தமிழ் சினிமாவின் இமயமும், சிகரமும் இணைந்து நடித்திருக்கும் படம், இயக்குனர் ஷங்கரின் தயாரிப்பு, அங்காடித்தெரு அஞ்சலி நடித்திருக்கும் படம், என பலவிதமான எதிர்பார்புகளோடு வெளியாகியிருக்கும் படம்..
ஒரு ஊரில் இரண்டு தாத்தா இருந்தார்கள். இருவருக்கும் நாற்பது வருஷ பகை. இவர்களின் பகை இவர்களின் கடைக்குட்டி வாரிசுகளுக்கும் தொற்றிக் கொள்ள, இரண்டு பக்கமும் பகை. ஒரு கட்டத்தில் பாலசந்தர் வீட்டு பையனும், பாரதிராஜா வீட்டு பெண்ணும் காதலிக்க, இதை தெரிந்த இரண்டு வீட்டு குட்டி பசங்கள் ஒன்று சேர்ந்து காதலர்களை சேர்த்து வைக்க முயற்சிக்கிறார்கள். காதலர்கள் இருவரும் ஒன்றாக சேர்ந்தார்களா? பெரிசுகளிடையே இருந்த பகை தீர்ந்த்தா என்பதை வெள்ளித்திரையில் பார்த்துக் கொள்ளுங்கள்.
ஆரம்ப காட்சி முதலே ஒரு குழப்பம் கிளம்பிவிடுகிறது. இது சீரியஸ் படமா? அல்லது காமெடி படமா? என்று. ஏனென்றால் பாலசந்தர், பாரதிராஜா இருவரது நடிப்பும் ஒருவர் மேல் ஒருவர் காட்டும் காழ்ப்புணர்ச்சி ஏதோ காமெடி பட சீன்கள் போல இருக்கின்றதே தவிர கொஞ்சம் கூட சீரியஸ்னெஸ் இல்லை. அப்படி காமெடி படம் தான் என்றால் அதிலும் சீரியஸ்னெஸ் இல்லை. அதிலும் இந்த தள்ளாத வயதில் கை நடுங்க துப்பாக்கி தூக்கி பாலசந்தர் மிரட்டும் காட்சியில் எல்லாம் சிரிப்புத்தான் வருகிறது. அவர்கள் மோதும் காட்சிகள் கூட காமெடியாய் செய்ய முயற்சி இருக்கிற்தே தவிர சீரியஸாக எதுவும் இல்லை. ப்ளாஷ்பேக்கில் இருவருக்கும் என்ன பிரச்சனை என்று சொல்கிறார்கள். அதற்கான காட்சியமைப்புகளில் படு காமெடியாய் இருக்கிறது.
படம் நெடுகிலும் வரும் சிறுவர்கள் வயதுக்கு மீறிய காதல் பேச்சுகளை பேசியபடி வருகிறார்கள். அதிலும் காதல் ஜோடிகளின் ப்ளாஷ்பேக்கில் இவர்கள் பருத்திவீரனை கிண்டல் செய்கிறார்களா? இல்லை அதை போலவே காட்சியமைத்திருக்கிறார்களா? என்று குழப்பம் வேறு. பத்து வயது பெண்ணிடம் மாமன் மகனாய் இருந்தாலும் முத்தம் கேட்டால் எந்த தாத்தா உதைக்காமல் இருப்பார்?. பாரதிராஜாவுக்கு கல்யாணமே ஆகவில்லை என்றால் அவரின் குடும்பத்தில் அஞ்சாறு பசங்கள் ஏது? கதாநாயகி யாருடய பெண்? இவருக்கு எப்படி பேத்தியாக முடியும். அதே போல் கதாநாயகன் பாரதிராஜாவின் தங்கச்சி பையன் அப்படியிருக்க, வீட்டை விட்டு ஓடிப்போகும் அவனை எப்படி எதிரியான பாலச்சந்தர் எடுத்து வளர்ப்பார்?.
இப்படி பல கேள்விகள். படத்தில் வரும் பையன் அர்ஜுன் அசத்துகிறான். டீச்சருடன் வரும் போதும், பாரதிராஜாவிடம் என்ன தோழரே எனும் போதும், க்ளைமாக்சில் பாலசந்த்ரிடம் நீ செத்து போ தாத்தா எனும் போது அட்டகாச படுத்துகிறான்.
இயக்குனர் தாமிரா பாலசந்தரின் சீடர் என்பதை ஆங்காங்கே வரும் வசனங்களிலும், காட்சியமைப்புகளிலும் தெரியபடுத்துகிறார். ”உசிரவிட பிடிச்சிருக்கு” ”2011ல நாம தான்யா..” “சேரன்மாதேவியின் முதல்வரே” “பூர்ஷ்வா” வை பற்றிய விளக்கம் கூறும் காட்சி. முக்கியமாய் ஒரு குட்டி பெண்ணுக்கு குஷ்பு என பெயர் வைத்து அவர் எப்போது பேசினாலும் நீ பேசாதே என்று சொல்ல, ஏன் என்று கேட்டால் நீ பேசினாலே பிரச்சனை ஆகிடுது. என்பதும். கோயிலுக்குள் போகும் போது கும்பலில் ஒரு சிறுவன் “ஏய் குஷ்பூ செருப்ப வெளிய விட்டு வா.. இல்லாட்டி அதுக்கு ஒரு பிரச்சனை ஆகப் போவுது போன்ற வசனங்கள் பாலசந்தர் டச். மற்றபடி முதல் பாதி மிகப் பெரிய கொட்டாவி.. சும்மா இழு இழுவென இழுக்கிறது. பின்பாதியில் சீரியஸாய் கதை சொல்கிறேன் என்று ப்ளாஷ்பேக், அதற்கான போராட்டம் என்று தடால் புடால் என சீன்களை வைத்திருக்கிறார்கள். முதல் பாதி காமெடியும் ஏறாமல், இரண்டாம் பாதி சீரியஸும் ஏறாமல் ஒரு மாதிரி குழப்பியடித்திருக்கிறார்.
நடிப்பு எனும் பட்சத்தில் பாலசந்தரை பற்றி ஏதும் சொல்ல முடியாது. நிறைய நாடகத்தனம்தான் தெரிகிறது. நாகேஷ் தெரிகிறார். முகத்தின் மீசையே பாதி கெடுத்துவிடுகிறது. பாரதிராஜா அஞ்சலியிடம் பேசும் காட்சியிலும் க்ளைமாக்ஸிலும் ஸ்கோர் செய்துவிடுகிறார். அஞ்சலி அழகாய் இருக்கிறார் கொஞ்சம் குண்டடித்திருக்கிறார். புது கதாநாயகனுக்கு அச்சுபிச்சு காதலன் வேடம். அதை செவ்வனே செய்திருக்கிறார். அழகம் பெருமாள் வேறு நடுவே வந்து மலையாளம் பேசிவிட்டு போகிறார். கருணாஸ் மீண்டும் அபூர்வ சகோதரர்கள் போலீஸ் மேட்டரை ஆங்காங்கே எடுத்துக் கொண்டு நெளிய வைக்கிறார். சில இடங்களில் சிரிக்கவும் வைக்கிறார்.
படத்தில் பாராட்டபடவேண்டிய இருவரில் ஒருவர் ஒளிப்பதிவாளர் செழியனும், இசையமைப்பாளர் கார்த்திக் ராஜாவும். முதலாமவர் உறுத்தாத ஒளிப்பதிவை தந்திருக்கிறார் என்றால், பின்னவர் மிக அருமையான பின்னனி இசையை அளித்திருக்கிறார். பாடல்களில் பெருசாய் ஏதும் ஈர்க்கவில்லை என்பது வருத்தமே
மிகவும் எதிர்பார்த்திருந்த படம் மொக்கையாகிவிட்டதே என்ற வருத்தம் என்னைப் போலவே தியேட்டரில் படம் பார்க்க வந்திருந்த சொற்ப்ப பேர்களுக்குள்ளும் உலவியது. படத்தின் ரிசல்டை குறிக்கும் குறியீடாகத்தான் எடுத்துக் கொள்ள வேணும்
ரெட்டச்சுழி = சுழி………..ம்ஹும்.
டிஸ்கி: சாந்தமில் முதல் காட்சியின் போதுபடத்தில் நடித்திருந்த முக்கிய கதாபாத்திரமாய் வலைய வரும் சிறுவன் அர்ஜுனுடனும்,(நிஜமாகவே செம ஸ்மார்ட் பையன்) மற்றும் சிறுவயது பாரதிராஜாவாக நடித்தவர்களின் குடும்பத்தினர்களுடன் மற்றும் சில நடித்தவரக்ளுடன் படம் பார்த்தேன். நடிகர் அபிஷேக், சாய்ராம் போன்றவர்கள் வந்திருந்தார்கள்.
டிஸ்கி: சாந்தமில் முதல் காட்சியின் போதுபடத்தில் நடித்திருந்த முக்கிய கதாபாத்திரமாய் வலைய வரும் சிறுவன் அர்ஜுனுடனும்,(நிஜமாகவே செம ஸ்மார்ட் பையன்) மற்றும் சிறுவயது பாரதிராஜாவாக நடித்தவர்களின் குடும்பத்தினர்களுடன் மற்றும் சில நடித்தவரக்ளுடன் படம் பார்த்தேன். நடிகர் அபிஷேக், சாய்ராம் போன்றவர்கள் வந்திருந்தார்கள்.
Comments
சீரியஸான காமெடி படமா? காமெடியான சீரியஸ் படமா?
பிரபாகர்...
ரெண்டு பெரும் வெறும் குன்றுகூட இல்லை என நேற்று பிரபஞ்சன் சொன்னார்.
உண்மைதான் போல, காசு மிச்சம் தல
தாமிரா நல்ல சிறுகதை எழுத்தாளர்.
என்ன செய்வது தவறான choice?
:))
போச்...
//
யோவ் சஞ்சய் மாமா, இந்தாளை ஓட்டுறதுன்னா இப்பகூட ஓட்டலாம். இவர் படம் பண்ணிதான் ஓட்டனும்னு அவசியம் இல்லை :))
ரெண்டு பெரும் வெறும் குன்றுகூட இல்லை என நேற்று பிரபஞ்சன் சொன்னார்.
KRP senthil நான் சொல்லனும்னு நினச்சேன். நீங்க முந்திட்டீங்க.
//ரெண்டு பெரும் வெறும் குன்றுகூட இல்லை என நேற்று பிரபஞ்சன் சொன்னார்.//
சிங்கப்பூராமாம்!!!
நான் அதற்கு ரெடியாகத்தான் இருக்கிறேன். :)
madhumidha
madhumidha1@yahoo.com
--
அட.. ஒழுங்கா படிங்க மாமு.. கேபிளை ஓட்டணும்னா எப்போ வேணா நாமளே ஓட்டலாம்.. உங்கள வச்சியே பாட்டுக் கூட பாட வைக்கலாம்.. :) ஆனால் ஒர் படம் ஓடனும்னா கேபிள் இயக்கனும்னு சொல்றேன் :)
ரெட்டசுழி விமர்சனம்- பட்டய கிளப்புது
கொஞ்சம் கூட சீரியஸ்னெஸ் இல்லை. அப்படி காமெடி படம் தான் என்றால் அதிலும் சீரியஸ்னெஸ் இல்லை."
படத்தின் பலவீனத்தை இதை விட சுருக்கமாக சொல்ல முடியாது...
சில அன் லக்கி பதிவர்கள், இந்த படத்தை தூக்கி வைத்து கொண்டாடுவது, அவர்களுக்கு சினிமாவும் புரியவுல்லை, மக்களின் ரசனையும் புரியவில்லை என உணர்த்துகிறது
ஒரு முறை பார்க்கலாம் அல்லவா அல்லது முடியாதா........
இமயம், சிகரம் என்று பாரபச்சம் இல்லாமல் விமர்சனம்
anbudan
ram
www.hayyram.blogspot.com
//
யோவ் சஞ்சய் மாமா, இந்தாளை ஓட்டுறதுன்னா இப்பகூட ஓட்டலாம். இவர் படம் பண்ணிதான் ஓட்டனும்னு அவசியம் இல்லை :))
// ரிப்பீட்டு.!! விமர்சனம் கச்சிதம்.!!
http://www.aathi-thamira.com/2010/04/blog-post_25.html
எனக்கும் அதே கேள்விதான் முருகன்
-
DREAMER
சீரியல் படம்
:)
'இன்னிக்கு காலைல டைரக்டரே இசையருவில சொன்னாரு இது முழுக்க முழுக்க காமெடி படமாம்'
ஆமாம்..
@கலாநேசன்
அப்படின்னா..அது இன்னும் ரொம்ப கொடுமை..
@கோவி.கண்ணன்
:)
என் மேல் வைத்திருக்கும் நம்பிக்கைக்கு நன்றி அனுஷா..
முயற்சி செய்யுறேன்.
பிரபஞ்சன் சொன்னதை நான் எதிர்கிறேன். நிச்சயமாய் அவரக்ள் இருவரும் ஒரு மைல்ஸ்டோன்கள் தமிழ் சினிமாவில்
ஆமாம் தாமிரா நல்ல் எழுத்தாள்ர்தான்..
ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு ரசனை.. நான் வெகுஜன ரசனைக்காரன்..:)
"ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு ரசனை.. நான் வெகுஜன ரசனைக்காரன்..:)"
சிலர் தனக்கு பிடிகிறது என்று மட்டும் சொல்லாமல், மற்றவர்களுக்கும் பிடிக்கும் என தவறாக கணித்து இருப்பதைத்தான் சுட்டி காட்டினேன்...
நீங்கள் சில கோமாளி எழுத்தளர்களின் ரசிகர் என்ற போதிலும், வெகுஜன ரசனையை தக்க வைத்து கொண்டு இருப்பது பெரிய விஷயம்....
எனக்கு படம் பிடிக்கவில்லை, கூட வந்தவர்கல் யாருக்கும் பிடிக்கவில்லை.... அனால் ஏன் பிடிக்கவில்லை என சரியாக சொல்ல முடியவில்லை.... ஏதோ குறைகிறது என்று மட்டும் புரிந்தது....
நாங்கள் ( ரசிகர்கள் ) என்ன சொல்ல நினைத்தோமோ ( அனால் சொல்ல தெரியவில்லை ) , அதை அருமையாக சொல்லி இருக்கிறீகள்...
//
அது யாருங்க? நான் ஒரே எழுத்தாளருக்குத்தான் ரசிகன், விசிறி, வெறியன் எல்லாம். அது சுஜாதா.. அவரை நீங்கள் கோமாளி என்று சொல்ல மாட்டீர்கள் என்று நம்புகிறேன்.:)
நன்றி பார்வையாளன் அவர்களே
//
அதென்னவோ கரெக்டுதான். ஒரு வேளை பாரதிராஜா நடிச்ச கல்லுக்குள் ஈரம் படம் ஓடியிருந்ததுன்னா, அதுக்கப்புறம் அவர் தான் அலைகள் ஓய்வதில்லை ஹீரோன்னு சொல்லி நடிச்சிருப்பாரு..:)
ச்சே,,ச்சே ..அவரை அப்படி சொல்ல முடியுமா.... நமக்கெல்லாம் அவரு வாத்தியார் ஆயிற்றே !!!..
ஆனா, சுஜாதா அளவுக்கு பிரபலமா இருக்குரதகவும், சுஜாதா புத்ததக விற்பனையை மிஞ்சி விட்டதாகவும், ஒருத்தர் சொல்லிக்கிட்டு இருக்காரே.. அவரைத்தான் ,கோமாளி எழுத்தாளர்னு ( நன்றி : ஞானி ) சொன்னேன்,,,
நம்ம கேபிள் அண்ணாச்சி, திரைப்பட இயக்குனர் ஆன பிறகும், இதே வெகுஜன ரசனையை தக்க வைத்துகொள்வார் என்றும், நம்மை எல்லாம் மொக்கை பதிவர்கள் என்றும் சொல்ல மாட்டார்னு நம்புறேன்
ஆமாம் தாமிரா நல்ல் எழுத்தாள்ர்தான்.//
Righttu..
10:21 AM//
உங்க நம்பிக்கையை காப்பாற்ற முயற்சி செய்கிறேன்.:)
புரளியெல்லாம் இல்லை நிஜம். படமோ, கதையோ, கட்டுரையோ, வெளியிட்டுவிட்டால் யார் வேண்டுமானாலும் விமர்சிக்க தகுதியிருக்கிறது என்ற நம்பிக்கை உள்ளவன் நான்.:)
Neeinga Sonna mathri they are just Milestones ...! Not An Everest !!! They are still in 20th century ! Avangala Soli Kutham Illai but our tastes have changednu dhaan sollanum !
இன்றைய தேதியில் எந்த சினிமாவும் சொல்லிக் கொள்கிற மாதிரி இல்லை... அப்படியே புரட்சியில் திளைத்து வரப் போகும் படங்களால் இந்த மக்களும் திருந்தப் போவதில்லை..
ஆக குறைகளை சம்மந்தப்பட்டவரிடம் சொல்லுங்கள்..நிறைகளை மட்டும் வெளியே சொல்லுங்கள். தோற்றவனை கேலி செய்யும் இதே சினிமாதன் ஜெயித்தவனை தூக்கி கொண்டாடும்.. ஆக காலம் எப்படி வேண்டுமானாலும் மாறும்..