Posts

Showing posts with the label ஷமிதாப்

கொத்து பரோட்டா - 09/02/15

Image
இன்று ஒரு தகவல் வழக்கமாய் ராத்திரியில் டி&டி செக் செய்து கொண்டிருந்த போலீஸார்கள், தற்போது மாலை ஆறு மணிக்கே தங்கள் சேவையை காட்ட ஆரம்பித்திருப்பது வசூல் வேட்டையை இரவில் குறைந்திருப்பதினால் என்பது உ.கை.நெ.கனி. பெரும்பாலும் இம்மாதிரியான இரவு நேர செக்கிங்கின் போது காரின் கதவை இறக்கி, “சார் எங்கிருந்து வர்றீங்க?”என்று கேட்பவர்களிடம் நான் சொல்லும் ஒரே பதில் “டெய்லி இந்த ரூட்டுல வர்றேன். செக்கிங் இருப்பீங்கன்னு தெரியாதா? சரக்கடிச்சா அதுக்கு வேற ரூட்டு  சார். அங்கெயெல்லாம் நீங்க ஆளு போட முடியாது. ஏன்னா துட்டு பேறாது” என்பேன். சிலர் சிரிப்பார். சிலர் கடுப்பார். “இதுல எவ்வளவு வந்துச்சுன்னா குடிச்சிட்டு வண்டி ஓட்டக்கூடாது?” என்று கேட்டதற்கு இது வரை யாரும் சரியான பதிலே சொன்னதில்லை. பெரும்பாலான பத்திரிக்கைகளும் அதை சொல்ல விழைவதில்லை. இன்று ஹிந்துவில் அதை விளக்கமாய் போட்டிருக்கிறார்கள். 30 சதவிகிதத்திற்கு மேல் ப்ரீத் அனைலைசர் காட்டியது என்றால் தண்டிக்கப்பட வேண்டிய குற்றமென்று. @@@@@@@@@@@@@@@@@