Thottal Thodarum

Apr 16, 2010

ஜில்லுனு காத்து . .. ஜன்னலை சாத்து.

ஒன்பது லட்ச ஹிட்ஸுகளையும், எழுநூற்றி சொச்ச பாலோயர்களையும் அளித்து மென்மேலும் என்னை ஊக்குவிக்கும் வாசகர்களுக்கும், சக பதிவர்களுக்கும் நன்றியும்.. தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்களும்...

சில மாதங்களுக்கு முன் சென்னை  உள்ள பெண்கள் கல்லூரியில் நடந்த கல்சுரல்ஸ் நிகழ்ச்சி ஒன்றுக்கு நடுவராய் கூப்பிட்டிருந்தார்கள். பம்மலில் நான் பாலிடெக்னிக் படிக்கும் போது,  ரயில்வே ஸ்டேஷனில் நின்றபடி, சைட் அடிப்பதற்காகவே பல்லாவரத்தில் இறங்காமல் அடுத்த ஸ்டேஷனில் இறங்கி எல்லோரையும் ”அனுப்பி” வைத்துவிட்டு அடுத்த ரயிலை பிடித்து அவசர அவசரமாய் காலேஜுக்கு போன நாட்கள் ஞாபகம் வந்தது. இப்போது அந்த காலேஜில் நடக்கும் விழாவுக்கு நடுவர்.

உள்ளே நுழைந்ததும் எங்கே பார்த்தாலும் பிஸியாய் மாணவிகள் அலைந்து கொண்டிருந்தார்கள். கல்சுரல்ஸ் என்பதால் மற்ற கல்லூரியிலிருந்து மாணவர்களும் வந்திருந்ததால், அவர்களுடன் சில மாணவிகள் மட்டும் தைரியமாய் பேசிக் கொண்டிருந்தார்கள். தாங்கள்  பேசிக் கொண்டிருப்பதை மற்ற பெண்கள் பார்க்கிறார்களா? என்று நோட்டம் விட்டபடி பேசிக் கொண்டிருந்தார்கள். அப்படி பேசும் போது அவர்களின் பாடி லேங்குவேஜ் மிக அழகு. மாணவிகள் முக்கால்வாசி பேர் புடவையில்தானிருந்தார்கள். அவர்கள் முகம் முழுவதும் புடவை கட்டியிருக்கும் பெருமையும், சந்தோசமும், ஸ்டைலுமாய் அவ்வப்போது முந்தியை  முன்பக்கம் இழுத்துவிடுவதும், அட்ஜெட்ஸ் செய்து கொள்வதுமாய் இருந்தார்கள். மாணவர்களுக்கு சிறிதும் சளைத்தவர்களல்ல என்பது போல செம விசில், ஆட்டம்,பாட்டம், கொண்டாட்டம்.
ஆட்ஸாப் என்று ஆளுக்கொரு ப்ராடெக்டை கொடுத்துவிட்டு அதை பற்றி விளம்பரம் கான்ஸெப்டை பிடித்து, நடித்துக் காட்ட வேண்டும் என்பதுதான் போட்டி.சுமார் பதினைந்து காலேஜிலிருந்து வந்து போட்டியில் கலந்து கொண்டார்கள். சரியாக ஒவ்வொரு அணியினரும் ஐந்து நிமிடம் ஸ்டேஜில் பர்பாமென்ஸ் செய்ய வேண்டும், அந்த இடைபட்ட நேரத்தில் மற்றொரு டீமுக்கு அவர்களுடய ப்ராடெக்டை தெரிவு செய்து கொண்டு அவர்களது ட்ர்னுக்காக ரெடியாகவேண்டும்.
அவர்கள் லிஸ்டில் கொடுத்திருந்த ஒரு சில ப்ராடெக்ட்டுகள் மேடையில் நடித்து காட்ட முடியாத படி அபத்தமாகவும் இருந்தது. எம்.பி.3ப்ளேயர் அதில் ஒன்று. பெரும்பாலான மாணவிகள் பெயரை கொடுத்துவிட்டிருந்தார்களே தவிர கொடுத்த ஐந்து நிமிடங்களில் ஏதும் தயார் செய்து கொள்ளவே இல்லை. அதே போல அவர்களுக்கு ப்ராடெக்டுகளின் உபயோகங்களை பற்றிய விஷயஙக்ள் கூட மிக குறைவாகவே தெரிந்திருந்தபடியால். மேடைக்கு வந்து இரண்டாவது நொடியில் நடித்து முடித்துவிட்டார்கள். திருமப் திருமப் தேய்ந்து போன ரெக்கார்ட் போல சொன்னதையே சொல்லிக் கொண்டிருந்தார்கள். பல பேர் மேடைக்கு வந்ததும் வெட்கப்பட்டு, “ஏய். நீதான்பா..பேசணும்” என்றெல்லாம் பேசிக் கொண்டது சிரிப்பாக இருந்தது.
முதலிலேயே காலேஜ் ஹெ.ஓ.டி சொல்லியிருந்தார். நீஙக்ள் ஏதாவது குழுவை பாராட்டிவிட்டால் போது அடுத்து வருபவர்கள் அதையே தங்கள் கான்செப்டில் வைத்துவிடுவாரக்ள் என்று அதையும் மீறி ஒரு குழுவினர் தங்கள் வியாபார சேல்ஸ் உயர்வை லைனாக மாணவர்களை ஒவ்வொரு உயரத்தில் குனிய வைத்து, அவர்களை பச்சை குதிரை தாண்டுவதை போல தாண்டி தங்கள் வியாபார உயர்வை காட்டியதை பாராட்டிய பின், அடுத்தடுத்து வந்தவர்கள் எல்லோரும் அதே உக்தியை பின்பற்றியது ம்ஹும்.
வெளியிலிருந்து வந்து ஒரு ஆண்கள் கல்லூரி இறுதியில் வெற்றி பெற்றது. அவர்கள் எடுத்துக் கொண்ட ப்ராடெக்ட் ஃபேன். கிடைத்த ஐந்து நிமிடங்களையும், கிடைத்த மேடையையும் முழுவதுமாய் உபயோகப்படுத்தினார்கள். மிகுந்த நகைச்சுவையோடு கன்செப்டுகளை வெளிப்படுத்தினார்கள். அவர்களது கேப்ஷன் தான் இருக்கிறதிலேயே தூள் “ஜில்லுனு காத்து. ஜன்னலை சாத்து”

டிஸ்கி: அன்று சுமார் அறுநூறுக்கும் மேற்பட்ட மாணவர்களிடையே என்னுடய குறும்படமா “ஆக்ஸிடெண்ட்” திரையிடப்பட்டு பாராட்டை பெற்றது. இவ்வளவு பெரிய கூட்டத்தில் என் குறும்படம் திரையிடப்பட்டு கரகோஷங்களுடனான பாராட்டை பெற்றது என் சினிமா தேடலுக்கான வெறியை இன்னும் ஏற்றிவிட்டது என்றால் மிகையாகாது.

கேபிள் சங்கர்
Post a Comment

33 comments:

அத்திரி said...

நாந்தான் மொதல்ல படிச்சிட்டு வாரேன்

அத்திரி said...

//சைட் அடிப்பதற்காகவே பல்லாவரத்தில் இறங்காமல் அடுத்த ஸ்டேஷனில் இறங்கி எல்லோரையும் ”அனுப்பி” வைத்துவிட்டு அடுத்த ரயிலை பிடித்து அவசர அவசரமாய் காலேஜுக்கு போன //

மலரும் நினைவுகள்......


வாழ்த்துக்கள் அண்ணே

புலவன் புலிகேசி said...

வாழ்த்துக்கள் தல...

Sukumar said...

நெசமாவா தல.. வாழ்த்துக்கள்... (இந்த பக்கம் நமீதா அந்த பக்கம் கலா மாஸ்டர் இருந்தாங்களா தல.....??)

Unknown said...

எங்களையும் கூட்டிட்டு போயிருக்கலாம்ல ....

எம்.எம்.அப்துல்லா said...

//இந்த பக்கம் நமீதா அந்த பக்கம் கலா மாஸ்டர் இருந்தாங்களா தல.....??)

//

சுகுமார் அண்ணா, அதெல்லாம் நம்பள மாதிரி யூத்துங்க நடுவராப்போனா நடக்குறது. இவருக்கு இந்தப் பக்கம் சரோஜாதேவி அந்தப் பக்கம் புலியூர் சரோஜா மாஸ்டர் இருந்திருப்பாங்க.

தராசு said...

மலரும் நினைவுகள்ல மூழ்கி மகிழ்ந்திருக்கீங்க.

அப்துல்லா அண்ணே,

அதெப்படி எங்க சங்கத் தலைவர நீங்க இப்படி சொல்லீட்டீங்க. அவரு என்னைக்குமே யூத்து தான்.

செல்ல நாய்க்குட்டி மனசு said...

குறும்படம் மாணவர்களிடம் கரகோஷம் பெற்றதற்கு பிடியுங்கள் பாராட்டை.
அது என்னவோ தெரியல இப்பல்லாம் காத்து, ஜன்னல், கதவு னெல்லாம் கேட்டதும் படபடங்குது.

சைவகொத்துப்பரோட்டா said...

வாழ்த்துக்கள்.

pichaikaaran said...

"என் குறும்படம் திரையிடப்பட்டு கரகோஷங்களுடனான பாராட்டை பெற்றது என் சினிமா தேடலுக்கான வெறியை இன்னும் ஏற்றிவிட்டது என்றால் மிகையாகாது."

இந்த வெறி, கண்டிப்பாக வெற்றியை தேடி தர வேண்டும் , என எல்லாம் வல்ல இறைவனை அல்லது எல்லாம் வல்ல இயற்கையை பிரார்த்தித்து கொள்கிறேன்

Raju said...

கொலைவெறிப்படையின் வாழ்த்துக்கள் ஜி.

butterfly Surya said...

ஊரிலிருந்து வந்தாகி விட்டதா..?

CS. Mohan Kumar said...

ராஜு கொலை வெறி படை என்றதும் என்னடா கொஞ்ச நாளா உங்க கவிதையை காணுமேன்னு தோணுது

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//சைட் அடிப்பதற்காகவே பல்லாவரத்தில் இறங்காமல் அடுத்த ஸ்டேஷனில் இறங்கி எல்லோரையும் ”அனுப்பி” வைத்துவிட்டு அடுத்த ரயிலை பிடித்து அவசர அவசரமாய் காலேஜுக்கு போன //

40 varusaththukku munnaala...

Sabarinathan Arthanari said...

//கல்லூரியில் நடந்த கல்சுரல்ஸ் நிகழ்ச்சி ஒன்றுக்கு நடுவராய் கூப்பிட்டிருந்தார்கள். //
நல்லவேளை சாம்பார் சாதம் தந்தார்கள் என்று பதிவு போடவில்லை. ;)

//என் குறும்படம் திரையிடப்பட்டு கரகோஷங்களுடனான பாராட்டை பெற்றது//
வாழ்த்துகள்

அகல்விளக்கு said...

வாழ்த்துக்கள் சங்கர்ஜி....

VISA said...

ஜில்லுனு காத்து ஜன்னல சாத்து
அதே கரன்ட் கட் ஆயிடிச்சுன்னா

கதவை திற காத்து வரட்டும்.

பாபு said...

//பம்மலில் நான் பாலிடெக்னிக் படிக்கும் போது//

namma ooru

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

//எல்லோரையும் ”அனுப்பி” வைத்துவிட்டு //
இந்த அனுப்பி எனும் ஒரு சொல்லில் ஒரு பெரிய இளைஞர் தத்துவமே அடங்கியுள்ளது.ரசித்தேன்.

கிருஷ்ண மூர்த்தி S said...

/சுகுமார் அண்ணா, அதெல்லாம் நம்பள மாதிரி யூத்துங்க நடுவராப்போனா நடக்குறது. இவருக்கு இந்தப் பக்கம் சரோஜாதேவி அந்தப் பக்கம் புலியூர் சரோஜா மாஸ்டர் இருந்திருப்பாங்க./

தூள் பரத்துரீங்களே அப்துல்லா!!

இப்படியெல்லாம் வேறு ஆசை இருக்கிறதா:-))

பிரபாகர் said...

அந்த குறும்படம் மாதிரியே படமும் இருந்தால் சூப்பர் டூப்பர் ஹிட் தான்... அசத்துங்கண்ணே!

பிரபாகர்...

Busy said...

//பம்மலில் நான் பாலிடெக்னிக் படிக்கும் போது//


Meenakshi krishnan polytechniclaya padicheenga ?

திருநெல்வேலி ஜங்ஷன் said...

aha!!!!!!!!!!
supruuuuuuuuu

Romeoboy said...

பதிவர் சந்திப்புக்கு மட்டும் பெருசா பதிவை போட்டு வந்துடுங்க .. இந்த மாதிரியான நிகழ்ச்சிக்கு எல்லாம் தனியா போய் என்ஜாய் பண்ணுங்க .. நர நர நர .

மோனி said...

ரோமியோ நண்பா...
அது
நர நர நர இல்ல
நற நற நற...

நானும் நற நற நற...

shortfilmindia.com said...

@அத்திரி
என்னாது மலரும் நினைவுகளா.. ? ப்ரெசெண்ட்டும் அப்படித்தான்..:)

@புலவன் புலிகேசி
நன்றி

@சுகுமார் சுவாமிநாதன்
அங்கேயே நமிதா, கலா மாஸ்டர் எல்லாம் மாதிரியே நிறைய பேர்

இருந்தாஙக்..

@கே.ஆர்.பி.செந்தில்
கிழிஞ்சுது கிருஷ்ணகிரி

@எம்.எம.அப்துல்லா

என்ன ஒரு பொறாமை பாருப்பா..

@தராசு
அதானே கேளுங்க..தலைவரே

@நாய்குட்டி மனசு
ஹா..ஹா

@சைவகொத்துபரோட்டா
நன்றி

@பார்வையாளன்
நன்றி தலைவரே

@ராஜு
எங்கய்யா அளையே காணம்.?

@மோகன்குமார்
அதைத்தான் நானும் கேட்டேன்

@ரமேஷ் ரொம்ப நல்லவன்
அலோ.. தேவையில்லாமல எதுக்கு வருசத்தை பத்தியெல்லாம் பேசுறீங்க:)

@அகல்விளக்கு
நன்றி

@விசா
அதான் வந்திருச்சே

@பாபு
ஆமா..84-87 செட்

@சபரிநாதன்
நன்றி

2யோகன் பாரிஸ்
பாருங்க இளைஞர்ங்க நம்மளுக்கு மட்டும் தான்புரியுது..

@கிருஷ்ணமூர்த்தி
ஏன் உங்களுக்கு மட்டுமில்லையா..?

:)

@பிரபாகர்
நன்றிண்ணா..

@பிஸி
ஆமா. அதே பாலிடெக்னிக்தான். பர்ஸ்ட் பேட்ச்

@மிஸ்டர் இட்லி
நன்றி

@ராதாகிருஷ்ணன்
நன்ரி

@ரோமியோ
இதையெல்லாம் சொல்லிட்டா போவாங்க.. மோனி சொன்னா மாதிரி பல்லை ப்கடிங்க நன்றி மோனி:)

கேபிள் சஙக்ர்

Busy said...

Haa !!!!!!!!!!

Thala Padicha polytechniclaya padichuoommm!!!!!!!

Super Thala !!!!!!!!!!!!!!


Nan EEE first batch.

Busy said...

Anga natantha program photos upload / mail anuppa mudiuma....

angel said...

i also read the post

Thamira said...

லேட்டா பின்னூட்டம் போட்டா இப்போதான் படிக்கிறேன்னு நினைச்சுக்காதீங்க.. ஹிஹி.!

SurveySan said...

அண்ணாச்சி, காலேஜ் HOD பாத்துட்டு கடுப்பாயிடப்போறாரு. இப்படி அப்பட்டமா சைட் அடிச்சுட்டு வந்திருக்கீங்க.

பஸ் ஏறி, ரயிலில் திரும்பி வந்தத அருமை. அந்த நாள் ஞாபகம்.. :)

Ganesan said...

கல்சுரல்ஸ் நடுவரா தல

வாழ்த்துக்கள்

மயிலாடுதுறை சிவா said...

வாழ்த்துக்கள் சங்கர்...

ஏன் "ப்ராடெக்டை" என்று சொல்ல வேண்டும்?! அழகான தமிழில் "பொருளை" என்று சொல்லாமே!

ஆங்கில கலப்பு தவிர்க்க முடியாதுதான்! ஆனால் "ப்ராடெக்டை " கொஞ்சம் ஒவராக பட்டது!!!

நன்றி

மயிலாடுதுறை சிவா...