ஏர்போட்டில் “கார்” பார்கிங் பிரச்சனையாமே..?
ஏர்போர்ட் கார் பார்கிங் எல்லாம் கடந்த மாதத்திலிருந்து நிரம்பி போய் புதிய கார்களை பார்க் செய்ய முடியாதபடி பிரச்சனை எழுந்துள்ளது. கார்களின் பெருக்கம் காரணமாய் என்று நீங்கள் நினைத்தால், அதுவல்ல காரணம். உலகம் முழுவதும் ஏற்பட்டுள்ள பொருளாதார பின்னடைவின் காரணமாய் வேலையில்லாமல் போவதால் வந்த பிரச்சனை. ஆம்.. துபாய் ஏர்போர்டில் கடந்த மாதம் கார் பார்கிங் பூராவும் நிரம்பி போயிருந்தது. என்ன ஏது என்று புரியாமல் ஏர்போர்ட் நிர்வாகம் குழம்பிப் போய் விசாரணையில் இறங்கி, அவர்களின் சர்வைலன்ஸ் கேமராவில் பார்த்த போது ஒரு மாதத்துக்கு மேலாக எடுக்க படாமல் பல கார்கள் அங்கே பார்க் செய்யபட்டிருப்பதை கண்டுபிடித்துள்ளது. என்ன ஏது என்று பார்த்த போது.. கார்களின் சாவியை காரிலேயே விட்டு, விட்டு போயிருப்பது தெரியவந்தது. உடனடியாக யாருடய கார் என்று கண்டுபிடிக்க முயற்சித்த போதுதான் தெரிந்திருக்கிறது அந்த கார்களின் ஓனர்கள் எல்லாம், தீடீரென்று வேலை பறிபோனவர்களுடயது என்பது. துபாயில் ரொம்ப காலமாய் வேலை பார்த்து வந்திருந்த பல சிவில் கன்ஸ்டிரக்ஷன் இன்ஜினியர்கள் திரும்பி அனுப்பட்டிருக்கிறார்கள். அதில் பல பேர் சொந்தமாய் லேட்டஸ்ட்...