Posts

Showing posts with the label zee5

Super Singer Seaon 5- Ticket To Finale..

  இந்த வார ரெண்டாவது டாப் 5 டிக்கெட் டு பினாலே போட்டியாளர்களில் சபேசன், ஷுஷாந்திகா, டார்லிங் ஷிவானி, பிரதிபா ஆகியோர் கோல்ட் வாங்கியிருக்க, இவர்களில் ஒருவரை முதல் நபராய் டிக்கெட் டூ பினாலேவில் செலக்ட் செய்யும் நாள். ஷுஷாந்திகாவை முதல் நபராய் செலக்ட் செய்தார்கள். நிச்சயம் ஷுஷாந்திகா தகுதியான ஆள் தான். அதிலும் நேற்று அவர் பாடிய லிங்கா பட பாடலான மோனா மோனா போன்ற சுமாரான பாடலை குரல் மாற்றி பாடி வெர்ஸடைலிட்டியை காட்டி வென்றார். பட் என்னைப் பொறுத்தவரை இந்த பாடல் கோல்டுக்கு ஒர்த் இல்லை என்றே சொல்ல வேண்டும். ஆனால் இது வரை இவர் பாடிய அத்துனை பாடல்களுமே மிக அற்புதமாய் பாடப்பட்ட பாடல்கள் என்பதால் நோ ரிக்ரெட்ஸ். நிச்சயம் டார்லிங் ஷிவானி 5-1 இடத்தை பெறுவார் என்று நம்பிக்கை இருக்கிறது. பவித்ரா நேற்றைப் போலவே ஒரிரு நாட்களில் கொஞ்சம் சறுக்கியிருக்கிறார். ஆனாலும் இவர் போட்டியாளர்களில் நிச்சயம் இருக்கிறார் என்றே சொல்ல வேண்டும். ஸ்ரீஹரி வரிகள் மறந்து சொதப்பியது. செந்தமிழன் வர வர ஸ்ருதி இல்லாமல் ஹை பிட்ச் பாடல்களை குரல் பிரிந்து பாடிக் கொண்டிருக்கிறார். வருகிற வாரங்களில் வெளியேறப் போகிறர்வகளில் முதன்மை...

Forbidden Love - anthology stories from zee5

Image
நான்கு காமத்துடனான காதல் கதைகள். நான்கு பிரபல இயக்குனர்கள். பிரியதர்ஷன் நாயர், பிரதீப் சர்கார், அரிந்தம்ராய் சவுத்ரி, மகேஷ் மஞ்ச்ரேக்கர்.  நான்கு கதைகளில் காதல், காமம், துரோகம், உறவுகிடையே ஆன முரண் என அனைத்தையும் பேசுகிறது.  அனாமிகா பிரயதர்ஷனின் இயக்கத்தில் பாண்டிச்சேரியின் பின்னணியில் நடக்கும் கதை. அனுபமா குமாரின் மிக இயல்பான நடிப்பில் கொஞ்சம் க்ளைமேக்ஸ் முன்பே தெரிந்தாலும், சுவாரஸ்யம் குறையாததற்கு காரணம் அனுபமா குமார். அவரின் கண்களில் தெரியும் வெறுப்பு, காதல், சந்தோஷம், எல்லாமே சூப்பர்.  ரூல்ஸ் ஆப் கேம்ஸ் பிரியாவுக்கும், கவுரவ் குப்தாவுக்கும் திருமணம் ஆகி ஏழு வருடங்கள் ஆகிறது. பெரிதாய் பிரச்சனையில்லை என்றாலும், திருமண வாழ்க்கையில் பெரும் சுவாரஸ்யமில்லாமல் போய்க் கொண்டிருக்கிறது. தன் வாழ்க்கையில் சுவாரஸ்யமில்லாத நாட்களை ஸ்பைஸ் அப் செய்ய விழையும் பல விஷயங்கள் சமூகத்தில் பல பெண்கள் செய்வதே என்பதை உணர்ந்தவர்கள் மிகச் சிலரே.  அதையெல்லாம் மீறி ரோல் ப்ளே ஆட்டம் ஒன்றை ஆடுகிறாள். அது எங்கே கொண்டு போய் விடுகிறது என்பதுதான் கதை. அஹானா குமாரின் நடிப்பு சிறப்பு.அரிந்தம் ராய் சவ...

Igloo- அன்பின் கதகதப்பு

Image
Igloo- அன்பின் கதகதப்பு தமிழ் சினிமாவில் மட்டுமல்ல உலக அளவில் மனதுக்கு நெருக்கமாய், சின்னச் சின்ன உணர்வுகளை வெளிப்படுத்தும் படங்கள் இப்போதெல்லாம் அவ்வளவாக வருவதில்லை. அப்படியே வந்தாலும் சீரியல் கண்டெண்ட் என்று மிக சுலபமாய் ஒதுக்கித் தள்ளிவிட்டு அவெஞெர்ஸோ, சிங்கம் 3 பார்க்க போய்விடுகிறோம். தயாரிப்பாளர்களும் இனி இம்மாதிரியான ஆர்டிஸ்ட் படம் தான் ஓடும் என்று முடிவெடுத்து நம்மை கொலையாய் கொல்வார்கள். ஃபீல் குட் படங்கள், குடும்ப உறவுகளைச் சொல்லும் படங்கள். மிக அழுத்தமான கருக்களை கொண்ட கதைகள். சின்ன த்ரில்லர்கள் போன்றவைகள் குறைந்து கொண்டே வருகிறது. குறிப்பாய் வியாதியை, ஆஸ்பிட்டலை அடிப்படையாய்க் கொண்டு எடுக்கப்படும் கதைக்களன்களை தொடுவதற்கு எல்லோருமே பயப்படும் படியான காலமாகிவிட்ட நிலையில், அக்டோபர் போன்ற மிகச் சில ஹிந்தி படங்கள் மெல்லிய நம்பிக்கையை கொடுக்க வரும். ஆனால் அப்படமே இயக்குனரின் பெயரால் நற்பெயர் பெற்றதேயன்றி பெரும் வசூல் எல்லாம் கிடையாது. அப்படியான இன்றைய பரபர சினிமாவில் நிறுத்தி நிதானமாய் ஒர் அழகிய தமிழ் திரைப்படம் சாரி.. தமிழ் இணையப்படம் இக்லூ. ஓ.டீ.டீ எனும் இம்மாதிரியான ப்ளாட...