Thottal Thodarum

Oct 1, 2008

அதிஷா, லக்கிலுக், உண்மைதமிழன்,இட்லிவடை,ஜூர்கேன்,பரிசல்,செந்தழல்ரவி........

வலையுலக பெரியவர்களுக்கெல்லாம் என் மனமார்ந்த நன்றி, தன்யவாத், நன்னி.. சாலசந்தோசம்.. என்ன இவ்வளவு சந்தோஷமின்னா நான் 2006லிருந்து பதிவுகள் எழுத ஆரம்பித்திருந்தாலும், அவ்வப்போதுதான் எழுதுவேன்.. அது என்னவோ தெரியல,, என்ன மாயமோ தெரியல..கடந்த ரண்டு மாசமா தொடர்ந்து எழுதிட்டு வரேன்.

கடந்த செப்டம்பர் மாதம் மட்டும் என்னுடய பதிவுக்கு கிட்டத்தட்ட 12ஆயிரத்து சில்லறை பேர் வந்து போயிருக்காங்கன்னு தெரிஞ்சதும் புல்லரிச்சு போச்சு. இது எல்லாத்துக்கும் காரணம் சக பதிவாளர்களாகிய நீங்கள் தான்.முக்கியமா என்னுடய பதிவுகளை தொடர்ந்து வாசிச்சு கருத்துகளை எழுதும்,தமிழ்நெஞ்சம், அதிஷா, ஹரி, ஜூர்கேன்,அருப்புக்கோட்டை பாஸ்கர்,தமிழ்நெஞ்சம்,தமிழ்பறவை தமிழ்சினிமா, சிம்பா, ராமன், ஆதிரை ஜமால். ஆகியோருக்கு என் நெஞ்சார்ந்த நன்றிய தெரிவிச்சிக்கிறேன்.

அதுமட்டுமில்லாது என்னை எழுத தூண்டிய பதிவுகளை எழுதிய, அதிஷா, ஷேர்ஹண்டர், உண்மைதமிழன், லக்கிலுக்,இட்லிவடை, பரிசல்காரர்,செந்தழல் ரவி போன்ற சிறந்த பதிவர்களுக்கும் என் நன்றியை தெரிவிச்சிக்கிறேன். இதுல பல பேர் விட்டு போயிருக்கலாம் அவங்கெல்லாம் என்னை திட்டக்கூடாது.. 10000த்தை தாண்டுன சந்தோஷத்தில கொஞ்சம் உணர்ச்சிவசப்பட்டுட்டேன் (தெரியாம வந்துட்டோம்டான்னு நீங்க சொல்றது புரியுது..)

மேலும் என்னை ஊக்கப்படுத்தி என்னை மென்மேலும் வளர செய்யுமாறு உங்களை அன்போடு அழைக்கிறேன். ( மனசுக்குள்ளே.. எல்லோரும் பல்ல நற நறன்னு கடிக்கிறது தெரியுது.. இவன் என்ன எழுதிட்டான்னு இப்படி புலம்புறான்னு..எப்படி என் ஐடியா இவங்க பேரை போட்டு ஹிட் அடிச்சிடலாம்னுதான்..ஹி.ஹி..ஹி...) இருந்தாலும் நன்றி..நன்றி

Post a Comment

32 comments:

மணிகண்டன் said...

:)-

Cable சங்கர் said...

:)- நன்றி மணிகண்டன் நிறைய பேர் பெயர் விட்டுடிச்சி.. நன்றி உங்கள் வ்ருகைக்கும்,கருத்துக்கும்.

மணிகண்டன் said...

:)-

Anonymous said...

முடிவா என்ன சொல்ல வர்ற

Cable சங்கர் said...

//முடிவா என்ன சொல்ல வர்ற//

என்னண்ணா கேள்வியே பயமுறுத்துது.. ஓண்ணுமில்லிங்கண்ணா நன்றின்னு சொல்லவர்றேன்.அவ்வளவுதான்

லக்கிலுக் said...

உங்களை புகழ்ந்து ஏதாவது சொன்னால் அது சூரியனுக்கே டார்ச்லைட் அடித்ததாகி விடும். 2006ல் இருந்து உங்களை அறிவேன்.

Cable சங்கர் said...

//உங்களை புகழ்ந்து ஏதாவது சொன்னால் அது சூரியனுக்கே டார்ச்லைட் அடித்ததாகி விடும். 2006ல் இருந்து உங்களை அறிவேன்.//

சூரியனுக்கே டார்ச்...????? நன்றி லக்கி

யூர்கன் க்ருகியர் said...

நாங்கல்லாம் சந்தோசமா இருக்கனுமினா நீங்க எழுதிதான் ஆகணும்.!!
உங்கள் எழுத்துக்களின் ரசிகன் என்ற முறையில் மென்மேலும் வளர உங்களுக்கு என் வாழ்த்துக்கள்.

Tech Shankar said...

Congrats Dear Shankar Narayann

My Name is also the same.

Athisha said...

அண்ணாச்சி வாழ்த்துக்கள் ..

உங்கள மாதிரி பெரியவங்க வளர்ச்சில அடியேனோட பங்கும் இருக்குங்கறத நினைச்சு நான்தான் பெருமைப்படனும்

நீங்க ஒரு கலங்கர்ரை விளக்கம் ,... நாங்கல்லாம் பெட்ரமாக்ஸ் லைட்டு

நவநீதன் said...

தலைப்பு வைக்கிறதுல உங்கள அடிச்சுக்க முடியாது (பதிவு எழுதுரதுலையும் தான்)....
ஹி.. ஹி... (நன்றி: குமுதம்)

Subash said...

:)

Cable சங்கர் said...

//நாங்கல்லாம் சந்தோசமா இருக்கனுமினா நீங்க எழுதிதான் ஆகணும்.!!
உங்கள் எழுத்துக்களின் ரசிகன் என்ற முறையில் மென்மேலும் வளர உங்களுக்கு என் வாழ்த்துக்கள்.//

ஆனாலும் ரொம்பத்தான் புகழறீங்க ஜூர்கேன்.. நன்றி நன்றி..

Cable சங்கர் said...

//Congrats Dear Shankar Narayann

My Name is also the same.//

அப்படியா..நல்லது மிக்க நன்றி உங்கள் வருகைக்கும், கருத்துக்கும்

Cable சங்கர் said...

//Let's come together on http://www.tamiljunction.com to bring all the Tamil souls unite on one platform and find Tamil friends worldwide to share our thoughts and create a common bond.

Let's also show the Mightiness of Tamils by coming together on http://www.tamiljunction.com//

நன்றி தமிழ் ஜங்ஷன்.. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும்

Cable சங்கர் said...

//அண்ணாச்சி வாழ்த்துக்கள் ..

உங்கள மாதிரி பெரியவங்க வளர்ச்சில அடியேனோட பங்கும் இருக்குங்கறத நினைச்சு நான்தான் பெருமைப்படனும்

நீங்க ஒரு கலங்கர்ரை விளக்கம் ,... நாங்கல்லாம் பெட்ரமாக்ஸ் லைட்டு//

நன்றி தல.. ஆனாலும் உங்களூக்கு ரொம்ப தன்னடக்கம் தான்..

Cable சங்கர் said...

//தலைப்பு வைக்கிறதுல உங்கள அடிச்சுக்க முடியாது (பதிவு எழுதுரதுலையும் தான்)....
ஹி.. ஹி... (நன்றி: குமுதம்)//

எப்படியாச்சும் உங்களையெல்லாம் உள்ளே இழுக்கணுமில்ல.. நன்ரி நவநீதன் உங்கள் கருத்துக்கும் வருகைக்கும்

Cable சங்கர் said...

//:)//

நன்றி சுபாஷ். :)-:)-:)-

ரவி said...

வாழ்த்துக்கள் கேபிளாரே !!

உண்மைத்தமிழன் said...

இன்னமும் பல்லாயிரம் படிக்கப்பட்டு, பல லட்சம் பார்க்கப்படட்டும்..

வாழ்த்துக்கள் கேபிள் ஸார்..

பரிசல்காரன் said...

இப்போதான் பார்த்தேன் சங்கர்ஜி! நேத்துகூட வேறொரு பிரச்சினையைப் பத்தி பேசிகிடிருக்கறப்ப, “நான் சில மனச் சங்கடங்களை சங்கருக்கு கொடுத்திருந்தாலும் இப்போ நானும் சங்கருமே நல்ல ஃப்ரெண்ட்ஸாகீட்டோம்”ன்னு சொன்னேன்.

நீங்க ஒரு சிறந்த மனிதர்ங்கறதை ஒரு விஷயத்துல நான் உணர்ந்திருக்கேன்.

நீங்க 12000 தொட்டதெல்லாம் ஜூஜூபி. இன்னும் தொடும் உயரம் அதிகம். தொடும் நேரம் குறைவு.

ஆல் தி பெஸ்ட் தலைவா!

(சிறந்த பதிவர்-ன்னு என் பேரைப் போட்டதுக்கு சென்னை வரும்போது கவனிக்கறேன்!)

Cable சங்கர் said...

//வாழ்த்துக்கள் கேபிளாரே !!//

நன்றி ரவி சார்...

Cable சங்கர் said...

//இன்னமும் பல்லாயிரம் படிக்கப்பட்டு, பல லட்சம் பார்க்கப்படட்டும்..//

நன்றி சார்..

Cable சங்கர் said...

//சிறந்த பதிவர்-ன்னு என் பேரைப் போட்டதுக்கு சென்னை வரும்போது கவனிக்கறேன்!)//

கவனிக்கறேன்னா எப்படி? (தேவர்மகன்ல சங்கிலிமுருகன் கமல்கிட்ட சொல்வாரே அந்த மாடுலேஷனில்) நன்றி தலைவரே..

ers said...

ரம்சான் கொண்டாட்டத்தினால முன்னதாக வரமுடியவில்லை. வளர்ச்சிக்கு வாழ்த்துக்கள்.

Sanjai Gandhi said...

வாழ்த்துக்கள் சங்கர்.. :)

Cable சங்கர் said...

//ரம்சான் கொண்டாட்டத்தினால முன்னதாக வரமுடியவில்லை. வளர்ச்சிக்கு வாழ்த்துக்கள்.//

ரம்ஜான் வாழ்த்துக்கள் தமிழ் சினிமா.. நன்றிகள் பல உங்கள் கருத்துக்கும், வருகைக்கும்

Cable சங்கர் said...

//வாழ்த்துக்கள் சங்கர்.. :)//

நன்றி பொடியன்..மிக்க நன்றி

thamizhparavai said...

சங்கர் சாருக்கு வாழ்த்துக்கள்....

thamizhparavai said...

தமிழுக்கும்,பறவைக்கும் நடுவில ஒரு 'ப்' போட்டிருங்க அண்ணாச்சி...
'ப்'அ எப்போ போட்டாலும் பரவாயில்லை. எ'ப்'பவுமே போட்டாலும் ரொம்ப நல்லது...

Cable சங்கர் said...

//தமிழுக்கும்,பறவைக்கும் நடுவில ஒரு 'ப்' போட்டிருங்க அண்ணாச்சி...
'ப்'அ எப்போ போட்டாலும் பரவாயில்லை. எ'ப்'பவுமே போட்டாலும் ரொம்ப நல்லது...//

கண்டிப்பா தமிழ்ப்பறவை.. என்ன “ப்” அ போட்டுட்டனா.. நன்றி உங்கள் வருகைக்கும், கருத்துக்கும்

Raman Kutty said...

congrats, keep going!!