யாராவது எங்காவது திருவல்லிக்கேணி மெஸ்களை பற்றிப் பேசினால் உடனே அந்த மெஸ்ஸில் சாப்பிட்டிருக்கிறீர்களா? இந்த மெஸ்ஸில் சாப்பிட்டிருக்கிறீர்களா? என்று லிஸ்ட் சொல்வார்கள். அதிலும் திருவல்லிக்கேணி பாச்சுலர்கள் நல்ல சாப்பாட்டிற்காக அலைந்து திரிந்து கடை கண்டுபிடித்து வைத்திருப்பவர்கள் அதிகம். ஆனால் அப்படி லிஸ்ட் போட்டு சொல்லப்படும் கடைகளில் ஒரு கடையின் பெயர் மட்டும் இல்லாமல் இருக்காது.. அது திருவல்லிக்கேணி காசி விநாயகா மெஸ் தான்.

சுத்த சைவ உணவு விடுதி. போன போது வாசலில் ஒரு இருபது பேர் நின்று கொண்டிருந்தார்கள். இன்னொரு பக்கம் டோக்கன் வாங்குவதற்கு ஒரு சின்ன க்யூ நின்று கொண்டிருந்தது. உள்ளே நாற்பது பேர் உட்காரும் அளவுக்கு டேபிள் சேர் போடப்பட்டிருந்தது. முதல் ரெண்டு வரிசைகளுக்கு வெள்ளை டோக்கன், மற்ற இரண்டு வரிசைகளுக்கு மஞ்சள் டோக்கன். ஒரு வரிசை முழுதாய் முடிந்த பிறகு, அங்கிருக்கும் இலைகளையெல்லாம் எடுத்து சுத்தம் செய்த பிறகு மஞ்சள் டோக்கன் லைனையோ, வெள்ளை டோக்கன் லைனையோ.. திறக்கிறார்கள்.

ஒரு கூட்டு, ஒரு பொரியல், அப்பளம், சாதம், சாம்பார், வத்தக்குழம்பு, ரசம், மோர், அல்லது எக்ஸ்ட்ரா தயிர். நல்ல சுவையான வீட்டு சமையல் போல இருக்கிறது. அதிலும் அவர்கள் முதல் ரவுண்டுக்கு போடும் பருப்பும் நெய்யும்.. அட அட.. அட.. வெறும் பருப்பு நெய் தானே என்று கொஞ்சமாய் போட்டுக் கொண்டுவிட்டு, திரும்பவும் கேட்டால் எக்ஸ்ட்ரா அஞ்சு ரூபாய் என்கிறார்கள். அதனால் முதல் ரவுண்டிலேயே ஒரு கட்டு கட்டிக் கொள்ளுங்கள். அப்புறம் ஒரு சின்ன கப்பில் வரும் வத்தக்குழம்பு.. ம்ம்ம்ம்ம்ம்ம்ம். ச்சோ.. ஒரு திருப்திகரமான சைவ உணவு வேண்டுவோருக்கு நிச்சயம் இந்த க்யூ, காத்திருத்தல் எல்லாவற்றையும் தாண்டி போய் சாப்பிட்டால்.. க்யூவில் நின்று எம்பெருமானை கிட்டத்தில் உட்கார்ந்து பார்த்த சந்தோஷம் நிச்சயம்.
Comments
******
இதையும் படிங்க:உடல் எடையை குறைக்க வேண்டுமா? கீழே படிங்க.
ஒரு நம்பர் மிஸ்ஸிங். காரணம்...அந்த நம்பரே தான்...8 க்கு அதுத்த நம்பர் டேபிளில் உட்கார்ந்து இடுப்பவர் எதாவது கேட்டால்...ஏய் 9 க்கு சாம்பார் போடு என்று சொல்லிவிட்டால்...அதற்குதான்...8 க்கு அப்புறம் 10,10A,11 என்று போகும்...
- naren sai.