Thottal Thodarum

Oct 31, 2008

கலைஞரும்.. காலில் விழுவதும்..



நேற்று ராஜ் டிவியின் செய்திகளை பார்த்து கொண்டிருந்தேன்..தமிழக் முதலமைச்சரிடம் இலங்கை தமிழர்களுக்கான நிதி காசோலைகளை பல பேர் கொடுப்பதை வரிசையாய் காட்டி கொண்டிருந்தார்கள்..

அதில் மனதை நெருடிய விஷயம் ஓன்று இருந்தது.. அது என்னவென்றால் காசோலையை கொடுத்த பின்பு வரிசையாய் வந்தவர்கள் எல்லோரும் அவ்ர் காலில் விழுந்து ஆசி பெற்று சென்றனர்..கலைஞர் அவர்களூம் அதை பற்றி எந்தவிதமான ரியாக்‌ஷனும் காட்டாமல் இருந்தது ஓரு உறுத்தலாகவே இருந்தது..

ஒரு காலகட்டத்தில் ஜெயலலிதாவின் காலில் விழும் கலாசாரத்தை பலமாய் எதிர்தவர் நம் தலைவர்..மற்றவர் காலில் விழுவது தனிமனித தன்மானத்துக்கு இழுக்கு என்று சொன்னவர்.. அவர்.. அப்படிபட்ட அவர் இதை தடுக்காதது ஏன்? ஓரு வேளை அவர் சொல்லியும், கேட்காமல் அன்பு மிகுதியில் பலர் அவரை முதல் முறையாகவோ.. பல நாட்களுக்கு பிறகாகவோ. சந்தித்த பரபரப்பில் அப்படி செய்திருக்கலாம்.. கலைஞரும் சொல்லி அலுத்திருக்கலாம்..


ஆனால் ராஜ்டிவி அதை ஓளிபரப்பாமல் தவிர்திருக்கலாம் இல்லையா? எல்லோரும் கலைஞரை கூட இருந்தே கவிழ்பதற்கே இருக்காங்க போலருக்கு..
Post a Comment

12 comments:

Anonymous said...

//மற்றவர் காலில் விழுவது தனிமனித தன்மானத்துக்கு இழுக்கு...//

உங்கள் காலில் யாரேனும் விழுந்தால் அவர்களின் தன்மானத்துக்கு இழுக்கு உண்டாகும்.

என் காலில் யாரேனும் விழுந்தால் அவர்களின் தன்மானத்துக்கு மேன்மேலும் பெருமையே சேரும்.

siva gnanamji(#18100882083107547329) said...

காலில் விழுவதைக் கடுமையாகக்
கண்டித்தவர் பெரியார் ஈ.வெ.ரா.
அவர் வழிவந்த முதல்வர் இதை எப்படி அனுமதிப்பார்?

நம்ம ஆளுங்களின் அடிமைப்புத்தி....

அத்திரி said...

கலைஞரை கவிழ்ப்பதற்கு ஆற்காட்டார் ஒருவரே போதும்

அகில் said...

It is funny to see Hindu Ram has been awarded several awards by SL govt.

It seems obvious that he is in the "pay roll" of SL govt for his anti-tamil "Preaching" using his newspaper! What a traitor!

He should feel ashamed of getting such awards if he is a Tamil esp when Tamils are suffering.

Apparently, he sounds like a Hindutava rather than a Tamil. May be that is why he runs a "hindhu" newspaper!

He is a filthy RAT!

akil
akilpreacher.blogspot.com

TAMIZHAN said...

I AM NOT CONDONING PEOPLE PROSTRATE BEFORE KALAIGNAR AND GT BLESING. THANTHAI PERIAR DISAPPROVED THIS SORT OF WORSHIP ALL HIS LIFE AND STILL PEOPLE FELL ON HIS FEET. BUT COMPARING JEYALALITHA TO KALAIGNAR IS LIKE COMPARING TASMAC LIQUOR STORE TO TAJMAHAL!!

Cable சங்கர் said...

//என் காலில் யாரேனும் விழுந்தால் அவர்களின் தன்மானத்துக்கு மேன்மேலும் பெருமையே சேரும்.//

???????:(:(:(

Cable சங்கர் said...

//நம்ம ஆளுங்களின் அடிமைப்புத்தி....//
வழிமொழிகிறேன்..

Cable சங்கர் said...

//கலைஞரை கவிழ்ப்பதற்கு ஆற்காட்டார் ஒருவரே போதும்//

அது என்னவோ உண்மைதான்

Anonymous said...

இந்த விழாவில் இயக்குனர் பாரதிராஜா ஏற்புரையாற்றும்போது கூறியதாவது:-

பாமர தமிழன் காமராஜருக்கு பிறகு தமிழ் இனத்தை, மொழியை, தமிழ் மக்களை காப்பாற்றும் ஒரே தலைவராக கலைஞர் கருணாநிதி இருக்கிறார். நாட்டின் மிகப்பெரிய பொக்கிஷம் இவர். எனது சிறிய வயதில் காங்கிரசில் இருந்தபோது கருணாநிதியை விமர்சனம் செய்திருக்கிறேன். காமராஜருக்குப் பிறகு கலைஞரைத்தான் நான் பக்தியோடு வணங்குகிறேன்.

அம்மா, அப்பாவை தவிர யார் காலிலும் விழுவதற்கு எனக்கு பிடிக்காது. அவர்களுக்கு பிறகு, ஒரேயொரு முறை ஆர்வமிகுதியால் எம்.ஜி.ஆர்.காலில் விழுந்தேன். இப்போது முத்தமிழ் அறிஞர் கலைஞர் காலில் விழுந்து வணங்கியுள்ளேன்.
இவ்வாறு பாரதிராஜா கூறினார்.

http://www.viparam.com/index.php?news=5110

மாநகராட்சியை துவக்கி வைத்ததும் மேயர் கஸ்தூரி தங்கத்திற்கு அங்கி, 5 கிலோ எடை கொண்ட வெள்ளி செங்கோல், 111 பவுன் தங்க செயின் ஆகியவற்றை முதல்வர் கருணாநிதி வழங்கினார். அப்போது மேயர், முதல்வர் காலில் விழுந்து வணங்கினார்.

http://www.dinamalar.com/Arasiyalnewsdetail.asp?News_id=2960&cls=row4&ncat=DI

ஸ்ரீரங்கா' என்று படத்திற்கு தலைப்பு வைத்து, ரங்கநாதன் மீது நம்பிக்கை இல்லாத கலைஞர் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கி படத்தை தொடங்கியிருக்கிறார்கள் மம்மியும், மகனும். படத்தின் கதை... அதுதான் விசேஷம்!

http://tamil.cinesouth.com/masala/hotnews/new/29072006-2.shtml

ஆட்காட்டி said...

புத்தி எங்க போகும்.

Cable சங்கர் said...

//புத்தி எங்க போகும்.//

அது சரி..

Cable சங்கர் said...

//பாமர தமிழன் காமராஜருக்கு பிறகு தமிழ் இனத்தை, மொழியை, தமிழ் மக்களை காப்பாற்றும் ஒரே தலைவராக கலைஞர் கருணாநிதி இருக்கிறார். நாட்டின் மிகப்பெரிய பொக்கிஷம் இவர். எனது சிறிய வயதில் காங்கிரசில் இருந்தபோது கருணாநிதியை விமர்சனம் செய்திருக்கிறேன். காமராஜருக்குப் பிறகு கலைஞரைத்தான் நான் பக்தியோடு வணங்குகிறேன்.

அம்மா, அப்பாவை தவிர யார் காலிலும் விழுவதற்கு எனக்கு பிடிக்காது. அவர்களுக்கு பிறகு, ஒரேயொரு முறை ஆர்வமிகுதியால் எம்.ஜி.ஆர்.காலில் விழுந்தேன். இப்போது முத்தமிழ் அறிஞர் கலைஞர் காலில் விழுந்து வணங்கியுள்ளேன்.
இவ்வாறு பாரதிராஜா கூறினார்.
//

அவ்வப்போது பல்டி அடித்தே காலில் விழுவதை ஓரு வேலையாய் வைத்திருக்கிறார் போலருக்கு பாரதிராஜா.. நம்பி சொல்றத பாத்தா.. பல வாட்டி பலரும் “ காதலில்விழுந்தேன்” மாதிரி “காலில் விழுந்தேன்” போலருக்கு..