Posts

Showing posts with the label telugucinema review

Anjaneyalu –Telugu Film Review

Image
மூன்று லட்சம் ஹிட்ஸுகளை வாரி வழங்கி தொடர் அன்பும், ஆதரவும் தந்து கொண்டிருக்கும் சக பதிவர்களுக்கும், வாசகர்களுக்கும் நன்றி.. நன்றி.. நன்றி..   ஆஞ்சநேயலு துறுதுறுப்பான கேர்ஃபீரி இளைஞன். பாசக்கார அப்பா, அம்மாவுக்கு ஒரே மகன். ஒரு டிவி கம்பெனியில் வேலை செய்கிறான்.  நடுரோட்டில் ரவுடிகளிடமிருந்து ஹீரோயினை காப்பாற்றி லவ் செய்கிறான். திடீரென ஊரில் உள்ள மிகப்பெரிய ரவுடியிடம் சேர்ந்து, அவனை பற்றிய தொடர்புகள், சதிகள் எல்லாவற்றையும் தன் டிவி சேனல் மூலம் வெளியிருகிறான். ஏன்? எதற்காக? என்பதுதான் கதை. முழுக்க முழுக்க ரவிதேஜாவை மட்டுமே நம்பி எடுக்கப்பட்ட படம். அவரின் படங்களில் வழக்கமாய் வரும் காமெடி முதல் பாதி முழுவதும் இருக்கிறது. லாஜிக் என்ற ஒரு வஸ்துவை படம் முழுக்க எங்கு தேடினாலும் கிடைக்காது. செகண்ட் ஹாப்பில் போக்கிரி படம் போல உளவு வேலை அங்குதான் படம் தொம் என்று விழுகிறது. எழுந்திருக்கவேயில்லை. நயந்தாராவா அது முகத்தில் கொஞ்சம் கூட ப்ரெஷ்ஷாகவே இல்லாமல் அசோகவனத்து சீதை போல சோகத்துடன், ஏதோ கடனுக்கு நடித்ததுபோல் நடித்திருக்கிறார். ரொம்பவே உத்து பார்த்து தான் நயந்தாரா என்று உறுதி செய்ய...

Evaraina Eppudaina.. Telugu Film Review

Image
  ஏவிஎம் ரொம்ப நாளுக்குபிறகு தெலுங்கில் டைரக்டாய் தயாரித்திருக்கும் படம். இதற்கு முன்னால் தெலுங்கு டப்பிங்கில் அயன் வெளியானது. சரியாக போகவில்லை. வெங்கட் ஒரு துறுதுறுப்பான இளைஞன், அண்ணன் அண்ணியுடன் இருக்கும் அவன், பார்த்த முதல் பார்வையிலேயே மதுமிதாவை காதலிக்க ஆரம்பிக்கிறான். இவன் செய்த ஒரு விஷயதால் இருவரது பாட்டியும் விபத்துக்குள்ளாகி ஒரே ஆஸ்பத்திரியில், ஒரே அறையில் இருக்க அந்த சந்தர்பத்தை பயன்படுத்தி மதுவுடன் நெருங்குகிறான். வெங்கடின் தவறால் மதுவின் அக்காவின் திருமணம் நின்று போகிறது. அதை மீண்டும் நடத்தி வைத்து எவ்வாறு மதுவின் காதலை பெறுகிறான் என்பதை கமர்சியலாய் சொல்லியிருக்கிறார்கள். வெங்கட்டாக “ஹாப்பிடேஸ்” வருண்.. ஒரு ஹீரோவுக்கான அத்தனை விஷயங்களையும் இந்த படத்தில் செய்திருக்கிறார். பாடுகிறார், ஆடுகிறார், சண்டையிடுகிறார். லவ் செய்கிறார்…. காமெடி செய்கிறார். ஒகே அடுத்த தலைமுறை ஹீரோ தயாராகி வருகிறார் என்றே சொல்ல வேண்டும் மதுமிதவாக விமலா ராமன்.. வருணோடு பார்பதற்கு அக்கா மாதிரியிருக்கிறார். ப்ரொபைலில் அழகாய் இருக்கிறார்.  காமெடிக்கு வேணுமாதவ், ஆலி.. ஓகே. வேணுக...

Oy – Telugu Film Review

Image
நாமெல்லாம் அஞ்சலி பாப்பாவாக பார்த்த ஷாம்லி இப்போது குமரி ஆகி நடிக்த முதல் படம். சித்தார்த், ஷாம்லி, யுவன் என்று ஏக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த படம். எதிர்பார்ப்பை கெடுக்கவில்லை என்றுதான் சொல்ல் வேண்டும். அடுத்த செகண்ட் வாழ்க்கையின் என்ன வேண்டுமானும் நடக்கலாம் அதனால் அந்த நிமிட சந்தோஷத்தை மட்டுமே கொண்டாடும், பணக்கார உதய்க்கும். எதையும் தன் வாழ்நாள் முழுவதும் கூடவே வரவேண்டும் என்று நினைக்கும் மிஸ். பெர்பெக்ட் ஹீரோயின். அவளுக்கு எல்லாமே அவள் மட்டும்தான். தான் தன் உலகம், தன் நம்பிக்கை, என்று உழலும் சந்தியாவுக்கும் இடையே நடக்கும் கதைதான். ஒய்… 2009 புத்தாண்டின் போது ஆரம்பிக்கிறது படம். சந்தியாவை எத்தேசையாய் பப்பில் பார்க்க, அவளிடம் பேச போக, அவள் அவனை பற்றி டீடெய்ல் எல்லாம் கேட்டுவிட்டு, உனக்கும் எனக்கும் ஒத்துவராது.. ஏன்னா.. என்னோட நம்பர் 5, உனக்கு 7 அதுனால குட்பைன்னு சொல்லிட்டு போக, அவளை துறத்தி, துறத்து என்று துறத்துகிறான் உதய். அவள் வீட்டிலேயே தான் ஒரு பெரிய கம்பெனியில் வேலை பார்ப்பதாய் சொல்லி பேயிங் கெஸ்ட்டாய் வந்து சேர்ந்து, கொஞ்சம் கொஞ்சமாய் அவனின் காதலை சொல்கிறான்....