பதிந்ததில் பதிந்தவை
நாம் எழுதியதை அச்சில் பார்க்க எவ்வளவு நாளாகும்?. ஒரு கதையையோ, கவிதையையோ, கட்டுரையோ எதையோ ஒன்றை எழுதி அதை நான்கு முறை சரி பார்த்து, பத்திரிக்கைகளுக்கு அனுப்பி, அவர்கள் பார்த்து பரிசீலித்து அது ரிஜக்ட்டோ செலக்ட்டோ ஆகி வருவதற்குள் மூன்று மாதமாவது ஆகிவிடும். நமக்கே நாம் எழுதினது மறந்து போயிருந்திருக்கும்.
நாம் எழுதியதை அச்சில் பார்க்க எவ்வளவு நாளாகும்?. ஒரு கதையையோ, கவிதையையோ, கட்டுரையோ எதையோ ஒன்றை எழுதி அதை நான்கு முறை சரி பார்த்து, பத்திரிக்கைகளுக்கு அனுப்பி, அவர்கள் பார்த்து பரிசீலித்து அது ரிஜக்ட்டோ செலக்ட்டோ ஆகி வருவதற்குள் மூன்று மாதமாவது ஆகிவிடும். நமக்கே நாம் எழுதினது மறந்து போயிருந்திருக்கும்.
அப்படி ஸ்லோ மோஷனில் இருந்த காலத்திலிருந்து மனதில் நினைத்ததை உடனடியாய் வடித்து, அடுத்த பத்து நிமிடங்களில் போற்றுதலோ, தூற்றுதலோ இரண்டுமே அதிகப்படியாய் கிடைக்கும் ஒரு மீடியம் இணையமாகிவிட்டது. அதிலும் இப்போது தமிழில் வலைப்பூக்கள் பிரபலமாகியிருக்கும் காலகட்டத்தில் சுமார் எட்டாயிரத்துக்கு மேற்பட்டவர்கள் தமிழில் தங்களுக்கென வலைப்பூக்களை வைத்திருப்பதாக கணக்கு சொல்கிறார்கள். அந்த கணக்கு தினமும் ஏறிக் கொண்டேயிருக்கிறது.
கட்டற்ற சுதந்திரம் என்ற ஒன்று இவர்களுக்கு கிடைத்திருக்கும் மாத்திரத்தில் அதை மிகவும் அழகாய் பயன் படுத்துபவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். அரசியல், சினிமா, பொது நோக்கு, கவிதை, கதைகள், என்று எல்லா தளங்களிலும் தங்களின் எண்ணத்தின் பதிவுகளை பதித்து வைத்துக் கொண்டேயிருக்கிறார்கள். அத்தகைய பதிவுகளை என் மனதில் பதிந்தவைகளை உங்களோடு பகிர்ந்து கொள்ளும் தளமே இது.
1.பரிசல்காரன்
2008லிருந்து எழுதிவரும் இவர் வலையுலகில் பிரபலமானவர். பத்திரிக்கைகளில் கே.பி.கிருஷ்ணகுமார், பரிசல் கிருஷ்ணா போன்ற பெயரில் எழுதி வருபவர். ஒரு சிறுகதை தொகுப்பும் வெளிவந்திருக்கிறது. மிக இயல்பான நகைச்சுவை கலந்த எழுத்து இவரது பலம். அதிலும் பரிசல்காரனின் அவியல் என்கிற சுஜாதாவின் கற்றதும் பெற்றதும் போன்ற ஒரு பத்தி பகுதி மிகப் பிரபலம். அவரை பின்பற்றி நிறைய பேர் காக்டெயில், கொத்து பரோட்டா, வானவில் என்று எழுதும் அளவுக்கு என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். இவரின் பதிவுகள் எல்லாவற்றிலும் உள்ள இயல்பான நகைச்சுவை நிச்சயம் படிக்கிறவர்களை வசீகரிக்கும். இவர் பத்து சீரிஸ் பதிவுகள் எதையாவது ஆரம்பித்தால் அவ்வளவுதான் பதிவுலகம் முழுவதும் ஜுரம் போல பரவி.. ஆளாளுக்கு பத்து சீரிஸ் எழுத ஆரம்பித்துவிடுவார்கள். அப்படி இவர் எழுதி எனக்கு மிகவும் பிடித்தது. மனைவி கணவனின் முஞ்சியிலே குத்துவிட நினைக்கும் பத்து தருணங்கள்.
1) அன்னைக்குத்தான் வேலையெல்லாம் கொஞ்சம் சீக்கிரம் முடிச்சுட்டு அக்கடான்னு உட்காருவாங்க. நம்மாளு திடீர்னு அஞ்சாறு ஃப்ரெண்ட்ஸோட வீட்டுக்குப் போய் ‘யாரு வந்திருக்காங்க பாரு டார்லிங்’ன்னு டின்னருக்கோ, லஞ்சுக்கோ அடியப் போடும்போது....
2) ஒரு மாசமா சிரமப்பட்டு அவங்க மனசுல நெனைச்சமாதிரி வீட்ல அங்கங்க அந்தந்தப் பொருட்களை செட் பண்ணி, இண்டீரியரை நல்லவிதமா ரசனையா பண்ணி வெச்சிருப்பாங்க. டக்னு ஏதோ அவசரத்துக்கு ஒரு நாள் அம்மா வீட்டுக்கோ, வேற எங்கயாவதோ போய்ட்டு வருவாங்க. வந்து பார்த்தா வீடு பழையபடி கந்தலா கலைஞ்சிருக்கும் பாருங்க.. அப்ப ஒரு குத்து..
3) அன்னைக்குன்னு புருஷன் மேல ரொம்ப பாசம் பொங்கும்.. பாவம்யா அவன்னு தோணும். சரின்னு டின்னருக்கு அவருக்குப் பிடிச்ச டிஃபன் ஏதாவது செஞ்சு ஹாட் பாக்ஸ்ல வெச்சிருப்பாங்க. பிடிச்ச சட்னி, சாம்பார்ன்னு ரெடியா இருக்கும். அன்னைக்குன்னு ஒரு ஃபோன் கூட பண்ணாம நம்மாளு ஃப்ரெண்ட்ஸ் கூட பார்ட்டின்னு போய்ட்டு, அவங்க கூப்பிடறப்பவும் ‘இதோ வந்துட்டேன்மா.. வந்துட்டே இருக்கேன்’ன்னு அடிச்சு விட்டுட்டு ’கண்டுபிடிக்க மாட்டா ஸ்மெல் இல்ல’ன்னு ஒரு நம்பிக்கைல வீட்டுக்குப் போவான்.
கதவைத் திறந்த உடனே மனைவியைப் பார்த்து கேனத்தனமா அசடு வழியறதுலேர்ந்தே அவங்க கண்டுபிடிச்சுடுவாங்க. அப்ப தோணும் இவன் மூக்குலயே ஒரு குத்து விட்டா என்ன’ன்னு..
மேலும் இப்பதிவை படிக்க.. http://www.parisalkaaran.com/2010/07/blog-post_21.html
2.”புலம்பல்கள்” ஆதி
தங்கமணி என்றால் யார் என்று எல்லோருக்கும் தெரிந்திருக்கும் ஆம் மனைவியை தங்கமணி என்று விளிப்பதை இணையத்தில் மிக பிரபலமாக்கிய முக்கிய நபர் இவர் தான். மனைவிகளை பற்றிய நகைச்சுவை ததும்பும் கட்டுரைகளுக்கு சொந்தக்காரர். அது மட்டுமில்லாமல் சிறுகதை, கவிதை எழுதுவதில் ஆர்வம் அதிகமுள்ளவர். முக்கியமாய் திருநெல்வேலி வட்டார மொழியில் அழகாய் எழுதக் கூடியவர். சமீபத்தில் இவர் ஒரு திரில்லர் தொடர்கதையும் எழுதினார். அடிப்படையில் மிகவும் ரொமாண்டிக்கான, ஆளாய் தன் கவிதைகள் மூலம் வெளிப்படுத்திக் கொண்டவர். இவருக்கென தனியாக ஒரு வாசகர் வட்டமே இருக்கிறது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.
குறும்படம் எடுப்பதில் ஆர்வமிருப்பவர்.
சமீபத்தில் ஒரு நண்பர் அவரது தங்கமணியோடு வீட்டுக்கு விருந்துக்கு வந்திருந்தார். சாப்பிட்டு முடிந்து ரிலாக்ஸ்டாக பேசிக்கொண்டிருந்தோம். ரொம்ப ஆதங்கத்தோடு பேசினார்.
"அந்தக்காலத்துல எங்கம்மா மீன் குழம்பு வைச்சாங்கன்னா தெருவே மணக்கும். யேய்ய்.. என்னப்பா ஊட்ல விசேஷமான்னு ரெண்டு பேரு விசாரிச்சுட்டுப்போவாங்க. இப்பல்லாம் எங்க.. இவள் வைக்கிற குழம்பு, சட்டிக்குள்ள மண்டைய விட்டு மோந்து பாத்தாலும் வாசத்தை காணோம்.."
ரமாவும், அவர் தங்கமணியும் பக்கத்தில் வந்து அதற்கு மாற்றுக்கருத்து சொல்லத்தயாராக இவர் அவர்களை நோக்கி, "நாஞ்சொல்றது சரிதானே நீங்களே சொல்லுங்க.. அந்தக்காலத்துல உங்க பாட்டி எப்படி சமைச்சாங்க? தெருவே மணத்துதா இல்லையா?"
"ஆமா.."
"உங்க அம்மா எப்படி சமைச்சாங்க? வீடே மணத்துதா இல்லையா?"
"ஆமா.."
"அப்ப இப்ப மட்டும் ஏன் இப்படி? அப்படி என்னதான் பிரச்சினை உங்களுக்கு?"
மேலும் இவரது பதிவுகளை படிக்க.. http://www.aathi-thamira.com/2010/02/blog-post_08.html
3.சாளரம் “கார்க்கி”
தற்கால இளைஞர்களுக்கான ஒரு உதாரண பதிவு இவருடயது. கிண்டல், கேலி, திடீர் கோபம், என்று காக்டெயில் உணர்வை தருபவர். இவரின் தோழி அப்டேட்ஸ் எனப்படும் இரண்டு வரி காதல் வரிகள் படு பிரசித்தம். அது மட்டுமில்லாமல் இவரின் பதிவுகளில் தமிழ் சினிமாவின் பாடல் வரிகளின் மீதான ஈடுபாடு வெகுவாக தெரியும். குறும்படத்தில் நடிப்பதில் ஆர்வமிருப்பவர். ஏழு என்று பெயரிடப்பட்ட ஒரு கேரக்டரை வைத்து இவர் எழுதிய ஏழுவின் புட்டிக் கதைகள் இண்ட்ரஸ்டிங்.
தீபாவளிக்கு பக்கத்து வீட்டுக்காரர்களுக்கு ஸ்வீட் கொடுக்கும் வேலை வழக்கமாக தோழியிடம் வருமாம். இந்த வருடம் கொடுக்க மாட்டேன் என்றாள். காரணம் கேட்ட போது சொன்னாள் “ வழக்கமா ஸ்வீட் கொண்டு போய் கொடுப்பாங்க. ஸ்வீட்டே கொண்டு போய் கொடுக்குமான்னு நீ கிண்டல் பண்ணுவ”.
தோழியை பார்க்காமல் பைத்தியமே பிடிக்கிறது. அவளைப் பார்த்தாலும் அதேதான். அவளை பிடிக்கிறது
மேலும் இவர்து பதிவுகளை படிக்க http://karkibava.com
4.மணிஜி
டிபிக்கல் தஞ்சாவூர்காரனின் நக்கலும், குத்தலும் உள்ள சர்காச்டிக் எழுத்துக்கு சொந்தக்காரர். ஷார்பான கமெண்டுகள், இண்ட்ரஸ்டிங்கான கவிதைகள், சர்ரியலிஸ்டிக் கதைகள் இவரது பலம். சுவாரஸயமான அரசியல் நையாண்டிக்காரர். இவரது 32 கேள்வி சீரீஸ் பதிவுகள் அரசியல்வாதிகளை நாக அவுட் செய்யும் பதிவுகள். மானிட்டர் பக்கங்கள் ஒரு குஜாலான காக்டெயில். சுவாரஸ்யமான பகடி இவரது மிகப் பெரிய பலம்.
அந்தரங்க சாட்சியாய்...
இந்த இரும்பு பாதை
முடியும் இடத்தில்
ஒரு நகரம்
இருந்தது..
இன்று
அது இல்லை
காற்றில் கலந்திருக்கும்
ரத்த வாசம்
மட்டுமே
மிச்சமாயிருக்கிறது
தினம் விடியலில்
தன்னை
புதுப்பித்துக் கொள்ளும்
அழகான
இயற்கை
மட்டுமே
அந்தரங்க
சாட்சியாயிருக்கிறது..
இவரின் பதிவுகளை தொடர்ந்து படிக்க http://www.thandora.in/2009/12/blog-post_09.html
5.ஸ்வாமி ஓம்கார்
ஆம். ஸ்வாமிதான். இளந்துறவி. ஆனால் மிகவும் சுவாரஸ்யமான பதிவர். ஆன்மிகத்தை மிக அழகாக போரடிக்காமல் சுவாரஸ்யமான எழுத்தால் நம்மை கட்டிப் போடுபவர்.. விஞஞானத்திலிருந்து அஞ்ஞானம் வரை எழுதக்கூடிய சுவாரஸ்யக்காரர். தினம் ஒரு திருமந்திரம் என்று திருமந்திர விளக்க நூல் எழுதியவர். இவர் எழுதும் ஷேத்திரங்கள் பற்றிய தொடர்கள் எல்லாம் வழக்கமான ஷேத்திராடன எழுத்திலிருந்து மிகவும் வித்யாசமாக இருக்கும்.சமீபத்தில் அவர் ஆரம்பித்திருக்கும் சபரிமலை சில உண்மைகள் தொடர் படு இண்ட்ரஸ்டிங்.
ஆன்மீகவாழ்க்கையில் இருப்பது சில நேரங்களில் அசெளகரியத்தை கொடுக்கும். அதில் ஒன்று மனிதர்களின் ஆழ்ந்த நம்பிக்கைக்கு பின் இருக்கும் உண்மை வெளிப்படுத்துவதாகும்.
உங்கள் நண்பர் வீட்டுக்கு வருகிறார். உங்களின் சிறு வயது மகள் விளையாடி கொண்டிருக்கிறாள். உங்கள் நண்பர் முன் உங்களின் குழந்தையை பற்றி பெருமையடிக்க ஆசைப்படுவீர்கள். “புஜ்ஜிமா, நீ பண்ணின பெயிண்டிங்கை அங்கிளுக்கு காமி” என்பீர்கள். உங்கள் குழந்தையும் விளையாட்டை விட்டுவிட்டு ஒரு காகிதத்தில் வரைந்த பெயிண்டிங்கை கொண்டு வருவாள்.
உங்கள் நண்பர் சும்மா இருப்பாரா? அவர் பங்குக்கு, “சோ..ச்வீட், அருமையா பெயிண்ட் பண்ணிருக்கே. இந்த கலர் எல்லாம் எப்படிடா பெயிண்ட் பண்ணினே?” என்பார். உங்கள் செல்ல மகள் அங்கிட்டும் இங்கிட்டும் பார்த்துவிட்டு, “அப்பாதான் பெயிண்ட் பண்ணினா.. எனக்கு தெரியாது” என உண்மையை போட்டு உடைக்கும். அப்பொழுது உங்கள் நண்பர் பார்க்கும் பார்வையை எப்படி சந்திப்பீர்கள் ?
அப்படிபட்ட நிலைதான் சபரிமலையை பற்றி என்னிடம் கேட்டால் நான் உணர்வேன். முதலில் ஒன்று தெரிந்து கொள்ளுங்கள். சபரிமலை தெய்வீகமான இடம். இறையாற்றல் பரிபூரணமாக நிறைந்த இடம். உங்கள் ஆன்மீக வாழ்க்கை உயர கண்டிப்பாக சபரிமலையும் அதன் கிரீடமாக இருக்கும் சபரி பீடமும் உதவும். இதில் எனக்கு ஒரு துளியும் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால் சபரிமலையை பற்றி பலர் கூறும் அடிப்படை விஷயங்கள்முற்றிலும் தவறானது. இவற்றை விளக்குவதே எனது நோக்கம்.
முக்கியமாக சபரிமலை அமைந்தவிதம் குறித்த தல புராணம் முன்னுக்கு பின் முரணாக இருக்கிறது என்பதிலிருந்து துவங்குவோம்.
இவரின் பதிவுகளை தொடர்ந்து படிக்க : http://vediceye.blogspot.com/2010/11/blog-post_19.html
6.பட்டர்ப்ளை சூர்யா
சிரித்த முகத்துக்கு சொந்தக்காரர். அபாரமான சினிமா ரசிகர். அதில் உலக சினிமாக்களின் காதலன். இவரின் பதிவுகளில் இவர் எழுதியதெல்லம் ஈரானிய, ஜப்பானிய, ஸ்கேண்டிநேவியா என்று உலகில் உள்ள அத்துனை நாட்டு படங்களையும் தேடித் தேடி பார்ப்பவர். அப்படங்களை பற்றி சுவாரஸ்யமாக எழுதும் எழுத்துக்கு சொந்தக்காரர். சும்மா ஒரு படத்தை பார்த்தோம் எழுதினோம் என்றில்லாமல் தெள்ளத்தெளிவான நடைக்கு சொந்தக்காரர். சமீபத்தில் இவர் எழுதிய கிகிஜிரோ படத்தை பற்றி பார்வை
சிரித்த முகத்துக்கு சொந்தக்காரர். அபாரமான சினிமா ரசிகர். அதில் உலக சினிமாக்களின் காதலன். இவரின் பதிவுகளில் இவர் எழுதியதெல்லம் ஈரானிய, ஜப்பானிய, ஸ்கேண்டிநேவியா என்று உலகில் உள்ள அத்துனை நாட்டு படங்களையும் தேடித் தேடி பார்ப்பவர். அப்படங்களை பற்றி சுவாரஸ்யமாக எழுதும் எழுத்துக்கு சொந்தக்காரர். சும்மா ஒரு படத்தை பார்த்தோம் எழுதினோம் என்றில்லாமல் தெள்ளத்தெளிவான நடைக்கு சொந்தக்காரர். சமீபத்தில் இவர் எழுதிய கிகிஜிரோ படத்தை பற்றி பார்வை
தாய் தந்தையில்லாமல் தன் பாட்டியுடன் தனிமையில் வசிக்கிறான் சிறுவன் மாசோவ். தனிமை கொடுமை, அதிலும் இளம்பருவத்தில் பிஞ்சு மனசின் தனிமை உள்ளத்தை உருகவைக்கும் கொடுமை.
நமக்கெல்லாம் துவக்கப்பள்ளி பருவத்தில் கோடை விடுமுறை விட்டால் எங்கே போவோம்... ?? உறவினர் வீட்டிற்கு அல்லது பாட்டி வீட்டிற்கு சென்று குதித்து கும்மாளமிடுவோம்.
அதேபோல் பள்ளியின் இறுதி நாளன்று துள்ளி குதித்து வீடு வந்து சேருகிறான் மாசோவ். தனக்காக வைக்கப்பட்டிருக்கும் உணவை சாப்பிட்டு விட்டு கால்பந்தை தூக்கி கொண்டு மைதானத்தை நோக்கி ஒடுகிறான். ஆனால் பயிற்ச்சியாளரோ விடுமுறையில் பயிற்சி கிடையாதென்றும் எங்காவது சென்று விடுமுறையை கழிக்குமாறு சொல்லி விட்டு கிளம்புகிறார். விளையாட யார் துணையுமின்றி தன்னந்தனியே நிற்கிறான் மாசோவ்.
இவரின் பதிவை படிக்க http://butterflysurya.blogspot.com/2010/11/blog-post.html
பட்டுக்கோட்டை பிரபாகர் ஆசிரியராக இருக்கும் ஊஞ்சல் இதழில் கடந்த மூன்று மாதமாய் பதிவர்களை பற்றி நானெழுதும் தொடர் இது. முதல் இதழில் வெளியானவை உங்கள் பார்வைக்கு
Comments
தகவல்களுக்கு நன்றிகள் அண்ணை. பட்டர்பிளையையும், மணிஜியையும் கேட்டதாகச் சொல்லுங்கள்.
அருமையான தொடர்....
இன்னமும் எந்தெந்த ப்ளாக்கர்கள் வரப்போகிறார்கள் என்று ஆவலுடன் வெயிட்டிங்....
பதிவர் சந்திப்பு பத்தி பதிவு வருமா?
கிங் விஸ்வா
தமிழில் தமிழ் காமிக்ஸ் உலகம் - வாண்டுமாமாவின் மகத்தான படைப்பு - புலி வளர்த்த பிள்ளை
vazhththukkal Unjalukku...
athai thoguththu Book padikkatha engalukku aliththa cable annavukku vazhtthukkalum nanrikalum.
அப்ப ஒக்கே தான் தல.
கொஞ்சம் கண்டுக்குங்க சார்...
http://suthershan.blogspot.com/2010/09/blog-post_9367.html
http://suthershan.blogspot.com/2010/09/2.html
http://suthershan.blogspot.com/2010/10/train.html
:-)
அப்படியா? அப்போ ரங்கமணி 2004லியே வந்திருச்சே. தங்கமணி இல்லாம ரங்கமணி வந்துச்சாக்கும். May be upto your knowledge
No offence meant or taken sharing purely for GK :P