சாப்பாட்டுக்கடை - தோசை மாமா கடை -வீழ்ந்த கதை
தோசை மாமா கடையைப் பற்றி "வேற லெவல்" கடை என்று வீடியோ போடாத ஃபுட் ரிவ்வியூவர்களே கிடையாது என்று சொல்லலாம். அதோடு அங்கே சாப்பிடச் சென்றால் பெரிய க்யூவில் நிற்க வேண்டும். க்யூவைத் தாண்டி அவர் அப்படி சமைப்பார். இப்படி சமைப்பார். செம்ம சுவை என்றெல்லாம் வீடியோவில் சொல்லாத ஆள் இல்லை. அவரின் கடையில் க்யூவே இல்லாத காலத்திலேயே நான் சாப்பிட்டிருக்கிறேன். அத்தனை கூட்டமெல்லாம் இருக்காது. கூட்டத்திற்கு காரணம் அவரின் தோசை தயாரிப்பு முறைதான். அவரே தோசை மாவு கரைப்பார். அவரே தோசை ஊற்றுவார். அவரே பொடி எல்லாம் போடுவார். அவரே எண்ணைய் ஊற்றுவார். அவரே பார்சலுக்கு பணம் வாங்குவார். அவரே தோசை சுட்டு அதை ப்ளேட்டில் வைத்து சாம்பார் சட்டினி எல்லாம் ஊற்றி கொடுப்பார். அவரே சாப்பிட்ட தட்டுக்களை கழுவி வைப்பார். அது மட்டுமில்லாமல் பத்துக்கும் மேற்பட்ட வகை தோசைகள் வைத்திருப்பார். அதனால் இன்னும் அதற்கான பிரிபரேஷன்கள் ஒவ்வொரு தோசைக்கும் மாறுபடும் பட்சத்தில் நேரம் எடுக்கத்தான் செய்யும். இத்தனைக்கும் க்யூவில் வரவில்லையென்றால் கொடுக்க மாட்டார். கொஞ்சம் முகம் காட்டுவார். இத்தனையும் அவரே செய்வதால் நேரம் ஆகத்தான் செ...