Thottal Thodarum

Apr 12, 2010

கொத்து பரோட்டா –12/04/10

விரைவில் வரப்போகும் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சிக்காக நக்கீரன் கோபாலிடம் ஒரு நேர்காணல் படப்பிடிப்பு நடத்தினோம். நேர்காணலில் புலனாய்வு பத்திரிக்கையாளரின் பணி மற்றும் அப்பணியின் பிண்ணனி என்ன என்பது பற்றி நிறைய பேசினார். அப்போது பல சமயம் பணம் கொடுத்துக் கூட செய்திகளை பெற்றிருக்கிறதாக சொன்னார். பேட்டி எடுத்தவர் சட்டென அதை பிடித்துக் கொண்டு மற்றவர்கள் லஞ்சம் வாங்கினால் அதை பற்றி உங்கள் பத்திரிக்கையில் வெளியிட்டு அவர்க்ளின் முகத்திரையை கிழிக்கிறீர்களே? இப்போது நீங்களே லஞ்சம் கொடுத்து செய்தியை பெறுகிறீர்கள் என்று சொல்கிறீர்களே..? என்று மடக்கியவுடன், நக்கீரன் கோபால் சிரித்தபடி அண்ணாசாலையில் 50 கிலோமீட்டர் வேகத்தில் தான் போக வேண்டும், அதை மீறி போனால் அவர்களை பிடித்து தண்டிப்பதுதான் ஒரு போலீஸ்காரன் வேலை. அதிக வேகத்தில் வண்டி ஓட்டிப் போகிற ஒருவனை சட்டப்படி ஓட்டக்கூடிய 50 கி.மீட்டரில் அவனை துரத்தினால் 100.கீ.மீட்டர் வேகத்தில் ஓட்டுபவனை பிடிக்க முடியுமா? அதனால் அவனை பிடிக்க 110 கீ.மீட்டர் வேகத்தில் ஓட்டினால் தான் பிடிக்க முடியும். அது போலத்தான் பணம் கொடுத்து செய்திகளை சேகரிப்பது என்றாரே பார்கலாம். இண்டலிஜெண்ட் பதில்.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
செவிக்கினிமை
மணிசர்மாவின் இசையில் சுறா படத்தில்  ”தஞ்சாவூர் ஜில்லாக்காரி” நிச்சயம் ஹிட் பட்டியலில் வரப் போகும் பாடலாய் தெரிகிறது. அதேபோல் சமீப காலத்தில் நிறைய முணுமுணுத்த பாடல் நாணயம் படத்தில் வரும் “நான் போகிறேன் மேலே..மேலே” தான்.  ஜீன்ஸ் படத்தில் வரும் பூவுக்குள் ஒளிந்திருக்கும் பாடலை ஞாபகப்படுத்தினாலும்..ஸ்வீட் மெலடி.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
இந்த வார செய்தி
இந்தோனிஷியாவில் ஒரு இளைஞர் தன்னுடய “லுல்லா”வை கட் செய்து காக்கா ஓஷ் செய்துவிட்டாராம். காரணம் காதல் தோல்வி. தன் காதலி தன்னை விட்டு வேறு ஒருவரை திருமணம் செய்துவிட்டதால் மனமுடைந்து அப்படி செய்துவிட்டாராம். மிகவும் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டிருக்கும் இவரின் “லுல்லாவை” கிணற்றில் தூக்கி போட்டு விட்டதால் இவர் பிழைத்தாலும்  “லுல்லா” இல்லாமல் தான் இவர் வாழவேண்டுமாம்.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
இந்த வார குறும்படம்
உலகமே எதிர்பார்க்கும் ஒரு ஹீரோவை பற்றிய குறும்படம்.  இதற்கான லிங்க் அனுப்பிய ஆதிக்கு நன்றிகள் பல. http://en.tackfilm.se/?id=1270958903718RA28


@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
இந்த வார தத்துவம் நீ வேகமாய் நடக்க விரும்பினால் தனியாக நட. நெடுந்தூரம் நடக்க விரும்பினால் சேர்ந்து நட – ரத்தன் டாடா
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
இந்த வார கிசுகிசு
தமிழகம் முழுவதையும் தன் கேபிளால் ஆண்டு கொண்டிருக்கும் சகோதரர்கள் நிறுவனத்துக்கு எதிராய் புதியதாய் ஒரு கேபிள் நெட்வொர்க் “அ”னாவின் ஆதரவில் ஏப்ரல் 14ல் ஆரம்பிக்க போகிறதாம். ஒரு வருடத்துக்குதான் கையில் காலில் எல்லாம் விழுந்து ‘அ”னாவுடன் பேசி செட்டில் ஆகியிருக்கு நிலையில் மீண்டும் தலை தூக்கியிருக்கும் புது நிறுவனைத்தை எப்படி டீல் செய்வது என்று குழம்பியிருக்கிறார்களாம் சகோதரர்கள்.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
ஏ ஜோக்
விவாகரத்துக்காக கோர்ட்டில் கவுன்ஸிலிங்கிலிருக்கும் கணவன் மனைவியிடம் குழந்தைகள் யார் வளர்பது என்ற பிரச்சனை வரும் போது மனைவி அவர்கள் தன் குழந்தைகள் என்றும் தான் தான் வளர்ப்பேன் என்று வாதாட, கணவன் அமைதியாய் ஜட்ஜிடம் “சார். கோக் மெஷின்ல நான் காசு போட்டவுடன் கோக் வருது. அப்ப அந்த கோக் மெஷினுதா இல்லை என்னுதா..?”
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

கேபிள் சங்கர்
Post a Comment

30 comments:

மோகன் குமார் said...

தத்துவம் அருமை. ஜோக் பெண்களை சற்று அவமதிப்பதை உள்ளது தல

Cable Sankar said...

@mohan kumar
அது ஜோக் தலைவரே..:)

தராசு said...

அந்த கோக் மேட்டர் சூப்பர் அண்ணே.

VISA said...

ஆனா கோயில் உண்டியல்ல காசு போட்டா நமக்கு எதுவும் டெலிவரி கிடைக்கிறதில்லையே அது என்ன கணக்கு.

இப்படிக்கு
வால் பையன்.

Prasanna Rajan said...

ஹீரோ சார்!! உங்க அலம்பல் ஃபேஸ்புக்லயே தாங்க முடியல. இங்கயுமா??

Cable Sankar said...

/ஹீரோ சார்!! உங்க அலம்பல் ஃபேஸ்புக்லயே தாங்க முடியல. இங்கயுமா??
//

ஹி..ஹி..ஹி..

ramtirupur said...

ஹீரோவைப் பற்றிய குறும்படம்.
( கவுண்டமனி பாணியில் )யப்பா..அட சாமி..

சைவகொத்துப்பரோட்டா said...

எப்படியெல்லாம் யோசிக்கிறாங்க!!!
(கோபாலின் பதில்)

கே.ஆர்.பி.செந்தில் said...

வணக்கம் தல, உங்க கட்சியில எனக்கு என்ன பதவி தருவீங்க

♠ யெஸ்.பாலபாரதி ♠ said...

//இப்போது நீங்களே லஞ்சம் கொடுத்து செய்தியை பெறுகிறீர்கள் என்று சொல்கிறீர்களே..? என்று மடக்கியவுடன், நக்கீரன் கோபால் சிரித்தபடி அண்ணாசாலையில் 50 கிலோமீட்டர் வேகத்தில் தான் போக வேண்டும், அதை மீறி போனால் அவர்களை பிடித்து தண்டிப்பதுதான் ஒரு போலீஸ்காரன் வேலை. அதிக வேகத்தில் வண்டி ஓட்டிப் போகிற ஒருவனை சட்டப்படி ஓட்டக்கூடிய 50 கி.மீட்டரில் அவனை துரத்தினால் 100.கீ.மீட்டர் வேகத்தில் ஓட்டுபவனை பிடிக்க முடியுமா? அதனால் அவனை பிடிக்க 110 கீ.மீட்டர் வேகத்தில் ஓட்டினால் தான் பிடிக்க முடியும். அது போலத்தான் பணம் கொடுத்து செய்திகளை சேகரிப்பது என்றாரே பார்கலாம். //

அடப்பாவி மக்கா... அன்னைக்கொரு பேச்சு.. இன்னைக்கொரு பேச்சு கிடையாது போலிருக்கு கோபால் அண்ணாச்சிக்கு... சில வருடங்களுக்கு முன் ஒரு நேர்காணலில் வீரப்பன் பற்றிய செய்திகளை வெளியிடுவது குறித்த கேள்விக்கும் இதே பதிலைத்தான் தந்தார்... :))

King Viswa said...

பாலா,
//இப்போது நீங்களே லஞ்சம் கொடுத்து செய்தியை பெறுகிறீர்கள் என்று சொல்கிறீர்களே..? என்று மடக்கியவுடன், நக்கீரன் கோபால் சிரித்தபடி அண்ணாசாலையில் 50 கிலோமீட்டர் வேகத்தில் தான் போக வேண்டும், அதை மீறி போனால் அவர்களை பிடித்து தண்டிப்பதுதான் ஒரு போலீஸ்காரன் வேலை. அதிக வேகத்தில் வண்டி ஓட்டிப் போகிற ஒருவனை சட்டப்படி ஓட்டக்கூடிய 50 கி.மீட்டரில் அவனை துரத்தினால் 100.கீ.மீட்டர் வேகத்தில் ஓட்டுபவனை பிடிக்க முடியுமா? அதனால் அவனை பிடிக்க 110 கீ.மீட்டர் வேகத்தில் ஓட்டினால் தான் பிடிக்க முடியும். அது போலத்தான் பணம் கொடுத்து செய்திகளை சேகரிப்பது என்றாரே பார்கலாம். //

அடப்பாவி மக்கா... அன்னைக்கொரு பேச்சு.. இன்னைக்கொரு பேச்சு கிடையாது போலிருக்கு கோபால் அண்ணாச்சிக்கு... சில வருடங்களுக்கு முன் ஒரு நேர்காணலில் வீரப்பன் பற்றிய செய்திகளை வெளியிடுவது குறித்த கேள்விக்கும் இதே பதிலைத்தான் தந்தார்... :)//


நேரத்திற்கு ஏற்றார்போல பேச்சை மாற்றும் மனிதர்களுக்கு இடையில் ஒரே மாதிரி பேசும் கோபால் அண்ணா பரவாயில்லை அல்லவா?

King Viswa said...

கேபிளாரே,

வோட்டு போடா சென்றால் இப்படி ஒரு பிரச்சினை: (கூகுல் குரோம்)
//Warning: Visiting this site may harm your computer!
The website at www.tamilish.com contains elements from the site aathavanonline.com, which appears to host malware – software that can hurt your computer or otherwise operate without your consent. Just visiting a site that contains malware can infect your computer.
For detailed information about the problems with these elements, visit the Google Safe Browsing diagnostic page for aathavanonline.com.
Learn more about how to protect yourself from harmful software online.//

எதனால்/யாரால் பிரச்சினை என்று பார்த்தால் "ஆதவன் ஆன்லைன்" என்று தகவல். சகோதரர்களை பற்றி எழுதினால் ஆதவனுக்கு (சூரியனுக்கு) பிடிக்காதோ?

ஆதிமூலகிருஷ்ணன் said...

எல்லாமும் இருக்கு. நல்லாவும் இருக்கு.

KVR said...

//உலகமே எதிர்பார்க்கும் ஒரு ஹீரோவை பற்றிய குறும்படம். இதற்கான லிங்க் அனுப்பிய ஆதிக்கு நன்றிகள் பல//

கொஞ்சம் பழசு தான். ஆனாலும் ரசித்தேன் :-)

கரிகாலன் said...

சார், சூப்பரா இருந்துது பரோட்டா... அந்த கோக்கும், அண்ணா நெடுஞ்சாலையும் பிரமாதம்....

வழக்கம் போல சூப்பர்

Sukumar Swaminathan said...

ரைட்டு .... உள்ளேன் ஐயா....

Yuva said...

தயவுசெய்து அந்த ரூட்ல போகவேணாம்... நாங்க ஒரு சிறந்த இயக்குனரை இழக்க விரும்பல. யாருப்பா அது கேபிளாரை சிக்ஸ் பேக்கில் பார்க்க நினைத்தது? :-\

மிஸ்டர் இட்லி said...

ரசனையான பதிவு!
வாழ்த்துகள் கேபிள்.

kanagu said...

nalla irundhudu anna... athuvum coke matter super.. :)

அகில் பூங்குன்றன் said...

வீடியோ சூப்பர்........

அறிவிலி said...

ஆதியை இது வரைக்கும் நேர்ல பாக்கல. இனிமே பாத்தா அவுருக்கு நல்லதில்ல. இது வரைக்கும் கொலைவெறின்னா என்னன்னு தெரியாம இருந்தேன். இன்னிக்கு எனக்கு வந்துருச்சு...

சாம்ராஜ்ய ப்ரியன் said...

:D

ராம்ஜி_யாஹூ said...

I think you do not have any moral ethic at all.
Nakkeeran Gopal has behaved a clear oppurtunistist in Nithyanadha ranjitha video issue.

காவேரி கணேஷ் said...

ஜயா,

சாப்பாட்டு கடை காலியாருக்கு, கவனிக்கவும்

shabi said...

படம் பேஜாரு பக்கா வெட்டிங் ஒட்டிங்

Thilak said...

Short film Super enga... new Super Hero!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//குறும்படம்//

முதல் மரியாதை பாகம் 2 ஆ? ஹீரோ ன்னு நாற்ப்பது வயது ஆளை காட்டுறீங்க?

sarvesh the great said...

அப்பா இது உன்னக்கே ஓவரா தெரியலையா

Kolipaiyan said...

Anna, I don't like this (A) joke this time. But overall SUPERB!

We are expecting your program to watch in Ctv.

DREAMER said...

வீடியோ அருமை... இதே நம்மூருல இந்த வீடியோவை எடுத்திருந்தா, ஸ்டார்ட்டிங்கல 'ONLINE THALAPATHI'னு ஹீரோ கார்டு போட்டிருப்பாங்க...

தகவல்களும் அருமை.

-
DREAMER