Thottal Thodarum

Oct 9, 2008

சட்டம் உன் கையில் - போலீஸ்.. போலீஸ்


பொது இடத்தில் புகை பிடிக்க தடை சட்டத்தை புகை பிடிப்பவர்களூம் முணுமுணுத்துக் கொண்டே ஆதரித்தாலும், எல்லோரும் பயப்படுவது அதை நடைமுறை படுத்தும் போது நடக்க போகும் அராஜகத்தை நினைத்துதான். ஏன் என்றால் நம் நாட்டில் குற்றம் நடப்பதை தடுப்பதற்காக காவல் துறை இல்லாமல், அது நடக்க விட்டுவிட்டு அப்புறமாய் வந்து தண்டிப்பது அவர்க்ளது வாடிக்கை..

உதாரணமாய் ஓருவன் ஃபிரி லெப்ட் இல்லாத இடத்தில் திரும்ப முயற்சிக்கும் போதே அந்த டிராபிக் கான்ஸ்டபிள் அந்த தெருவின் முனையிலேயே நின்று அவனை தடுத்து அறிவுறுத்த வேண்டியதுதான் அவர் கடமை. ஆனால் அவர் என்ன செய்கிறார்.. ரோட்டின் உள்பக்கத்தில் ஓளிந்து நின்று கொண்டு அவனை மடக்கி “டேக் த 25” வாங்கி அவனை திரும்ப அனுப்பாமல் தவறான பாதையிலேயே அனுப்பி வைக்கிறார்.

அதே போல் அவர்கள் போடும் சட்டங்களூம் அவ்வளவு ஈஸியாக மக்களுக்கு புரியும் படி இருக்காது. உதாரணமாய் புகை பிடிக்கும் சட்டத்தை எடுத்து கொள்ளுங்கள், அதில் பொது இடங்களில் புகை பிடிக்க கூடாது.. என்று சொல்லி பல இடங்களை சுட்டி காட்டி இருக்கிறார்கள். ஆனால் தெரு, மற்றும் பார்க் எல்லாம் பொது இடம் தானே..அங்கே புகைக்கலாம் என்கிறது விதி. ஆனால் எத்தனை பேருக்கு தெரியும் இந்த் விதி எல்லாம். போகிற போக்கில் 4 ரூபாய் சிகரெட்டுக்கு 25 ரூபாய் கட்டிங் கொடுக்க வேண்டியிருக்கும்.

இப்படி எல்லோரும் சட்டம் என்ன என்பதை புரிந்து கொள்ளகூடிய முறையில் சட்டத்தை இயற்றுவது என்ற பழக்கமே இல்லை..நம் தமிழக அரசு ஹெல்மெட் விஷயத்தில் அடித்த குழப்படி சட்டம் இருக்கிறதே அதைவிட குழப்பம் ஏதாவது இருக்கிறது. பின்னாடி இருக்கிறவங்க போடணும், போடகூடாது, பெரியவர்கள் போட் வேண்டாம்னு ப்பா.. அந்த சட்டத்தை பற்றி நான் ஓரு டிராபிக் சார்ஜெண்டுடன் சண்டை போட்டது பற்றி ஓரு பத்திரிக்கை போகிற போக்கில் எங்களுக்கு தெரியாமலே நானும் அந்த அதிகாரியும் வாதாடும் காட்சியை புகைபடமாய் எடுத்து வெளியிட்டது. உலக புகழ் நமக்கு எப்படியெல்லாம் கிடைக்கிறது.

இன்னொரு உதாரணம் .. ஓரு வயது வந்த பெண்ணும், ஆணும் இருவரும் இஷ்டப்பட்டால் எந்த விதமான நிர்பந்ததிற்கும் ஆட்பாடாமல் அவர்களுக்கு உடலுறவு கொண்டால் அதை சட்டம் தடுக்க முடியாது.. ஆனால் கணவன் மனைவி அல்லாத ஓரு ஆணும், பெண்ணும் ஓன்றாக இருந்து உடலுறவு கொண்டால், அந்த பெண்ணின் கணவனோ, அந்த ஆணினின் மனைவியோ புகார் கொடுக்காத வரை அவர்கள் மீது கேஸ் போட முடியாது. ஆனால் அவர்களை போலீஸ் பிடித்தால் விபசார வழக்கு போட்டு விடுவோம் என்று மிரட்டுகிறார்கள் அல்லது போட்டு விடுகிறார்கள். வயது வந்த இருவர் அவர்க்ளுக்கு இருவரின் சம்மதத்தின் பேரில் உடலுறவு கொண்டால் தவறு அல்ல என்று சட்டத்தில் இருந்தாலும், சமுதாயத்தில் தங்களது பெயர் கெட்டுவிடுமே என்று பயந்து யாரும் போராடுவது இலலை..

விபசாரம் செய்பவர்களை கூட போலீஸ் செய்திதாளகளில் வருவதை போல் ரோட்டில் விபசாரத்துக்கு அழைத்தார்கள், போலீஸ் மாறு வேடம் அணிந்து அவர்களுக்கு பணம் கொடுத்து அதை வாங்கும் போது சுற்றி வளைத்து பிடித்ததாகதான் கேசை ஜோடிப்பார்கள். ஏன் என்றால் சட்டப்படி மேற்சொன்ன விதிகளின் படி அங்கிருக்கும் ஆண், பெண் இருவரையும் உடலுறவு கொண்டார்கள் என்று கைது செய்ய முடியாது.. அதனால் ஜோடித்து தான் கேஸ் எழுதுவார்கள்.. கன்னட ப்ரசாத் போன்றவர்கள் என்ன ரோடில் அழகிகளை வைத்து கூவிக் கூவியா ஆள் பிடிக்கிறார்கள்.(அவர்கள் அழகிகளா என்பது வேறு விஷயம்?)

சட்டத்தை பற்றி தெரிந்தாலும் போராடாமல் பல பேர் அசிங்கம், நம்கேன் வம்பு என்று விட்டு விடுவார்கள் .ஆனால் சில ஆண்டுகளூக்கு முன்பு நடந்த உண்மை சம்பவம் ஓரு அரசாஙக உத்யோகத்தில் இருந்த ஓரு நபர் தான் காதலித்த பெண்ணுடன் வெளியூர் சென்று அங்கிருந்த ஓட்டலில் தங்கியிருக்க, அப்போது அங்கே ரெய்டுக்கு வந்த போலீஸார் அவர்களையும் கைது செய்து, விபசார வழக்கு போட்டுவிட்டார்கள்.. அதனால் அவருக்கு அரசாஙக வேலையிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

ஆனால் அவர் விடவில்லை.. கோர்ட்டில் போலீசுக்கு எதிராக வழக்கு தொடர்ந்து மேலே சொன்ன சட்டத்தை வைத்து வாதாடி இழந்த தன் அரசாஙக் வேலையை திரும்ப பெற்று, தன் காதலியை மணந்தார்..எல்லோரும் தங்களது உரிமையை தெரிந்து கொண்டால நம்முடைய சட்டம் எந்த அளவுக்கு நமககு ஆதரவாக இருக்கிறது, அதை போலீஸ் அத்துமீற்ல் செய்யும்போது எதிர்கவும் துணிய வேண்டும்.

எதற்காக நான் இந்த உதாரணத்தையெல்லாம் சொல்கிறேன் என்றால், வெளியே சொல்ல அசிங்க படுகிற விஷயமாய் இருப்பினும் ஓரு தனிமனிதன் தன் உரிமையைக்க்காக, போராடி வென்ற்து, நம் சட்டத்தில் எந்த அளவிற்கு நம்க்கு ஆதரவாக உள்ளது என்பது புரியும். என்பதற்காகதான்.

அதற்காக நான் புகை பிடிப்பதையோ, அல்லது திருமணத்துக்கு அப்பாற்பட்ட உறவுகளை ஆதரிக்கிறேன் என்றோ நீஙக்ள் நினைக்க்கூடாது. எல்லோரும் தங்களது உரிமையை விட்டுக் கொடுக்காமல் அதை தெரிந்து நடத்தால் நாமே தவறு செய்ய மாட்டோம்.. அதை மீறி நம் உரிமையை பறிக்க முயன்றால்.. அதான் சொன்னேனே.. சட்டம் உன் கையில்
Post a Comment

9 comments:

Raj said...

சங்கர்...இந்த மாதிரி ஒவ்வொரு புது சட்டமும் வரும்போது...இந்த போலிஸ், பார்ட்டி வச்சு கொண்டாடுவாங்களோன்னு சந்தேகமா இருக்கு...ஏன்னா, அப்பதானே சட்டத்தை மீறும் பொது ஜனங்களை பிடிச்சு, கேஸ் போடாம இருக்க மாமூல் வாங்கிட்டு இப்படியெல்லாம் சொத்து சேர்க்க முடியும். இன்னைக்கு தினமலர்ல வந்த செய்திய பாருங்க.......

http://www.dinamalar.com/splpart.asp?ncat=டீ%20கடை%20பெஞ்ச்

Cable சங்கர் said...

நீஙகள் சொல்வது போல் நடந்தாலும் நடக்கும்.. ஆனாலும் உங்கள் உரிமையை விட்டு கொடுக்காதீர்கள்

பாபு said...

மிக சரியாக சொல்லியிருக்கிறீர்கள்
அதிகாரத்தில் இருப்பவர்களை பார்த்து கேள்வி கேட்கவே பயப்படும் நம்ம ஊரில் போலீஸ் காரங்க சொல்றதுதான் சட்டம்

Cable சங்கர் said...

//அதிகாரத்தில் இருப்பவர்களை பார்த்து கேள்வி கேட்கவே பயப்படும் நம்ம ஊரில் போலீஸ் காரங்க சொல்றதுதான் சட்டம்//

ஆனால் நாம் பயப்படக்கூடாது பாபு.. நன்றி உங்கள் கருத்துக்கும், வருகைக்கும்

Anonymous said...

சட்டம் உன் கையில் டைட்டில் எல்லாம் நல்லாத்தான் இருக்கு.. இரண்டு நாள் ஸ்டேஷன்ல வச்சு லாடம் கட்டினா தெரியும்.

Cable சங்கர் said...

//இரண்டு நாள் ஸ்டேஷன்ல வச்சு லாடம் கட்டினா தெரியும்.//

அப்படி எல்லாரையும் சும்மாவெல்லாம் ஸ்டேஷன்ல கூட்டி போய் வைக்க முடியாது.. மனசுல தைரியத்தை வரவழைச்சு.. ஏன்னு கேள்வி கேட்க ஆரம்பிங்க.. அப்ப தெரியும் உஙக பவர்.

யூர்கன் க்ருகியர் said...

நல்ல பயனுள்ள விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தும் பதிவு. நன்றி

யூர்கன் க்ருகியர் said...

இரண்டு வருடங்களுக்கு முன் நானும் என் நண்பனும் இரு சக்கர மோட்டார் வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது,டிராபிக் போலீஸ் உடன் ஏற்பட்ட வாக்குவாதத்தின் இறுதியில் என் நண்பன் சொன்னது
"இனிமேல் கோர்ட் -ல பேசிக்கலாம்.".

உடனே அந்த காவலர் சட்டுன்னு ஜகா வாங்கிட்டார்.

உங்க பதிவை படித்ததும் இந்த நினைவு வந்தது.

Cable சங்கர் said...

//இரண்டு வருடங்களுக்கு முன் நானும் என் நண்பனும் இரு சக்கர மோட்டார் வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது,டிராபிக் போலீஸ் உடன் ஏற்பட்ட வாக்குவாதத்தின் இறுதியில் என் நண்பன் சொன்னது
"இனிமேல் கோர்ட் -ல பேசிக்கலாம்.".

உடனே அந்த காவலர் சட்டுன்னு ஜகா வாங்கிட்டார். //

உண்மையிலேயே சொல்கிறேன்.. பாதி கான்ஸ்டபிளுக்கு கட்டிங் வாங்க தெரிந்த அளவுக்கு, ரூல்ஸ் தெரியாது.