Posts

Showing posts with the label tamilfilms

என் பெயரை இனிமேல் யூஸ் செய்ய வேண்டாம் - மணிரத்னம்

Image
எனது பெயரை இனிமேல் யூஸ் செய்ய வேண்டாம் என்று மணிரத்னம் அறிவித்திருக்கிறார். அவர் இவ்வாறு அறிவித்ததன் காரணம் என்னவாக இருக்கும் என்று அவரின் ரசிகர்களும், பத்திரிக்கையாளர்களும், தமிழ் திரையுலகமும் அறிய ஆவலாயிருக்கிறார்கள். சமீபத்தில் மணிரத்னத்தின் உதவியாளர் திரு. தினேஷ்குமார் இயக்கிய கத்திக்கப்பல் என்கிற திரைப்படத்தை பார்த்து விட்டு நொந்து போய்தான் மணிரத்னம் இந்த அறிக்கையை விட்டுள்ளார் என்று நம்ப தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.. அலைபாயுதே படத்தில் மட்டும் தன்னுடன் உதவியாளராக பணிசெய்த அதுவும் அந்த படத்தின் கதையாசிரியர் திரு செல்வராஜ் என்பதால். அதுமட்டுமில்லாமல் தன்னுடய உதவியாளர் என்று சொல்லி படத்தின் விளம்பரத்தில் தன்னையும், பாரதிராஜாவையும் போட்டு, ஏகப்பட்ட விளம்பரம் செய்து, படு அமெச்சூரான ஓரு படத்தை எடுத்திருக்கும் இவரை பார்த்து அடுத்து வரும் தலைமுறையினர் இவரே இப்படி என்றால் அவரின் குருவின் படம் எப்படி இருக்குமோ என்று நினைத்துவிடுவார்கள் என்று அஞ்சி தான் இந்த அறிக்கை வந்திருப்பாக சொல்கிறார்கள். இதில் பாரதிராஜாவை எதற்காக போட்டார்கள் என்று கேட்டீர்களானால் அது ஓண்ணுமில்லை தினேஷின் தந்தை ப...

துரை -விமர்சனம்

Image
ஓரு ராஜாவிடம் விசுவாசமான ஓரு தளபதி..தளபதிக்கு அழகான மனைவி, மகள், தளபதியை ஓரு தலையாய் காதலிக்கும் ராஜகுமாரி, தன் மகனிடம் அரசாட்சியை ஓப்படைக்க இஷ்டமில்லாமல் தளபதியை அடுத்த வாரிசாக அறிவிக்க, அரசரின் மகன் தனது ராஜா ஆசையின் காரணமாக தன் தந்தையை கொன்றுவிட்டு பழியை தளபதி மீது போட்டுவிட்டு அவனையும் அவன் குடும்பத்தையும் அழித்துவிட பணிக்கிறான். தளப்தி மட்டும் தப்பிவிட்டு ஓரு க்ளேடியேட்டர் ஆகி அவனது நாட்டுக்கே திரும்ப வந்து அரசனை கொன்று நல்லாட்சி த்ருகிறான்.. இது தான் க்ளேடியேட்டரின் கதை. ராஜாவுக்கு பதிலாக ஓரு நல்ல அரசியல்வாதி, நேர்மையான அல்லக்கை ஹீரோ, ஹீரோவுக்கு நல்ல அழகான மனைவி, மகன், அரசியல்வாதியின் மகள் ஓரு தலையாய் ஹீரோவை காதலிக்கிறாள். அரசியல்வாதியின் மகன் அடுத்த முதல்வர் ஆக அசைப்பட்டு தன் தந்தையை கொன்று பழியை ஹீரோவின் மீது போட்டு போலீசை விட்டு என்கவுண்டர் செய்ய போக அதிலிருந்து தப்பித்த ஹீரோவுக்கு தான் யார் என்று மற்ந்து போய்விட, அதனால் தான் யார் என்றே தெரியாமல் அலைய, பின்னால் ஓரு மணிநேரத்திற்கு பின் ஞாபகம் வந்து தன் நிலைக்கு யார் காரணம் என்று கண்டுபிடித்து எல்லோரையும் கொன்று வென்று வெற்றி வா...

காதலில் விழுந்தேன் / சக்கரகட்டி - லேட்டஸ்ட் நிலவரம்

Image
இரண்டு படங்களும் ரிலீஸ் ஆகி ஓரு நாள் ஆகிவிட்ட நிலையில், இரு படங்களில் காதலில் விழுந்தேன் படத்திற்கு கூட்டம் மேலும் ஏறியிருப்பதாக தெரிகிறது. படத்தை பற்றி ரொம்ப நல்லாயிருக்குன்னு ரிப்போர்ட் இல்லைன்னாலும் விஜய் ஆண்டனியின் பாடல்கள், அதிலும் குறிப்பாக” நாக்க மூக்க” பாடலினாலும், சன் டிவியின் ஆரவாரமான விளம்பரத்தினாலும் வெற்றியை தொடும் என்று தெரிகிற்து. சக்கரகட்டி நிலைமை ரொம்ப மோசமாகிவிட்டதாகதான் தெரிகிற்து. சக்கரகட்டி விமர்சனம்

காதலில் விழுந்தேன் - விமர்சனம்

Image
காதலில் விழுந்தேன் என்கிற படத்தின் தலைப்பை பார்த்த்துவிட்டு ஓரு அழகிய காதல் கதையை எதிர்பார்த்தீர்களானால...உங்களுக்கு ஏமாற்றமே. குணா, 7ஜி ரெயின்போ காலனி,காதல் கொண்டேன், ஒண்டரி(தெலுங்கு) போன்ற பல படங்களின் பட்டறையே காதலில் விழுந்தேன். சபாபதி வீல்சேரில் மீராவை வைத்துக் இருளில் தள்ளிக் கொண்டு தப்பி ஓடி ஊட்டிக்கு போகும் ரயிலில் வித்அவுட்டில் அந்த வீல் சேருடன் காதலியை தூக்கிக் கொண்டு ஏறும்போதே அட என்று நாமும் ஏறுகிறோம். சபாபதி மீராவை டிரையினில் படுக்க வைத்துவிட்டு தன்னுடய காதல் கதையை டி.டி.ஆர். லிவிங்ஸ்டனிடம் சொல்ல ஆரம்பிக்கிறார். எவ்வளவு அமெச்சூர் தனமான காதல் காட்சிகள். நடிகர்கள் நடிக்க முடியாமல் இருக்கும் இடத்தில் எல்லாம் எடிட்டர் வி.டி.விஜயன் தன் திறமையை காட்டியிருக்கிறார். ப்ளாஷ்பேக் சொல்ல ஆரம்பித்து 6வது காட்சியில் காதல் வந்துவிடுகிறது. சரி அடுத்து என்ன என்ற கேள்வி எழும் முன்னே மீராவிடம், சபாபதி முத்தம் கேட்க, நீ புட்பால் மேட்ச் பைனல் விண் செய்தால் தருவேன் என்று சொல்லிவிட்டு பஸ் ஓடும் முன்பு ஓரு கிஸ் அடிக்கிறார். (அப்படி ஓண்றும் சொல்லிக்கொள்ளும்படியான கிஸ் இல்லை). புட்பால் மேட்ச் ஜெயித்...