புத்தக கண்காட்சி நாள்-2
புத்தக கண்காட்சி நாள் -2 வழக்கமாய் முதல் நாளே போய்விடுவேன். இம்முறை ரெண்டாம் நாள் சனிக்கிழமைத்தான் போக முடிந்தது. புதிய இடம். ஆனால் என் வீட்டிற்கு மிக அருகில் என்பதால் சாவகாசமாய் போனேன். மதியமே கே.ஆர்.பி அவரின் நண்பர்களோடு அங்கே போய்விட்டார். நான் ஐந்து மணிக்கு. Y.M.C.A நுழைவாயிலேயே வண்டியை பார்க்கிங் வைத்து விட ஏற்பாடு செய்திருந்தார்கள். வழக்கம் போல பார்க்கிங் கொள்ளை பத்து ரூபாய். ஜிம்னாஸ்டிக் செய்து கொண்டிருந்தவர்களை வேடிக்கைப் பார்க்க ஒரு கூட்டம் நின்றிருந்தது. ரெண்டொரு பேர் கை தட்டக்கூட செய்தார்கள். கிட்டத்தட்ட நெடும்தூரம் நடந்து சென்று கண்காட்சி இடத்தை அடைய வேண்டியிருந்தது. வழக்கமாய் கண்காட்சியின் வாசலில் பெரிய அளவில் மைதானம் இருக்கும். ஆனால் இம்முறை திடல் கண்காட்சியின் இடது புறத்தில் இருப்பதால் வாசல் கொஞ்சம் அடைச்சலாகவே இருக்கிறது. மிக அருகில் சாப்பிட வாங்க கேண்டீன் வேறு. ஐந்து ரூபாய் அனுமதி சீட்டு வாங்கிக் கொண்டு உள் நுழைந்தேன். முதல் நம்பர் கடையிலிருந்து ஆரம்பித்து வேடியப்பனின் 43-44 வரும் போது கே.ஆர்.பியும், சிவக்குமாரும் இருந்தார்கள். கே.ஆர்.பியுடன் ஒ...