Thottal Thodarum

Oct 10, 2008

கனவு தொழிற்சாலை - ஓரு ரிப்ளே..


நாகார்ஜூன், ஆரம்பித்த ரேஸ் இப்போது ரிலே ரேஸாக பதிவாக ஆரம்பித்திருக்கிறது.. நான் ரொம்ப நாளைக்கு முன்பே இது போல ஓரு பதிவை ஆரம்பித்துவைத்தேன் . ஏனோ பதிவர்கள் ஆதரவில்லை.. பரவாயில்லை.. இதோ என்னுடய பதில்கள்.. கமான் ஸ்டார்ட் த மீயூசிக்...

1.எந்த வயதில் சினிமா பார்க்க ஆரம்பித்தீர்கள்? நினைவுதெரிந்து கண்ட முதல் சினிமா? என்ன உணர்ந்தீர்கள்?

வயது சரியாக ஞாபகமில்லை.. ஆனால் நான் முதன் முதலாய் பார்த்தாக நினைவில் உள்ள படம் ஜெமினி ப்ரிவுயூ தியேட்டரில் “அந்தமான் காதலி” என்று நினைக்கிறேன்.. மிக சிறிய வயது தான்..

2. கடைசியாக அரங்கில் அமர்ந்து பார்த்த தமிழ் சினிமா?
தமிழில் சக்கரகட்டி, மிக சமீபத்தில் “சீதக்கைல ரவி” வெங்கடேஷ் நடித்த தெலுங்கு படம்

3. கடைசியாக அரங்கிலன்றிப் பார்த்த தமிழ் சினிமா எது, எங்கே, என்ன உணர்ந்தீர்கள்?
மீண்டும் “7ஜி ரெயின்போ காலனி” ”ஹேப்பி டேஸ்” தெலுங்கு டிவிடியில் 14வது முறையாக..

4. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா?
அது அப்போதைக்கு அப்போது மாறிக் கொண்டே இருக்கும். திருவிளையாடல், அவள் அப்படித்தான், கன்னத்தில் முத்தமிட்டால், என்று என் மன்நிலைக்கேற்ப..

5.உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-அரசியல் சம்பவம்?
குஷ்பு கற்பை பற்றி பேசியதாக எழும்பிய பிரச்சனை..உண்மையில் இதவிட கேவலமாய் அரசியல் கட்சி மீட்டிங்கில் பேசியவர்கள் எல்லா கட்சியிலும் இருக்கிறார்கள்

5-ஆ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-தொழில்நுட்ப சம்பவம்?
அந்த காலத்திலேயே அருமையான டெக்னாலஜியில் எடுக்கப்பட்ட, அவ்வையார், மற்றும் நாடோடி மன்னன்.

6. தமிழ்ச்சினிமா பற்றி வாசிப்பதுண்டா?
வேற வேலை..

7. தமிழ்ச்சினிமா இசை
இளையராஜா, ரஹ்மான்.

8. தமிழ் தவிர வேறு இந்திய, உலக மொழி சினிமா பார்ப்பதுண்டா? அதிகம் தாக்கிய படங்கள்?
நிறைய,இந்திய மொழிகளில் எல்லா மொழிபடங்களையும் தியேட்டரில் ரிலீஸானால் தியேட்டரில் பார்பவன்.எப்போதெல்லாம் டயம் கிடைக்கிறதோ.. அதாவது வாரத்துக்கு மற்ற சினிமாக்கள் பார்த்த டயம் போக குறைந்தது மூண்று உலக படங்களாவ்து மொழி, நாடு வித்யாசமில்லாமல் பார்த்து விடுவேன். சமீபத்தில் பார்த்தது “சிட்டி ஆப் மென்” என்கிற் பிரேசில் படம்..”சிட்டி ஆப் காட்” என்கிற படத்தை எடுத்த தயாரிப்பாளரின் படம். ஓகே.

9. தமிழ்ச்சினிமா உலகுடன் நேரடித்தொடர்பு உண்டா? என்ன செய்தீர்கள்? பிடித்ததா? அதை மீண்டும் செய்வீர்களா? தமிழ்ச்சினிமா மேம்பட அது உதவுமா?
உண்டு, திரைக்கதைகள் எழுதிவருகிறேன். மூண்று குறும்படங்கள இயக்கி உள்ளேன்.. இரண்டு சீரியலுக்கு திரைக்கதை, வசனம் எழுதி இருக்கிறேன்.. கிட்டத்தட்ட 95 சீரியல்களில் கேரக்டர் ரோல்களில் நடித்து இருக்கிறேன்.. 80க்கும் மேலான படங்களில் அங்கிங்கே சொல்லிகொள்ளும்படியாகவும், முடியாத படங்களிலும் நடித்திருக்கிறேன்..இப்போது நான் நடிப்பதை கொஞ்ச காலமாய் நிறுத்தியிருக்கிறேன். இயக்குனராகும் முயற்சியில்.. அதனால் தமிழ் சினிமா மேம்படுமா இல்லையா என்று தெரியவில்லை..

10. தமிழ்ச்சினிமாவின் எதிர்காலம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
நன்றாகவே இருக்கும்.. எனக்கு தெரிந்து பல வருடங்களாய் சினிமா அவ்வள்வுதான் என்று பல சித்தர்கள் ஆரூடம் சொல்லிக்கொண்டுதானிருக்கிறார்கள். ஆனால் சினிமா வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறது, இருக்கும்.

11. அடுத்த ஓராண்டு தமிழில் சினிமா கிடையாது, மற்றும் சினிமா பற்றிய சமாச்சாரங்கள், செய்திகள் எதுவுமே பத்திரிகைகள், தொலைக்காட்சி, இணையம் உள்ளிட்ட ஊடகங்களில் கிடையாது என்று வைத்துக்கொள்வோம்? உங்களுக்கு எப்படியிருக்கும்? தமிழர்களுக்கு என்ன ஆகும் என்று நினைக்கிறீர்கள்?

ஓண்ணும் பிரச்சனையில்லை இருக்கவே இருக்கும் மற்ற மொழி சிரியல்கள், படங்கள், உலக படங்கள்.. இருக்கவே இருக்கு, நமக்கு தேவை சினிமா அது எந்த மொழியில இருந்தா என்ன..? திருட்டு டிவிடி இருக்காதா என்ன?

நான் முன்பே இட்ட பதிவின் இணைப்புக்கு இங்கே சொடுக்கவும்


Post a Comment

5 comments:

பாபு said...

உங்கள் எண்ணம் ஈடேற வாழ்த்துக்கள் (இயக்குனராதல்)

நீங்க சொல்றப்ப ஏன் அந்த பதிவ தொடரலே என்று கேட்காதீர்கள்,பதிவுலக அரசியல் ல இதுஎல்லாம் சகஜமப்பா

Cable சங்கர் said...

//நீங்க சொல்றப்ப ஏன் அந்த பதிவ தொடரலே என்று கேட்காதீர்கள்,பதிவுலக அரசியல் ல இதுஎல்லாம் சகஜமப்பா//

அது சரி .. நன்றி பாபு.. உஙக்ள் வாழ்துக்கும், வருகைக்கும்.

தமிழ் அமுதன் said...

திரைக்கதைகள் எழுதிவருகிறேன். மூண்று குறும்படங்கள இயக்கி உள்ளேன்.. இரண்டு சீரியலுக்கு திரைக்கதை, வசனம் எழுதி இருக்கிறேன்.. கிட்டத்தட்ட 95 சீரியல்களில் கேரக்டர் ரோல்களில் நடித்து இருக்கிறேன்.. 80க்கும் மேலான படங்களில் அங்கிங்கே சொல்லிகொள்ளும்படியாகவும், முடியாத படங்களிலும் நடித்திருக்கிறேன்..இப்போது நான் நடிப்பதை கொஞ்ச காலமாய் நிறுத்தியிருக்கிறேன். இயக்குனராகும் முயற்சியில்..





விரைவில் நீங்கள் இயக்குனராக என் வாழ்த்துக்கள்!! உங்க ''ஆக்சிடெண்ட்'' கலக்கல் !!
எந்த எந்த சீரியல்ல நடிச்சு இருக்கீங்க? உங்கள கொஞ்சம் அடையாளம் சொல்லுங்க!!!

யூர்கன் க்ருகியர் said...

மன்னிக்கவும்..

இந்த இன்டர்வியு-ல யார் கேள்வி கேக்கிறாங்க யார் பதில் சொல்றாங்க?
என் சிற்றறிவுக்கு ஒன்னும் எட்டலையே

Cable சங்கர் said...

//இந்த இன்டர்வியு-ல யார் கேள்வி கேக்கிறாங்க யார் பதில் சொல்றாங்க?
என் சிற்றறிவுக்கு ஒன்னும் எட்டலையே//

நாகார்ஜுன் என்கிற பதிவர் இந்த் கேள்விகளை எழுப்பி அவரே பதிலும் அளித்துள்ளார்.. இதே கேள்விகளுக்கு மற்ற பதிவர்களையும் எழுத உந்திவிட்டுள்ளார்.. ஓவ்வொருவருடய கருத்தும் மாறுபடுமில்லையா? ஜூர்கேன்