Thottal Thodarum

Apr 26, 2010

கொத்து பரோட்டா –27/04/10

யுனிவர்சலின் அராஜகம்
சமீபத்தில் புதிய மொபைல் வாங்குவதற்காக யூனிவர்சல் தி.நகர் பிராஞ்சுக்கு சென்றிருந்தேன். ஏற்கனவே விசாரித்து வைத்திருந்த சில மாடல்களை பற்றி மீண்டும் விசாரித்தேன். வெளியே நான் விசாரித்த விலையை விட சுமார் 500-600 அதிகமாக இருந்தது. ஏன் இவ்வளவு அதிகமாக சொல்கிறீர்கள்? இதே தியாகராயா ரோடில் இருக்கும் கடையில் இதை விட இன்னும் குறைவாக விற்கும்போது இவ்வளவு அதிகம் விற்றால் எப்படி? என்றதும். அவர்கள் நான் குறிப்பிட்ட மாடல் நம்பரை கேட்டார்கள். நான் மீண்டும் சொன்னவுடன், நாங்கள் சொன்னது அடுத்த மாடல் என்றார்கள். சரி நான் கேட்ட மாடலின் விலையை சொல்லுங்க. என்றதும். நீங்க கேட்குற விலைக்கு எல்லாம் வாங்க முடியாது. என்று விவாதம் செய்ய ஆரம்பித்தார்கள். எனக்கு கோபம் வந்தது. என்னுடன் வாருங்கள் நான் உங்களுக்கு வாங்கித்தருகிறேன். என்றதும், நீ கேட்கிற ரேட்டுக்கு பர்மா பஜார் பீஸ் தான் கிடைக்கும்.. நாங்க ஒரிஜினல் பீஸ் தான் தருகிறோம் என்று ஒருமையில் ஆரம்பிக்க, உன்னை யார் கடைக்கு வர சொன்னது போன்ற கேள்விகளை கேட்டவர் அக்கடையில் ஓனராக இருந்தாலே தவறு. ஊழியர் ஒருவர் கேட்க பெரிய ப்ரச்சனை ஆக, வேறு ஒருவர் வந்து என்னிடம் அவருக்காக மன்னிப்பு கேட்டு ப்ரச்சனையை முடித்துக் கொண்டு வெளியே வந்தேன். universal the mobile expert  ஆக இருக்கலாம். A Poor & Arogant shop keepers
%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%
ஐ.பி.எல்
நேற்றிரவு சென்னை சூப்பர் கிங்ஸ் சாம்பியன் ஆனது. மேட்ச் பிக்ஸிங், அது இது என்று பேசிக் கொண்டிருக்கிறார்களே என்று யோசித்து கொண்டிருந்த போது ஒரு ரன் அவுட், முதல் ரன்னிலேயே ஒருவர் அடுத்தவரை பற்றி கவலைப்படாமல், பிட்சைவிட்டு  வெளியே ஓடி, ரன் அவுட் ஆனார். இப்படி சில.. ஒரு வேளை பிக்ஸிங்தானோ..???
%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%

1800 கோடி பணமாகவும் சுமார் 800 கோடிக்கு நகைகளாகவும் மாட்டியிருக்கிறதாம். மருத்துவ கவுன்சில் தலைவர் கேதன் தேசாய் வீட்டில். இப்படியெல்லாம் இருந்தா ஏன் மாவோயிஸ்ட்டு, நக்ஸலைட்டுன்னு வர மாட்டாங்க.. நம்ம ஊர்ல ”இவஙக” பண்ணுற அளும்புக்கு ”இங்கேயும்” ஏதாவது ஒரு ”ஸ்ட்டு” வந்திருவாங்கன்னு நினைக்கிறேன். மினிஸ்டரி ஆப் ஹெல்த்  துறையின் மந்திரியாகத்தானே முன்னாள் மத்திய மந்திரி அன்பு மணி இருந்தார்.? 1800 கோடி ஒரு நாள்ல அடிக்க முடியும்? எங்களை ஆட்சியில் அமர்த்தியபின் தவறு இருந்தால் ஏன் என்று கேளுங்கள் என்று மருத்துவர் அறிக்கைவிட்டார். அமைச்சர் ஆனதுக்கே முடியல.. ஏற்கனவே எங்க குடும்பத்திலேர்ந்து யாராவது அரசியலுக்கு வந்தா சாட்டையால அடிங்க்ன்னு அறிக்கைவிட்ட அய்யாதானே..!!!
%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%
செவிக்கினிமை
ஏ.ஆர்.ரஹ்மான், மணிரத்னம், காம்பினேஷன் “ராவண்” படத்தின் பாடல்கள் வெளியாகியிருக்கிறது. வழக்கமான டெக்னோ இசையாய் இல்லாமல் அநேகமாய் திரையில் படத்தோடு ஓடும் மாண்ட்ஜ் முறை பாடல்களாய் இருக்கும் என்று தோன்றுகிறது. முதல் பாடலான “பீரா..பீரா” பாடலும், “பெஹ்னே தே” பாடலும் நிச்சயம் ஹிட் லிஸ்ட் பாடல்களாயிருக்கும் என்று நம்பலாம். அதிலும் ‘பெஹனே தே” பாடலில் உள்ள ஒரு ட்ரான்ஸ் தனம் நிச்சயம் நம்முள் இறங்கி தலையாட்ட வைத்துவிடுகிறது. “தோக் தே கில்லி” பாடலும் கிட்டத்தட்ட இதே ரகம்தான்.

அதே போல் இஷ்கியா படத்தில் வரும் ”தில் தோ பச்சாஹே ஜி” பாடலை கேட்டிருக்கிறீர்களா? ராஹத் ஃபதே அலி கானின் குரலில் இருக்கும் ரானெஸ் உங்களை மயக்காமல் இருக்காது. இதற்கான வீடியோவில் பஸ்ஸில் நஸ்ருதீன் ஷாவுடன் வரும் பெண்ணின் கண்களீல் தெரியும் சிரிப்பையும்,ரியாக்‌ஷனை பாருங்க.. அவ்வளவு க்யூட்டாக இருக்கும்
%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%
சாப்பாட்டுக்கடை
சென்னை தேவி தியேட்டரின் அப்படியே நேர் பின்புறம் சென்றால் ஒரு சின்ன கடையில் சரியான கூட்டம் இருக்கும். அது ஒரு சின்ன ஸ்வீட் மற்றும் காரம் விற்கும் கடை. அவ்வப்போது ஹிந்தி பட ஹீரோக்கள் இருக்கும் ஸ்டைலில் கடை ஓனர் பையன் டிரஸ் செய்து கொண்டு வியாபாரம் பார்ப்பான். மிக அருமையான சமோசாவும், கச்சோடியும், ப்ரெஷ்ஷாக அன்றைக்கு அன்று போடப்பட்ட ஜிலேபி, பால்கோவா, பாஸந்தி அட்டகாசமாய் இருக்கும். அதிலும் லஸ்ஸி அவ்வளவு திக்காக, புளிக்காமல் இருக்கும். எல்லா அயிட்டங்களும் ஒரு மந்தார இலையில்தான் வைத்து சர்வ் செய்யப்படும் இக்கடையில்  ஸ்பெஷாலிட்டி சமோசாவும், லஸ்ஸியும்தான். ஒரு சமோசா, நூறு கிராம் ஜிலேபி, ஒரு ஸ்வீடோ, ஸால்டோ, மசாலா ஜல்ஜீரா லஸ்ஸியோ சாப்பிட்டால் மத்யான லஞ்சே முடித்துவிடலாம். டிவைன்.
%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%
இந்த வார விளம்பரம்
3 ஜி போன் சேவையை மைய்யப்படுத்தி எடுக்கப்பட்ட விளம்பரப்படம்.
%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%
இந்த வார குறும்படம்
மேக்கிங்குக்காகவும், எடிட்டிங்குக்காகவும், இக்குறும்படத்தை பார்க்கலாம்.
%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%
இந்த வார புத்தகம்
தஞ்சை ப்ரகாஷின் கதைகள். காவ்யா வெளீயீடு. மிக இயல்பாக கதை சொல்கிறார். மனிதனுக்கும், காமத்திற்குமான போராட்டத்தை முப்பது வருடங்களுக்கு முன்னாலேயே மிகச் சுதந்திரமாகவும், தைரியமாகவும் எழுதியிருக்கிறார். இன்னும் முழுவதுமாக படித்து முடிக்கவில்லை. முதல் கதையான அங்கிள் கதையும், ஜானுபாட்டி அழுது கொண்டிருக்கிறாளூம் நிழலாடிக் கொண்டேயிருக்கிறது. முழுவதும் படித்துவிட்டு சொல்கிறேன்.
%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%
தப்பர்த்த வாசகங்கள்
எல்லா பசங்களும் நேத்து ராத்திரி நல்லா ப்ர்பார்ம் பண்ணாங்க.. ப்ரீத்தி ஜிந்தா
%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%
இந்த வார தகவல்
Checkupக்கும் Pickupக்கும் என்ன வித்யாசம்?
நர்ஸ் நம்ம கையை பிடிச்சா அது செக்கப், அதே நர்ஸை நாம கைய பிடிச்சா அது பிக்கப்பு..
%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%
இந்த வார தத்துவம்
மெழுகுவர்த்தியோட சைஸ் எப்படி இருந்தாலும் அது தரக்கூடிய ஒளி ஒரே அளவுதான். அதே போல் தான் நாம் வகிக்கும் பொறுப்பும் எவ்வளவு பெரியது என்று முக்கியமில்லை. அதை நிர்வகிக்கும், செயல்படுத்தும் திறமைதான் முக்கியம்.
%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%
ஏ ஜோக்
சிறு பெண் குழந்தை ஒரு முறை அப்பா குளிக்கும் போது உள்ளே போய்விட.. அப்பாவின் லுல்லாவை பார்த்து “ இது என்ன? “ என்றதும், ஒரு மாதிரி சமாளிக்க, “இதான் கடவுள் கொடுத்த ஆப்பிள் மரம். இது இல்லைன்னா நாம இல்ல” என்று சொல்ல. அதை அம்மாவிடம் போய் சொல்ல, அம்மா கேட்டாள் “ அதில வேஸ்ட்டா ஒரு கிளை தொங்கிட்டு இருக்குமே அதை பத்தி சொன்னாரா?”
%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%

Post a Comment

44 comments:

ஜெட்லி... said...

இது போன்ற செல்போன் கடைகள் அனைத்துமே விளம்பரங்களை
போட்டு மக்களை கவர்கின்றனர்....கடையில் போய் கேட்டால் இதுக்கு ஆபர் இல்லை அதுக்கு ஆபர் இல்லை என்பார்கள்.....

அந்த சாப்பாட்டு கடையில் சாப்பிட்டு ரொம்ப நாள் ஆச்சு....!!

Paleo God said...

மொபைல் போனுக்கு அங்காடித் தெரு போயிருக்கலாமே?
1800கோடி கேஷாவே இருந்திச்சா? அடங்கொன்னியா!!
ஏற்கனவே நேத்து ஃபைனல் மேட்ச்னு ஃபிக்ஸ் பண்ணினதுதானே தல? அப்புறமும் ஏன் மேட்ச் ஃபிக்ஸிங்கான்னு கேள்வி??

:))

Cable சங்கர் said...

/அந்த சாப்பாட்டு கடையில் சாப்பிட்டு ரொம்ப நாள் ஆச்சு....!//

நான் எப்ப மவுண்ட் ரோடு பக்கம் போனாலும்.. ஒரு சமோசா சாப்பிடாம வரதில்லை

செ.சரவணக்குமார் said...

கொத்து பரோட்டா அருமை.

யுனிவர்ஷல் ஷோரூம் போன்ற இடங்களில் வாடிக்கையாளர்களை மதிக்கத் தெரியாத போக்கு காலம் காலமாகத் தொடர்ந்துகொண்டிருக்கிறது.

தஞ்சைப் பிரகாஷின் கதைகளை முழுதும் வாசித்த பின் அதுபற்றி பதிவிடுங்கள் தலைவரே.

Cable சங்கர் said...

@சரவணக்குமார்
தலைவரே உங்க போன் ஏன் நான் ரீச்சபிள்ளே இருக்கு? முடிந்தால் கால் செய்யவும்.

Romeoboy said...

ishqiya பாட்டு சூப்பர் .. சாப்பாடு கடை நல்லா நியாபகம் இருக்கும். ஹ்ம்ம் டைம் தான் இல்ல அங்க போக.

Romeoboy said...

தஞ்சை பிரகாஷ் கதைகள் எங்கு கிடைக்கும் .. விரிவான அறிமுகம் பண்ணுங்க.

Cable சங்கர் said...

ரோமியோ.. தஞ்சை ப்ரகாஷ் கதைகள் கே.கே.நகர் டிஸ்கவரிபுக் பாலஸில் கிடைக்கிறது.

ஈரோடு கதிர் said...

//ஒரு வேளை பிக்ஸிங்தானோ..??? /

யூத்து மாதிரி நடிக்கலாம்..
ஒன்னும் தெரியாத குழந்தை மாதிரி நடிக்கப்படாது!!!!

ramtirupur said...

இதுக்குத்தான் நான் கிரிக் ‘கெட்டே’ பார்க்கறதில்லை.

T.V.ராதாகிருஷ்ணன் said...

கொத்து பரோட்டா வழக்கம்போல :))

KTM Nizar said...

நீங்க சொன்ன அந்த சாப்பாட்டு கடை எனக்கும் ரொம்ப பிடிக்கும் சென்னை தேவி தியட்டர் போனா அந்த கடிக்கு போகாமல் இருப்பதில்லை..

கண்ணா.. said...

நீஙக சண்டை போட்ட ஊழியரை கொஞ்சம் அங்காடி தெரு ஹீரோவா கற்பனை பண்ணி பாருங்க... அவர் சைடும் புரியுற மாதிரி இருக்கலாம்..

:)

shortfilmindia.com said...

/நீஙக சண்டை போட்ட ஊழியரை கொஞ்சம் அங்காடி தெரு ஹீரோவா கற்பனை பண்ணி பாருங்க... அவர் சைடும் புரியுற மாதிரி இருக்கலாம்..

:)//

நிச்சயம் அப்படி கம்பேர் செய்ய மாட்டேன். ஏன் என்றால் அவனுடய வேலையே நான் கேட்பதற்கான பதிலை சொல்வதும், அப்பொருளை எடுத்துக்காடுவதும்தான்.

ஜெய் said...

இது மட்டும் இல்லைங்க கேபிள் சங்கர்.. இன்ஸ்யூரன்ஸ்னு சொல்லி ஒரு 200 ரூபாய் வாங்கறாங்க.. பஸ்ல போனப்போ மொபைலை பிக் பாக்கெட் அடிச்சுட்டாங்க.. இன்ஸ்யூரன்ஸ் claim பண்ண, போலீஸ் கிட்ட theft அப்படின்னு போட்டு ரிபோர்ட் வாங்கணுமாம். Lost அப்படின்னு போட்டா கிடைக்காதுன்னு சொன்னாங்க.. போலீஸ் என்னன்னா, theft-னு போட்டா எங்களுக்கு தலைவலி. Lost-னு தான் போடுவோம்னு சொல்லறாங்க.. மொத்தத்துல இன்ஸ்யூரன்ஸ் வேஸ்ட்.

pichaikaaran said...

சாப்பாடு கடை அருமை... அதிக தொகுதி இட ஒதுக்கீடு செய்து, அதிக கடைகளை அறிமுகம் செய்யுமாறு கேட்டு கொள்கிறேன்...

முடிந்தால், சிறப்பு பதிவாக, இதுவரை வந்த அனைத்து சாப்பாடு கடை பகுதியையும், தொகுத்து,ஒரே பதிவாக போடும்படி , அன்புடன் கேட்டு கொள்கிறேன்

Sukumar said...

PResent Sir..

க.பாலாசி said...

யுனிவர்செல்ல ஒரு தெருவுல இருக்குற கடைக்கும் அடுத்த தெருவுல இருக்குற கடைக்குமே ரேட் டிப்ரன்ஸ் இருக்கு.... யுனிவர்செல்க்கு போறதுக்கு பதிலா வேற லோக்கல் கடையிலையே வாங்கிக்கலாம்....

1000 கோடி, 500 கோடின்னு எல்லாத்துலையும் பணம் பாத்துடுறானுவோ.... நம்மளால அஞ்சுபைசா தேத்த முடியல... என்ன பண்றது.... அவனுங்கள நடுரோட்டுல நிக்கவச்சி... ..............வெட்டனும்....

Sukumar said...

- Universal மற்றும் கடந்த வாரம் நீங்கள் பதிவிட்ட Airtel பிரச்சனைக்கு -

http://www.youtube.com/watch?v=5YGc4zOqozo

இந்த லிங்க்- ஐ பார்த்திருப்பீர்கள் என நினைக்கிறேன்... united விமானத்தில் பயணம் செய்து தன் உடைபட்ட கிட்டாருக்கு ஞாயம் கிடைக்காமல் நூதன முறையில் பழி வாங்கியவர் கதை... நீங்களும் திரைத்துறையில் இருப்பதால் இது போல ஏதாவது செய்யலாமே....??

சைவகொத்துப்பரோட்டா said...

தத்துவம் நல்லா இருக்கு, அந்த ஜோக் ஹா......ஹா.....

ஜெய் said...

// ஜிலேபி, பால்கோவா, பாஸந்தி, சமோசா, கச்சோடி, மசாலா ஜல்ஜீரா, லஸ்ஸி //
ஏங்க.. பெங்களூரு பக்கம் எல்லாம் நீங்க வந்து இப்படி நாலு இடத்தை கண்டுபிடிக்க மாட்டீங்களா?

எல் கே said...

poorvika try pannunga thala

எல் கே said...

neenga kurippita runout rayudu out aanathunu ninaikiren. antha timnela pollard strike venumgarathukaga 2nd run odinaar. so rayudu sacrifised his wkt. (same logi applies to morkels wicket)

Unknown said...

தஞ்சை பிரகாஷ் கதைகள் நானும் இந்த முறை இந்தியா வந்தப்போ தான் வாங்கினேன். அதே ரெண்டு கதையோட நிக்குது. படிக்கணும்.

ஏ - கொடுத்த வாக்கைக் காப்பாத்திட்டிங்க ஜி :-)

ரமேஷ் வைத்யா said...

//27/04//
future writer!

CS. Mohan Kumar said...

//தஞ்சை ப்ரகாஷின் கதைகள்.// அடடா தஞ்சையில் நான் பல முறை பார்த்த, வியந்த மனிதர்.படிக்கனுமே!!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

Airtel, Univercel & parking - இந்த மாதம் பிரச்சனை மாதமா?

ees said...

சாப்பாடு கடை காதல் படத்துல "உனக்கென்ன" பாட்டுக்கு முந்தின சீன் ல வருமே ? அதானே ?

sriram said...

//மெழுகுவர்த்தியோட சைஸ் எப்படி இருந்தாலும் அது தரக்கூடிய ஒளி ஒரே அளவுதான். அதே போல் தான் நாம் வகிக்கும் பொறுப்பும் எவ்வளவு பெரியது என்று முக்கியமில்லை. அதை நிர்வகிக்கும், செயல்படுத்தும் திறமைதான் முக்கியம்.//

மொதோ வரி படிச்சிட்டு ரெண்டாவது வரிய வேற மாதிரி எதிர் பார்த்தேன், கொஞ்சம் மாத்தியிருந்தா A ஜோக் செக்‌ஷன்ல போட்டிருக்கலாம்

என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்

Cable சங்கர் said...

@jetli
சரியான உட்டாலக்கடி கடை அது

@ஷங்கர்
:)

ரவி said...

///மொதோ வரி படிச்சிட்டு ரெண்டாவது வரிய வேற மாதிரி எதிர் பார்த்தேன், கொஞ்சம் மாத்தியிருந்தா A ஜோக் செக்‌ஷன்ல போட்டிருக்கலாம்

என்றும் அன்புடன்
///

சேம் ப்ளட்.

Jackiesekar said...

:)

Madumitha said...

ப்ரகாஷ் பத்தி எழுதியிருந்தது
ரொம்ப சந்தோஷத்தைக்
கொடுத்தது. நாங்கள் அவருடன்
ஊர் சுற்றிய ஞாபகம் வருகிறது.
நன்றி ஷங்கர்.

Test said...

கொத்து பரோட்டா அருமை.

//தப்பர்த்த வாசகங்கள்//
;-))))

//சாப்பாட்டுக்கடை :
அவ்வப்போது ஹிந்தி பட ஹீரோக்கள் இருக்கும் ஸ்டைலில் கடை ஓனர் பையன் டிரஸ் செய்து கொண்டு வியாபாரம் பார்ப்பான்.//

20 வருடங்களுக்கு மேல் நடத்தப்படும் கடை அது... அவருக்கு இரண்டு மகன்கள் ...

Cable சங்கர் said...

@ரிமோ
சூப்பர் பாட்டு


@ஈரோடு கதிர்
வேணாம் விட்ருங்க..

@ராம் திருப்பூர்
ரொம்ப நல்லதா போச்சு

@டி.வி.ராதாகிருஷ்ணன்
நன்றி

@கேஎம்டி நிசார்
நிச்சயம் ஏரியா தெரிஞ்சவங்க போகாம இருக்க மாட்டாங்க

Cable சங்கர் said...

@ஜெய்
ஆமாம் ஜெய்

@பார்வையாளன்
நன்றி
விரைவில் சாப்பாட்டுக்கடை மட்டுமே தனி பதிவாக போடலாம் என்று இருக்கிறேன்

@சுகுமார்
நன்றி

@க.பாலாசி
அதச் சொல்லுங்க

Cable சங்கர் said...

@சைவகொத்துபரோட்டா
நன்றி

@ஜெய்
வந்திட்டா போச்சு

@எல்கே
அவஙக்கொஞச்ம் பரவாயில்லை

@எல்கே
:)

@கேவிஆர்
நன்றி

நாங்களெல்லாம் வாக்கு மாறமாட்டோம்

Cable சங்கர் said...

@ரமேஷ் வைத்யா
பின்ன..:)

@காம்ப்ளேன்சூரியா
நன்றி

@மோகன் குமார்
நிச்சய்ம் படிங்க

@ரமேஷ் ரொம்ப நல்லவன்
விடமாடோமில்ல

@ஈஸ்
சரியா தெரியலை சார்.

Cable சங்கர் said...

@பாஸ்டன்ஸ்ரீராம்
அடுத்த வாரம் நான் மாத்தி போடலாம்னு இருந்தேன் லீக் பண்ணிட்டீங்களே..?

@செந்தழல் ரவி
நீங்களூமா.?

@ஜாக்கி சேகர்
நன்றி

Cable சங்கர் said...

@மதுமிதா
உங்களை நான் தஞ்சையிலோ. அல்லது சென்னையிலோ சந்திக்க விருப்பம்

@லோகன்
நன்றி

DREAMER said...

யூனிவர்சல் அராஜகம் ஒழிக! அந்த சாப்பாட்டுக்கடையில் எனக்கு லஸ்ஸி ரொம்ப பிடிக்கும்! 3G விளம்பரம் அருமை சார்..! Afforestation - A ஜோக் ஹி ஹி..!

-
DREAMER

NILAMUKILAN said...

கொத்து பரோட்டவோட மெனு நல்லா இருக்கு. ஒவ்வொன்றும் மணி. நன்றி.

மரா said...

கொத்து சூப்பர்.....தஞ்சைப் ப்ரகாஷ் படிச்சதும் சொல்லுங்க.’கரமுண்டார் வீடும்’,’மீனின் சிர்றகுகளும்’ தாரேன். சொக்கிப் போயிருவீங்க அவர் எழுத்தில். அவருடன் பழகிய நாட்கள் ஞாபக நிழலாடுகின்றன தலைவரே!

Dinesh said...

match fixing'a...

panam kuduthu fix panna athu enna sadha team'a.. ampani team.. avan nenachi eruntha erukara team'ayum la vanghi eruppar...