Thottal Thodarum

Feb 23, 2011

7Khoon Maaf- சூசன்னாவின் ஏழு கணவர்கள்.

 01saatkhoonmaafpriyankastillsphotoswallpapers ஒவ்வொரு இயக்குனருக்கு ஒவ்வொரு விதமான படங்கள் அவர்கள் வசப்படும். ஆனால் இவருக்கு மட்டும் ஒவ்வொன்றும் ஒருவிதம். மக்கடேவிலிருந்து கமீனே வரை எல்லாமே தனிரகம். இசையமைப்பாளராய் தன் திரையுலக வாழ்க்கையை ஆரம்பித்து, இன்று ஒரு சிறந்த இயக்குனராய் பரிமளிக்கும் விஷால் பரத்வாஜின் அடுத்த படம் எனும் போது ஒரு பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. அந்த எதிர்பார்ப்பை தன் வித்யாசமான கதை சொல்லலினால் மிரட்டியிருக்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும்.


01PriyankaHotbedsceneswithJohnSaatkhoonmaafMovie
பெரும்பாலும் பழைய இலக்கியங்களிலிருந்தோ மேடை நாடகங்களிலிருந்தோ கதைகளை தேர்ந்தெடுக்கும் விஷால் இம்முறை ரஸ்கின் பாண்டின் ”சூசான்னாவின் ஏழு கணவர்கள்” என்கிற சிறுகதையை எடுத்தாண்டிருக்கிறார். இம்முறையும் ஒரு வித்யாசமான கதையான சூசன்னாவின் ஏழு திருமணங்கள் என்ற களத்தை எடுத்துக் கொண்டு தான் ஒரு சிறந்த கதை சொல்லி என்று நிருபித்திருக்கிறார்.


02PriyankaChopras7khoonmaafmoviestillswallpapers
சூசன்னா ஒரு ஆங்கிலோ இந்தியப் பெண். பேரழகி, பணக்காரி. அவளின் முதல் கணவனான மேஜர் எட்வின் (நீல் முகேஷ்) ஒரு கால் ஊனமுற்ற இராணுவ அதிகாரி. டிபிக்கல் இந்திய கணவர்களின் முகம் கொண்டவன். ஓவர் பொஸஸிவ்னஸ் சந்தேகப்புத்தியுள்ளவன். தன் கீழுள்ளவர்களை ஆதிக்க மனப்பான்மையோடு சித்ரவதை செய்பவன். அவனின் மறைவுக்கு பிறகு சூசன்னா கேரல் பாடும் ஜிம்மியை (ஜான் ஆப்ரஹாம்) திருமணம் செய்து கொண்டு அவனை ஒரு பெரிய ராக் ஸ்டார் ஆக்குகிறாள். பணமும், புகழும் அவனை முழு போதையாளனாய் ஆக்குகிறது. போதைக்கு அடிமையாகி அவனும் திடீரென இறக்கிறான்.

03PriyankaChopras7khoonmaafmoviestillswallpapers
அவனின் மறைவுக்கு பிறகு வாசுல்லா(இர்பான் கான்) எனும் ஒரு உருது கவிஞரின் பால் ஈடுபாடுக் கொண்டு அவனை திருமணம் செய்கிறாள். கவிஞனாய் உருகி, உருகி காதல் செய்யும் அவன், கட்டிலில் ஒரு வெறி பிடித்த ஓநாயாய் அவளை உயிரோடு தின்கிறான். கிட்டத்தட்ட வலி மிகுந்த வன்புணர்ச்சியே தினமும் நடக்க, ஒரு நாள் அவனும் இறந்து போகிறான். அதன் பிறகு ஒரு ரஷ்யன் ஒருவனுக்கு சூசன்னாவின் மேல் காதல் ஏற்பட்டு திருமணத்தில் முடிய, அவனுக்கு வேறு ஒரு குடும்பம் ரஷ்யாவில்  இருப்பது தெரிய வரும்  போது அவனும் இறந்து போகிறான்.. வெளிநாட்டுகாரரின் சாவு போலீஸாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்த, அதை விசாரிக்க வரும் இன்ஸ்பெக்டர் கீமத்லால் (அன்னுகபூர்)  கேஸை மூடுவதற்காக அவளிடம் உடல் சார்ந்த ஆதாயத்தை எதிர்பார்க்கிறான். அந்த உடலுறவு நடந்த பின்பு அவளின் மேல் பித்தாய் அலைய ஆரம்பித்து ஒரு கட்டத்தில் திருமணம் செய்து கொண்டு ஹார்ட் அட்டாக்கில் இறக்கிறான்.
04PriyankaChopras7khoonmaafmoviestillswallpapers அதன் பிறகு மதுசூதன் (நஸ்ருதீன் ஷா) எனும் மருத்துவரை திருமணம் செய்கிறாள். காளான்களை ஆராய்ச்சி செய்யும் அவனின் காளான்களால் ஆன சமையலை சாப்பிட்டு நொந்து போகிறாள் சூசன்னா. இதுவரை இவளின் கணவன்கள் மர்மமான முறையில் இறந்து போயிருக்க, இவன் மட்டும் இவளை கொல்லப் பார்க்கிறான். அவளுடய பணத்திற்காக. ஆனால் மதுசூதன் சூசன்னாவால் சுட்டுக் கொள்ளப்படுகிறாள். அதன் பிறகு அவளின் வீடு தீப்பிடித்து எரிந்ததில் அவள் இறந்து போனதாய் முடிவெடுத்து கேஸ் மூடப்படுகிறது.

இந்த மொத்த கதையையும் சொல்லும் சூசன்னாவின் வீட்டில் வேலை செய்து கொண்டு அவளின் ஆதரவில் படித்து டாக்டராகும், சூசன்னாவை சாஹேப் என்று மதிப்பும் மரியாதையுடன் அழைக்கும், லேசான காதலுடன்  இருக்கும் இளைஞன் விவான் ஷாவின் பார்வையில் சொல்லப்படுகிறது. சூசன்னா உயிரோடு இருப்பதாய் அவன் மட்டும் நம்புகிறான். அவளைத் தேடி அலைகிறான். ஒரு கட்டத்தில் அவளை கண்டு பிடிக்கும் போது அவள் ஏழாவதாக மீண்டும் திருமணம் செய்யப் போவதாய் சொல்லி, சர்ச்சுக்கு வரச் சொல்லி அழைக்கிறாள். அவள் யாரை திருமணம் செய்து கொள்கிறாள்? இதுவரை அவளது வாழ்க்கையை பற்றி ஏதும் ஆறியாதவர்கள் அவளை திருமணம் செய்தார்கள் ஆனால் இம்முறை அவளுடய பாவங்கள் அனைத்தையும் தெரிந்தவர் ஒருவரை மணந்து கொள்கிறாள். அவளது வாழ்க்கை என்னவாகும்? என்பதை வெள்ளித்திரையில் காண்க. இதுவரை நான் எழுதிய விமர்சனங்களில் கதையைப் பற்றி விரிவாக எழுதியதில்லை. ஆனால் இந்த படத்தை பொறுத்தவரை களனைச் சொன்னதினால் படம் பார்க்கும் சுவாரஸ்யங்கள் நிச்சயம் குறையாது என்பது என் எண்ணம்.

05PriyankaChopras7khoonmaafmoviestillswallpapers
ப்ரியங்கா சோப்ராவுக்கு என்னா கேரக்டர். இவ்வளவுக்கும் பிறகு சூசன்னாவை நாம் காதலித்துக் கொண்டிருக்கிறோம் என்றால் அது தான் அந்த கேரக்டரின் வெற்றி. இயக்குனரின் வெற்றி. ப்ரியங்காவின் லைப் டைம் கேரக்டர் என்று சொன்னால் அது தகும். சும்மா மிரட்டி தள்ளுகிறார் நடிப்பில். தன் வீட்டில் வளரும் வேலைக்காரன் வளர்ந்து பெரிய மனுஷனாய் மாறி வீட்டிற்கு வரும் காட்சியில் தன்னை நிர்வாணப் படுத்தி, அவனை செட்டியூஸ் செய்ய முயலும் காட்சியில் அவரது முகத்தில் தெரியும் உணர்ச்சிகளை பாருங்கள் டாப் க்ளாஸ். ஒவ்வொரு திருமணத்திற்கும் இருக்கும் இடைவெளியில் அவரது பாடிலேங்குவேஜில் தெரியும் வித்யாசங்கள். தன் வாழ்க்கை ஏன் இப்படி சோகமாகவே இருக்கிறது?. தன்னை முழுமையாய் நேசிக்க, ஒருவன் வரமாட்டானா என்கிற ஏக்கம் நிறைந்த அந்த பார்வை கொல்கிறது. மிக குறைவான வசனம் பேசி, சிறு சிறு அசைவுகளால் தன் உணர்வுகளை பரிமாறுவது  என்பது போன்ற காட்சிகள் ஸ்பெல்பவுண்ட்.

07PriyankaChopras7khoonmaafmoviestillswallpapers
இதில் நடித்திருக்கும் ஒவ்வொரு பாத்திரமும் தங்களுக்கு கிடைத்த வாய்ப்பை சிறப்பாக பயன் படுத்தியிருக்கிறார்கள். காப்டன் புருஷன் நீல் முகேஷ் தன் வீட்டில் வேலை செய்யும் ஊமைக் குள்ளனோடு சண்டையிடும் காட்சியில் தன் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். என்னைப் பொறுத்தவரை எல்லோரையும் தூக்கி சாப்பிட்டது அன்னுகபூர்தான் மனுஷன் என்னமா வழிகிறான். அன்னுவின் மேல் ப்ரியங்கா இயங்க, தன் உச்சக்கட்டத்தை அடையும் காட்சியில் அவரது ரியாக்‌ஷனை பாருங்கள். குட்டியாய் வந்தாலும் மனதில் நிற்கும் கங்கனா சென், உஷா உதூப் போன்றவர்களின் கேரக்டர் டீடெயிலிங் அருமை.

ஏற்கனவே விஷாலின் மேக்கிங்கினால் மயங்கியிருக்கிறவன் நான். இந்திய குவாண்டின் டுவாரண்டினோ என்றும் சொல்லலாம். படம் நெடுக வரும் வசனங்கள் செம ஷார்ப். நக்கலும் நையாண்டியும் கரை புரண்டு ஓடுகிறது. சூசன்னாவின் ஒவ்வொரு திருமணத்தின் போதும அந்தந்த காலகட்டங்களில் நடந்த முக்கிய நிகழ்வுகளை டிவியில் காட்சிகளோடு ஒளிபரப்பும் உக்தி அருமை. சர்சிலிருக்கும்  தேவனின் சிலையிலிருந்து ஆரம்பித்து, அன்னுவின் திருமணக் காட்சியில் தவழ்ந்து அப்படியே ஃபேன் செய்து திரும்ப வரும் போது அன்னுவின் சவப்பெட்டியில் முடித்து சுருங்கச் சொல்லி புரியவைத்திருக்கும் விதத்தில், இந்த ஊடகத்தின் பால் உள்ள ஆளுமையை வெளிப்படுத்தியிருக்கிறார்.   பாடல்களும் ரஷ்ய உச்சரிப்புடன் வரும் “டார்லிங்” பாடல் அட்டகாசம். பின்னணியிசையிலும் தன் அவதானிப்பை நிலை நிறுத்தியிருக்கிறார். இடைவேளையின் போது இன்னும் நான்கு பேர்கள் மீதம் என்று போடுவது செம பஞ்ச்.
 
படத்தில் குறையென்று சொன்னால் இரண்டாவது பாதியின் திரைக்கதைதான். இவரது முந்திய படங்களை வைத்துப் பார்க்கும் போது இந்தப்படம் கொஞ்சம் ஒரு க்ரேட் குறைவுதானென்றாலும், முதல் பாதியில் வரும் மூன்று கணவர்கள், அவர்களது மரணங்களில் இருக்கும் சுவாரஸ்யம், இரண்டாம் பாதியில் வரும் நான்கு கணவர்களின் நிகழ்வுகளில் குறைவாகவே இருக்கிறது. அன்னுகபூர் எபிசோட் தவிர. மற்றபடி ஒரு வித்யாசமான, டார்க் வகை படத்தை சிறப்பாக அளித்த விஷாலையும், தன் அட்டகாசமான நடிப்பால் முழு படத்தையும் தன் தோளில் ஏற்றிச் சென்ற ப்ரியங்காவுக்கும் ஹாட்ஸ் ஆப். இம்மாதிரியான படங்கள் கமர்சியல் ஹிட் லிஸ்டில்  ஏறினால் இன்னும் சில சிறந்த படங்கள் நமக்கு கிடைக்கும்.
7Khoon Maaf – Priyanka’s Master piece
சங்கர் நாராயண் @கேபிள் சங்கர்

Post a Comment

8 comments:

Vidhoosh said...

:) showing where in chennai?

King Viswa said...

//showing where in chennai?//

சென்னையில் ஒரு பத்து தியேட்டரில் ஓடுகிறது (சத்யம், தேவி, வுட்லண்ட்ஸ், இதர, இதர)

ஆனாலும் படம் மொக்கைதான். தாங்க முடியல. அதுவும் கடைசி சீன்ல ஜீசஸ் வர்றது எல்லாம் ..... தாங்க முடியல.


கிங் விஸ்வா
தமிழில் தமிழ் காமிக்ஸ் உலகம் - வாண்டுமாமாவின் மகத்தான படைப்பு - புலி வளர்த்த பிள்ளை

King Viswa said...

படத்துல ரஸ்கின் பான்ட் வர்றத பார்த்தவுடன் நான் கூட பயந்துவிட்டேன். அனால் நல்லவேளை அந்த மாதிரி எதுவும் இல்லை.


கிங் விஸ்வா
தமிழில் தமிழ் காமிக்ஸ் உலகம் - வாண்டுமாமாவின் மகத்தான படைப்பு - புலி வளர்த்த பிள்ளை

பிரபல பதிவர் said...

படம் மொக்க தல....
செம ப்ளாப் இங்க.....

மத்த‌ லாங்குவேஜ்/பர்டிகுலர் டைரக்டர்/மொக்க நடிகர் படங்கள பாத்தா சிலாகிக்கிற குரூப்பா நீங்க.....


அப்ப சினிமா எடுத்தா கலக்கலாத்தான் இருக்கும் பதிவுலகுல......

Ba La said...

எனக்கென்னமோ பார்த்தே ஆகணும்னு தோணுது.

ப்ரியங்கா பெர்போமன்ஸ்ஸ கேட்க BlackSwan நட்டலி போட்மன் ஞாபகம் வருது.

Jana said...

கண்டிப்பா பார்த்திடனும்..

spice said...

saw the movie and was waiting for your review....agree with your review 100%.

Anonymous said...

http://fouruseofgooglereaderintamil.blogspot.com/2011/02/google-reader-4.html