Posts

Showing posts with the label விளம்பரம்

ஜில்லுனு காத்து . .. ஜன்னலை சாத்து.

ஒன்பது லட்ச ஹிட்ஸுகளையும், எழுநூற்றி சொச்ச பாலோயர்களையும் அளித்து மென்மேலும் என்னை ஊக்குவிக்கும் வாசகர்களுக்கும், சக பதிவர்களுக்கும் நன்றியும்.. தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்களும்... சில மாதங்களுக்கு முன் சென்னை  உள்ள பெண்கள் கல்லூரியில் நடந்த கல்சுரல்ஸ் நிகழ்ச்சி ஒன்றுக்கு நடுவராய் கூப்பிட்டிருந்தார்கள். பம்மலில் நான் பாலிடெக்னிக் படிக்கும் போது,  ரயில்வே ஸ்டேஷனில் நின்றபடி, சைட் அடிப்பதற்காகவே பல்லாவரத்தில் இறங்காமல் அடுத்த ஸ்டேஷனில் இறங்கி எல்லோரையும் ”அனுப்பி” வைத்துவிட்டு அடுத்த ரயிலை பிடித்து அவசர அவசரமாய் காலேஜுக்கு போன நாட்கள் ஞாபகம் வந்தது. இப்போது அந்த காலேஜில் நடக்கும் விழாவுக்கு நடுவர். உள்ளே நுழைந்ததும் எங்கே பார்த்தாலும் பிஸியாய் மாணவிகள் அலைந்து கொண்டிருந்தார்கள். கல்சுரல்ஸ் என்பதால் மற்ற கல்லூரியிலிருந்து மாணவர்களும் வந்திருந்ததால், அவர்களுடன் சில மாணவிகள் மட்டும் தைரியமாய் பேசிக் கொண்டிருந்தார்கள். தாங்கள்  பேசிக் கொண்டிருப்பதை மற்ற பெண்கள் பார்க்கிறார்களா? என்று நோட்டம் விட்டபடி பேசிக் கொண்டிருந்தார்கள். அப்படி பேசும் போது அவர்களின் பாடி லேங்குவேஜ் ம...