Thottal Thodarum

Feb 6, 2011

தூங்கா நகரம்

Thoonga_Nagaram_5841 மதுரை பேஸ்டு படமென்றாலே அலறி அடித்து ஓடும் அளவுக்கு தமிழ் சினிமா ஆகிவிட்ட நிலையில் இன்னுமொரு மதுரை களப்படமா? என்ற பயத்தோடுதான் படம் பார்க்க வேண்டியிருக்கிறது. ஷேவ் செய்யப்படாத தாடியுடன், பட்டாப்பட்டி தெரிய லுங்கிக் கட்டிக் கொண்டு, எப்போதும் தண்ணியடித்துக் கொண்டும், எவளையாவது நொட்டிக் கொண்டும், அருவாளை எடுத்து அலைந்து கொண்டும் இருப்பதே மதுரை ஆட்களின் வேலையாக காட்டிக் கொண்டிருக்கும் “லைவ் ஃபீல்” படங்களாய் பார்த்து நொந்து போயிருக்கும் நேரத்தில் தூங்கா நகரம்.Thoonga_Nagaram_5847
படம் ஆரம்பித்த முதல் ஒரு மணி நேரம் நகர்த்துவதே பெரும் பாடாய் போய்விட்டது. அதே வழக்கமான அறிமுகக் காட்சிகள். டான்ஸ் ஆடுவது, தண்ணியடிப்பது என்றும் கள்ளழகர் விழாவை காட்டுவது என்று எட்டுநூத்தி சொச்ச படங்களில் காட்டப்பட்ட அதே காட்சிகள் வந்து இம்சை செய்யத்தான் செய்கிறது. அதிலும் ஹீரோ, ஹீரோயின் இருவருமே இரண்டாப்பூ படிக்கையிலேர்ந்தே காதலர்கள் என்று காட்டி அதற்கான காட்சிகள் வரும் போது எரிச்சல் உச்சத்திற்கே போகிறது. அதன் பிறகு நடக்கும் ஒரு சின்ன ட்விஸ்ட்தான் படத்திற்கு ஒரு திருப்பு முனையை கொடுப்பது. ஊரில் உள்ள ஒரு பெரிய பணக்கார தாதாவின் இரண்டாவது பையனும், இன்னொரு ஜவுளிக்கடை ஓனரும் சேர்ந்து கொண்டு, டிரஸ்சிங் ரூமில் டபுஸ் சைட் மிரர் வைத்து அவர்கள் டிரஸ் மாத்துவதை போட்டோ எடுத்து அந்த பெண்களுக்கு அனுப்புகிறார்கள். அதை வைத்து அவர்களை ப்ளாக் மெயில் செய்ய, கதை நாயகனான விமலுக்கு தெரிந்த ஒரு அய்யங்கார் ஒருத்தரின் பெண்ணுக்கு அதே போல் பிரச்சனை வர, போதையில் இருக்கும் விமல் அவனை அடித்து துவைத்துவிட, அவனுக்கு கண் போய்விடுகிறது. தான் அடித்தது பெரிய க்ரூப் என்று தெரிந்ததும் நண்பர்கள் நான்கு பேரும் ஆளாளுக்கு எஸ்சாக.. ஒரு கட்டத்தில் வில்லன் க்ரூப் நண்பர்களில் ஒருவனை பிடித்து விமலை அவனின் திருமணத்திற்கு முன்பு கொல்ல வேண்டும் இல்லாவிட்டால் அவன் குடும்பத்தை அழித்துவிடுவோம் என்று மிரட்டப்பட, அவன் தன் உயிர் நண்பனை கொல்லப் போகிறான். அங்கே போனால் மற்ற நண்பர்களையும் அதே போல மிரட்டப்பட்டிருக்க, மூவரும் சேர்ந்து விமலை கொல்ல முயற்சிக்கிறார்கள். என்ன ஆயிற்று என்பதை வெள்ளித்திரையில் காண்க.
thoonga-nagaram-hot-wallpapers151 இந்த கதைக்கு மதுரை தேவையேயில்லை. மதுரை கதை சொன்னால் தான் ஜெயிப்போம் என்ற நம்பிக்கையில் இயக்குனர் இருந்திருப்பாரோ என்னவோ..? அதுவே அவருக்கும் மைனஸாகிவிட்டது. முதல் ஒரு மணி நேரத்திற்கு இவர்கள் அலப்பறை செய்வதாய் நினைத்துக் கொண்டு, பண்ணுகிற இம்சை தாங்க முடியவில்லை. சிங்கம்புலி வரும் பார் காட்சி மட்டும் நகைச்சுவை லேசாய் இருக்கிறது.

விமல் களவாணியில் பார்த்தது போலவே பெரிதாய் ஏதும் முயற்சிக்காமலேயே நடித்திருக்கிறார். இப்படியே போனால் நால்வரில் ஒருவராய் ஆகிவிடும் நாள் தூரத்தில் இல்லை. ஊமையனாக வரும் நிஷாத்துக்கு நல்ல கேரக்டர். நன்றாகவே செய்திருக்கிறார். பரணிக்கும் நல்ல கேரக்டர்தான். குறையொன்றுமில்லை.  பிணம் எரியூட்டும் பணியாளராய் வரும் இயக்குனர் கெளரவின் கேரக்டருக்கு ஏன் அவ்வளவு பில்டப் கொடுத்தார்கள். அவன் ஒரு சுயநலவாதி அது இது என்று?. நியாயமாய் பார்த்தால் நிஷாந்தின் மேல் பயணித்த கதையை இவர் மேல் பயணித்திருந்தால் நிச்சயம் க்ளைமாக்ஸை எதிர்பார்த்திருக்க முடியாது.

thoonga_nagaram_audio_launch_posters
பார்த்தவுடன் ”இறுக்க அணைச்சு ஒரு உம்மா தரலாமா” எனும் அளவிற்கு கவர்கிறார் அஞ்சலி. ஆனால் பெரிதாய் சொல்லிக் கொள்கிறார் போல ஒன்றுமில்லை. ஓரிரு இடங்களைத்தவிர. விமலுக்கும், அஞ்சலிக்குமான சிறுவயது காதல் கதை படு கண்றாவி.முடியலைடா சாமி. ஆனாலும் அஞ்சலி வரும் போதெல்லாம் ஒரு சுவாசப் புத்துணர்வு வருவதை ஒத்துக் கொள்ளத்தான் வேண்டும்.

வில்லனாக கமலா தியேட்டர் உரிமையாளர் நடித்திருக்கிறார். அவரது நீண்ட மூக்கும், அவருக்கு வைக்கப்பட்டிருக்கும் ஷாட்களும் கொடுக்க வேண்டிய இம்பாக்டுகளை கொடுத்திருக்கிறது. மற்ற வில்லன் ஆட்கள் எல்லாம் வழக்கமான மதுரை பில்டப் தான்.

சுந்தர் சி.பாபு ஒன் பிலிம் ஒண்டர்தான் போலும். பாடல்களில் ஏதுவும் நச்சென கவரவில்லை. ஒளிப்பதிவு நன்றாகவே இருக்கிறது. முக்கியமாய் ஓப்பனிங் ஜிம்மி ஜிப் மூவ்மெண்ட் காட்சிகளிலும், கன்ஸ்ட்ரக்‌ஷன் சண்டை காட்சியிலும் மிரட்டலாயிருக்கிறது. ஆனால் முதல் காட்சியில் நிறைய டெக்னிக்கல் தில்லாங்கடி இருப்பதால் அவ்வளவு பெரிய ட்ராவல் ஷாட்டின் பாராட்டை ஒளிப்பதிவாளருக்கு மட்டும் கொடுக்க முடியவில்லை.

எழுத்து இயக்கம் கெளரவ். இவர் கே.எஸ்.ரவிகுமாரின் உதவியாளர். முதலிலேயே சொன்னது போல இந்த கதைக்கு மதுரை தேவையேயில்லை. மதுரை செண்டிமெண்ட் ஒர்கவுட் ஆகியிருக்கும் என்று தோன்றுகிறது. முதல் பாதி முழுவதும் ஏதையோ ஓட்ட வேண்டுமென்ற கட்டாயத்தில் ஓட்டுவது போல் உள்ளது. காமெடி கொஞ்சம் கூட ஒட்டவில்லை. திரும்ப திரும்ப, டாஸ்மாக், கோயில் திருவிழா என்று ஜல்லியடித்திருக்கிறார்கள். நடு நடுவே அஞ்சலி மட்டும் முகத்தை காட்டவில்லையென்றால் தூங்கியே போயிருக்க வாய்ப்புண்டு.

thoonga-nagaram-hot-wallpapers148
இடைவேளையிலிருந்து சுறுசுறுப்பாகும் திரைக்கதையில் ஆங்காங்கே பாடல்கள் தடைகளாய் இருக்கிறது. எல்லாவற்றையும் மீறி க்ளைமாக்ஸில் ஏகப்பட்ட லாஜிக்கலான கேள்விகள் தொக்கி நிற்பதால் அட்டகாசமான படமாய் வரவேண்டிய  தூங்காநகரம், அரை தூக்கத்தில் எழுப்பிவிட்டது போல் ஆகிவிட்டது. ஊரையே கலங்கடிக்கும் தாதாவிற்கு  பக்கத்திலிருக்கும் திண்டுக்கல்லுக்கு போய் ஹீரோவை கொல்ல எவ்வளவு நேரம் ஆகும்? சரி அது தான் கதை கருவென்றிருந்தால் நிஷாந்தின் பாயிண்டாப் வியூவில் சொல்லப்பட்டதை ஏன் மற்றவர்களுக்கும் சொல்லவில்லை?. சுயநலமியான கெளரவின் உயிர்காட்கும் காட்சியை வைத்தவர்கள். ந்ட்பின் உயர்வை புரிந்து கொண்ட கெளரவ் கேரக்டர் துரோகம் செய்வது தானே நல்ல டிவிஸ்டாய் அமைந்திருக்கும் அதை ஏன் மிஸ் செய்தார்கள்? இவ்வளவு தூரம் ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதமான முயற்சி செய்து தோற்றுப் போகுமளவுக்கு போனவர்கள் ஏன் எல்லோரும் சேர்ந்து முன்னமே ஹீரோவிடம் சொல்லியிருக்க கூடாது? க்ளைமாக்ஸ் நடக்கும் காட்சியில் ஹீரோவும் இருக்க, மதுரையில் ஆஸ்பிட்டலில் உள்ள வில்லனின் குருட்டு பையனை யார் கொண்டு வந்து கொன்று ஹீரோவுக்கு பதிலாய் மூட்டையில் வைத்தார்கள்? எப்படி? க்ளைமாக்ஸில் கரெக்டராய் கலெக்டர் எப்படி இரண்டாவது வில்லனை அவரின் மனைவியை அவர்கள் கொன்றது போலவே கொல்ல சரியாய் வருகிறார்? என்பது போன்ற பல கேள்விகளால் சுரத்திழந்து போய்விடுகிறது.

சிங்கம்புலி திருட்டு சரக்கடிக்கும் டெக்னிக்கும், கெளரவின் செல்போன் ரிங்டோனும், ஒரு பாடல் காட்சியில் வேறொருவன் கற்பனையில் அஞ்சலியின் ட்ரெஸ் மாற்றப்பட, அதை அவன் கற்பனையில் அவனை அடித்து, வேறு ட்ரெஸ் மாற்றுவது, பகவான் தான் காப்பாத்தணும் என்று சொன்னதும், பகவான் ஆஸ்பிட்டலில் காட்சி ஓப்பன் ஆவது,  கோயில் பட்டாச்சாரியார் சொல்லும் “லோகத்துல 100 கோடி பேர் இருக்கா.. அவாளுக்கெல்லாம் சகாயம் செய்ய கடவுள் வர மாட்டார். மனுஷாதான் வருவார்” என்ற டயலாக்கை சரியான இடத்தில் உபயோகித்திருப்பதும்,  இரண்டு கிழவிகளை வைத்து காமெடி முயற்சியில் வெற்றிப் பெற்றிருப்பதும், இடைவேளையின் போது சாட்டையடிப் போல சுளீர்ரென்று கிளம்பும் பரபரப்பான திரைக்கதையும் பாராட்டப்பட வேண்டிய விஷயங்களாகும். சரியாக முடித்திருந்தால் இன்னும் பிரமாதமாய் இருந்திருக்கும்.

தூங்கா நகரம்- அரைத்தூக்கம்
சங்கர் நாராயண் @கேபிள் சங்கர்

Post a Comment

23 comments:

Sivakumar said...

>>> முதல் பாராக்ராப்...அதுக்காகத்தான் நான் இந்த படத்திற்கு போகவில்லை. மதுரைக்கு போகவே யோசிக்க தோணுது.. இதுதான் சினிமாவோட பாதிப்பா??

//தூங்கா நகரம்- அரைத்தூக்கம்//

>>> அறைத்தூக்கம்.... என் வீட்டு அறையில். I am Escape.

Sivakumar said...

/பார்த்தவுடன் ”இறுக்க அணைச்சு ஒரு உம்மா தரலாமா” எனும் அளவிற்கு கவர்கிறார் அஞ்சலி//

>>> உங்க இயக்கத்துல அஞ்சலி Confirm.

Prasanna Rajan said...

தூங்காநகரத்தை தூங்காம நைட் ஷோ பாத்தீங்களோ பாஸ்??

CS. Mohan Kumar said...

//>>> உங்க இயக்கத்துல அஞ்சலி Confirm//

:))

madurai partha said...

I WANT TO ASK ONE QUESTION TO YOU.WHY U DINT LIKE MADURAI ANY SPECIFIC REASON?
YOU KNOW I READ YOUR ALL REVIEWS BUT ALWAYS U WROTE BAD IMAGE OF TAMIL CINEMA.IF U HAVE CHANCE TO DIRECT TAMIL CINEMA U WILL GIVE UR BEST ONLY.SO PLEASE GIVE POSITIVE COMMENTS TO ENCOURAGE THE YOUNGSTERS
AS LIKE ME.

REGARDS
S.P.SARATHI

Cable சங்கர் said...

haipartha...

not only me.. every body is getting irritated.

i dont thing youve read all my reviews. if you go through i wrote about adukalam even though it is based on madurai. and lot more film. iam not baised. and iam a ardent fan of tamil films.. i want to encourage all the new tamil fim makers. i used to watch all the small fims in theatre better than who care about tamil films. i dont give any gurantee that i will give a best film. it's all in the game.. i will try my best to give a good film. i wrote about thaa.. in avery good manner. nandalala, and many more film. thank you for your feed back.

MANO நாஞ்சில் மனோ said...

சரி சரி சண்டை போடாதீங்கப்பா......

Unknown said...

தூங்கா நகரம்
இனி
தொங்கா நகரம்

Karthik said...

இந்த கதைக்கு மதுரை தேவை இல்லை...--சூப்பர் பாயிண்ட்..,
ஏன்தான் சும்மா சும்மா மதுரைக்கு கிளம்பரங்கன்னு தெரியல..
கடைசியில் படத்தின் நல்லவற்றைகளை அடுக்கியது சூப்பர்.

'பரிவை' சே.குமார் said...

அண்ணா...
உங்களுக்கு மதுரை மீது அப்படியென்ன கோவம்? தென் தமிழகத்துப் பக்கம் எடுக்கும் படங்களுக்கு தாங்கள் எழுதும் விமர்சனங்களில் பயங்கரமான தாக்குதல் தொடர்வதன் காரணம் என்ன?

சென்னைத் தமிழ் பிடிக்கும் உங்களுக்கு சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரைத் தமிழ் பிடிக்காதது ஏன்?

தென் தமிழகத்தில் வந்து படமெடுங்கள் என்று நாங்கள் சொன்னோமா? செலவு குறைகிறது என்பதால்தான் காரைக்குடி, தேவகோட்டை போன்ற ஏரியாக்களைத் தேடி வருகிறீர்கள்.

சினிமாவில் காட்டுவது போல் தென் தமிழக மக்கள் என்ன கத்தி கடப்பாறை என்றா வாழ்க்கை நடத்துகிறார்கள்... இல்லை கொலை செய்வதை தொழிலாக செய்கிறார்களா? சொல்லுங்கள்.

ஒரு பருத்தி வீரன் மண்ணின் மனத்துடன் வந்தது. அதைப் பிடித்துக் கொண்டு அதே வழியில் வருவது சினிமாத்துறையினர். பின் மதுரை மக்களின் பேச்சு வழக்கை கிண்டல் அடிப்பது ஏன்? எனக்குத் தெரியவில்லை...

தயவு செய்து ஒரு பகுதி மக்கள் மனம் புண்படுவதுபோல் எழுதுவதை தவிருங்கள்.

மதுரைக்கு வந்து பாருங்கள். அந்த மக்களின் வாஞ்சையான பேச்சையும் அவர்களின் மனங்களையும்.

உங்கள் விமர்சனம் எப்பவும் அருமையானவைதான். மதுரை குறித்த குற்றச்சாட்டுக்களைக் குறைத்தால் இன்னும் நல்லா இருக்கும்.

வாழ்த்துக்கள்.

பாசத்துடன்

சே.குமார்

Cable சங்கர் said...

அதைத்தான் நானும் சொல்கிறேன் குமார். மதுரை படம் தான் ஆடுகளம் அதை நான் பாராட்ட வில்லையா? திரும்ப திரும்ப மக்கள் எரிச்சலையும் வரையில் ஆவூ என்றால் தண்ணியடிப்பது, பிகர் கரெக்ட் செய்வதும், சின்ன வயசிலே காதல் செய்வதாய் காட்டுவதைதான் நான் அல்ல என்னைப் போல பெரும்பாலனவர்களின் எண்ணம். சோ.. இது இப்பட இயக்குனர்களுக்கு அல்ல நாளை எனக்கும் சேர்த்தே தான் சொல்க் கொள்கிறேன். எனக்கும் மதுரை ரொம்ப பிடிக்கும் அது மட்டுமில்லாம வஞ்சனையில்லாமல் அன்பை பொழிவதிலும், மிகவும் ஷார்ப்பான நக்கல்கள்க்கு பேர் பெற்றவர்களும் மதுரை மக்கள் தான்.

நான் மேற்சொன்ன குறைகள் இல்லாம ஒரு மதுரை களப் படத்தை ஆடுகளம் போல சொல்லட்டும் பாராட்டுவோம்.

எல் கே said...

@குமார்
இவர் மதுரையை குறை சொல்ல வில்லையே ??? ஒரே மாதிரி திரும்ப திரும்ப எடுப்பதைத்தான் குறை சொல்லுகிறார்

குறை ஒன்றும் இல்லை !!! said...

ஏங்க எல்லோரும் கேபிளாரை தப்பா நினைக்கிறீங்க ? அவர் சொல்ல வந்த விசயம் சிம்பிள்.. மதுரைன்னு சொன்னதும் ஏகப்பட்ட நல்ல விசயம் நினைவுக்கு வரனும் ஆனா இந்த டைரக்டர்கள் திரும்ப திரும்ப ரவுடிகளையும், பால்ய காதலையும் பத்தியே எடுத்திட்டு இருந்தா நமக்கு கடுப்பு தானே வரும்? பருத்தி வீரன்,கோரிப்பாளையம்,மதுரை சம்பவம்னு நிறைய எடுத்துக்காட்டுகள்!!!

உணவு உலகம் said...

நாலு பேர் நாலு விதமா சொன்னாலும்,
நச்சென்ற விமர்சனம்.

Unknown said...

நல்லா எழுதி இருக்கிங்க. indiaglitz விமர்சனம் படிச்சிங்களா? indiaglitz தளம் கலைஞர் குடும்பத்துக்குச் சொந்தமானதோன்னு ஒரு சந்தேகம் “இளைஞன்” பட விமர்சனம் படிச்சப்போ வந்துச்சு, இப்போ அது உண்மை தான்னு நிருபிச்சிடுவாங்க போல, அவ்ளோ தூக்கி எழுதி இருக்காங்க :-)

அருண் said...

அருமையான விமர்சனம்,ஆனால் வழமையான கிளிஷேக்கள் வரும் போது எரிச்சலூட்டுவதாய் அமைவது என்னவோ உண்மைதான்.
//இது இப்பட இயக்குனர்களுக்கு அல்ல நாளை எனக்கும் சேர்த்தே தான் சொல்லிக் கொள்கிறேன். //
இது தான் நீங்க.

geethappriyan said...

தல,
களவாணி படத்தில் விமலை உங்களுக்கு பிடிக்கவில்லையா?!!! என்ன படம் பார்த்தீங்களா?தல?இந்த சிம்பு,சொம்பு மண்ணாங்கட்டி ஹீரோக்களுக்கு களவாணி விமலின் யதார்த்த நடிப்பு. மிகப்பெரிய தொலைநோக்கு,
அதிலும் குறிப்பாக
நீ ஊரான் வய்ல்ல இருக்கற நெல்லபூரா பொறுக்கி கொண்டுபோய் கொப்பண்ட குடுப்ப,அவன் வெதநெல்லு வெத நெல்லுன்னு விக்கிறானா?என்று ஓவியாவிடம் லந்து விடும் காட்சிகள் எல்லாம் தூள்,மொத்தத்தில் விமல் களவாணியில் எல்லோர் மனதையும் அள்ளிக்கொண்டார்.இந்த படம் நிச்சயம் விமல் ஒருத்தருக்காகவேனும் பார்ப்பேன்,பார்த்துவிட்டு வரேன்.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

padam ok thaan

'பரிவை' சே.குமார் said...

அண்ணா என் கருத்துக்கு பதிலளித்ததற்கு நன்றி. நான் குற்றமாக இதைத் தெரிவிக்கவில்லை... இனி வரும் இயக்குநர்கல் மாறி ஆரோக்கியமான படங்களைக் கொடுத்தால் சந்தோஷமே..!

@எல்.கே: // மதுரையை குறை சொல்ல வில்லையே ??? ஒரே மாதிரி திரும்ப திரும்ப எடுப்பதைத்தான் குறை சொல்லுகிறார்//

ஆமாம் எல்.கே. அதைத்தான் கேபிள் அண்ணா சொல்கிறார் என்றாலும் பேச்சு வழக்கையும் சில விமர்சனங்களில் சொன்னதால்தான் நானும் சொன்னேன்.

மற்றபடி கேபிள் அண்ணாவின் விமர்சனம் மேல் எனக்கு எப்பவும் மரியாதை உண்டு. உங்க கருத்துக்கு நன்றி நண்பா.

Sivakumar said...

pls check http://manithana.blogspot.com/2011/02/blog-post.html. Just for the information.

Thamira said...

http://www.aathi-thamira.com/2011/02/blog-post_07.html

rajan said...

"ஈசன்", "தூங்காநகரம்", "யுத்தம்செய்", "வர்மம்" உள்ளிட்ட நான்கு திரைப்படங்களும் கிட்டத்தட்ட ஒரேகதை.

Anbazhagan Ramalingam said...

அருமையான விமர்சனம்,ஆனால் வழமையான கிளிஷேக்கள் வரும் போது எரிச்சலூட்டுவதாய் அமைவது என்னவோ உண்மைதான்.
//இது இப்பட இயக்குனர்களுக்கு அல்ல நாளை எனக்கும் சேர்த்தே தான் சொல்லிக் கொள்கிறேன். //
இது தான் CABLE JI. I AM EGARLY WAITING YOUR OWN MOVIE