அன்பான பதிவர் பெருமக்களே.. நாமெல்லாம் ஆங்காங்கே புத்த்க கண்காட்சியிலும், புத்தக வெளியீட்டிலுமாய் தொடர்ந்து டிசம்பர், ஜனவரி மாதங்களில் சந்தித்துக் கொண்டாலும், எல்லோரும் ஒட்டு மொத்தமாய் சந்தித்து பல காலமாகிவிட்டது என்பதால் ஏன் ஒரு பதிவர் சந்திப்பை நடத்தக் கூடாது என்று பல புதிய பதிவர்கள் கேட்டுக் கொண்டேயிருந்தார்கள். மேற்ச் சொன்ன காரணத்தினாலும், சிங்கையிலிருந்து பதிவர் ஜோசப் பால்ராஜ் அவர்கள் வந்திருப்பதாலும், இவ்வளவு காலம் தள்ளிப் போய்க் கொண்டேயிருந்த நமது சந்திப்பு வருகிற சனிக்கிழமை நடைபெற இருக்கிறது.
ஆம வருகிற சனிக்கிழமை மாலை ஆறு மணிக்கு, டிஸ்கவரி புக் பேலஸில் நம் பதிவர் சந்திப்பு நடைபெறவிருக்கிறது. நம் சந்திப்பினூடே நம்முடன் வந்திருந்து கலந்துரையாட தென்மேற்கு பருவக்காற்று இயக்குனர் திரு. சீனு ராமசாமி வருகிறார். புதிய, பழைய,வாசக பெருமக்கள் அனைவரும் வந்திருந்து சந்திப்பை சிறப்பிக்க வேண்டுமாய் எல்லா பதிவர்கள் சார்பாய் வேண்டுகிறோம்.
இடம் : டிஸ்கவரி புக் பேலஸ்
6, முனுசாமி சாலை,
முதல் மாடி, கே.கே.நகர் (பாண்டிச்சேரி ஹவுஸ் அருகில்)
நேரம் : மாலை 6 மணி
தேதி : 26/02/11
கிழமை: சனிக்கிழமை
சிறப்பு விருந்தினர் : இயக்குனர் திரு. சீனு ராமசாமி.
பதிவர்கள் அனைவரும் தங்களது பதிவில் இந்நிகழ்வை தெரிவித்து ஒரு பதிவிட்டு சக பதிவுலக அன்பர்களுக்கு தெரியப்படுத்துமாறு கேட்டுக் கொள்கிறோம். நன்றி.. அனைவரும் வருக..வருக.. வருக..
பதிவர்கள் அனைவரும் தங்களது பதிவில் இந்நிகழ்வை தெரிவித்து ஒரு பதிவிட்டு சக பதிவுலக அன்பர்களுக்கு தெரியப்படுத்துமாறு கேட்டுக் கொள்கிறோம். நன்றி.. அனைவரும் வருக..வருக.. வருக..
Comments
அவரும் பதிவரா ...சொல்லவேயில்லை ....
தென்மேற்கு பருவக்காற்றை நான் இன்னும் சுவாசிக்கவில்லை
http://kaveriganesh.blogspot.com/2011/02/26022011.html