படத்தின் முதல் காட்சியில் ஒரு துப்பாக்கி வெடிக்கிறது. ஹைஸ்பீடில் ஒரு போலீஸ்காரர் மடேலென.. தண்ணீரில் விழுகிறார். லைப் லைன் ஹாஸ்பிட்டலில் ஒரு போலீஸ்காரருக்கு தன் சக போலீஸ்காரர்கள் கொல்லப்பட்டிருப்பது தெரிவிக்கப்படுகிறது. அப்போது அவர் சொல்கிறார். அந்த பொண்ணு இந்த ஹாஸ்ப்பிடல்லதான் இருக்கு. அங்க ஒரு பையன் இருப்பானே? என்கிறார். ஹாஸ்பிட்டலுக்கு போலீஸ் அஸிஸ்டெண்ட் கமிஷனர் வருகிறார். அவரிடம் டாக்டர் என்ன நடக்கிறது என்று கேட்கிறார்?. போலீஸ்னு சொல்லிட்டு ஒருத்தன் அந்த பொண்ணை கடத்திட்டு போயிட்டான் என்று புலம்புகிறார். அஸிஸ்டெண்ட் கமிஷனர் கையில் கிடைத்த ஒரு சத்யம் தியேட்டர் டிக்கெட்டிலிருந்து விசாரணையை ஆரம்பிக்கிறார். நடு நடுவே கடத்தப்பட்ட பெண்ணைப் பற்றிய செய்திகள் பேட்ரோல் போலீஸ் தகவல் கொடுக்க, என்று இப்படி பரபரப்பாகத்தான் ஆரம்பிக்கிறது. யார் போலீஸ்காரர்களை கொன்றது? கடத்தப்பட்ட பெண் யார்? அவளுக்கும் கொலையாளிக்குமான சம்மந்தம் என்ன? அவள் காப்பாற்றப்பட்டாளா? என்பது போன்ற வைட்டலான கேள்விகளுக்கு வெண் திரை பதில் சொல்லும்.
காணாமல் போன பெண் கேரக்டரில் சமீரா ரெட்டி. படம் முழுக்க ஒரு விதமான பயத்தோடு அலையவேண்டியிருப்பதால் கிட்டத்தட்ட ஒரே ரியாக்ஷன். மற்றும் டப்பிங் ஆர்டிஸ்டின் ஒரே விதமான மாடுலேஷனில் வரும் அலறல்கள். ஆங்காங்கு வரும் நச் முத்தங்கள் இதம். ஆனாலும் ரொம்பவே முத்திப் போய் தெரிகிறார்.
மனோஜ் பரமஹம்சாவின் ஒளிப்பதிவு படத்திற்கு மிகப் பெரிய பலம். பெரும்பாலும் இரவு நேரங்களிலேயெ படமாக்கப்பட்டிருப்பதால் ஒரு விதமான த்ரில்லிங் எபெக்ட்களை ஒளிப்பதிவு நிறைய விஷயங்களை கன்வே செய்கிறது. க்ளைமாக்ஸ் மழைக் காட்சியும், அதன் பிறகு நடக்கும் சம்பவங்களுக்கும் மனோஜ் ஒரு பெரி அசெட்.
சிறு வயதில் பாலியல் கொடுமை பெண் குழந்தைகளுக்கு மட்டுமல்ல, ஆண் குழந்தைகளுக்கும் உண்டு என்பதை சொல்லியிருக்கிறார்கள். ஆனால் திரைக்கதை பையனின் பார்வையில் இருப்பதால், ஒரு தேடல் இல்லாத திரைக்கதையாய் அமைந்துவிட்டது. அய்யோ பாவம் என்கிற மனப்பான்மை அவனை பார்த்து வர மாட்டேனென்கிறது. இதே கதையை ஹீரோயின் பாய்ண்டாப்வீயூவில் சொல்ல ஆரம்பித்து, அதில் ஹீரோவின் கதையை விளக்கியிருந்தால் சுவாரஸ்யமாய் இருந்திருக்குமோ? படம் கொஞ்சம் ப்ளாட்டாக இருப்பதை சொல்லாமல் இருக்க முடியவில்லை. நிறைய இடங்களில் லாஜிக் இல்லவேயில்லை. சிகப்பு ரோஜாக்களில் ஒரு அருமையான காதல் இருக்கும்.அது படத்தின் பல இடங்களை காப்பாற்றும். த்ரில்லர் படம் என்கிற கேட்டகிரியில் படத்தை எடுத்திருந்தாலும், த்ரில்லாய் பெரிதும் ஏதும் இல்லாதது குறையே..
நடுநிசி நாய்கள் - ஓகே-- முயற்சிக்காக..
நடுநிசி நாய்கள் - ஓகே-- முயற்சிக்காக..
Comments
Why does not he go and take some Hollywood thriller next or some malayaaLam movie?
I think he is so f'cking SKILLFUL!
I think GM will understand my comment as it is not as offensive as his movies! So, don't worry about deleting this comment cable!
//ஹைஸ்பீடில் ஒரு போலீஸ் காரர் மடேலென.. தண்ணீரில் விழுகிறார்//
போலீஸ் காரர். ரெண்டு பேரா? போலீஸ்காரர் என்று இடைவெளியின்றி எழுதவும்.
//அஸிஸ்டெண்ட் கமிஷனர் கையி கிடைத்த ஒரு சத்யம் தியேட்ட்ர்//
கையி? தியேட்ட்ர் என்ன இதெல்லாம்?
//வெண் திரை பதில் சொல்லும்//
வெண் திரை பதில் சொல்லுமா? திரை எப்படி பதில் சொல்லும். ஸ்பீக்கர் தானே பதில் சொல்லும்.
//ஒரு விஷயத்தில் கெளதமை பாராட்ட வேண்டும் பாடல்களுக்காகவே முக்யத்துவம் பெரும் படங்களை இயக்கியவர்.//
கெளதமை பாராட்ட வேண்டும் என்ற வார்த்தைக்கு பிறகு புள்ளி வைக்கவில்லை. முக்யத்துவம்??? முக்கியத்துவம்.
//பெரும் பாலும் இரவு நேரங்களிலேயெ//
பெரும்பாலும் என்று இருக்க வேண்டும். கேப் உள்ளது. //நேரங்களிலேயெ// நேரங்களிலேயே தான் சரி.
..நான் சொன்னது எல்லாம் சரிதானே அய்யா? தவறென்றால் மன்னிக்க.
வெல்க தமிழ்! வளர்க தமிழர்!
அதென்ன அய்யா???
ஐயா னுதானே சொல்லனும்?
நிஜமாவே தப்பு செய்திருக்கிறேன் என்றால் ரெண்டே ரெண்டுதான் உன் கணக்கில். மற்றெதெல்லாம் ஸ்பேஸ் ப்ராப்ளம்.
அது மட்டுமில்லாம் இப்ப உன் பின்னூட்ட்டத்திலேயே தப்பு இருக்கு. மொதல்ல.. அங்க சரி பண்ணிட்டு வந்தா நல்லாருக்கும்.
இருந்தாலும் உன் பணியை மெச்சினோம். இனிமேல் பதிவு போட்டவுடன் வந்து இம்மாதிரியான ஸ்பெல்லிங் மிஸ்டேக்குகளை கண்டு பிடித்து சொன்னால் அடுத்த பின்னூட்டம் வருவதற்குள் நிச்சயம் பார்க்கப்படும் பட்டி. நன்றி.. நன்னி.. நன்னி.. இது பிழையில்லை.. :))
நன்றி வணக்கம்.
நன்றி வணக்கம்.
உங்களுக்கு இங்கிட்டு நெறையவேளை இருக்கு...
எள்ளோரட பதிவுளயும் வந்து இப்பிடியே பிழை திறுத்திக் குடுத்தா நள்ளா இருக்கும்.
எணக்கும் இந்த மாதிர் பிழை திறுத்தம் செய்து குடுங்க...
//
:):):)
Kuppa padam, kuppa kadhai.
thayavu seithu ithaiyu padinga..
http://truetamilans.blogspot.com/2011/02/blog-post_2098.html
:)
அதான் த்ரில்லா ஏதும் இல்லன்னு சொல்லிட்டிங்களே,அப்புறம் என்ன திரில்லர் கேட்டகிரி.
சிகப்பு ரோஜவை சரியா இதோட கம்பேர் பண்ணிங்க பத்திங்களா, அது தான் கேபிள் கனெக்சன் என்பது.
# ”சிகப்பு ரோஜாக்களில் ஒரு அருமையான காதல் இருக்கும்.அது படத்தின் பல இடங்களை காப்பாற்றும். த்ரில்லர் படம் என்கிற கேட்டகிரியில் படத்தை எடுத்திருந்தாலும், த்ரில்லாய் பெரிதும் ஏதும் இல்லாதது குறையே..”
உண்மைதான் சார் வெகு ஜனங்களிடம் போய் சேருமான்னு கொஞ்சம் டவுட்டு இருக்கு. :-(
பதிவை விட பின்னூட்டங்கள் களைகட்டிடுச்சு தல...
//வருண் said...
***..நான் சொன்னது எல்லாம் சரிதானே அய்யா? தவறென்றால் மன்னிக்க. ***
அதென்ன அய்யா???
ஐயா னுதானே சொல்லனும்?//
அய்யான்னு சொன்னா தான், தைலாபுரத்துல சீட்டு கீட்டு ஏதாவது கிடைக்குமோ என்னவோ!!
நீங்க உண்மையான சினிமாக்காரர் அண்ணே
நன்றி