பி.எம்.டபிள்யூ கார் கம்பெனிக்காரர்கள் தங்கள் காரை மையப்படுத்தி நிறைய குறும்படங்கள் எடுத்திருக்கிறார்கள். அதில் நடித்தவர்கள், இயக்குனர் எல்லாருமே மிகப் பிரபலமானவர்கள். மடோனா நடித்திருக்கும் இந்த குறும்படத்தை இயக்கியவர் பிரபல இயக்குனர் கெய் ரிச்சி
#########################################
தத்துவம்
ஏழை தன் சாப்பாட்டுக்காக பல மைல் தூரம் நடக்கிறான். பணக்காரன் தன் சாப்பாடு ஜீரணிப்பதற்காக பல மைல் தூரம் நடக்கிறான்.-ரங்கன்

லவ்வரை மட்டும் சைட் அடிச்சா அது ஒர்க்.. கூடவே அவங்க ப்ரெண்டையும் சைட் அடிச்சா அது Hard ஒர்க்-அத்திரி

வாழ்க்கை மிக மோசமானது சந்தேகமும், நம்பிக்கையின்மையுமாய் இருக்கும் போது,  ஆனால் அதே சமயல் மிகவும் அற்புதமானது நம் சந்தேகங்களை மீறி நம்பிக்கை வைக்க பழகும் போது.-ரங்கன்

100கிலோ அரிசி மூட்டைய தூக்கிறவனால அதை வாங்க முடியல. வாங்க முடியறவனால தூக்க முடியலை – ரங்கன்

பெத்தவங்க அக்கறைப்பட்டா அதுக்கு பேரு ரெஸ்ட்ரிக்‌ஷன் அதாவது தடை அதே பாய் ப்ரெண்டோ, கேர்ள் ப்ரெண்டோ செஞ்சா அதுக்கு பேரு அக்கறையாம். என்னா ஒலங்ம்டா சாமி.
#######################################
ஜோக்
ஒரு டாலண்ட் போட்டியில் கேட்கப்பட்ட கேள்வி
இரட்டை சகோதரிகளில் ஒருத்தியை கல்யாணம் செய்துகிட்டா அதில் உன் பொண்டாட்டியை எப்படி கண்டுபிடிப்பே?
“எதுக்கு கண்டு பிடிக்கணும்?”

தயாரிப்பாளர்:நம்ம படத்து பேரைக் கேட்டாலே சின்ன பசங்களேர்ந்து பெரியவங்க வரைக்கும் ஆடிப் போயிரணும் அப்படி ஒரு டைட்டிலை சொல்லுங்க..?
டைரக்டர்: சண்டே ஒர்க்கிங் டே எப்பூடி?
#####################################
அடல்ட் கார்னர்
கிரைண்டருக்கும், பொண்ணுங்களுக்கும் உள்ள ஒரு ஒற்றுமை என்ன தெரியுமா?
ரெண்டுமே இல்லைன்னா கையாலத்தான் ஆட்டணும்.
#####################################
நேற்றைய பதிவான தற்கொலைகளும் பொதுபுத்தியும் படிக்க

Post a Comment

33 comments:

ம.தி.சுதா said...

எனக்குத் தான் சுடு சோறு சாப்பிட்டுட்டு வரட்டுமா...

அன்புச் சகோதரன்...
மதி.சுதா.
தாஜ்மகாலின் நாயகி மும்தாஜ் இல்லை திலோத்தமி தான்..

அவிய்ங்க ராசா said...

அள்ளிக்கோ, அள்ளிக்கோ ரெண்டி வாட்டிண்ணே..என்னோட கொத்து சாண்ட்விச் மாதிரி இல்லாம அருமைண்ணே..)))

ம.தி.சுதா said...

/////பின்ன நாங்க எப்பத்தான் லவ் பண்ணுறதாம். மச்சி இன்னொரு குவாட்டர் சொல்லேன். ////

அருமையாக இருந்தது...

அதோட சரியான ஒரு கேள்வியையும் தொடுத்துள்ளீர்களே..

டக்கால்டி said...

அள்ளிக்கோ, அள்ளிக்கோ ரெண்டி வாட்டிண்ணே..என்னோட கொத்து சாண்ட்விச் மாதிரி இல்லாம அருமைண்ணே..))) ///


Repeatu

டக்கால்டி said...

பச்சை புள்ளைங்களே ஆப் அடிக்குது... அண்ணனுக்கு ஒரு புல் ஆர்டர் பண்ணுங்கப்பா...

Riyas said...

//10-15 வயசுல லவ் பண்ணா முளைச்சு மூணு இலை விடலை அதுக்குள்ள காதலா?
16-21 வயசுல லவ் ப்ண்ணா “படிக்கிற வயசுல லவ் என்னடா வேண்டியிருக்கு?’
22-27 வயசுல லவ் பண்ணா “ஒழுங்கா ஒரு வேலை தேடி சம்பாரிக்கிற வழியக்காணும் காதல் கேட்குதோ.. காதல்”
28-32 வயசுல லவ் பண்ணா “ கழுதை வயசாவுது இந்த வயசுல காதல் என்னடா காதல்ன்னு” கேட்குறாங்க.. பின்ன நாங்க எப்பத்தான் லவ் பண்ணுறதாம். மச்சி இன்னொரு குவாட்டர் சொல்லேன்//

அதுதானே எப்பதான் லவ் பண்றது.. இதற்கு குவாட்டர் பத்தாது புல்லுதான் வேனும் சார்..

shrek said...

strawberry-la kotta illa boss

Philosophy Prabhakaran said...

// அள்ளிக்கோ, அள்ளிக்கோ ரெண்டி வாட்டிண்ணே.... //

அத்தனை குவாட்டர் உள்ளே போயிருக்குன்னு அர்த்தம்ண்ணே...

விநாயக முருகன் said...

கிரைண்டர் ஜோக் :)

எறும்பு said...

//அவங்க ப்ரெண்டையும் சைட் அடிச்சா அது ஹாட்டு ஒர்க்-///

தல அது Hard work. அது அத ஆங்கிலத்திலும் டைப்புங்க.

பிரபல பதிவர் said...

கலக்கல் காதலர் தின கொத்து....

காதல் ஜெயிக்க வாழ்த்துக்கள்

Anonymous said...

கனிமுத்து பாப்பா பாடல் 'ராதையின் நெஞ்சமே' இசை T.R.Papa

Ponchandar said...

http://ta.wikipedia.org/wiki/கனிமுத்துப்பாப்பா - இசை டி.வி ராஜு - ன்னு போட்டிருக்கு.

Avargal Unmaigal said...

http://avargal-unmaigal.blogspot.com/2011/02/blog-post_14.html உங்கள் காதலர் அல்லது காதலிக்கு இந்த லிங்கை தெரியப்படுத்துங்கள். இதுதான் நீங்கள் அவர்களுக்கு தரும் சிறந்த காதலர் தினப் பரிசு

Ba La said...

பஸ் ஓட்டினேன் ???

CS. Mohan Kumar said...

கிழக்கு டிஸ்கவுன்ட் எப்போ வரை? நேற்றோடு முடிந்ததா சொன்னாங்களே

அருண் said...

இன்னைக்கு எல்லாமே சூப்பரோ சூப்பர்,காதலர் தினத்தன்னிக்கு கலக்கிட்டிங்க.
-அருண்-

Sivakumar said...

லவ்வரை மட்டும் சைட் அடிச்சா அது ஒர்க்.. கூடவே அவங்க ப்ரெண்டையும் சைட் அடிச்சா அது Hard ஒர்க்-//

>> அப்ப எது ஸ்மார்ட் வொர்க்??

Sivakumar said...

//மோகன் குமார் said...
கிழக்கு டிஸ்கவுன்ட் எப்போ வரை? நேற்றோடு முடிந்ததா சொன்னாங்களே//

>>> நேற்று விசாரித்தேன். வரும் ஞாயிறு வரை விற்பனை இருக்கும் என்றனர்(சென்னையில்). டோன்ட் வொர்ரி. பீ ஹாப்பி..!!

Unknown said...

குறும்படம் பிரமாதம்..

Anonymous said...

///எங்கேயும் காதல் படப்பாடல்கள் “கோ” அளவிற்கு பெரிதாய் கேட்கப்படவில்லை என்பது போல தோன்றினாலும்/// உண்மை தான். எனக்கென்னமோ எங்கேயும் காதலில் இருக்கும் varities 'கோ' வில் இல்லை என்றே தோன்றுகிறது. ஆனாலும் இப்போது 'கோ' தான் அதிகம் கேட்கின்றேன். ஒரு வேளை EK பழசாகி விட்டதோ. மொத்தத்தில் HJ நம்மையெல்லாம் சுத்தலில் விடுகின்றார்.

Unknown said...

கொத்து புரோட்டா -புல் மீல்ஸ்

vinthaimanithan said...

மச்சி இன்னொரு குவார்ட்டர் சொல்லேன் :)))

TamilTechToday said...
This comment has been removed by a blog administrator.
Lakshmikanthan said...

ஐயா கேபிள், தயவு செய்து நீங்கள் சினிமா விமர்சனம் எழுதுவதோடு நிறுத்திக்கொள்ளுங்கள்.21 வயது மாணவியை நிர்வாணப்படுத்தி சோதனை செய்ததை எப்படி நியாயப்படுத்த முடியும்.கடும் வறுமைக்கு நடுவில் தன் மகளை பட்டப்படிப்பு படிக்க வைத்த அந்த ஏழை பெற்றோருக்கு உங்களால் என்ன சமாதானம் சொல்ல முடியும்.பணம் காணாமால் போனால் அதை பொருளாதார ரீதியில் பின் தங்கிய நிலையிலிருக்கும் ஒரு மாணவி தான் எடுத்திருக்க வேண்டும் என்று மெத்தப்படித்த பேராசிரியைகள் நினத்தது பொதுப்புத்தி இல்லாமல் வேறென்ன?

தமிழ் 007 said...

கொத்துப் பரோட்டா மிக அருமை.

Cable சங்கர் said...

ஐய்யா.. லஷ்மிகாந்தன். நிர்வாணப்படுத்தி சோதனையிட்டது நிருபிக்கப்படாத போது நீங்களாகவே மெத்தபடித்தவர்கள் தவறிழைத்து இருப்பார்கள் என்று எந்த பொது புத்தியில் சொல்கிறீர்களோ.. அதே பொது புத்தியில்தான் நானும் சொல்கிறேன். நீங்கள் பின்னூட்டமிடுவதுடன் நிறுத்திக் கொள்ளுங்கள் என்று சொல்ல நான் யார்.. :))

Cable சங்கர் said...

@மதி.சுதா
நன்றி

@அவிய்ங்க ராசா
நல்லாருந்தா சரி..:)

@டக்கால்டி
சாரி.. தப்பாயிருச்சு..

@ரியாஸ்
அதானே..

@ஷ்ரெக்
நன்றி
@பிலாசபி பிரபாகரன்
அது சரி.. அனுபவம் பேசுது..:))

@என்.விநாயகமுருகன்
நன்றி

Cable சங்கர் said...

@எறும்பு
மாத்திட்டேன். நன்றி
@சிவகாசி மாப்பிள்ளை
நன்றியோ நன்றி

@ப்ரீதம் கிருஷ்ணா
நன்றி
@பொன்சந்தர்
நன்றி

@அவர்கள் உண்மைகள்
நன்றி

@கிரேட்8
ஆமா
@மோகன்குமார்
இந்த வாரம் வரை

2அருண்
நன்றி

2சிவகுமார்
அதை தனியா சொல்றேன்.

Cable சங்கர் said...

@கே.ஆர்.பி.செந்தில்
நன்றி

2பீரிதம் கிருஷ்ணா
ஆமாங்க

@பிரி
நன்றி

@விந்தைமனிதன்
உனக்கும் சேர்த்தா?

Cable சங்கர் said...

2\@நன்றி தமிழ் 007

priyamudanprabu said...

பெத்தவங்க அக்கறைப்பட்டா அதுக்கு பேரு ரெஸ்ட்ரிக்‌ஷன் அதாவது தடை அதே பாய் ப்ரெண்டோ, கேர்ள் ப்ரெண்டோ செஞ்சா அதுக்கு பேரு அக்கறையாம். என்னா ஒலங்ம்டா சாமி.
.////

MMM......

Unknown said...

குழந்தைகள் நடனம் மிக அருமை...

//எப்பத்தான் காதலிக்கிறதாம்..//

நீங்க காதலிக்கிறத எப்பத்தான் நிறுத்தி இருக்கீங்க... சரி சரி..இன்னொரு குவாட்டரும் சொல்லுங்க :))