Posts

Showing posts with the label C2H

தவிக்கும் தமிழ் சினிமா - சினிமா வியாபாரம்-2-8- பைரஸி, டிவிடி, C2H

திருட்டு டிவிடியினால் தான் இவ்வளவு பெரிய ப்ரச்சனை என்று சொல்வது ஒரளவுக்கு உண்மையென்றாலும், திருட்டு விசிடியிலோ, டிவிடியிலோ கூட வெளிவராத திரைப்படங்கள் இருக்கத்தான் செய்கிறது. நண்பர் ஒருவர் சிங்கப்பூரில் இருக்கிறார்.  அவர் ஒர் சினிமா ப்ரியர். கையில் கிடைக்கிற படங்கள் எல்லாவற்றையும் பார்க்கக்கூடியவர். அவர் தான் மேல் வரிகளை சொன்னவர். சில வருடங்களுக்கு முன் மோசர்பியர் நிறுவனம் பழைய வீடியோ உரிமங்கள் வாங்கியவர்கள் எல்லாரையும் ஒருங்கிணைத்து அவர்களது பழைய படங்களை எல்லாம் சேர்த்து முப்பது ரூபாய்க்கு மூன்று படம், ரெண்டு படம் என லீகல் ப்ரிண்டுகளை டிவிடிகளாய் வெளியிட்டார்கள். மொழி படத்தை படம் வெளியான சில மாதங்களில் 100 ரூபாய்க்கு கொண்டு வந்தார்கள். பெரியதாய் போகவில்லை என்றும் சில வருடங்களில் கொஞ்சம் கொஞ்சமாய் கம்பெனியை க்ளோஸ் செய்துவிட்டு போய்விட்டார்கள். எனக்கு தெரிந்து அதற்கு பல காரணங்கள் சொல்லப்படுகிறது. அதில் ஒன்று அவர்கள் சரியான நெட்வொர்க் அமைக்கவில்லை என்பதும் ஒன்று.  பின்பு நிறுவனத்தில் ப்ரச்சனை ஏற்பட்டதால் டிவிடி தயாரிப்பையும் நிறுத்திவிட்டதாகவும் சொன்னார்கள். என்னைப் பொறுத்தவரை ...

தவிக்கும் தமிழ் சினிமா - சினிமா வியாபாரம்-2- 7-பைரஸியும், சேரனின் C2H

சமீப காலமாய் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்களில் ஆரம்பித்து, அடிப்படை வேலை செய்பவர்கள் வரை புலம்புவது சினிமா நிலைம ரொம்ப மோசமாயிருக்கு என்பதுதான். ஏற்கனவே சின்னப் படங்களின் வெற்றி, மற்றும் வியாபாரம் பற்றி பேசிக் கொண்டிருக்கும் வேளையில், இயக்குனர் சேரன் அவர்களின் C2H எனும் விளம்பரம் வந்தது. அவ்விளம்பரம் பார்த்து  நேற்று காமராஜ் அரங்கில் கூடிய கூட்டத்தில் முக்கியமானவர்கள் எல்லோருமே சின்னப் படம் தயாரிப்பவர்கள், தயாரித்துவிட்டு வெளியிட முடியாமல் காத்திருப்பவர்கள். அட எவ்வளவு பெரிய இயக்குனர், தயாரிப்பாளர் ஏதோ ஒரு ஐடியாவோடத்தான் ஆரம்பிச்சிருப்பாரு.. என்ற நம்பிக்கையில் கூடியிருந்த கூட்டம்.  கூடியிருந்த கூட்டத்திற்கு பதில் கிடைத்ததா? என்று கட்டுரையின் முடிவில் பார்ப்போம். கமல்ஹாசன் ஆரம்பித்து வைத்து அப்போதைக்கு கைவிடப்பட்ட இந்த தமிழ் சினிமா எனும் யானைக்கு மீண்டும் மணிக்கு கட்ட விழைந்த தைரியத்திற்காக சேரனுக்கு பாராட்டும் ஆதரவும்.