Thottal Thodarum

Feb 28, 2011

கொத்து பரோட்டா-28/02/11

ரொம்ப நாள் கழித்து நடந்த பதிவர் சந்திப்பு இனிதே நிகழ்ந்தது. இயக்குனர் சீனு இராமசாமியும், சிங்கை பதிவர் ஜோசப்பு வந்திருந்து சிறப்பித்த சந்திப்பில் ஆயிரத்தில் ஒருவன் மணி, அஞ்சாநெஞ்சன், செந்தில்குமார் போன்று பல புதிய பதிவுலக நண்பர்களை பார்க்க முடிந்தது. தென்மேற்கு பருவக்காற்றின் வெற்றிக்கு பதிவர்களின் பங்கு மிக முக்கியம் என்று இயக்குனர் பாராட்டினார். நல்ல சிறு முதலீட்டு படங்களை ஆதரிக்க வேண்டுமென்றும், சிறு முதலீட்டு படங்களுக்கான ஆதாரவு அதனை சார்ந்து வாழும் இயக்குனருக்கான வாழ்வாதரம் என்றும், மேலும் தான் படம் எடுக்க வந்த காலத்திலிருந்து நடந்த சுவையான கதைகளை மிகச் சுவாரஸ்யமாய் பேசினார். சிங்கைப் பதிவர் ஜோசப் பால்ராஜ் சிங்கைப் பதிவர்கள் குழுமத்தை பற்றியும், சிங்கைநாதனுக்கான மருத்துவ உதவிக்கான வெற்றிக்கு பொறுப்பு நான் மட்டுமல்ல.. நம் எல்லோருக்குமானது என்றும் தான் ஒரு ஒருங்கிணைப்பாளன் மட்டுமே என்று சொன்னார். சென்னை பதிவர்கள் குழுமத்திற்கு சில ஆலோசனைகளையும் வழங்கினார். எல்லாம் இனிதே முடிந்தது. நிகழ்ச்சிக்கான செலவுகளை  முன்னெடுத்து உதவிய ”ழ” பதிப்பகம் ஓ.ஆர்.பி.ராஜா, டிஸ்கவரி புக் பேலஸ் வேடியப்பனுக்கும் நன்றிகள் பல.
###########################

உள்ளம் துறந்தவன். சுஜாதா கல்கியில் எழுதிய தொடர். படிக்காமல் விட்டு போயிருந்த புத்தகம். திறந்து வைத்ததுதான் தெரியும் இரண்டு மணி நேரம் போனதே தெரியவில்லை. இன்போஸிஸை போன்ற ஒரு சாப்ட்வேர் நிறுவத்தை கட்டி நிர்வகிக்கும் ராகவேந்தர் என்பவரைச் சுற்றி நடக்கும் கதை. பெரும் பாலான கதை நிகழ்வுகள் வசனங்களிலேயே போகிறது. மஞ்சு, அழகேசன் காதல், பின் வரும் சோகங்களில் பல சினிமாகளின் கிளிஷே. ஆனால் அதையும் மீறி சுவாரஸ்யமான எழுத்து உள்ளிழுத்து சென்றது. ஒரு வேளை தொடராக இல்லாமல் தனிப்பட்ட முறையில் நாவலாய் வந்திருந்தால் இன்னும் எழுதியிருப்பாரோ.. எனக்கென்னவோ..அவசர அவசரமாய் முடித்ததாய் தோன்றியது. அவர் முடித்த இடத்திலிருந்து ஒரு நாவல் எழுதலாம். ஆனாலும் ஒரு விஷயம் சுஜாதா கமர்ஷியல் பத்திரிக்கைகளின் கட்டாயங்களுக்குள்  நிறைய கட்டுடைத்திருக்கிறார் என்பது உண்மை என்பது உ.கை.நெ.கனியாய் தெரிகிறது.
###############################
ராம்கோபால் வர்மாவின் சமீப காலமாய் மீண்டும் தெலுங்கு பக்கம் தன் பார்வையை திருப்பியிருக்கிறார். ரத்த சரித்திரா படத்திலிருந்து. ஹிந்தியில் அவரது படங்களின் தோல்விகளால் மீண்டும் தாய் பூமிக்கு வந்திருப்பதாக பேசப்படுகிறது. சுமார் பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு பிறகு வர்மாவின் நேரடி தெலுங்கு படம் கே.எஸ்.ஏ.டி. அப்பால்ராஜு. சுனில் காதாநாயகனாய்  நடித்து வெளிவந்திருக்கும் படத்திற்கு, தெலுங்கு நடிகர், நடிகைகளிடமிருந்து பாஸிட்டிவ்வாகவும், நெகட்டிவாகவும் ரெஸ்பான்ஸ் வந்திருக்கிறது. படத்தின் ரிசல்ட் சுமார் தான் என்று கேள்வி. அதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் விரைவில் அப்படத்தின் இரண்டாம் பாகம் இயக்கப் போவதாய் அறிவித்திருக்கிறார். ரவிதேஜா, ஷர்மிலி, ப்ராகாஷ் ராஜ் இவர்களை வைத்து வெறும் ஐந்தே நாளில் தொங்கலு முட்டா என்கிற படத்தை ஐந்து கேனான் 7டி கேமராவை வைத்துக் கொண்டு, யூனிட்,லைட்ஸ் ஏதுமில்லாமல் முடித்து வருகிற மார்ச் 18ஆம் தேதி வெளியிடயிருக்கிறார். இதற்கு அடுத்ததாய் தெலுங்கு திருமணங்களை மையமாய் வைத்து பெல்லி என்கிற படத்தையும் இயக்க உள்ளார். செகண்ட் இன்னிங்க்ஸா.. இண்ட்ரஸ்டிங்.
###########################
Kudirinthi Kappu Coffee.. மிகச் சமீபத்தில் வெளியாகியுள்ள ஒரு தெலுங்கு படத்தின் பெயர். வருண் சந்தேஷ் நடித்திருக்கும் இப்படத்தின் டைட்டில் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. சில சமயங்களில் தாய்மொழியில் தான் தலைப்பு வைக்க வேண்டும்  அடம்பிடித்து மொழி வளர்ப்பதை விட இரண்டு மொழிகள் கலக்கும் போது.. கிடைக்கும் ரொமாண்டிக்கான பெயர்கள் அட்டகாசமாய் இருக்க வாய்ப்பிருக்கிறது. kudirinthi Kappu Coffee..  என்றால் கிடைத்தது கப் காப்பி.. என்று பொருள். அதே போல இன்னொரு படத்தின் பெயர் LBW (Life Before Wedding). அங்கேயும் இம்மாதிரியான சின்னப் படங்களுக்கு தியேட்டர் கிடைக்கவில்லை என்று பெருமல் இருந்துக் கொண்டுதானிருக்கிறது. இக்கரைக்கு அக்கரைப் பச்சை.
#############################
மிகச் சமீபத்தில்தான் ஹாரிஸின் தெலுங்குப் படமான ஆரஞ்ச் படப் பாடலை கேட்டேன். அங்கே பாடல்கள் பெரிய ஹிட்டாம். அதில் ஒரு பாடல் நரேஷ் ஐயரின் ஸூத்திங் குரலில் சுகம். கார்த்திக்கின் மென் குரலில் இன்னொரு பாடல் சிலிபிகா என்று.. அதுவும் ஒரு அருமையான மெலடி. எங்கேயும் காதல் படத்தில் திமு,திமு என்கிற பாடலாய் அதை தமிழில் கொடுத்திருக்கிறார். எனக்கு மீண்டும், மீண்டும் ஆச்சர்யமாய் இருக்கிறது. எப்படி ஒரு பத்து ட்யூன்களை வைத்துக் கொண்டு ஜல்லியடித்துக் கொண்டிருக்கிறாரென்று inspite of his hit lists
##############################
Flashback
வயதுவித்யாசமில்லாமல் இந்தியாவெங்கும் முணுமுணுத்தப்பாடல்.  இன்றளவிலும் மறக்க முடியாத பாடல். ஜீனத்தின் மென் கவர்ச்சியும், அம்ஜத்தின் ஆர்ப்பாட்டமும், தாளம் போட வைக்கும் “லைலா ஓ லைலா”  அம்மன் தரிசனம் செஞ்சிக்கங்க..
##############################
குறும்படம்
வினை விதைத்தவன் வினை அறுப்பான் என்பதை பேய் கதையாய் சொல்லியிருக்கிறார்கள். கதையை விட கதைக்களமான ஹைவேயும், லோ ஆங்கில் வைட் ஷாட்டுகள் சொல்லும் கதைகள் நிறைய. ஒளிப்பதிவாளர் குகனுக்கு வாழ்த்துக்கள். ஆங்காங்கே லேசாய் திடுக்கிட வைத்தமைக்காக. எழுதி இயக்கிய ராகேஷுக்கு பாராட்டுக்கள்.
####################################
டிவிஸ்டர் என்றொரு ஆங்கில படத்தை பார்த்தவர்களுக்கு அமெரிக்க மாகாணங்களில் ஏற்படும் டொர்னாடோ பற்றி கொஞ்சம் தெரிந்திருக்கும் அப்படத்தில் வரும் ஐந்தாறு டொர்னாடோக்களில் இரண்டு நிஜம் என்று சொன்னார்கள். டொர்னோடோவைப் பற்றி ஆராய்ச்சி செய்பவர்களைப் பற்றிய கதை அது. நிஜ வாழ்வில் டொர்னோடோவை துறத்தும் ஆராய்ச்சியாளர்களான புருனின், மெக்கோவன் எடுத்த மிக நெருக்கமான டொர்னோடோவின் வீடியோ..

################################
தத்துவம்
பல நாள் திருடன் மட்டுமல்ல. பல நாள் பொய்யன், வீண் ஜம்பக்காரன், பீத்தக் பெருங்களையன் கூட ஒரு நாள் மாட்டிக் கொள்வான்.

எவனொருவன் உன்னை தொடர்ந்து எரிச்சலூட்டிக் கொண்டிருக்கிறானோ அவன் தான் உன்னை அதிகம் நேசிப்பவன். என்ன அவனுக்கு தன் நேசத்தை வெளிப்படுத்த தெரியவில்லை.

உலகிலேயே மிக சுறுசுறுப்பானவன் அலாரக் கடிகாரத்தை கண்டுபிடித்தவன். மிகச் சோம்பேறி அதற்கு ஸ்னூஸ் பட்டனை கண்டுபிடித்தவன்.

உனக்கு சட்டங்கள் பிடிக்கவில்லையெனில் அதை தொடர்ந்து வெற்றியின் இலக்கை அடைந்து அதை மாற்று – பில்கேட்ஸ் சொன்னதா சொன்னாங்கப்பா..
################################
பரபரப்பாக அரசியல் ஜோடிகள் சேரத் துவங்கிவிட்டன. விஜய்காந்துக்கு சீட் இவ்வளவு என்று முடிவாகாவிட்டாலும் எங்கள் தொகுதியில் சுறுசுறுப்பாக வேலையை  ஆரம்பித்துவிட்டார்கள். என்ன அவர்களுக்கு துணையாய் இருக்க வேண்டிய ஆதிமுகவினரைத்தான் காணோம். அம்மா இன்னும் சிக்னல் கொடுக்கலையோ.?
#############################
ஜோக்
ஏங்க பையனை இப்படி அடிக்கிறீங்க?
பின்ன என்னங்க.. போஸ்ட் பாக்ஸுல லெட்டரை போட்டுட்டுவான்னா.. லெட்டர் பாக்ஸ் பூட்டியிருக்குன்னு திரும்ப வர்றான்.
#################################
அடல்ட் கார்னர்
பெண்: பெண்களிடம் நீங்கள் எதை முதலில் பார்ப்பீர்கள்?
ஆண் : அது அவள் வருகிறாளா? இல்லை போகிறாளா என்பதை பொறுத்தது.
ஒரு கவர்ச்சியான பெண் மெடிக்கல் ஷாப்பிற்குப் போய் எக்ஸ்ட்ரா லார்ஜ் காண்டம் இருக்கிறதா? என்று கேட்டாள். கடைக்காரன் எத்தனை பாக்கெட் வேண்டும் என்று கேட்க.. யாராவது வாங்க வருவாங்க இல்ல கேட்டுச் சொல்றேன் என்றாள்.
###############################
சங்கர் நாராயண் @கேபிள் சங்கர்

Post a Comment

40 comments:

பதிவன் said...

வடை ..........

K.MURALI said...

நல்ல கொத்து.

butterfly Surya said...

Missed you all.. ஊரில் இல்லை. வாழ்த்துக்கள்

pichaikaaran said...

புதிய இடம், புதிய சூழல் என பதிவர் சந்திப்பை அமைத்ததற்கு நன்றி..

இந்த இடம் பலருக்கு வசதியாக இருக்கும்...

ஆனால் கொஞ்சம் முன்பே அறிவித்து இருக்கலாம்

Indian said...

//எனக்கு மீண்டும், மீண்டும் ஆச்சர்யமாய் இருக்கிறது. எப்படி ஒரு பத்து ட்யூன்களை வைத்துக் கொண்டு ஜல்லியடித்துக் கொண்டிருக்கிறாரென்று inspite of his hit lists//

ஒரே லல்ல லல்ல லா, லாலாலா ட்யூன வச்சிகிட்டு S.A.ராஜ்குமார் சில வருசங்கள ஓட்டினாரே. அதுபோலத்தானோ?

Ŝ₤Ω..™ said...

//பல நாள் திருடன் மட்டுமல்ல. பல நாள் பொய்யன், வீண் ஜம்பக்காரன், பீத்தக் பெருங்களையன் கூட ஒரு நாள் மாட்டிக் கொள்வான்.//

ஆமாண்ணே..

Ba La said...

தெலுங்கில் Cricket, Girls, Beer ன்னுங் கேள்விப் பட்டேன்.

அப்புறம் நல்ல கொத்து

Unknown said...

//எவனொருவன் உன்னை தொடர்ந்து எரிச்சலூட்டிக் கொண்டிருக்கிறானோ அவன் தான் உன்னை அதிகம் நேசிப்பவன். என்ன அவனுக்கு தன் நேசத்தை வெளிப்படுத்த தெரியவில்லை. //

தலைவரே, உங்களை அதிகமா நேசிக்கிற சில பேர் கண்ணுக்குள்ளே வந்து போறாங்க :))

பதிவர் சந்திப்பில் நிறைய புது நண்பர்கள் கிடைத்தார்கள்... தொடருவோம்!! ஒருங்கிணைத்தமைக்கு நன்றி...

'பரிவை' சே.குமார் said...

Pathivar santhippukku vazhththukkal. koththu nalla irukku...

Sivakumar said...

RGV படத்திற்காக காத்திருக்கிறேன்.
"சென்னை பதிவர் குழுமத்திற்கு கொள்கை இல்லாததே கொள்கை". ஜெய் கேபிள்!

அன்பேசிவம் said...

தல RVG படம் கேனான் 5D ன்னு நினைக்கிறேன். :-) கரெக்ட்டா?

அடடா said...
This comment has been removed by the author.
அடடா said...

COMMENT FROM JAYAVEL(9840398398)
DEAR CABLE சங்கர் வணக்கம்,
BLOGGERS MEET,( நான் blogger அல்ல), வந்து நொந்து போனேன்.சிதறிய நெல்லிக்காய் கூட்டம் அது. சிறப்பு பேச்சாளரை சிரிப்பு பேச்சாளார் ஆக்கி(இடைஇடையே comment அடித்து)இன்னும் சிலர் பின் பக்கமாய் எழுந்து வந்து நின்று,பாவம் அந்த ழ பரிதாபமாய் கேட்க ஆளீல்லாமல் மைக் பிடித்து நின்றது.let me continue in thaminglish ungalai ellam kevalamaga parkkathaan thondriyadu. ungalududaiya meeting nadapatharku mundhina naal saraswathi vijayakumaarukaga nadanntha irangal kootathilum naan பங்கேற்றேன்.இப்போதய bloggers paathi perukku avar yaar endru therindhal aacharyam, aanaal andha kootathayum ungaludaya koottathaiyum ,avargal pangetru nadathiya,naagareemana muraiyayum indraya bloggers 10sadhaveedham kooda seyyavillai. udane adhu irangalkootam idhu இளையவர்kootam ena sapai kattu katta vendaam.
oorukkum ulagukkum ubadesamum ,commentum addikkum chennai bloggers singapore mattrum erode bloggers pin patri naagarreega நாகரிகமாய் நடந்து kondu தமிழை kaapatravendum. IDHU ennai pola ungalai padithu inburum (indha kootathai parthu thunburum)vasagargal UNGALUKKU KANDANAM THERIVIKKA VENDI VARUM(ANDRU KALNDHU KONDA MOTHA சிதறிய நெல்லிக்காய் KOOTAMUM SIDHARIPOGA IRAIVANAI VENDIGIREN.கொள்கையே இல்லாத உங்களுக்கு கூட்டம் எதற்கு? குழுமம் எதற்கு ????????????????

Cable சங்கர் said...

adada... நம்பர் கொஞ்சம் கரெக்டா கொடுங்க. எங்க கொள்கைகளை விளக்குறேன்.”

அடடா said...

dear cable sankar sir ,
my mobile no 9840398398

அடடா said...

ingeye vilakkam alikkalame , ellarukum puriyum

Cable சங்கர் said...

ungga mobile no thappu thalaivaree.. வேண்டுமானால் என் நம்பரில் கூப்பிடவும். உங்களைத் தவிர மற்றவர்களுக்கு கொள்கைபுரிந்துவிட்ட படியால் உங்களுக்கு மட்டும் நேரிடையாக போனில் விளக்க ஆசைபடுகிறேன்.:)

உண்மைத்தமிழன் said...

ஜெயவேல் ஸார்..!

இப்படி நீங்க கேட்டவுடனே கொட்டுறதுக்கு எங்க கொள்கைகள் என்ன நெல்லிக்காயா..?

அதுவெல்லாம் இருக்க வேண்டிய இடத்துல பத்திரமா இருக்கு..!
நேரம் வரும்போது அது தானா வெளில வரும்..!

இப்பவே உங்களுக்குத் தெரியணும்னா கொஞ்சம் காசு செலவாகும்.. பரவாயில்லையா..?

shortfilmindia.com said...

அண்ணே.. அடிச்சு கேப்பாய்ங்க.. உதைச்சு கேப்பாய்ங்கா. துரத்தி, துரத்தி கேப்பாய்ங்க.. சொல்லிராதீங்க..

பிரதீபா said...

//அண்ணே.. அடிச்சு கேப்பாய்ங்க.. உதைச்சு கேப்பாய்ங்கா. துரத்தி, துரத்தி கேப்பாய்ங்க.. சொல்லிராதீங்க// - உங்க காமடிக்கு அளவே இல்லாம போயடுச்சுங்க கேபிள். :))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))

அடடா said...

ANBU UNMAI TAMIZHAN ANNAN AVARGALE,

PAVAM KASU KOTHU MEETING NADATHIYA ZHA PECHAI KETPADHARKE ANGU KOOTAMILLAI ,,ANDHO PARIDHABAMAGA AVAR MIKE PIDITHU NINRADHAYYUM KALAINDHU PONA KOOTATHAI IZHUTHU VANTHA SILARAIYUM SARAYA KADAI MOODA POKIRAN ENRUM SILAR KOOVI KONDIRUNDADHU UNGALUKU KETKAVILLAI, VEDHANAYANA ENNAIPONDRA VASAGARGALUKU KEETADHU, IDHIL PERUMAIYA KOLGAI ILLADHADHE ENGAL KOLGAI ENGIRAR MEETING NATHIYAVAR.PONGA PONGA ALLALUKU EVANAYAVDHU ALLADHU ETHAVADHU EZHUDHI PAKKANGALAI NIRAPPATHERGAL .INTHA CHENNAI BLOGGERS PATRI ULAGUKKU SEEKIRAM THERIYA ELLAM VALLA MURUGANAI NANUM VENDUGIREN.

ஜாஸ்மின்- ப்ரியா said...

அடடா மழைடா அடை மழைடா.அடடா மழைடா அடை மழைடா.அடடா மழைடா அடை மழைடா.
romba feel pannaadheenga appu! go to politicians office and ask them about their KOLGAI. we know how to conduct our meeting. Dont put chennai bloggers into one frame. come to next meeting also. to SPIT more..! dont try to separate chennai,singai, erode bloggers.. your plan will not work out. Keep trying. ALL THE BEST..அடடா மழைடா அடை மழைடா.

சக்தி கல்வி மையம் said...

அடடா தேவையில்லாமல் பதில் சொல்லி நேரம் வேஸ்ட்..
பதிவர்கள் சந்திப்பு எடுத்த முடிவுகள் சொல்லவில்லையே...

jayaramprakash said...

பல நாள் பொய்யன், வீண் ஜம்பக்காரன், பீத்தக் பெருங்களையன் கூட ஒரு நாள் மாட்டிக் கொள்வான். புரிய வேண்டியவர்களுக்கு புரிந்தால் சரி.

அடடா said...

dear , I am not a blogger,(go to politicians office and ask them about their KOLGAI) politiciangalaiyum ungalaiyum sama nilaipaduthu gireergala,bloggers megavum vithiyasamaga sindhippavargal,be it cinema ,be it illakiyam, anaithilum miga nutpamaga karuthu koorubavargal. ena naan ninaikkiren neengalum adhaitha seithukondu irukireergal en nambugiren.we know how to conduct our meeting ena perumai pesi kollum nanbare,ippadiya nandri urai solbavarai nedu nearm nirka vaipeerkal, idhu dhan ungal conduct pannum latchanama,, please READ MY WORDS I DONT HAVE ANY INTENTION TO SPLIT OR SPIT ON YOU GUYS,,, I WANT CHENNAI BLOGGERS TO BE VERY ELITE PEOPLE,(ROLEMODELS).

UNGAL ADUTHA KOOTATHIRKKU AZHATHTHATHARKU NANDRI, APPADI ONDRU NADANDHAL SABAI NAAGAREGAM THERINDHU NADANDHU KOLLUNGAL ENBATHEY EN VIRUPPAM. PATHIYIL EZHUNDH KALAINDHU SELLUM KOOTAMALLA NEENGAL ENBATHY NIRUBITHU UNGALUKKU NEENGALE KAITHATTI KOLLUNGUNGAL.


ORU URAYIL IRU KATHIGAL IRUNDHAALEE KAZHTAM ,NEENGAL ORE URAIYIL PALA PALA PATTAKATHIGAL ,
KOOR MANGAAMAL PARTHU KOLLUNGAL. KANAAMAL POIVIDA POGIREERGAL , INDHA NODIYULUM ENGO ORU MOOLAIYIL ORU BLOG THIRAKKAPATTU KONDIRAKKA KOODUM. EGO-VIL NEENDA NAAAL VAZHAMUDIYATHU. OTTRUMAYE UYARVU.

Unknown said...

Mr. Adada,

Why didn't you raise your concerns in the meeting itself? It was just the first meeting to see the possibilities of having a bloggers group. I agree that it was not that well organized. If you were/are expecting a kolgai or briyani or quarter or whatever, you should join the meetings organized by the political parties.

If you have any constructive ideas (if at all you have), share in the public without vomiting in the crowd.

We WILL come up with a group for constructive blogging and WILL make changes to the way how bloggers are seen today.

Bests,
O.R.B.Raja

அடடா said...

mr raja for your response, when your known friend is waiting for you people to listen how can you expect new people like me to pitch in. As you yourself agreed as unorganised meeting all i will have to do is pray tamil madha to take care of chennai bloggers. Ungaludaya vasagargalai under estimate seithu quarter ,biriyanikku nigaraga kolgaiyay pesum ungaltharam migavum meysilirka vaikiradhu.

Unknown said...

அன்பின் அடடா!

எனக்காக பேசியமைக்கு என் வந்தனம். நீங்கள் உங்கள் கருத்துகளை நேரடியாகவே சொல்லலாம். மதியம் உங்கள் எண்ணுக்கு தொடர்பு கொண்டபோது யாரோ ஒரு பெண்மணி பேசினார்கள்.


உங்கள் கருத்துகளை கேபிலின் தொலைபேசி எண்ணிற்க்கு அழைத்து சொல்லுங்கள். மாற்றுக்கருத்துகளை நாங்கள் எப்போதும் வரவேற்ப்பவர்கள்..

R. Gopi said...

@கேபிள் சங்கர், ஜெயவேல் கேட்கும் வினாக்கள் இரண்டு.

சங்கத்தின் கொள்கை பற்றிய வினாவிற்குப் பொருத்தமான விடை இருந்தால் கொடுக்கவும். இல்லை என்றால் இப்போது கொள்கை எதுவும் கிடையாது என்றும் சொல்லலாம். அல்லது இது வலைப்பதிவர்களுக்கான சங்கம் தொடர்பான கொள்கைகள், அதை வாசகர்களிடம் பகிர்ந்து கொள்ள முடியாது என்று சொன்னாலும் சரி.

அவருடைய அடுத்த வினா சந்திப்பு நடந்த விதத்தைப் பற்றியது. சந்திப்பு இனிதே நடந்தேறியது என்று நீங்கள் சொல்கிறீர்கள். ஜெயவேல் சொல்வதைப் பார்த்தால் சந்திப்பின்போது சில அபத்தங்கள் நடந்திருப்பதாகப் படுகிறது. நீங்களும் அதைப் பற்றி ஒன்றும் பதில் சொல்லவில்லை.

கேட்கும் கேள்விக்கு விருப்பமிருந்தால் நேரடியாகப் பதில் சொல்லுங்கள். இல்லை என்றால் விட்டுவிடுங்கள். கேள்வி கேட்பவரை நக்கல் அடிப்பது, கும்முவது சரியாகப் படவில்லை.

சென்னையில் இருந்தும் பதிவர் சந்திப்பிற்கு நான் வரத் தயங்கிய காரணங்களுள் இதுவும் ஒன்று. எப்படிப்பட்ட சந்திப்பாக இருக்குமோ என்று புரியாத நிலையில் பதிவர் சந்திப்பிற்கு வரத் தோன்றவில்லை. ஜெயவேலின் பின்னூட்டத்தைப் பார்க்கும்போது இனி வர இருக்கும் சந்திப்புகளிலும் கலந்துகொள்ளக் கூடாது என்றே தோன்றுகிறது.

ஜெயவேலின் நம்பர் சரிதான். நான் இரண்டுமுறை பேசினேன்.

அடடா said...

unmaiyai sonnal ungalukku vomiting -a mr.raja.

Unknown said...

Mr. Adada,

The way you expressed made me use that word. You are welcome to discuss in a constructive way!

மணி (ஆயிரத்தில் ஒருவன்) said...

@adada
chennai pathivar santheppai ingu vanthu vimarchikkum thangalai santhipannuru vimarchikka vidamal yaar thaduththaarkal?ankeye thngalin santhegangalaiyum,karuththukkalaiyum
pakirnthu kondirukkalaame?

Sukumar said...

அடடா என்கிற ஜெயவேல் சார்...

முக்கிய விருந்தினர்கள் வந்திருந்ததால் அவர்களுக்காக அவை நேரம் செலவிடப்பட்டது. மேலும் கால தாமதம் ஆனதால் மட்டுமே அனைவரும் எழும்ப ஆரம்பித்தனர். தவிர, மைக் பிடித்த கே.ஆர்.பி செந்தில் அவர்களது கருத்தையோ அவர்களையோ அவமதிக்கும் நோக்கத்தில் அல்ல. ஏற்கனவே பல நாட்கள் கழித்து தான் இப்படி ஒரு சந்திப்பு நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சந்திப்புகள் அடிக்கடி நடைபெறுமாறு ஓழுங்கு செய்யப்பட்டு, நாளடைவில் நீங்கள் கூறுவது போல் நடத்தப்படலாம். ஆனால் அதற்கு பொருட் செலவு, நேர செலவு, உழைப்பு, திட்டமிடுதல் என அனைவரது பங்கீடும் தேவைப்படுகிறது.

இன்னும் என்னென்ன செய்யலாம் எப்படி ஒழுங்குமுறைப்படுத்தலாம் என்பது போன்ற ஆக்க பூர்வமான யோசனைகள் உங்களிடம் இருந்தால் அதை தாராளமாக நீங்கள் நேரிடையாகவே முன் வைக்கலாம். ஏன் நீங்களே கூட ஒரு சந்திப்பினை ஏற்பாடு செய்து அதை நீங்கள் நினைப்பது போலவே நடத்த ஒழுங்கு செய்யலாம். அதற்கு சனிக்கிழமை வந்த அளவோ அதைவிட அதிகமோ பதிவர்கள் வந்து கலந்து கொள்ள செய்தியை சேர்க்க யாவரும் தயாராகவே இருக்கிறோம் என நாங்கள் உறுதி செய்கிறோம்.

இங்கு எல்லோரும் நண்பர்களே.எதிர்மறையான சிந்தனைகளை தவிர்த்து எப்படி இனி இதை முன்னெடுத்து செல்வது என யோசிக்கலாமே.

அடடா said...

sugumar matrum k.r.p.senthil,thanjavooraan,mani (1001)unmaithamizhananna.,anaivarukkum enathu nandri,
palarum pesia en kaipesi cable-annanuku -kku mattum thavaragiponadhu kalathin pizhai.alladhu tollaipesiyagavum avarukku irunthirukkalaam , idhu nichayam ethir marai sinthanai andru.

avai endru vandhal sabai nagareegam pin patrapada vendum , organaiser endra vaarthaiyai 2 magaleer pathivalar irukkum podhey mattri sonnadhu yaruku venum endraalum pidikkadhu , ungalil mukkiyamanavarukku eppadiyo pidithirukkaradhu. melum kootathai salasalkka vaithu kalaithu vitta paraatum avarukke pogum. chennai pathivar kootam inidhey nadandadhu endru koorugayil enakuu thala midiyadha aadahangam.

anaivarukkm ennudaya vendugol thayavu seithu vaipaaliyungal ungalududaya kootathai nan ungalin mattrum anaivarin viruppapadi seerum sirappumaga nadathi kattugirn. idhu thamish mel aanai.mannikkavum ennal vegamaga tamil-type seiyya iyalavillai. muthalil oru commetee amaikka vendum aravalargal thayavu seith ennudaya mobile 9840398398-kku sms anuppavum.
muthalil varum 6 per saala siranthavargalaga karuthi commettee amaikkapadum.
ippozhu naan blogger alla agayal veliyil irundhu idhay nan seyalpaduthugiren nandragavum nadathi kaatugiren.

vaaipaliyungal, vazhthungal,
varungal ondru pattu valaruvom.

nandri.
thalam amaithu kodutha cable anna maranthu mannithu nammun vandhu vazhi nadathuvaar ena ethirpakkiren..

ungal anaivarin rasigan..
jayavel
9840398398
chennai

அடடா said...

gopi ramamoorthy avargalukku enadhu nandriyai therivithu adutha kootathiru azhaippu vidugiren..

nandri nandri

அடடா said...
This comment has been removed by the author.
அடடா said...
This comment has been removed by the author.
a said...

//
பல நாள் திருடன் மட்டுமல்ல. பல நாள் பொய்யன், வீண் ஜம்பக்காரன், பீத்தக் பெருங்களையன் கூட ஒரு நாள் மாட்டிக் கொள்வான்.
//
என்னாதிது........... நல்லாத்தான போயிக்கிட்டு இருக்கு....

santhanathapuram durai said...

மர்மம்
இதயம் பலகீனம் உள்ளவர்கள் இந்த கதையை படிக்க வேண்டாம் ,அதே போல் கர்ப்பிணிகள் இந்த தொடரை படிக்க வேண்டாம். இது யாரைப்பற்றியும் குறிப்பிடும் தொடர் இல்லை மேலும் இது முழுக்க முழுக்க கற்பனையே .

காலை நேரம் கூவும் சேவலின் சத்தம் மூர்த்தியின் காதுகளை கிழிக்க மெதுவாக படுக்கையை விட்டு எழுந்து தன் முன்னே உள்ள சாமி படத்தில் விழித்தான் . பாவம் இன்றைய பொழுது அவனுக்கு நல்ல பொழுதாக இருக்காது என ,அவனுக்கு தெரியாது ,அவனுடைய வாழ்க்கையில் துயரம் அவனை சந்திக்க போகிறது என தெரியாமல் வழக்கம் போல் தன்னுடைய ஆட்டோவை துடைத்து காலைகடன்களை முடித்து
சவாரிக்கு தயார் ஆனான் . வண்டியை ஸ்டார்ட் செய்து இறைவனை வேண்டி முதல் கேயரை போட்டு வண்டியை நகர்த்தினான் ,அவனுக்காகவே காத்திருந்தது போல்கருப்பு நிற பூனை அவனது ஆட்டோ வின் குறுக்கே சென்றது.


ஆட்டோ ஆட்டோ stand ல் போய்நின்றது .மூர்த்தி காகவே காத்திருந்தது போல் உயரமான இரண்டு பேர் ,தம்பி காவல் நிலையம் வரை சவாரி போகலாமா என கேட்க. உக்காருங்க உள்ளே என கூறி வண்டி காவல்நிலையம் நோக்கி சென்றது. காவல் நிலையத்தில் இறங்கிய இரண்டு பெரும் மூர்த்தி ன் கைகளை இருக பற்றி டே உள்ள வாடா என இழுக்க மூர்த்தி தடுமாறிபோனான். காவல் நிலையம் உள்ளே சென்றதும் சவாரி வந்த இருவரும் தங்களுடைய ID card ஐ உள்ளே இருந்த இன்ஸ்பெக்டர் வசம் காட்ட அவர்களும் காவல் துறை சேர்ந்தவர்கள் தான் என முடிவு செய்தான் மூர்த்தி,ஆனால் தன்னை ஏன் அழைத்து வந்தார்கள் என குழம்பி நின்றான்.பேப்பர் பேனாவோடு வந்த இன்ஸ்பெக்டர் டே உண்மையை சொல்லு ஒழுங்கா, பொண்ண கடத்தி எங்க வித்த ,உண்மையை சொல்லு பொண்ணு உயிரோட இருக்கா இல்லை கொன்னுட்டியா .

மூர்த்தி இன்ஸ்பெக்டர் ஐ நோக்கி சார் என்ன கேட்குரிங்கன்னு எனக்கு ஒன்னும் புரியலை .பளார்னு ஒரு
அரை அவன் முகத்தில் விழுந்தது ,பொறி கலங்கியது போல் இருந்தது மூர்த்திக்கு .

டே உன்னை போல் எத்தனை பேரை பாத்திருப்பேன் டே போன வருஷம் உன்னோட
வீட்டுக்கு வந்த லலிதான்கிற பொண்ணு அவளோட வீடு போய் சேரலை உண்மைய சொல்லு பொண்ணு எங்கடா மீண்டும் ஒரு அரை அவன் முகத்தில் விழுந்தது .சார் சத்தியமா எனக்கு ஒன்னும் தெரியாது நீங்க சொன்ன மாதிரி ஒரு பொண்ணு போன வருடம் ஒரு நாள் மதிய சாப்பாடு சாப்பிட வீட்டுக்கு போன போது ,எங்க வீட்டுல ஒரு பொண்ணு சாப்பிட்டுகிட்டு இருந்துச்சு ,நான் அம்மாகிட்ட ,ஏம்மா இது யாருன்னு கேட்டப்ப பாவம் இந்த பொண்ணு வீட்டுல ரொம்ப கொடுமை படுத்துறாங்களாம் அதாவது இந்த பொண்ணுக்கு அம்மா இல்லையாம்,வீட்டு வேலை பாக்குறேன் எங்கையாவது சேர்த்து விடுங்கன்னு சொன்னுச்சு யாரும்மா கூட்டிகிட்டு வந்தாங்கன்னு அம்மா கிட்ட கேட்டேன் அம்மா சொன்னங்க வாசல்கிட்ட நின்னு இந்த பொண்ணு அழுதுகிட்டு நின்னுச்சு அப்போ உங்க அண்ணன் தான் உள்ள கூட்டிகிட்டு வந்து சாப்பாடு கொடுக்க சொன்னான் சாப்பிட்டதும் பக்கத்து வீட்டுக்கு, வீட்டு வேலைக்கு ஆள் . வேணுமுன்னு சொன்னங்க அங்க கொண்டு போய் விட்டுருவேன் நீ சாப்பிட்டு கிளம்புடா அப்புடின்னு அம்மா சொன்னாங்க .
போலீஸ் இன்ஸ்பெக்டர் மற்றும் இரண்டு பேர் தனியாக சென்று ஏதோ பேச தொடரும்
இடுகையிட்டது SANTHANATHA PURAM DURAI நேரம் 5:19 AM 0 கருத்துரைகள் http//duraipudukkottai.blogspot.com

santhanathapuram durai said...

cable sankar sir yaarum yennoda blog padikka varamatten kiranka pls ,how do i get members as like as you my blog http//duraipudukkottai.blogspot.com
please visit my blog