Thottal Thodarum

Oct 11, 2008

Happy Days


ஜலதோஷம் பிடிக்குமே.. என்று கவலைப்படாமல் மழையில் நினைந்திருக்கின்றீர்களா? அந்த நாள் உங்களின் ஹேப்பி டேஸாக இருக்கும். வாழ்கையில் இப்போது சின்ன விஷயங்களாய் தெரியும் விஷயத்துகெல்லாம் சந்தோஷமும், துக்கமும் கலந்து கட்டி மத்தாப்பாய் சிரித்தும், வெடித்தும் மகிழ்ந்திருக்கின்றீர்களா? அந்த நாட்கள் உங்களின் கல்லூரி நாட்களாய் தான் இருக்கும் அந்த ஹேப்பி டேஸை உங்களால் எப்பவுமே மறக்க முடியாது. வாழ்கையில், படிப்புடன் நட்பை, காதலை,லீடர்ஷிப் போன்ற பல விஷயங்களை கற்று தரும் நாட்கள் தான் கல்லூரி காலமான ஹேப்பி டேஸ். சமீபகாலத்தில் நீங்கள் இவ்வளவு இளமையான திரைப்படத்தை பார்த்திருக்க மாட்டீர்கள்..

படத்தின் ஆரம்பமே ஓரு அழகான விஷயம்.

தூங்கி எழும் சந்து முதல் முதலாய் இன்ஜினியரிங் காலேஜ் போக போகிறான். அவன் அப்பா அவனை கூப்பிடுகிறார். ஓரு பேனாவை கொடுத்து ‘ இது என் அப்பாவின் பேனா . அவர் எனக்கு கொடுத்தது. இப்போது உனக்கு கொடுக்கிறேன்.” என்று சொல்ல.. அதற்கு அவன் மனதிற்குள் “நல்லவேளை.. அட்வைஸ் இல்ல..; ஓன்லி செண்டிமெண்ட் “ நினைப்பதில் ஆரம்பித்து.. அந்த வயது இளைஞர்களை கண் முன் ஓடவிட ஆரம்பிக்கிறார் இயக்குனர் சேகர் கம்மூலா..

மேல் தட்டு குடும்பத்திலிருந்து வரும் அழகான மது. (சுஜாதாவின் பிரிவோம் சந்திப்போம் கதை நாயகி மதுவிக்கு சரியான் பொருத்தம்.. அவர் தான் நடிக்கிறார்.)


அதிபுத்திசாலியான ரொபாடிக்ஸில் ஆர்வம் உள்ள அப்பாவியான டைசன்..

ஏழை குடும்பத்திலிருந்து சீட் கிடைத்து எப்படியாவது முதல் மாணவனாக வேண்டும் என்ற வெறியோடு சேரும் செல்ஃபிஷான சங்கர்.

டொனேஷன் சீட்டில் காசு கொடுத்து சேரும் புரத்ட்டூர் எம்.எல்.ஏ. பையன் ராஜேஷ்.

தன் அழகை பற்றி, அவ்வளவாக கவலைபடாடத, ஆண்பிள்ளை போல் நடந்து கொள்ளூம் அப்பு என்கிற அபர்ணா.

கண்களாலேயே பேசும் சீனியர் ஷாரப்ஸ்,


ஸ்ரீகாக்குளத்திலிருந்து, தெலுங்கு மீடியத்திலிருந்து வரும் மாணவன், வெளிவட்டார பழக்கமே இல்லாமல் வீட்டிலிருந்தே படித்து காலேஜிக்கு வரும் பாண்டு, குண்டு சீனியர், ஜூனியர் மதுவை காதலிக்கும் சினியர் கேரக்டர்கள் என்று எல்லா கேரக்டர்களும் நாம் பார்த்து, மகிழ்ந்த நண்பர்கள் போலவே தெரியும்.

இவர்களுக்குள் நடக்கும் அந்த நாலு வருட வாழ்கை அவர்களுக்கு என்ன என்ன கற்று தருகிறது என்பதை அவ்வளவு இயல்பாய் சொல்லியிருக்கிறார். இவர்கள் எல்லோரும் நட்பு எவ்வாறு உருவாகி இருக்கமாகிறார்கள்? சந்துவிக்கும், மதுவிக்கும், அப்புவுக்கும் ராஜேசுக்கு, டைசனுக்கும் சீனியர் ஷாரப்ஸுக்கும், சங்கருக்கும், சங்கீதாவுக்கும் இடையில் ஏற்படும் காதல், அதற்கு அப்புறம் நடக்கும் ஊடல், மோதல், அவர்களின் உறவு பலப்படுதல்,அந்த உறவின் காரணமாய் அவர்கள் வாழ்கையில் பெரும் வெற்றி தோல்விகள் என்று படம் முழுவதும் வாழ்ந்த உணர்வு உங்களுக்கு வந்தே தீரும்

சங்கரின் காதலி சங்கீதாவின் வரவால் நன்றாய் படிக்கும் மாணவன் அரியர்ஸ் வைப்பதும், அவள் அவனை ஏமாற்றி கொண்டிருக்கிறாள் என்று தெரிந்த டைசன், அவனுக்காக தன்னுடய கம்ப்யூட்டர் சயின்ஸ் குருப்பை விட்டு கொடுத்த டைசன், அவளை நம்பாதே என்று சொல்லும் போது அவன் டைசனை அடிக்க, அவன் ஓரு செல்பிஷ் என்று தெரிஞ்சிகிட்டே அவனுக்கு போய் அட்வைஸ் பண்றியே அவனுக்கு பிரண்ட்ஷிப் வேல்யூவே தெரியாது என்று சந்து சொல்ல.. அப்போது டைசன் அவனுக்கு தெரியலைன்னா என்ன நாம அவனுக்கு பிரண்ட்தானே என்று சொல்லும்போது கண்கலங்காமல் இருக்க முடியாது.

பார்க்கும் பெண்களையெல்லாம் காதலிக்கும் ராஜேஷ், அவனுக்கு ஹெல்ப் பண்ணும் அப்பு, இடையில் வரும் இங்கிலீஷ் லெக்சரர் கமலினி முகர்ஜி.. என்று கலந்து கட்டிய ஓரு சுகானுபவம்.. படத்தில் அங்காங்கே ஃபாண்டஸியாய் காட்சிகள் வந்தாலும் அந்த வயதில் பாண்டஸியில்லாத வாழ்கை இருந்திருக்குமா?

சந்துவிக்கும், மதுவுக்கும் இடையே காதல் அரும்புவதற்கு முன்பே அவளை கிஸ் கேட்க, அவளின் அப்பா.. அதை கேட்டு விட அதனால் அவமானம் அடையும் மது என் தந்தையிடம் மன்னிப்பு கேட்ட்டல்தான் என்று சொல்ல.. என்னனு மன்னிப்பு கேட்க, உங்க பொண்ணு கிட்ட கிஸ் கேட்டேன் சாரி ன்னா. அது என்னால் முடியாது.. என்பதில் ஆரம்பித்து ஈகோவினால் இருவரும் இரண்டுவருடத்திற்கு பேசாமல் ஓன்றாகவே இருப்பதும், புதிய ஜூனியர் பெண் சந்துவுடன் பேசுவதை பார்த்து பெருமுவதும், அழகான கவிதை..

ஜூனிய்ர் டைசனுக்கும், சீனியர் ஷராப்ஸுக்கும் இடையில் ஏற்படும் காதலை ஏற்றும் ஏற்காமலும் தன்னுடய கோல் வேறு எதிலும் நான் கட்டுபட்விரும்பவிலலை என்றும், டைசன் அவளுக்குகாக் எங்கும் போனாலும் எனக்காக ஓரு சான்ஸ் வரும் வரை காத்திருப்பேன் என்பதும். இந்த காட்சியில் காதலை சொல்லி, அல்லது சொல்லாமல் நாம் காலேஜில் வாழ்ந்த காலங்களை உங்கள் கண் முன் வரவில்லை என்றால் அது மிகப் பெரிய பொய்.

இவர்களின் காலேஜ் வாழ்கையின் முடிவில் கல்லூரி முதல்வர் அவர்களை அழைத்து, இதுநாள் நீங்கள் வாழ்ந்தது உங்கள் வாழ்வில் நிகழ்ந்த ஹேப்பி டேஸ்.. இத்தோட முடிய போகுது.. இனிமே வரப்போற் நாட்கள் உங்க்ள் வாழ்வில் ஏற்படப்போகும் பர்பஸ்புல் டேஸ். என்பது நிதர்சனமான உண்மை என்பதை நாம் கல்லூரியின் கடைசி நாள் அன்று உணர்ந்திருப்போம்.


அற்புதமான ஓளிப்பதிவு, மைக்கேல்.ஜே.மேயரின் அற்புதமான இசை, நடித்த அனைவரும் புதுமுகங்கள். என்று சத்யம் செய்தால் தான் நம்புவீர்கள்.. கமலினி முகர்ஜி தவிர.. இயல்பான வசனங்கள்.. மனதை வருடும் ரிரிக்கார்டிங்.. அற்புதமான இயக்கம் என்று எதையுமே குறை சொல்ல முடியாத படம்.


படத்தை பார்த்தவர்கள் காலேஜ் என்றால் நட்பு, காதல், இதைதவிர வேறேதும் கிடையாதா.. இதையெல்லாம் பெரிய ப்ராப்ளமா என்று கேட்பவர்களுக்கு உங்கள் மனதை தொட்டு சொல்லுங்கள்.. நீங்கள் படிக்கும் போது எதிர்கால இந்தியா பற்றியா நினைத்து வாழ்ந்திர்கள் என்று.. படத்தை பார்க்கும் போது அவர்களின் வாழ்கையாய் படத்தை பார்த்தால் இழந்த ஹேப்பிடேஸை நமக்கு கொண்டுவரும் படம்.. அட்லீஸ்ட் நிஜத்தை மற்கக...

இயக்குனர் சேகர் கம்மூலாவை பற்றி..

அமெரிக்காவில் வேலை செய்து கொண்டிருந்த இவர் திரை துறையின் மேல் உள்ள் ஆர்வத்தால் வேலையை விட்டு முதல் முதலாய் “டாலர் டிரீம்ஸ்” என்ற படத்தை இயக்கினார். அதில் அவருக்கு ஓரு அடையாளம் தெரிய, அடுத்து, “ஆனந்த்” என்ற் ஓரு இனிமையான படம், அதற்கு அப்புறம் “கோதாவரி’என்ற ஓரு அருமையான் காதல் கதை, இப்போது “ஹேப்பி டேஸ்” அடுத்த படத்துக்க்காக ஆவலாய் காத்திருக்கிறேன்..

டிஸ்கி : Happy days படத்தை தமிழில் தயாரிப்பதாய் பிரகாஷ்ராஜ் உரிமை வாங்கி வைத்துள்ளார். ஓளிப்பதிவாளர் குகன் இயக்குவதாய் இருந்தது, அது என்ன ஆனது என்றே தெரியவில்லை. ப்ரகாஷுக்கு இருக்கும் பணப்ப்ரச்சனையில் அது நடக்குமா என்றும் தெரியவில்லை..
Post a Comment

8 comments:

பாபு said...

இன்னைக்குதான் நம்ம friend கிட்ட இந்த DVD கேட்டுருக்கேன்,பார்த்து விட்டு சொல்றேன்

Raj said...

நல்ல விமர்சனம்....இன்னும் கொஞ்சம் நுணுக்கமாக எதிர்பார்த்தேன்...ஏதேனும் குறைகள் அல்லது லாஜிக் மீறல்கள் சுட்டி காட்டுவீர்கள் என. ஆனால் இவ்வளவு ஜாலியான படத்தில்....அதெல்லாம் மறந்து போகும். எனக்கு அந்த அப்பு, ராஜேஷ் ஜோடிதான் பிடித்திருந்தது, அதிலும் அபர்ணாவின், அந்த கண்ணாடிக்குள்ளிருந்து ஊடுருவும் பார்வை அவரின் அந்த அலட்சியமான போக்கு, க்ளைமாக்ஸில் அவர் புடவை கட்டி வந்து காத்திருக்கும் அந்த தருணம்..எல்லாமே சூப்பர்ப். கோதாவரியும்,ஆனந்தும் எத்தனை முறை பார்த்தேன் கணக்கில்லை, ஒவ்வொரு முறை பார்க்கும்போதும் ஒவ்வொரு காட்சியிலும், நம்ம மகேந்திரன் சார் பட காட்சிகள் மாதிரி, ஏதோ ஒரு புது அர்த்தம், ஒரு புது விஷயம் கத்துக்கறேன்.

யூர்கன் க்ருகியர் said...

நல்ல காம்பைலிங். நன்றி

Cable சங்கர் said...

//இன்னைக்குதான் நம்ம friend கிட்ட இந்த DVD கேட்டுருக்கேன்,பார்த்து விட்டு சொல்றேன்//

நல்ல அனுபவம் கிடைக்க வாழ்த்துகிறேன். நன்றி பாபு

Cable சங்கர் said...

//நல்ல விமர்சனம்....இன்னும் கொஞ்சம் நுணுக்கமாக எதிர்பார்த்தேன்...ஏதேனும் குறைகள் அல்லது லாஜிக் மீறல்கள் சுட்டி காட்டுவீர்கள் என//

கொஞ்சம் யோசித்து பார்த்தால் லாஜிக் மீறல்கள் இருந்தாலும்.. காலேஜ் படிக்கும் மாணவர்களின் கதையில் லாஜிக்கும், பேண்டஸியில்லா உலகம் இருந்திருக்குமா என்று சந்தேகமே.. அதனால் அது எனக்கு பெரிதாக தோன்றவில்லை.

Cable சங்கர் said...

//நல்ல காம்பைலிங். நன்றி//

நன்றி ஜூர்கேன். கண்டிப்பாக படம் பாருங்கள்..

Santhosh said...

சங்கர்,
அருமையான படம்.. விமர்சனம் நல்லா இருந்தது :))

Cable சங்கர் said...

//அருமையான படம்.. விமர்சனம் நல்லா இருந்தது :))//

நன்றி சந்தோஷ்.. உங்கள் வருகைக்கும்,கருத்துக்கும்.