Thottal Thodarum

Feb 2, 2011

Dil To Baccha ha ji

dil-toh-baccha-hai-ji-wallpaper-26-10x7 மதுர் பண்டார்கர்.. பேஜ்3, கார்பரேட், டிராபிக்சிக்னல் போன்ற சீரியஸான டார்க் படங்களுக்கு சொந்தக்காரர். முதல் முறையாய் காமெடி ஜெனரை எடுத்தாண்டிருக்கிற படம். அதில் ஓரளவு வெற்றி பெற்றிருப்பதாய்தான் சொல்ல வேண்டும்.

நரேன் (அஜய்),அபய்(இம்ரான்),மிலிண்ட் (ஓமி), மூவரும் தத்தம் வாழ்க்கையில் காதலை தேடி அலையும் கதைதான். 38 வயதான, விரைவில் டிவோர்ஸுக்கு காத்திருக்கும், ஒரு பெண் குழந்தைக்கு தகப்பன்தான் நரேன். அவனது ஆபீஸில் புதிதாய் வேலைக்கு சேரும் இருபது வயது ஜூன் பிண்டோ (சானாஸ் பதம்சி)வின் மீது காதல் வருகிறது. அவளோ ஒரு அடலசண்ட் துள்ளலுள்ள இருபது வயது பாம்.   அபய் ஒரு பிட்னெஸ் ட்ரெயினர். வாய்ப்புக் கிடைக்கும் இடத்தில் எல்லாம் கிடைக்குமிடத்தில் படுப்பவன். அவனுக்கு ஒரு எக்ஸ் மாடலுடன் தொடர்பு கிடைக்கிறது. செக்ஸுக்காகவும், வாழ்வின் வசதிக்காகவும் அவளுடன் தொடர்பு வைத்திருக்கிறாஅன்.  அவனுக்கு நிக்கி (ஸ்ருதி ஹாசன்) என்பவளை பார்த்த மாத்திரத்தில் காதல் வருகிறது.  நிக்கி ஒரு தன்னார்வ தொண்டு செய்யும் பணக்காரப் பெண்.  மிலிண்ட் கேல்கர் ஒரு மிடில்க்ளாஸ் மனப்பான்மையுள்ள, கவிஞன். அவனுக்கு ரேடியோ ஜாக்கி குஞ்சான் (ஷ்ரத்தா) மீது காதல். அவளுக்கோ எப்படியாவது சினிமா நடிகையாவது ஒன்றே குறிக்கோள். அதற்காக யாரையும் பயன் படுத்த தயங்காதவள். இவர்களுக்குள் நடக்கும் காதல் சடுகுடு ஆட்டங்கள் தான் படம்.

dt
படத்தின் டேக் லைனாக “love grows.. Men don’t” என்பதற்கான சரியான களம். என்ன தான் ஆண் வளர்ந்தாலும் மனதளவில் குழந்தைதான். தன் வயது தெரிந்தும், புதிதாய் வந்து சேர்ந்த ஜூன் பிண்டோவின் அழகில் மயங்கி, தயங்கி, அவளுடய ஆகர்ஷ புயலில் சுற்றித் தவித்து, இளைமையின் வேகத்துக்கு ஓட முடியாமல் வரும், தவிப்பு, சந்தோஷம், தயக்கம் என்று எல்லா எமோஷன்களிலும் பின்னியெடுக்கிறார் ஆஜய். முக்கியமாய் இம்ரனிடம் தன் காதலை பற்றி சொல்லாமல் தன் ஆபீஸில் இருக்கும் நண்பன் ஒருவனுக்கு காதல் வந்துவிட்டதாக் கூறி ஐடியா கேட்கும் காட்சி.. நல்ல நடிப்பு.

ஜூன் பிண்டோவாக வரும் ஷானாஸ் ஒரு இளமை பொக்கே.. படத்தின் திரைக்கதை ஆங்காங்கே சரியும் போது இவரது ப்ரெசென்ஸ் சிலீர் என மழைத்துளி பட்டார் போல சிலிர்க்கிறது. கனிமொழியில் வந்த பெண்ணா.. இவர்? ஆனால் இவரது கேரக்டர்தான் கொஞ்சம் தமிழ் சினிமா லூசுப் பெண் பாத்திரம் போல.. குழந்தையா, குமரியா குழப்பத்துடன் அமைந்திருக்கிறது. ஆனாலும் பிடிக்கத்தான் செய்கிறது. வேற என்ன சொல்ல.. தில் தோ பச்சா ஹே ஜி..

dtbhj
இம்ரன் வழக்கமாய் பெண்களை பார்த்த மாத்திரத்திலேயே மயக்கி படுக்கும் கேசனோவா டைப் கேரக்ட்ர்தான். அது ஒன்றும் இவருக்கு புதிதல்ல. கேக் வாக் போல வெகு ஈஸியாய் இம்ப்ரஸ் செய்கிறார்.

எக்ஸ் மிஸ் இந்தியாவாக வரும் திஸ்கா சோப்ரா.. அன்பையும், செக்ஸையும் தன் வசதியினால் விலை கொடுத்து வாங்கிவிடலாம் என்று இம்ரானை விலைக்கு வாங்கும் கேரக்டர். இம்ரான் தன்னிடமிருந்து வில்கிப் போகிறான் என்று உணர்ந்து அவனை தன் பக்கம் வைத்துக் கொள்ள துடிக்கும் போதும், அவள் தன் மகளை அதாவது தன் கணவரின் முதல் மனைவிக்கு பிறந்த பெண்ணை காதலிப்பது தெரிந்து கொள்ளும் போது சிறந்த நடிப்பை கொடுத்திருக்கிறார்.
நிக்கியாக வரும் ஸ்ருதி கமல் கொஞ்சம் லேட்டாகத்தான் வருகிறார். ஆனால் தன் டாமினெண்டான கேரக்டர் மூலம் நினைவில் நிற்கிறார். கோவா பீச்சில் தூக்கம் கெடுக்கிறார். ம்ஹும்.

ஓமி.. இவரது கேரக்டர் கொஞ்சம் அசமஞ்சமாய், மிடில்க்ளாஸ் மெண்டாலிட்டியுடனான கன்சர்வேட்டிவ் இண்ட்ரோவர்ட்.. அந்த கேரக்டருக்கு சரியான கேஸ்டிங். மிக சீரியஸாய் தன் காதலை சொல்ல முயலும் போதும், சரி, காதல் என்று தன்னை அவள் பயன்படுத்திக் கொள்கிறாள் என்று தெரிந்தும், தன் காதல் புனிதமானது என்று அவளுக்காக காத்திருப்பதும். காதலும், செக்ஸும் புனிதமானது என்று இன்றளவிலும் நம்பிக் கொண்டிருக்கும் ஒரு இளைஞனை கண் முன்னே நிறுத்துகிறார்.

dtbhj2
குஞ்சானாக வரும் ஷ்ரத்தாவின் கேரக்டர் மூலம் தன் சுயலாபத்துக்காக பெண்கள் எத்தனை ஆண்களை காமெடி பீஸாக்கிக் கொண்டிருக்கிறார்கள் என்பதை புரிந்து கொள்ள முடியும். மிக லைவான கேரக்டர்.. நன்றாகவே செய்துள்ளார். ரவிவாலியாவின் ஒளிப்பதிவு குறை சொல்ல முடியாது. பிரிதமின் இசையில் இரண்டு பாடல்கள் கேட்கலாம். இடறாமல் படத்தினூடே ஓடுகிறது. சஞ்செய்யின் வசனங்கள் ஆங்காங்கே பளிச்..
மொத்தத்தில் வழக்கமான டார்க படங்களை விட்டு, ஒரு ஃபீல் குட் எண்டர்டெயினரை கொடுக்க முயற்சி செய்த மதுர் இன்னும் கொஞ்சம் திரைக்கதையில் கவனம் செலுத்தியிருக்கலாம். தமிழ் பட லூஸு பெண் போன்ற ஜூன் பிண்டோவின் பாத்திரம். அதற்காக டெம்ப்ளேட் காட்சிகளை தவிர்த்திருக்கலாம். ஆனால் ஆனால் ஆண்களை பயன்படுத்திக் கொள்ளும் பெண்களை போர்ட்ரே செய்யும் போது நல்ல டீடெயிலிங்.. இன்னும் கொஞ்சம் எடிட்டிங்கில் கிரிஸ்ப் செய்திருக்கலாம்.

Dil To Baccha Hai Ji - TRUE
கேபிள் சங்கர்

Post a Comment

6 comments:

குரங்குபெடல் said...

டெம்ப்ளேட் . . .டீடெயிலிங்..போர்ட்ரே. . .


கேபிள் சங்கர் விமர்சனங்களில் . . .
கன்பர்ம் வரிகள் . .

நல்ல பதிவு ... நன்றி

CS. Mohan Kumar said...

//டெம்ப்ளேட் . . .டீடெயிலிங்..போர்ட்ரே. . .


கேபிள் சங்கர் விமர்சனங்களில் . . .
கன்பர்ம் வரிகள் . . //

:))

'பரிவை' சே.குமார் said...

விமர்சனம் படம் பார்க்கும் ஆவலைத் தூண்டுகிறது.

தர்ஷன் said...

உங்கள் விமர்சனம் சூப்பர் படமும் இப்படியே இருக்குமா?

MANO நாஞ்சில் மனோ said...

படத்தை விட இவர் பண்ணுற விமர்சனம்தான் சூப்பரா இருக்கு போங்க....

Sivakumar said...

>>> நான் போட்ட அப்ரண்டீஸ் விமர்சனத்தை காண http://nanbendaa.blogspot.com/2011/01/dil-toh-baccha-hai-ji.html