Posts

Showing posts with the label சன்

வேங்கையிலிருந்து சன் விலகியதா?

வருகிற ஏழாம் தேதி தனுஷ் நடித்து, ஹரி இயக்கத்தில் வெளிவர இருந்த வேங்கை திரைப்பட வெளியீட்டு உரிமையை சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் வழங்க, வெளியிடப்படப் போவதாய் விளம்பரம் வந்தது. ஆனால் கடந்த ரெண்டு நாட்களாய் சன் பிக்சர்ஸ் அப்படத்திலிருந்து விலகிவிட்டதாக செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. அதற்கேற்றார் போல பதினைந்து நாளுக்கு முன்பே தொடர் விளம்பரங்களை ஆரம்பித்துவிடும் சன் டிவி. இன்னும் விளம்பரங்களை ஆரம்பிக்காத போது செய்தி உண்மையோ என்றும் தோன்றுகிறது. எஸ்.கே

சூப்பர் சிங்கர் ஜுனியர்2 V/S சன் டி.ஆர்.பி

Image
சூப்பர் சிங்கர் ஜுனியர் 2வின் பைனல்ஸ் Y.M.C.A க்ரவுண்டில் லைவ்வாக நடைபெற இருக்கிறது. தொலைக்காட்சி ரசிகர்களிடையே மிகப்பெரிய ஆரவாரத்தை, ஆர்வத்தை, எழுப்பியிருப்பது நிஜம். நிகழ்ச்சியை பற்றி ஆயிரம் விமர்சனங்கள் ஆதரித்தும், எதிர்த்தும் இருந்தாலும், பெரு வாரியான மக்களால் பார்க்கப் படுகிற நிகழ்ச்சியாக இருக்கிறது என்பது உண்மை. ஆரம்பித்த போது மிகவும் ஆவரேஜாக ஆரம்பித்த நிகழ்ச்சி, கொஞ்சம் கொஞ்சமாக சூடு பிடித்து, எலிமினேஷன் ரவுண்ட், வைல்ட் கார்டு ரவுண்ட், குவாட்டர் பைனல் என்று  வர ஆரம்பித்தவுடன், போட்டியாளர்களீடையே, மிக கடுமையான போட்டியும், ரசிகர்களிடையே அந்த பெண், நன்றாக பாடினாள், ஸ்ரீகாந்த நல்லா பாடினான் என்று ப்ரியங்கா நல்லாத்தான் பாடினாள் என்று தங்கள் வீட்டு பிள்ளைகளை போல நினைத்து உரிமையுடன் பேச ஆரம்பித்தார்கள். வழக்கமாய் விஜய் டிவியின் விளம்பர இம்சை தாங்காமல் பார்ப்பதை தவிர்ப்பவன் நான். அதையும் மீறி சில சமயம் டிவியிலும், இணையத்தில் யூடூபிலும் தொடர்ந்து எல்லா நிகழ்ச்சியையும் பார்த்து வருகிறேன். நிறைய வீடுகளில் மாலை நேரத்தில் கடந்த ஒண்ணரை மாதமாய் விளம்பர இடைவேளையில்தான் மத்த நிகழ்ச்சிகளை ப...

சன், ஜீதமிழ், சுப்ரமணியபுரம் - பின்னணி

Image
இந்திய தொலைக்காட்சிகளில் முதல் முறையாக, ஒரே நாளில், ஒரே நேரத்தில் இரண்டு தொலைக்காட்சிகளில் ஒரே படம் சுப்ரமணியபுரம் திரையிட்டார்கள்.. சன் டிவியிலும், ஜீதமிழிலும். மீடியாவில் உள்ள பல பேருக்கு எப்படி இப்படி நடக்கும் என்று கேள்வி எழுந்தது மட்டுமில்லாமல், பொது மக்களுக்கும் அந்த கேள்வி எழுந்தது. பரபரப்பாக ரொம்ப நாளாக விரைவில், விரைவில் என்று விளம்பரபடுத்தி வந்த் ஜீதமிழ் தொலைக்காட்சியினர் ஏன் திடீரென சன் அறிவிப்பை மறுக்கவில்லை..? அந்த படத்தை பெரிய விலை கொடுத்து தங்கள் டீவியில் ஒளிப்பரப்பும் உரிமையை பெற்றிருந்தார்கள்.. நாடோடிகள் படத்தை கூட அவர்கள் தான் வாங்கியிருக்கிறார்கள் என்று செய்தி.. இப்படியிருக்க இந்த படத்தினால்.. விழா நாளில் ஆவர்களின் சேனலின் டி.ஆர்.பி எகிற வைக்க இருந்த நல்ல வாய்ப்பை எப்படி பகிர்ந்து கொண்டார்கள்..? இதற்கு பின்னால் சன் டிவி, ஜிடிவிக்கும் இருக்கும் 15 வருட பிரச்சனையும் புகைகிறது. கலாநிதிமாறன் முதன் முதலில் சேனல் ஆரம்பிக்க ஐடியா வந்தவுடன், அப்போது இந்தியாவின் முதல் சாட்டிலைட் சானல், ஓரே சேனல் என்கிற புகழோடு இருந்த நேரத்தில் அதில் தினமும் ஒரு மூன்று மணிநேரம் தங்களது தமிழ் ஒ...

கலைஞரின் “நம்ம குடும்பம்”

Image
font-weight: bold;"> மதுரை ஆர்.சி.வியில் சன் குழும சேனலகள் நாளை முதல் ஓளிபரப்பு தாத்தாவும் பேரன்களூம் ஓன்று சேர்ந்துவிட்டார்கள்.. ஆனால் தாத்தாவும், அவரது மகனும், சொன்னதின் பேரில் அவர்களுக்கு போட்டியாய் தொழிலில் இறக்கி விடப்பட்டவர்கள் என்னாவார்கள்..? ராஜ்டிவி. இவர்களை நம்பி சன்னுக்கு எதிராய் தங்களுடய சேட்டிலைட்டில் உடனடியாய் இடம் கொடுத்து, இவர்களுக்கு வேண்டியதெல்லாம் செய்தனர். அவர்களுக்கு தேவையான நியூஸ் சேனலையும், லைவ் அப்லிங்கும், அவர்களுக்கு கிடைத்ததில், ஓரு வகையில் அவர்களுக்கு ஆதாயமே.. இனி அவர்களது நிலமை என்னவாகும்? கலைஞர் தொலைக்காட்சி சன் டிவியை எதிர்பதற்காகவே, மாறன் சகோதரர்களால் துரோகி பட்டம் கட்டி வெளியேற்றபட்ட, சரத் ரெட்டியின் தலைமையில் ஆரம்பிக்க பட்டது கலைஞர் டிவி.. ஆரம்பித்த ஓரு ஆண்டில் சன் டிவிக்கு அடுத்த இடத்தில் வர ஆரம்பித்து விட்டது, கலைஞரை தொடர்ந்து, இசையருவி, கலைஞர் செய்திகள் என்று சேனல்களை ஆரம்பித்துவிட்டார்கள். இவர்களின் கதி என்ன என்று தெரியவில்லை. சரத் ரெட்டியை தூக்கி விட்டு, சன் அத்தனை சேனல்களை தங்கள் வசம் வைத்து கொண்டால் கூட சன்னுக்கு போட்டியாய் ஓரு சேனலை அவர...

செய்திகளை முந்தி தருவது ...சன், ராஜ், ஜெயாவா..?

Image
ராத்திரி சுமார் 11 மணி இருக்கும் இணையத்தில் உலாவி கொண்டிருந்தபோதுதான் தெரிய வந்தது. மும்பையில் நடந்த தீவிரவாதிகளின் தாக்குதல் பற்றி ஓருவர் பதிவிட்டிருந்தார். அதை பார்த்ததும் உடனடியாய் நான் பழக்க தோஷ்த்தில் நம் தமிழ் செய்தி சேனல்களை பார்க்க ஆரம்பிக்க, சன்நியூஸ், ஜெயா, என்று எவ்ருமே தங்களுடய சேனல்களில் செய்திகளை அப்டேட் செய்யவில்லை. சாயங்காலம் தங்களது மெயின் சேனல்களில் மழை, புயல், தங்கள் சார்பு, ம்ற்றும் எதிர்ப்பு செய்திகள் என்று ஏற்கனவே காட்டபட்ட விஷயங்களையே திரும்ப, திரும்ப காட்டி கொண்டிருந்தார்கள். ஆனால் ஆங்கில, இந்தி செய்தி சேனல்கள் எல்லாமே பரபரப்பாய் சுடசுட செய்திகளை ‘நேரலை’யாய் தந்து கொண்டிருந்தார்கள். மும்பையின் சத்ரபதி சிவாஜி நிலையம், தாஜ் கொலாபா, ட்ரைடண்ட், காமா மருத்துவமனை என ஒரே சமயத்தில் தாக்குதல் தொடுத்திருக்கின்றனர், தீவிரவாதிகள். தாக்குதலின் தீவிரம் அதிர்ச்சியடைய வைத்தது. கிட்டத்தட்ட ஓரு போர் நடப்பதை போன்றிருக்கிறது. நம் செய்தி சேனல்கள் இதை பற்றி சற்றும் கவலைபடாமல் இருந்தது அதிர்ச்சியையும் தலைகுனிவையும் ஏற்படுத்தியது. ஏன் ஓரு 12 மணிவாக்கில் டிவி9 என்கிற் தெலுங்கு செய்தி சே...

தியேட்டர்களை வாங்கும் சூரிய கம்பெனி...

Image
காதலில் விழுந்தேன் திரைபடத்தை சில பல பேரின் அச்சுறுத்தல், மற்றும் மிரட்டலினால் மதுரையில் வெளிய்டமுடியாமல் தவித்த சூரிய கம்பெனி, அதற்கு ஓரு வழியை கண்டு பிடித்திருக்கிறார்கள். வேறு ஓருவரின் தியேட்டரில் தானே படத்தை ஓட விடமாட்டார்கள்.. நாமே தியேட்டர்க்ளை லீஸ் எடுத்து வைத்துவிட்டால்..என்று யோசிக்க ஆரம்பித்திருப்பதாக நம்பதகுந்த வட்டாரம் தெரிவிக்கிறது... ஏற்கனவே சில நூறு தியேட்டர்களை தன் வசம் லீஸில் வைத்துள்ள ஓரு ”எகிப்து” லோகோ கம்பெனியிடமிருந்து தியேட்டர்களை சப் லீஸ் எடுப்பதாக இருக்கிறதாம் சூரிய கம்பெனி.. ”எகிப்து” கம்பெனியின் தற்போதைய நிலைமை சற்று கவலைக்கிடமாய் உள்ளதால்..அவர்களுக்கும் இது ஓரு வரபிரசாதமாகவே இருக்கும் என்று நினக்கிறது.. சூரிய கம்பெனி இப்படி பல தியேட்ட்ர்களை தன் வசம் வைத்துதிருந்தால் அவர்களின் டிஸ்ட்ரிபூஸ்ன் நெட்வொர்கின் பலம் மேலும் கூடும் என்றே எதிர்பார்க்கிறது.. எதிர்காலத்தில் அவர்களின் படத்தை அவர்களே தங்கள்து தியேட்டர்களில் வெளியிடப்படுவதால்.. அவர்களை அச்சுறுத்துபவர்கள் ஏதேனும் எதிர் நடவடிக்கை எடுத்தால் அதையும் தன்னுடய, தொலைக்காட்சியில் காட்டிவிட்டுவிடலாம்.. என்ற பயம் அச்ச...

சன் v/s கலைஞர் டி.ஆர்.பி. தொடர்ச்சி....

டி.ஆர்.பி ரேடிங்கின் லிங்கை உங்களுக்கு அளிக்கிறேன். இது ஓரு உதாரணம் தான் இந்த மாதம் வரை இதே நிலைதான். இங்கே க்ளிக்கவும்

சன் V/S கலைஞர். டி.ஆர்.பி யில் முந்தியது யார்?

Image
கடந்த சில நாட்களாய் பதிவில் போட்ட ச்ர்வேயினபடி நெ.1 சேனல் எது என்ற சர்வேக்கு ஆதரவளித்த பதிவர்களூக்கு மிக்க நன்றி.முதலில் நமது டி.ஆர்.பியில் முதலில் வந்தது யார் என்பதை உங்க்ளுக்கு தெரிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறேன். 1 . சன் 2 . விஜய் 3 . கலைஞர் என்று முறையே முதல் மூன்று இடங்களை கைபபற்றியுள்ளது. இதில் முக்கியமாக சொல்ல வேண்டியது என்னவெண்றால் சன் டிவி -100 வோட்டுகளை பெற்று 40 சதவிகதம் எடுத்து மீண்டும் ஓரு முறை தமிழ் தொலைக்காட்சி வரலாற்றில் நெ.1 என்று தன்னை நிறுபிப்திறுக்கிறது என்றே சொல்ல வேண்டும். மொத்தம் வோட்டு போட்ட பதிவர்கள்-247 சன் டிவி 100 வோட்டுகளும், விஜய் டிவி -83 வோட்டுகளும், கலைஞர் டிவி -31 ஓட்டுக்களும், மக்கள் டிவி -23 ஓட்டுகளும் பெற்று இருக்கிறது. இது தான் ஓரிஜினலான டி.ஆர்.பி என்று எடுத்துக் கொள்ளலாமா? என்று நீங்கள் கேட்டால்.. இல்லை என்றே சொல்ல வேண்டும். ஏன் என்றால் டி.ஆர்.பி பற்றி என்ன என்பதை பதிவர்கள் அனைவருக்கும் ஏற்கனவே லக்கிலுக்கின் பதிவிலிருந்து புரிந்திருக்கும். அதனால் நான் விளக்க தேவையில்லை என்று நினைக்கிறேன். இப்போதைய நிலவரப்படி நிஜமான டி.ஆர்.பி ரேடிங்கில் முதலிடம் வகிப்...