ஈரம் – திரை விமர்சனம்
ரொம்ப நாள் ஆயிற்று இந்த ஜெனரில் படம் பார்த்து, அதுவும் இந்தளவுக்கு டெக்னிகல் எக்ஸலன்ஸோடு. மிரட்டியிருக்கிறார்கள் மேக்கிங்கில். சிந்துவின் சாவிலிருந்து கதை ஆரம்பிக்கிறது. சிந்துவின் சாவு பற்றிய விசாரணையை, துவங்கும் அஸிஸ்டெண்ட் கமிஷனராக ஆதி வருகிறார். தற்கொலையாக கருதப்படும் சாவை, ஏ.ஸி மட்டும் கொலையாக பார்க்க, தொடர்ந்து அதே அடுக்குமாடி குடியிருப்பில் இருப்பவர்கள் கொலை செய்யப்பட, மேலும் இறுகுகிறது சிக்கல், யார் கொலையாளி என்று தெரியாத நிலையில், கொலைக்கான ஆயுதம் தண்ணீர் என்பதை கண்டுபிடிக்கிறான். ஏஸி, சிந்துவின் முன்னாள் காதலனும் கூட, கடைசியில் சிந்து கொலை செய்யப்பட்டாளா..? அல்லது தற்கொலையா? மற்றவர்கள் இறந்ததுக்கான காரண்ம் என்ன? என்பது போன்ற கேள்விகளுக்கு மிரட்டலாய் பதில் சொல்லியிருக்கிறார்கள். படத்தின் முதல் காட்சியே நம்மை சீட் நுனிக்கு கொண்டு வருகிறார்கள், மாடி படிகளில் தண்ணிர் வழிவது, பாத்டப்பில் சிந்து மூழ்கி இறந்து கிடப்பது, என்று ஆரம்பித்து, அதற்கு பிறகு வரும் இன்வெஸ்டிகேஷன் காட்சிகளாகட்டும், மழை காட்சிகளாட்டும், உதயம் தியேட்டர் பாத்ரூமில் நடக்கும் அமானுஷ்ய கா...