Posts

Showing posts with the label காலில் விழுவது..

கலைஞரும்.. காலில் விழுவதும்..

Image
நேற்று ராஜ் டிவியின் செய்திகளை பார்த்து கொண்டிருந்தேன்..தமிழக் முதலமைச்சரிடம் இலங்கை தமிழர்களுக்கான நிதி காசோலைகளை பல பேர் கொடுப்பதை வரிசையாய் காட்டி கொண்டிருந்தார்கள்.. அதில் மனதை நெருடிய விஷயம் ஓன்று இருந்தது.. அது என்னவென்றால் காசோலையை கொடுத்த பின்பு வரிசையாய் வந்தவர்கள் எல்லோரும் அவ்ர் காலில் விழுந்து ஆசி பெற்று சென்றனர்..கலைஞர் அவர்களூம் அதை பற்றி எந்தவிதமான ரியாக்‌ஷனும் காட்டாமல் இருந்தது ஓரு உறுத்தலாகவே இருந்தது.. ஒரு காலகட்டத்தில் ஜெயலலிதாவின் காலில் விழும் கலாசாரத்தை பலமாய் எதிர்தவர் நம் தலைவர்..மற்றவர் காலில் விழுவது தனிமனித தன்மானத்துக்கு இழுக்கு என்று சொன்னவர்.. அவர்.. அப்படிபட்ட அவர் இதை தடுக்காதது ஏன்? ஓரு வேளை அவர் சொல்லியும், கேட்காமல் அன்பு மிகுதியில் பலர் அவரை முதல் முறையாகவோ.. பல நாட்களுக்கு பிறகாகவோ. சந்தித்த பரபரப்பில் அப்படி செய்திருக்கலாம்.. கலைஞரும் சொல்லி அலுத்திருக்கலாம்.. ஆனால் ராஜ்டிவி அதை ஓளிபரப்பாமல் தவிர்திருக்கலாம் இல்லையா? எல்லோரும் கலைஞரை கூட இருந்தே கவிழ்பதற்கே இருக்காங்க போலருக்கு..