Posts

Showing posts with the label போலீஸ்

நடு நிசி கதைகள்-1

75 லட்சம் ஹிட்ஸுகளை வாரி வழங்கி ஆதரவு கொடுத்துக் கொண்டிருக்கும் என் இனிய வாசகர்கள், நண்பர்கள், பதிவர்களுக்கு என் நன்றியும்  வணக்கமும்.-கேபிள் சங்கர் நண்பர் ஒருவர் சினிமாக்காரர். செட் வேலை போய்க் கொண்டிருந்தபடியால் ஜாலியாய் பேசிக் கொண்டிருந்தோம். டாஸ்மாக் பற்றியும் சமீபகாலமாய் நடந்து வரும் இரவு நேர டி.டி செக்கிங் பற்றியும் பேசிக் கொண்டிருந்தோம். எந்தெந்த ஏரியாவில் எங்கெங்கு செக்கிங் நிற்பார்கள்? போலீஸ்காரர்கள் பேசும் முறை பற்றியும் காமெடியாய் பேசிக் கொண்டிருந்தோம். நான் ஒரு முறை போத்தீஸ் அருகே காரில் செல்ல, வழக்கமாய் அங்கே செக்கிங்கிற்கு நிற்கும் போலீஸ் எல்லா வண்டியையும் மறித்து, பைக்குகளை ஒரு பக்கமாகவும், கார்களின் கதவுகளை இறக்கச் சொல்லி கிட்டே வந்து “எங்க போறீங்க?:” என்பது போன்ற அபசகுன கேள்விகளை கேட்டு குடித்திருக்கிறார்களா? இல்லையா? என்று செக் செய்வது வழக்கம். அன்றும் அதே ரொட்டீன் தான். நான் வேண்டுமென்றே காரில் சத்தமாய் பாட்டை வைத்துக் கொண்டு, தலையை ஆட்டிக் கொண்டே இருக்க, கிட்டே வந்த போலீஸ் காரர் கதவை இறக்கச் சொன்னார்.

போலீஸ்

நேற்று மாலை  ஜோன்ஸ் ரோடில் உள்ள சப்வேயின் இடது பக்கம் உள்ள வழியில், மார்கெட் பக்கம் செல்வதற்காக போய்க் கொண்டிருதேன். அப்போது ஒரு இண்டர்நேஷனல் கால் வர வண்டியை சுவற்றோரமாய் ஸ்டாண்ட் போட்டு நிறுத்திவிட்டு, போனை அட்டெண்ட் செய்து கொண்டிருந்தேன். திடீரென அந்த சிறு வழியில் ட்ராபிக் ஜாம் ஏற்பட,  ஒரே ஹாரன் சத்தம். என்னவென்று பார்த்த போது எதிர் திசையில் ராங் ரூட்டில் நிறைய வண்டிகள் வழிமறித்திருந்ததுதான் காரணம். எல்லா வண்டிகளுக்கு முன்னால் இருந்தது ஒரு புல்லட். அதன் மீது ஆஜானுபாகுவாய் ஸ்மார்டாய் ஒரு கருத்த ஆள் அமர்ந்திருந்தார். என்னடா இது ட்ராபிக் ஜாமாக இருக்கிறதே என்று நிமிர்ந்து என்னைப் பார்த்து ‘அலோ.. வண்டிய எடுங்க” என்றார்.

சட்டம் உன் கையில் - போலீஸ்.. போலீஸ்

Image
பொது இடத்தில் புகை பிடிக்க தடை சட்டத்தை புகை பிடிப்பவர்களூம் முணுமுணுத்துக் கொண்டே ஆதரித்தாலும், எல்லோரும் பயப்படுவது அதை நடைமுறை படுத்தும் போது நடக்க போகும் அராஜகத்தை நினைத்துதான். ஏன் என்றால் நம் நாட்டில் குற்றம் நடப்பதை தடுப்பதற்காக காவல் துறை இல்லாமல், அது நடக்க விட்டுவிட்டு அப்புறமாய் வந்து தண்டிப்பது அவர்க்ளது வாடிக்கை.. உதாரணமாய் ஓருவன் ஃபிரி லெப்ட் இல்லாத இடத்தில் திரும்ப முயற்சிக்கும் போதே அந்த டிராபிக் கான்ஸ்டபிள் அந்த தெருவின் முனையிலேயே நின்று அவனை தடுத்து அறிவுறுத்த வேண்டியதுதான் அவர் கடமை. ஆனால் அவர் என்ன செய்கிறார்.. ரோட்டின் உள்பக்கத்தில் ஓளிந்து நின்று கொண்டு அவனை மடக்கி “டேக் த 25” வாங்கி அவனை திரும்ப அனுப்பாமல் தவறான பாதையிலேயே அனுப்பி வைக்கிறார். அதே போல் அவர்கள் போடும் சட்டங்களூம் அவ்வளவு ஈஸியாக மக்களுக்கு புரியும் படி இருக்காது. உதாரணமாய் புகை பிடிக்கும் சட்டத்தை எடுத்து கொள்ளுங்கள், அதில் பொது இடங்களில் புகை பிடிக்க கூடாது.. என்று சொல்லி பல இடங்களை சுட்டி காட்டி இருக்கிறார்கள். ஆனால் தெரு, மற்றும் பார்க் எல்லாம் பொது இடம் தானே..அங்கே புகைக்கலாம் என்கிறது விதி. ஆன...