Thottal Thodarum

Oct 3, 2008

எ.வ.த.இ.ம.படம் - ஜானி கத்தார்.(Johny Gaddar)


ஜேம்ஸ் ஹாட்லி சேஸ் நாவல்களை படித்திருக்கிறீர்களா? ஹிட்காக் படங்களை பார்த்து பேயறைந்தார் போல் இருந்திருக்கிறீர்களா? விரல் நகங்களை கடித்தபடியே ஓரு முழு படத்தையும் டென்ஷனுடன் பார்திருக்கிறீர்களா? அப்படியில்லை என்றால் இதோ இங்கே ஓரு “ஜானி கத்தார்”

கத்தார் என்றால் “துரோகி” என்று அர்த்தம் என நினக்கிறேன்..( எதோ எனக்கு தெரிந்த இந்தியில்) ரொம்ப சிம்பிளான கதை..

கதையின் நாயகன் விக்ரம். அவனுக்கு வெகு விரைவில் பணக்காரனாவதற்கு ஆசை. அவனுக்கு காதலி வேறு இருக்கிறாள். அவள் வேறு யாருமில்லை விக்ரமுடய பார்ட்னர் ஷர்துலின் மனைவி தான். ஷர்துல் ஓரு டிஸ்கோ பார் நடத்தி வருபவன்.

இவர்களின் இன்னொரு பார்ட்னர் ப்ரகாஷ் சூதாட்ட கிளப் வைத்து நடத்துபவன்.அவன் ம்னைவி ஓரு பூயூட்டி பார்லர் வைத்து நடத்துகிறாள். இன்னொரு பார்ட்னர் ஷிவா.. இளைஞன், பலசாலி, பாடிபில்டர்.

இவர்களுக்கெல்லாம் தலைவன் சேஷாத்திரி. வயதானவர், இறந்து போன மனைவியின் குரலை தினம் தினம், டேப் ரிக்காடரில் போட்டு கேட்டபடி இருப்பவர்.. புத்திசாலி.. இம்மாதிரியான கெட்ட காரியங்களில் அனுபவசாலி.. மற்றவர்கள் இவரை பார்த்தால் மரியாதையும், ப்யமும் உண்டு.

ஷேசாத்திரியின் நண்பன் போலீஸ்காரர் கல்யாண் பங்களூரில் ஓரு போதை மருந்து கடத்துபவனிடமிருந்து ஓரு பெரிய பாக்கெட் போதை வஸ்துவை ஓதுக்கி அவனை கொன்று விடுகிறார். அந்த வஸ்துவை 2.5 கோடி கொடுத்து வாங்கி கொள்ள சொல்கிறார்.வெளியே விற்றால் வாங்கியதை விட மூண்று மடங்கு போகும் என்பதால் சேஷாத்திரி தலைமையில் அதை வாங்கிவிட முடிவு செய்து பணத்தை புரட்டுகிறார்கள்.. அந்த பணத்தை எடுத்துக் கொண்டு டிரைனில் பூனாவிலிருந்து பங்களூருக்கு போய் கொடுத்துவிட்டு அதே டிரைனில் போதை வஸ்துவை எடுத்து வர வேண்டியது, விற்க வேண்டியது..

நம் நாயகன் விக்ரமுக்கு இப்போது பணம் முக்கியமாய் தேவை.. முதல் காரணம் காதலி.. ஷர்துலின் மனைவி.. அவனுக்கு அவளும், அவளுக்கு அவனும் தேவை.. காரணம் காதல்.. எனவே இந்த ப்ளானை டபுள் க்ராஸ் செய்கிறான்.. அதற்கு அப்புறம் தொடர்ச்சியாய் நடக்கும் நிகழ்வுகளினால் ஓவ்வொருவராக கொல்ல வேண்டி வருகிறது. இதற்கு மேல் சொன்னால் அவ்வளவு தான் சுவாரஸ்யம் போய்விடும்..உடனே எங்காவது டிவிடி கடைகளில் தேடியாவது பாருங்கள்.

முதல் காட்சியில் ஓரு உருவம் சுடப்பட்டு விழுகிறது.. அதிலிருந்து மெதுவாக, கொஞ்சம், கொஞ்சமாய் சூடு பிடிக்கிறது.. ஓரு கட்டத்திற்கு அப்புறம் நமக்கு தெரியாமலேயே ஆழமாய் படத்துள் மூழ்க தொடங்கி விடுகிறோம்.. ஹீரோ நீல் முகேஷ்..புதுமுகமாம் சொன்னால் தான் தெரிகிறது..

ஷேசாத்திரியாக தர்மேந்திரா. சமீபகாலத்தில் இவரின் சிறந்த நடிப்பு.. அதிலும் சாகும்போது தன் மனைவியின் குரலை கேட்ட படியே உயிரை விடுவது ..

ஷாதுலாக ஜாகிரி ஹுசேன்.. இந்தி சினிமாவில் குறிபிடதக்க கேரக்டர் ஆர்டிஸ்ட்..செய்வது 2ஆம் நம்பர் தொழிலானாலும். மனைவியிடம் நேர்மையாய் இருப்பவன்.

ப்ரகாஷாக வினய் பதக்.. இவரை பற்றி சொல்ல வேண்டியதேயில்லை..மனுசம் சும்மா பின்னி எடுக்கிறார்.. சீட்டு கிளப்பில் அவர் சீட்டாடும் ஸ்டைல் இருக்கிறதே..

ரவியாக் சாரி பேர் மறந்து போய்விட்டது அவர் ஹிந்தி சி.ஐ.டி தொடரில் நடத்தவர்.
அவருக்கும், விக்ரமுக்கும் டிரைனில் நடக்கும் சண்டை உண்மையிலேயே சீட்டின் நுனிக்கு வ்ந்துவிடுவீர்கள். அதிலும் அந்த டிரையின் செட் என்று சொன்னால் நம்பவே முடியாது.

கல்யாணாக வரும் கோவிந்த் நம்டே.. இப்படி படத்தில் நடித்தவர்கள் பற்றி பேசிக் கொண்டே போகலாம்..

இயக்குனர் ஸ்ரீராம் ராகவன் ஏற்கனவே ஓரு அருமையான த்ரில்லரை கொடுத்தவர்.. (ஏக் ஹசீனா..தி) இது இரண்டாவது படம் .எனக்கு தெரிந்து நான் பார்த்த வரையில் இந்திய மொழிகளில் இந்த அளவிற்கு மிக அருமையான ஓரு த்ரில்லரை பார்ததே கிடையாது.
பிண்ணனி இசையாகட்டும் ,டயலாக்காகட்டும் எதிலும் ஓரு நிதானமான அழுத்தத்துடன் வெளிவரும் அந்த ஸ்டைல் குவண்டின் டொரண்டினோ வின் ஸ்டைல்..

ஓரு நல்ல த்ரில்லரை மிஸ் செய்ய விரும்பாதவர்க்ள்.. உடனே பார்க்க வேண்டிய படம்..
Post a Comment

2 comments:

யூர்கன் க்ருகியர் said...

அருமை மற்றும் சுவையான விமர்சனம்.
டிவிடி கிடைக்குமா என்று பார்க்கிறேன்!
நன்றி.

Cable சங்கர் said...

//அருமை மற்றும் சுவையான விமர்சனம்.
டிவிடி கிடைக்குமா என்று பார்க்கிறேன்!
நன்றி.//

நன்றி ஜூர்கேன்... கண்டிப்பாக லேண்ட்மார்க் போன்ற கடைகளில் கிடைக்கிறது.