Thottal Thodarum

Apr 7, 2010

ஏர்டெல் கொள்ளை

 airtel_logo  இரண்டு கம்பெனி, மூன்று கம்பெனி என்று இப்போது, ஏர்டெல், ஏர்செல், வோடோபோன், ரிலையன்ஸ், டோகோமோ, எம்.டி.எஸ், யுனிநார், என்று ஜி.எஸ்.எம்மிலும், சிடி.எம்.ஏ டெக்னாலஜியிலும் நிறைய மொபைல் சர்வீஸ் கொடுக்கும் கம்பெனிகள் வந்தாலும் நமக்குதான் விடிய மாட்டென் என்கிறது.
mts-logo

அளாளுக்கு போட்டி போட்டுக் கொண்டு அந்த ஸ்கீம், இந்த ஸ்கீம் என்று அறிவித்தாலும் எல்லோரும் பேசி வைத்துக் கொண்டு ஒரே கணக்கை மாற்றி மாற்றி காட்டுகிறார்கள் அவ்வளவுதான் அது போஸ்ட்பெய்ட்டாக இருந்தாலும் சரி. ப்ரிபெய்ட்டாக இருந்தாலும் சரி. எல்லாம் ஒரே கணக்குத்தான். சரி பண விஷயத்தை விடுவோம். 
tata-docomo ஆனால் கஸ்டமர் சர்வீஸ் விஷயத்தில் மட்டும் ஒரு சில நிறுவனங்கள் பரவாயில்லாமல் இருந்தது. அதில் ஒன்று ஏர்டெல் அதுவும் கூட என்னை பொருத்த வரையில் என்று தான் சொல்வேன். ஏனென்றால் சில பேருக்கு ஏர்டெல்லில் கூட பிரச்சனையிருப்பதாய் சொல்லி கேள்விப்பட்டிருக்கிறேன்.
இவர்களின் சர்வீஸை பற்றி புகழ் பாடிக் கொண்டிருந்த எனக்கு அவர்கள் செய்திருந்த ஒரு விஷயம் கடும் கோபத்தை ஏற்றிவிட்டது. என்னுடய போனில் மொபைல் இண்டெர்நெட் வேலை செய்ய வில்லை அதற்காக, அவர்களுடய கஸ்டமர் கேர் நம்பரான 121க்கு போன் செய்தேன் வழக்கமான ஆட்டோமேட்டட்வாய்ஸில் ஒன்னை அழுத்து, இரண்டை அழுத்து என்று எலலாவற்றையும் ஒரு இரண்டு நிமிடங்களுக்கு அழுத்தி விட்டு கடைசியாய் கஸ்டமர் கேர் ஆளிடம் பேச வேண்டும் என்று 9 ஐ அழுத்தினால், ஒரு அறிவிப்பு வ்ந்தது. இனி பேசும் ஒவ்வொரு 3 நிமிடங்களுக்கு 50 பைசா கணக்கில் சேர்க்கப்படும் என்ற அறிவிப்புதான்.
Aircel-Logo

ஒரு கஸ்டமருக்கு ஏதாவது ஒரு பிரச்சனை என்றால்தான் போன் செய்யப்போகிறான் அப்படி பிரச்சனையை சொல்லவே காசு பிடுங்க ஆரம்பித்தால் என்ன அநியாயம்?. பகல் கொள்ளையாக அல்லவா இருக்கிறது. இதை விடக்கூடாது என்று மேற்கொண்ட காலை தொடர்ந்தேன். ஒரு சில நிமிடங்களுக்கு பின் ஒரு கஸ்டமர் கேர் ஆள் லைனில் வர, எப்படி நீங்கள் சர்வீஸ் கால்களுக்கு சார்ஜ் செய்ய முடியும் அதுவும் உங்கள் நெட்வொர்க் போனிலிருந்து கூப்பிடும் போதே? என்று கேட்ட போது கொஞ்சமும் பதட்டப்படாமல் “ஆமாம் மாற்றி ஒரு மாதமாகிவிட்டது. “ என்றார் தெரிமுனை. “யாரை கேட்டு செய்தீர்கள். இது பற்றி நீங்கள் எங்களுக்கு அறிவித்தீர்களா..? கண்ட கருமாந்திரத்துக்கெல்லாம் எஸ்.எம்.எஸ் அனுப்புகிறீர்களே.. இதையும் ஒரு எஸ்.எம்.எஸ் அனுப்பி தொலைத்திருக்கலாமில்லையா..?” என்றேன் கோபத்தோடு. எதிர்முனை இன்னமும் அமைதியாய் “அறிவித்தாகிவிட்டது சார். பேப்பரில் சின்ன விளம்பரம் போட்டோமே..?” என்றார். எனக்கு இன்னும் கோபம் ஏறிவிட்டது “ஏன்யா புது ஆபர்.. விலை ஏறுகிறது என்றால் பத்து தடவை அனுப்புகிறீர்கள். இம்மாதிரியான விஷயஙக்ளுக்கு மகக்ளிடம் எதிர்ப்பு வரும் என்பதால் பேப்பரில் சின்ன விளம்பரமா..?” என்றதும் “சார். நாங்க டிராய் கிட்ட அனுமதி வாங்கிட்டு தான் செய்யறோம்.” என்றார்.
 uninor_logo எனக்கு இன்னும் பிரஷர் எகிறியது. டிராயின் ரூல்ஸ் என்ன தெரியுமா.? வாடிக்கையாளர்களுக்கு அவர்களுடய சர்வீஸிலோ, அல்லது அதற்கான பண விஷயமோ எதுவாக இருந்தாலும் கண்டிப்பாக ஒவ்வொரு வாடிக்கையளர்களுக்கு தெரிய படுத்த வேண்டும் என்ற ரூல்ஸ் இருக்கிறது என்று சொன்னதும். “இருங்க காலை என் ஆபீஸருக்கு மாற்றுகிறேன்” என்று என் லைனை ஹோல்ட் செய்யும் முன், “சார்.. 198 என்று ஒரு நம்பருக்கு போன் செய்தால் அதற்கு டோல் ப்ரீதான் என்றார்.

டிரான்ஸ்பர் செய்த கால் கட் செய்யப்பட்டது. இது வரை 28 நிமிடங்கள் நான் பேசியிருகிறேன். இவர்களுடய சர்வீசை குறை சொல்ல எனக்கு செலவு. அடுத்து 198க்கு போன் செய்தால் எடுத்தவுடன் அவர்களும் ஆட்டோமேட்டட் வாய்ஸில் நம்பர் அழுத்த சொல்லி மேலும் விவரஙக்ளுக்கு 121 ஐ காண்டேக்ட் செய்ய சொல்கிறார்கள். மறைமுகமாய் மீண்டும் அதே நம்பருக்கு அழைக்கச் சொல்லி பணம் பிடுங்கவே முயல்கிறார்கள். அதையும் தாண்டி வெயிட் செய்து கஸ்டமர் கேர் ஆளிடம் பேசிய போது இது டோல் ப்ரீதான் சார். அந்த நம்பரை பற்றி பேச நீஙக் அந்த நம்பரில் போன் செய்து கம்ப்ளெயிண்ட் செய்யுங்க்ள் என்றார். இங்கு பேசிய பிரகஸ்பதி.
vodafone-logo எப்படியெலலாம் மக்களிடம் கொள்ளை அடிக்கிறார்கள். இவர்களை கேட்க ஆளேயில்லையா..? ஏற்கனவே இருக்கும் ஸ்கிமை விட இன்னும் குறைந்த விலையில் ஸ்கீம் மாற்றினாலும் நாமாக கேட்டாலே ஒழிய அவர்கள் சொலல் மாட்டார்கள். வந்த வரைக்கும் லாபம் தானே. இப்படி கொள்ளையடிப்பதையே வழக்கமாய் கொண்டவர்களூக்கு கஸ்டமர் கேருக்கு போன் செய்பவர்களுக்கு சார்ஜ் செய்துவிட்டால் பிறகு எவனும் போனே செய்ய மாட்டான். கேள்வி எதுவும் கேட்க மாட்டான், அப்படியே கேட்டாலும் காசு கட்ட வேண்டும் என்று திரும்ப திரும்ப போன் செய்ய மாட்டான் என்று நினைக்கிறார்கள் போலும். இதை பற்றி ட்ராயும் கண்டு கொண்டதாய் தெரியவில்லை.

என்னால் முடிந்த்து அதே ஏர்டெல் 121க்கு STOP CHARGING FOR CUSTOMER CARE என்று ஒரு எஸ்.எம்.எஸ் அனுப்பியிருக்கிறேன். இதுவரை ஒரு பத்து மெசேஜ் அனுப்பியுள்ளேன். நீங்களும் ஒரு ஏர்டெல் வாடிக்கையாளராய் இருந்தால் உடனே 121க்கு SMS அனுப்புங்கள். இது டோல் ஃப்ரி நம்பர் தான். இவர்களுக்கு காட்டும் எதிர்ப்பு மற்றவர்களுக்கு ஒரு பாடமாய் அமையும்.

கேபிள் சங்கர்
Post a Comment

76 comments:

Punnakku Moottai said...

I am the first.

Punnakku Moottai said...

இப்படியெல்லாம் வரும்முன்னு தான் நான் BSNL வச்சிருக்கேன். சாப்பிட்டாலும் கவர்மெண்டு சாப்பிடட்டுமே. ஏதாவது ஒரு பகுதியாவது நல்ல திட்டத்துக்கு போகுமேன்னு ஒரு நப்பாசைதான்.

raja said...

என்னுடைய பி.எஸ்.என்.எல். நெட்வொர்க் கொடுங்கதையை சற்று கேளுங்கள். ஒரு எண்ணுக்கு போன் செய்ததும் எதிர்முனையில்
ஹலோ என்றதும் பட்டென்று அழைப்பு தூண்டிக்கப்படும் 49 பைசா அவர்களுடைய கருமாந்திர செலவுக்கு.. இப்படியாக பல நூறு ரூபாய்கள்.. மாவொயிஸ்ட்கள் ஏன் உருவாகிறார்கள என்று மிக சுலபமாக புரிபடுகிறது.. ஏனெனில் நான் மிக சாதாரணமாண சுயதொழில் செய்து பிழைப்பவன்.. இதற்காக யாரை கேட்பது என்று தெரியாமல் வெறியோடுதான் அலைகிறேன்..நான் ஒரு நிறுவனத்துக்கு பணத்தைக்கொடுத்து மன நிலை தவறும் வியாதியை வாங்கிக்கொண்டிருக்கிறேன்...

செல்ல நாய்க்குட்டி மனசு said...

பொறுப்பான பதில் சொல்ல வாடிக்கையாளருக்கு வசதியாக ஒரு சென்டர் வைத்து ஆட்களையும் வைத்திருக்கிறது BSNL
Transparent billing is the main aspect of BSNL.
They intimate the changes in the telephone bill itself.
இதையும் மீறி மற்ற கம்பெனிகளுக்கு மக்கள் செல்ல ஒரு காரணம் அலை வரிசையை சமமாக கொடுத்தது. குறைந்த சந்தாதாரர்கள் உள்ள கம்பெனி நிறைவான சேவை கொடுப்பது போல் ஒரு மாயை. That is because of the bandwidth shared by few customers rather than of the service.
சில தகவல்களை சொல்ல இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொள்கிறேன்.

பாபு said...

//இப்படியெல்லாம் வரும்முன்னு தான் நான் BSNL வச்சிருக்கேன். சாப்பிட்டாலும் கவர்மெண்டு சாப்பிடட்டுமே. ஏதாவது ஒரு பகுதியாவது நல்ல திட்டத்துக்கு போகுமேன்னு ஒரு நப்பாசைதான்.//

athe

Sureshkumar said...

ஏர்டெல் போன்றோர், மினிமம் மாதம் ஒரு குறிப்பிட்ட யுசெஜ் செய்தால், கஸ்டமர் கால்ஸ் சர்வீஸ் சார்ஜ் ப்ரீ என்று ப்ளேன் கொண்டு வருவார்கள். எப்படி அவர்கள் பணம் போட்ட டி கம்பெனிக்கு ஆப்ரிக்கா கம்பெனி மூலம் திருப்பி கொடுப்பது?

ஏர்டெல் பெங்களூரில் பதினைந்து நிமிடத்திற்கு மேல், கால் டிராப் ஆகிவிடும். அதனால் நான் வைத்திருப்பது வோடபோன் தான். வீட்டில் டாட இண்டிகாம், ஒரே நெட்வர்க் வேண்டாமே.

ப்ரீ பெயிடில் அவர்களுக்கு லாபம் இல்லை. அதனால் சார்ஜ் தான்! போஸ்ட் பைடில் சர்வீஸ் கால் இலவசம் என்று தான் சொல்கிறார்கள்.

நம்ம காசை பேங்கில் வைத்திருக்க நாம் சர்வீஸ் சார்ஜ் கொடுக்கும் கதை தான் இது. அமெரிக்காவில் டோல் ப்ரீயில் கூப்பிட்டாலும் ஒரு என்கொயரிக்கு ஒரு டாலர் சார்ஜ் செய்வார்கள், சிறு அக்கவுண்டிற்கு. டெக்சாஸ் பேங்கில் ஒரு அக்கவுன்ட் இன்றும் வைத்துள்ளேன், வருடம் ஐம்பது டாலர் மினிமம் மெயண்டைனன்ஸ் சார்ஜ் செய்கிறார்கள். ஆன் ஹோல்ட் அக்கவுன்ட் வைக்க வருடம் நூறு டாலர். அதற்கு இது பெட்டர்.

சிடிபேன்க்கில் ஒரு ஆயிரம் ருபாய் செக்கை நேரில் சென்று டெல்லர் மூலம் டெபாசிட் செய்தால், முந்நூறு ருபாய் ப்ளஸ் சர்வீஸ் டேக்ஸ் பனால். ஐ.சி.ஐ.சி.ஐ யில் நூற்றி ஐம்பது ப்ளஸ் சர்வீஸ் டேக்ஸ. சர்வீசுக்கே சர்வீஸ் டேக்ஸ். போனில் கூப்பிட்டு திட்டினால், வீட்டிற்கே ஒருவர் வந்து செக் வாங்கி செல்வார்.

Paleo God said...

ஓசில சிம் கொடுத்தாக்கூட நான் வாங்காத ஒரே கம்பெனி ஏர்டெல்தான் தல!.

மக்கள் தான் புறக்கணிக்கனும். ட்ராய்க்கு ஒரு மெயில் அனுப்புங்களேன்.

http://www.trai.gov.in/ConsumerInterest.asp

Nodal Offier/ Appellate Authority..

TAMIL NADU (Incl. CHENNAI)
(a) 198 (Toll Free) (b) For Chennai: PostPaid-9840012345,Prepaid-9840198401 (Toll Free from Airtel Mobiles in Home Network) ( c) For TN : PostPaid-9894012345,Prepaid-9894198941 (Toll Free from Airtel Mobiles in Home Network)

Nodal Officer;

Vasim Unissa Oceanic Towers, 8th Floor, 101 Santhome High Road, Chennai 600 028, Tamil Nadu Phone:9952434865,Fax:9840198600,E-mail:nodalofficer.tn@airtel.in

Appellate Authority:

Radhika Ramesh Oceanic Towers, 8th Floor, 101 Santhome High Road, Chennai 600 028, Tamil Nadu Phone:9940644865,Fax:9840198600,E-mail:appellate.tn@airtel.in

More Details:
http://www.trai.gov.in/sp/AIRTEL.pdf

தராசு said...

அண்ணே,

நாம இப்படி வேதனைப் பட்டு கத்திகிட்டே இருக்க வேண்டியதுதான். TRAI எல்லாம் ஒரு காமெடி பீஸுண்ணா, புண்ணாக்கு மூட்டை ....ம் ... கொஞ்சம் லாஜிக்

வரதராஜலு .பூ said...

செருப்ப கழட்டி அடிக்கனும் இந்த செல்போன் கம்பெனிகாரனுங்களை. இப்படியா கொள்ளையடிப்பானுங்க.

நானும் ஏர்டெல்தான். உங்க பதிவை படிக்கும்வரை 121-க்கு கால் செய்தால் சார்ஜ் என்பது எனக்குத் தெரியாது. சின்ன விளம்பரம் கொடுத்தா சரியாயிடுமாமா? நாயிங்க.

【♫ஷங்கர்..】 ™║▌│█│║││█║▌║ - உங்கள் தகவலுக்கு நன்றி. இப்போழுதே நானும் ஒரு கம்ப்ளெய்ன்ட் அனுப்புகிறேன்.

GNU அன்வர் said...

அது என்ன மாற்றி கணக்கு தயவு செய்து அதற்க்கு ஒரு பதிவு போட்டால் ன்றாக இருக்கும்

வால்பையன் said...

நல்ல ஒரு வக்கீல் கிடைத்தால் பொதுநல வழக்கு போடலாம்!

நாடோடி said...

இப்ப‌டியும் ஒரு ஏமாற்றா?.... த‌க‌வ‌லுக்கு ந‌ன்றி கேபிள்ஜி.. ஏன்னா நான் ப‌த்திரிக்கையில் அந்த‌ விள‌ம்ப‌ர‌த்தை பார்க்க‌வில்லை..

பனித்துளி சங்கர் said...

தகவலுக்கு நன்றி நண்பரே !

thanjai gemini said...

அட பாவிகளா ஏர்செல் தான் கஸ்டமர் கேர் காலுக்கு சார்ஜ் பண்றான்னு பாத்தா
ஏர்டெல்லுமா எல்லா பயலும் கூடி பேசிட்டு தான் கொள்ளை அடிக்கிறானுங்களா

செ.சரவணக்குமார் said...

நல்ல இடுகை கேபிள்ஜி. ஏர்டெல்ல ஒரு நாளைக்கு பத்து மெசேஜ் அனுப்பி சாவடிக்கிறானுங்க. இப்ப இதுக்கும் காசு பிடுங்க ஆரம்பிச்சுட்டானுங்களா? ரைட்டு, மெசேஜ் அனுப்பிடுறேன்.

விக்னேஷ்வரி said...

என்ன கொடுமை இது... விளம்பரங்களுக்கும், ப்ரோமோஷனுக்கும் செலவழிக்கும் காசில் கொஞ்சம் கஸ்டமர் சேடிஸ்ஃபேக்‌ஷனுக்கு உபயோகித்தால் புண்ணியமாகும்.

Anonymous said...

ஏர்டெல் கட்டணம் வாங்குவது தவறு என்பதை ஒத்துக் கொள்கிறேன்.

அதே சமயம், வண்டி பழுதாகி விட்டது. ஆள் அனுப்புங்க. என்று அழைத்துக் கிண்டல் செய்தால், அவர்களும் என்ன தான் செய்வார்கள்.

இனி, ஒரு மணித்துளிக்கு 3 ரூபாய் என்று கட்டணம் வசூலித்தால் இது போன்ற அனாமதேய அழைப்புகளைத் தவிர்க்கலாம் என நினைத்திருக்கலாம்.

Athisha said...

உங்களுக்கும் மொபைல் இன்டர்நெட் வேலை செய்யலையா? மீ டு டியர்

Sivakumar said...

அடப்பாவிங்களா! எப்படி எல்லாம் கொள்ளையடிக்கிறாங்க! உக்காந்து யோசிப்பாங்களோ!

இப்பவே எஸ் எம் எஸ் செய்றேன். வேற யார் செஞ்சீங்கப்பா?

சிவா

Premkumar Mani said...

ஏர்டெல் நிறுவனம் இப்படி ஏமாற்றி பொழப்பை நடத்துவைதை விட பிச்சை எடுத்து பொழைக்கலாம்.
தகவலுக்கு மிக்க நன்றி திரு.கேபிள் சங்கர் அவர்களே.

என்.கே.அஷோக்பரன் said...

ஸ்ரீலங்காவில இது கொஞ்சம் பரவாயில்லை. இங்கே 5 செல்பேசி வலையமைப்புக்கள் இருக்கிறது. பிரதானமானது டயலொக் மற்றும் மொபிடெல் (மொபிடெல் அரசாங்கத்தினது) டயலொக் தான் இதுவரை அதிக வாடிக்கையாளர்களைக் கொண்டியங்குகிறது - இவை வாடிக்கையாளரிடம் கஸ்டமர் கெயாருக்கு பேச கட்டணம் அறவிடுவதில்லை. இங்கும் எயார்டிடல் இருக்கிறது - ஆனால் அவ்வளவு பிரபலம் இல்லை. ஹட்ச் மற்றும் எடிசலாட் ம் உண்டு. எடிசலாட் கஸ்டமர் கெயாருக்குப் பேச நிமிடத்திற்கு 3 ரூபா அறவிடுகிறார்கள்.

நான் டயலொக் தான் பிரதானமாகப் பயன்படுத்துகிறேன், அவ்வப்போது ஏனைய வலையமைப்புக்களைப் பயன்படுத்திப் பார்த்ததுண்டு ஆனால் ஒன்று மட்டும் உண்மை இவர்கள் சொல்லும் ஒஃபர் எல்லாம் பொய்ப் பித்தலாட்டங்கள் தான் - கூட்டிக்கழிச்சுப்பார்த்தா எல்லாமே ஒரே கணக்குதான்!

Unknown said...

நம்ம வேலையத்தான் நேசிக்கணும், வேலைகொடுத்த கம்பனிய நேசிக்கிரதால வருகிற பதில்தான் இது! ஒரு நாள் இவர்களுக்கும் அந்த கம்பெனி ரிவீட் அடிக்கும்போதுதான் யோசிப்பாங்க!

பாலா said...

போன வாரம்தான் எனக்கு இந்த விசயம் தெரியும். போஸ்டுபெய்டு கனக்சனுக்கும் பணத்த புடுங்குறாங்க. ஆப்பிரிக்கா கமபெனி வாங்க அதிக பணம் கொடுத்தானுங்க. அத இப்படிதான் சரி கட்டுறனுங்க போல. என்ன கொடுமை சார் இது.

சண்முகா said...

Not only Aircel/Airtel , Vodafone also charging for customercare calls...

puduvaisiva said...

அட பாவிகளா இது என்ன? பகல் கொள்ளையா இருக்கு !

கேபிள் SMS அனுப்பியாச்சு

Unknown said...

தேவையான பதிவு ஜி. கடந்த முறை இந்தியா வந்தபோது வோடஃபோனின் ஜிபிஆர்எஸ் எனேபிள் செய்ததில் பில்லிங்கில் பல பிரச்சனைகள். எத்தனை முறை அழைத்துச் சொன்னாலும் திரும்பவும் அதே பிரச்சனை. தலையைச் சுற்றித் தூக்கிப் போட முடிவு செய்துவிட்டேன். ஒவ்வொருவரும் சொல்லும் பிரச்சனைகளைப் பார்க்கும்போது அடுத்து யாருடைய சர்வீஸை எடுப்பது என்பதே கேள்விக்குறி ஆகிறது

Jackiesekar said...

கேபிள் காலைல இருந்து டைப் செய்து போஸ்ட் செய்யும் சமயத்தில் கரென்ட் கட் போ்1ட் செய்து உங்கள் தளத்தை பார்த்தால் இங்கும் அதே புலம்பல் சேம் பிளட்..

குசும்பன் said...

//உங்களுக்கும் மொபைல் இன்டர்நெட் வேலை செய்யலையா? மீ டு டியர்
// என்னோட நோக்கியா 1100 மொபைலிலும் இன்டர்நெட் வேலை செய்யமாட்டேங்குது தோழர், அப்புறம் ஒழுங்கா அயன் செய்யும் பொழுது ஹீட்டும் டக்கு டக்குன்னு போய்விடுது, அப்புறம் துணியை எல்லாம் ஒழுங்கா துவைக்கமாட்டேங்குது தோழர் இந்த நோக்கியா 1100 என்ன செய்யலாம் கொஞ்சம் சொல்லுங்களேன். யாருக்கும் SMS அல்லது தந்தி அனுப்பி விளையாடலாமா?:))

Athisha said...

@குசும்பன்

எஸ்எம்எஸ் அனுப்பினா நீதி கிடைக்குமா தோழர்

Aba said...

இவங்கள திருத்த முடியாது சார். ஏன்னா இது இந்தியாவோட பண்பாடு, கலாச்சாரம்.

வால்பையன் said...

@ குசும்பன்

”அவரிடம்” கேட்டால் அழகிரி நம்பர் தருவார், எஸ்.எம்.எஸ் அனுப்புங்கள்!

உண்மைத்தமிழன் said...

எனது ஆழ்ந்த அனுதாபங்கள்..!

எல்லாருமே கூட்டுக் களவாணிகளாக இருக்காங்களே..!

கொள்ளையடிக்காதவன் யாராவது இருந்தா கை காட்டுங்க.. அவங்ககிட்ட போலாம்..!

M.G.ரவிக்குமார்™..., said...

கலைஞர் பிரதமருக்கு கடிதம் எழுதுன மாதிரி SMS அனுப்பனுங்கிறீங்க......பண்ணீருவோம்!......எவ்வளவோ பண்றோம்..இதப் பண்ண மாட்டோமா?

குசும்பன் said...

KVR2 said...

தேவையான பதிவு C, கடந்த முறை இந்தியா வந்த பொழுது GPRS எனேபிள் செய்ய படாத பாடு பட்டேன், கஸ்டம் கேருக்கு போன்செஞ்சாலு போகவில்லை, நானே நேரா போய் என்னாடா சர்வீஸ் கொடுக்குறீங்க என்று நல்லா நாக்கை புடுங்கிக்கிறமாதிரி நாலு கேள்வி கேட்டேன் C, மொபைலை வாங்கி பார்த்துட்டு கூடவே ஒரு 10 ரூபாய் டாப் அப் கார்ட் கொடுத்தான் அதுதான் என்ன எழவுக்குன்னே புரியல C. கொஞ்சம் அது ஏன்னு கேட்டு சொல்லுங்களேன்.

குசும்பன் said...

//அதிஷா said...
@குசும்பன்

எஸ்எம்எஸ் அனுப்பினா நீதி கிடைக்குமா தோழர்
//

நீதியோடு கூடவே ஒரு மணியும் கொடுப்பாங்க தோழர், அடுத்த முறை நீதி கிடைக்க மணி அடிச்சா போதுன். ஓடி வந்து நீதி கொடுப்பாங்க இல்லை என்றால் நம்மை குப்புற போட்டு தேரை மேலே ஏத்துவாங்க தோழர்.

Athisha said...

தேவையான பதிவு C..//


அதென்ன C , சி பார் கேட்டா?

வால்பையன் said...

இது புது சி,

மும்பை எக்ஸ்பிரஸ் படம் பார்க்கலையா?

குசும்பன் said...

//அதிஷா said...
தேவையான பதிவு C..//


அதென்ன C , சி பார் கேட்டா?
//

இல்லை தோழர், ஜீ வட மொழி சொல், அதுமட்டும் இல்லாமல் பையா இயக்குநர் லிங்கு சாமி கூட பையா விளம்பரத்தில் ஜீன்னு ஒரு படம் எடுத்ததையே தமிழ் மொழி ஆர்வத்தினால் அதை போடவில்லை.
நான் சுத்த அக்மார்க் தமிழ் வலைப்பதிவர் தோழர் ஆகவே வடமொழி சொல்லை உபயோகிப்பது இல்லை.

வடமொழி சொல்லை உபயோக்கிகாதோர் பேரவை-துபாய் கிளை

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

ivankalai seruppaala adikkanum boss

மதார் said...

//என்னுடய போனில் மொபைல் இண்டெர்நெட் வேலை செய்ய வில்லை அதற்காக, அவர்களுடய கஸ்டமர் கேர் நம்பரான 121க்கு போன் செய்தேன் வழக்கமான ஆட்டோமேட்டட்வாய்ஸில் ஒன்னை அழுத்து, இரண்டை அழுத்து என்று எலலாவற்றையும் ஒரு இரண்டு நிமிடங்களுக்கு அழுத்தி விட்டு கடைசியாய் கஸ்டமர் கேர் ஆளிடம் பேச வேண்டும் என்று 9 ஐ அழுத்தினால், ஒரு அறிவிப்பு வ்ந்தது. இனி பேசும் ஒவ்வொரு 3 நிமிடங்களுக்கு 50 பைசா கணக்கில் சேர்க்கப்படும் என்ற அறிவிப்புதான். //

எனக்கும் இப்படியே சொன்னாங்க , இப்போலாம் கொஞ்ச நாளா நானும் கஸ்டமர் கேர் ஆளுங்ககூட சண்டைதான் போடுறேன் . நெட் பயன்படுத்தாமலே சார்ஜ் பண்ணாங்க அதுக்கும் போன் பண்ணி திட்டினேன் . இல்லாத ஒன்ன நான் subscribe பண்ணதா சொன்னாங்க . நான் திட்டினா உடனே கால் கட் பண்ணிடுவாங்க . அப்புறம் மொபைல் ஆபீஸ் வொர்க் அகவே இல்ல . உங்களுக்கு வந்த அதே பிரச்னை 50 பைசா . அப்புறம் நான் பைசா செலவில்லாமலே மொபைல் ஆபீஸ் அக்டிவேட் பண்ணேன் . *121 # பண்ணுங்க .அதுல சில options வரும் . அதுவும் நேரிடையா நெட் option நமக்கு புரியும்படி இருக்காது other services ல வரும் . ஆனா அதுல இருக்குற ஒரு option தான் . அந்த நம்பர் பிரஸ் பண்ணா அடுத்தடுத்து options வரும் . செட்டிங்க்ஸ் அனுப்புவாங்க . எப்படி ? ஆனா நாம பேசினதும் உங்களுக்கு எங்கள் சேவை திருப்தியாய் இருந்ததா பிரஸ் Y /N என்று வருமே . நான் இதுவரை N தான் பிரஸ் பண்ணேன் . ரொம்ப நாளா யூஸ் பண்றேன் மாத்தவும் மனசு வரல . இதுவரை சண்டை போட்டே 80 ருபாய் வாங்கிருக்கேன் . ஒரு முறை 50 ருபாய் எடுத்துட்டாங்க 1 வாரம் சண்டை போட்டேன் . அப்புறம் 1 வாரம் பிறகு 50 பைசா கிரெடிட் ஆகுது tensionla புடிச்சு நல்லா கத்தின பிறகு 49 .50 மறுநாள் கிரெடிட் ஆனது . எவ்வளவு லொள்ளு பாருங்க .

Venkatesh R said...

செய்திக்கு நன்றி! நீங்க சொன்ன மாதிரி SMS அனுபியாச்சு

Thangavel Manickam said...

கேபிள் சங்கர் உங்களின் பதிவைப் பார்த்ததும் ஏர்டெல்லுக்கு அழைத்தேன். இன்று 2.40(07/04/2010) 121 எண்ணிற்கு எனது ஏர்டெல்லின் லேண்ட்லைன் நம்பரிலிருந்து அழைத்து விசாரித்தேன். ரம்யா என்ற பெண் பேசினார். லேண்ட்லைனிலிருந்து பிராடுபேண்ட் பிரச்சினை மற்றும் லேண்ட்லைன் தொடர்பாக பேசினால் அது இலவசம் என்றும் ஆனால் மொபைல் போன் பற்றிய விசாரனை என்றால் அது தனி டிபார்ட்மெண்ட் ஆகையால் அதற்கு கால் ஃபார்வர்ட் செய்தால்தான் சார்ஜ் ஆகும் என்றார். மேலும் மொபைலிலும் அதேதான் என்கிறார். எனக்கு ஒன்றும் புரியவில்லை. விளக்கமாக ஆதாரங்களுடன் பதிவிடவும். ஏர்டெல்லில் கஸ்டமர்கேர் சார்ஜ் செய்வது சட்டப்படி தவறானது. நடவடிக்கை எடுப்பது எப்படி என்றும் அதன் வழிமுறைகள் பற்றியும் எந்த வித செலவும் இன்றி ஏர்டெல்லின் இந்த கொள்ளையை தடுத்து விடலாம்.

அன்புடன்
தங்கவேல் மாணிக்கம்

Anonymous said...

Post Paid Bill-ல இதைவிட கொள்ளையடிகிறானுங்க கேபிள். Cheque Payment பண்ணினா, Clear ஆக லேட் ஆச்சு, அதனால 50 ரூபாய் லேட் பீஸ் சார்ஜ் பண்றானுங்க. என்னைக்கு செக் கிளியர் ஆச்சுனு Detail தரதில்ல.

ஆனால் Airtel Broadband-க்கு செக் கொடுத்தா உடனே Update ஆகுது. அதுக்கான Conformation Message வருது. அடுத்த பில் அனுப்பும் போது, நாம் கொடுத்த செக் தேதி, செக் நம்பர் எல்லாமே வருது.

Venkatesh R said...

தமிழ் நாட்டின் கிராமங்களுக்கு இன்றைய மின் தட்டுப்பாடு பற்றி எழுதினால் நன்றாக இருக்கும் நண்பரே!!!. ஏன் என்றால் இன்றைக்கு விவசாய்கள் மின் தட்டுப்பாடால் பெரும் அவதி படுகின்றனர்! விவசாய்களுக்குகாக குரல் கொடுப்போம்.

Arun said...

Hi Cableshankar,

I would just need to look at the latest TRAI directive which has approved the telephone service providers to charge customer service calls. The reasons cited are: 1) To support telephone service providers, whose margins hve been squeezed lately out of intense competition.
2) To discourage indiscriminate calling.

I would really expect a respectable blogger like you to keep abreast of all news items. I agree with service executives response, except the way your call was cut abruptly.

We need to take this up with TRAI. I hope TRAI will change or modify this particular directive soon.

dondu(#11168674346665545885) said...

என்னிடம் ஏர்டெல் அகலப்பட்டை இணைய இணைப்பு உண்டு.

நேற்று திடீரென ஃபோன் செய்து இரண்டு இலவச சிம் கார்டுகள் போஸ்ட் பெய்ட்-ல் தருவதற்காக என்னை தேர்ந்தெடுத்திருப்பட்டிருப்பதாக ஹைதை நம்பர் ஒன்றிலிருந்து ஃபோன் வந்தது. நானும் சரி என்று சொன்னேன். சிறிது நேரம் கழித்து சென்னை கிளையிடமிருந்து கன்ஃபர்மேஷன் கால் வந்தது. மாலை வருவதாக பேச்சு.

பிறகு எனக்கு ஏதோ சரியில்லையே எனத் தோன்ற, சென்னை ஆசாமிக்கு ஃபோன் செய்து மனதை மாற்றிக் கொண்டேன் என்றும் இலவச சிம் கார்டுகள் வேண்டாம் என்றும் ஃபோன் செய்து விட்டேன். ஹைதையிலிருந்து மறுபடியும் ஃபோன். உறுதியாக அங்கும் மறுத்து விட்டேன்.

இப்பதிவை பார்த்ததும் நான் செய்தது சரிதான் என நினைக்கிறேன்.

அன்புடன்,
டோண்டு

malar said...

இந்த் கொள்ளையை பற்றி முன்னே எழுதிவிட்டேன்.
உங்கள் தகவலுக்கு நன்றி....

பஸ் ஸ்டாப்,ஜன நடமாட்டம் அதிகம் உள்ள இடங்களில் ஏர்டெல் போடுமாட்டி
பிச்சை போடவும் என்று வைதால் நல்ல சில்லறை தேறும்...
செய்தாலும் செய்வார்கள்...

Thangavel Manickam said...

அருண் - ஏர்டெல் கஸ்டமர் கேரில் வேறாகவும், ஆனால் டிராய்யின் அறிவிப்பு வேறாகவும் இருக்கிறதே? எது உண்மையென்று தெரியவில்லையே? டிராயின் இந்தச் செயல் மக்கள் விரோதமானது. அத்தியாவசிய சேவையில் அக்கிரமமான வசூல் செய்யும் முறை. பத்திரிக்கைகள்தான் இதனை பெரும்பான்மையானவர்களின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும். செய்யுமா என்பது கேள்விக்குறி..

கோவி.கண்ணன் said...

இந்த தொழிலையாவது தமிழ்நாட்டின் பெரிய குடும்பம் விட்டு வைத்திருப்பதால் உங்களால் தெகிரியமாக குற்றம் சொல்ல முடிகிறது.

மொபைல் சர்வீஸ் இந்தியாவில் கொடுமை தான். காளை மாட்டிலும் பால்கரக்கும் கும்பல்கள் தான் நெடொர்க் நடத்துகிறார்கள் போலும்.

"உழவன்" "Uzhavan" said...

எல்லா பயல்களும் களவாணிப் பயலுகதான்..

kalil said...

எனது ஆழ்ந்த அனுதாபங்கள்..!


தல நானும் பதிவு எழுதலாம்னு இருக்கேன் .இங்க பாருங்க என் முதல் பதிவு
http://ethirvinaigal.blogspot.com/

kalil

kalil said...
This comment has been removed by the author.
Ravikumar Tirupur said...

பதிவை படித்தேன் சார்!
ஏழு வருடமாக ஏர்டெல் உபயோகிக்கிறேன். பதிவரொருவர் சொன்னதுபோலவே சேவையில் உள்ள குறைபாடுகளும்கூட கம்பெனி மேல் உள்ள கவர்ச்சியினால் கண்ணைமறைத்துவிடுகிறது. நாளாக,நாளாக இதையும் நாம் ஏற்றுக்கொள்வோம். தலையெழுத்து!
இந்த தனியார் கம்பெனிகள்ல் செய்வது வியாபாரம்,
பி.எஸ்.என்.எல் செய்வது சேவை.
பி.எஸ்.என்.எல்,லில் இதுபோன்ற பிரச்சனைகள் ஏற்பட்டால் அரசை கேள்வி?! கேட்கலாம்.
பி.எஸ்.என்.எல் போன்ற பொதுத்துறை நிறுவனங்கள் உள்ளபோதே இவ்வளவு செய்பவர்கள் அதுவும் தனியார்மயம் ஆகிவிட்டால் என்னவெல்லாம் செய்யமாட்டார்கள்!
பி.எஸ்.என்.எல், எல்.ஐ.சி, போன்றவற்றை தனியார்மயமாக்கும் முயர்ச்சிகள் ஒருபுறம் நடந்துகொண்டேவருகிறது.
இவையனைத்திற்கும் காரணகர்த்தா அரசின் தவறான பொருளாதாரகொள்கைகளே!
இவர்களை நொந்து என்னபயன்!?

நேசமித்ரன் said...

// நம்மை குப்புற போட்டு தேரை மேலே ஏத்துவாங்க தோழர்.//

Repeating ...

Ravikumar Tirupur said...

மெனக்கெட்டு கொள்கைக்காக பி.எஸ்.என்.எல் உபயோகித்தேன், ம்ஹும்.. சிலமாதங்களே தொடரமுடிந்தது.
இந்த தனியார் கம்பெனிகளால் கொடுக்கமுடிந்த,முடிகின்ற ஆபர்களை
பி.எஸ்.என்.எல் ஏன் கொடுக்கமுடியவில்லை?
இவையனைத்திற்கும் காரணகர்த்தா அரசின் தவறான பொருளாதாரகொள்கைகளே!

க ரா said...

என்னத்த சொல்ல. இவனுங்கள் என்ன பன்னுனா திருந்துவானுஙகன்னு தெரியலயே.

திருநெல்வேலி ஜங்ஷன் said...

செருப்ப கழட்டி அடிக்கனும் இந்த செல்போன் கம்பெனிகாரனுங்களை. இப்படியா கொள்ளையடிப்பானுங்க.-ஏர்டெல் நிறுவனம் இப்படி ஏமாற்றி பொழப்பை நடத்துவைதை விட பிச்சை எடுத்து பொழைக்கலாம்---

வரதராஜலு .பூ said...
vanuronline said...
eddu than air tell kku our telling.

Cable சங்கர் said...

/இப்படியெல்லாம் வரும்முன்னு தான் நான் BSNL வச்சிருக்கேன். சாப்பிட்டாலும் கவர்மெண்டு சாப்பிடட்டுமே. ஏதாவது ஒரு பகுதியாவது நல்ல திட்டத்துக்கு போகுமேன்னு ஒரு நப்பாசைதான்.
//

செஞ்சிட்டாலும் அட நீஙக் வேற

Cable சங்கர் said...

/என்னுடைய பி.எஸ்.என்.எல். நெட்வொர்க் கொடுங்கதையை சற்று கேளுங்கள். ஒரு எண்ணுக்கு போன் செய்ததும் எதிர்முனையில்
ஹலோ என்றதும் பட்டென்று அழைப்பு தூண்டிக்கப்படும் 49 பைசா அவர்களுடைய கருமாந்திர செலவுக்கு.. இப்படியாக பல நூறு ரூபாய்கள்.. மாவொயிஸ்ட்கள் ஏன் உருவாகிறார்கள என்று மிக சுலபமாக புரிபடுகிறது.. ஏனெனில் நான் மிக சாதாரணமாண சுயதொழில் செய்து பிழைப்பவன்.. இதற்காக யாரை கேட்பது என்று தெரியாமல் வெறியோடுதான் அலைகிறேன்..நான் ஒரு நிறுவனத்துக்கு பணத்தைக்கொடுத்து மன நிலை தவறும் வியாதியை வாங்கிக்கொண்டிருக்கிறேன்..//

என் நண்பர் ஒருவருடய பி.எஸ்.என்.எல் லைனுக்கு போன் செய்தால் இன்கம்மிங்காக இருந்தாலும் சரி அவுட் கோயிங்காக இருந்தாலும்சரி.. பத்து நிமிஷம் தான்.

Cable சங்கர் said...

/பொறுப்பான பதில் சொல்ல வாடிக்கையாளருக்கு வசதியாக ஒரு சென்டர் வைத்து ஆட்களையும் வைத்திருக்கிறது BSNL
Transparent billing is the main aspect of BSNL.
They intimate the changes in the telephone bill itself.
இதையும் மீறி மற்ற கம்பெனிகளுக்கு மக்கள் செல்ல ஒரு காரணம் அலை வரிசையை சமமாக கொடுத்தது. குறைந்த சந்தாதாரர்கள் உள்ள கம்பெனி நிறைவான சேவை கொடுப்பது போல் ஒரு மாயை. That is because of the bandwidth shared by few customers rather than of the service.
சில தகவல்களை சொல்ல இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொள்கிறேன்//


மேடம் எனக்கு தெரிந்து பி.எஸ்.என்.எல் கஸ்டமர் சர்விச்
பற்றி பாராட்டிய ஒரே ஆள் நீங்கதான்னு நினைகிறேன்.

Cable சங்கர் said...

@பாபு
அப்படியெல்லாம் நினைக்காதீஙக்..


@சுரேஷ் குமார்
எலலவற்றிக்கும் நாம் கேள்வி கேட்டால் நிச்சயம் பதில் கிடைக்கும்

@ஷங்கர்
நிச்சயம் அனுப்புகிறேன் தலைவரே

@தராசு

அப்படியெல்லாம் விட்டுற முடியாதுன்ணே

@வரதராஜுலு.பூ
நன்றி

@சிநேகன்
அது பற்றி எழுதினா பதிவு பத்தாது..:)

@வால்பையன்
இருந்தா சொல்லுங்களேன்

@பனித்துளி சங்கர்
நன்றி

@தஞ்சை ஜெமினி
எல்லோரும் கூட்டு சேர்ந்துதான் கொள்ளையடிப்பாங்க

@செ.சரவணக்குமார்
நிச்சயம்

2விக்னேஷ்வரி
அதானே

@வெயிலான்
எவனோ ஒருவன் செய்ததற்காக இவர்கள் சொலலாமல் கொள்ளாமல் விதிப்பதை எப்படி எடுத்துக் கொள்வது..

2அதிஷா
ஆமா ம்

@அப்பு சிவா
எல்லோரும்
ஒரு மெயில் கூட அனுப்புங்க

@வனுஆன்லைன்
நன்றி

@அசோக்பரன்
உங்களூரில் வருவதற்கு கொஞ்சம்லேட்டாகும். வேறு வழியில்லாம கொள்ளையடிகக் ஆரம்பித்தவுடன் ஸ்டார்ட் பண்ணிடுவாஙக்

Cable சங்கர் said...

@மைடியர் ப்ரெண்ட்
யாரை சொல்றீங்க

@பாலா
:(

@ஷண்முகா
எல்லாரும்கூட்டு களவாணிங்கதான்

2புதுவை சிவா
ஆமா

@கே.வி.ஆர்

எல்லோரும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்தான்

2ஜாக்கிசேகர்
சேம் ப்ளட்

2குசும்பன்
காமெடி..

@அதிஷா
நீயும் காமெடி...

@கரிகாலன்
நீங்கமேல பின்னூட்டம் போட்டவங்களை சொல்றீங்களா..

@வால்பையன்
எவரு அவரு.?

@உண்மைத்தமிழன்
நீ சொல்லேன்

@நேசன்
நன்/றி

Cable சங்கர் said...

@ரமேஷ் ரொம்ப நல்லவன்
:)
@மதார்
நம் உரிமைகளை கேட்டாலே நிச்சயம் பலன் கிடைக்கும் நேரமில்லை, யார் கேட்பார்கள என்று இருந்தால் நிச்ச்யம் வேலைக்காகாது..

2வெங்கடேஷ்
நன்றி

@தங்கவேல் மாணீக்கம்
தலைவரே.. மொபைலிலிருந்து மொபைல் பற்றிய குறைபாடுகள் சொல்வதற்கு கஸ்டமர் கேர் நேரடி ஆளுடன் பேச என்று சொன்னால் சார்ஜ் உண்டு. அதே 198ல் கிடையாது. அவர்கள் சார்ஜ் செய்கிறார்கள் இலலை அது இல்லை பிரச்சனை அதை கஸ்டமர்களீடம் அறிமுகப்படுத்தவேயில்லை டேக் தெம் க்ராண்டட் என்று அவர்கள் இஷ்டம் போல செய்லபடுவதுதான் அநியாயம்

@மணி
அதுக்கு தனி பதிவே போடணும்..

Cable சங்கர் said...

@அருண்
அப்படி காம்படீஷனில் என்ன சார்ஜஸ் குறைந்துவிட்டது. இதெல்லாம் கண் துடைப்பு வேலை. அவர்கள் ஓகே சொன்னாலும் கூட அதே ட்ராயின் ரூல்ஸ் படி ஒவ்வொரு கஸ்டமருக்கும் அவர்களூடய சார்ஜ் விஷயஙக்ள் மாறும் போது சொல்ல வேண்டியது அவர்களது கடமை.

நிச்சயம் ட்ராய் இதற்கு பதில் சொல்லியே ஆகவேணும்

@டோண்டு
ஏர்டெல் மட்டுமிலலை தலைவரே.. எல்லோரும் இதே கதிதான்

@மலர்
வாழ்த்துகக்ள்


@தங்கவேல் மாணீக்கம்
ஆமாம் ட்ராயே அதை செய்தாலும் நிச்சயம் நாம் விட்டுக் கொடுக்கக்கூடாது..

2உழவன்
:(

@

Cable சங்கர் said...

@கலீல்
வாழ்த்துகள் கலீல்

@ரவி திருப்பூர்
அரசை குறை கூறுவதை விட்டு விட்டு நாம் எல்லோரும் ஒன்று சேர்ந்து போராடினால் நிச்சயம் விடிவு கிடைக்கும்


@நேசமித்ரன்
:0

2இராமசாமி கண்ணன்
:(

@மிஸ்டர் இட்லி
:(

Thilak said...

இனி அவர்களே நமக்கு சர்விஸ் sms அனுப்பி அதற்கும் சார்ஜ் செய்வார்கள்.. நீங்கள் பெரும் ஒவ்வொரு sms க்கும் 10 பைசா

Shanmugam said...

Hello Canble Ji
Once before some months all the network operators took a survey about the customer calling facility. In that survey they found that the top 10 queries are including more crank calls[not necessary or mokkai]. So all are decided to get ride that by charging the calls.

By their side they made a big mistake
"They wont properly inform to their customers "

All is Well
Thanks for sharing.
S.Selvamani

மரா said...

எல்லா செல்போன் கம்பெனிகளும் இந்த வேலைய ஆரம்பிச்சு ரொம்ப நாளாச்சு...என் செய்ய?

பா.வேல்முருகன் said...

121 க்கு மெசேஜ் அனுப்புனோம்னா, நம்ம கட்டை விரல் தேயுரதுதான் மிச்சம் பாஸ்.

ஆடோமேடேட்சர்வீஸ்.

புரியற மாதிரி இல்லேன்னா அதுபாட்ல மெசெஜ டெலீட் பண்ணிட்டே இருக்கும். பாதிக்கப்பட்ட எல்லாரும், ட்ராய் க்கு மின்னஞ்சல் அனுப்பறதுதான் சரியா இருக்கும்னு நினைக்கிறேன்.

moe said...

Irate Customers should start a Blog or Facebook fan page or Twitter account. They will listen.

Amudhavan said...

நம்பியவர்களிடம் கொள்ளையடிப்பது என்பது இப்படித்தான். இதற்கெல்லாம் முடிவு கட்டுவதற்கு ஒரு பொதுக்கருத்தை ஏற்படுத்துவது முக்கியம். பிஎஸ்என்எல்லின் இன்னொரு கொள்ளையைப் பற்றி நான் என்னுடைய பதிவில் எழுதியிருக்கிறேன். இங்கேதான் இப்படி வெளிநாடுகளில் இப்படியெல்லாம் ஏமாற்றுவார்களா என்று பார்த்தோமானால் பல வெளிநாட்டுக்கம்பெனிகளும் இதையே செய்கிறார்கள் என்பது கொடுமையாய் இருக்கிறதே. என்னுடைய பதிவுக்கு http://amudhavan.blogspot.com

Rajesh V Ravanappan said...

http://www.whereincity.com/news/2/14622

Be aware about ombudsman, it will be useful for all customer grievances

R John Christy said...

Now Vodafone also charging customers for calling it's call center.

DREAMER said...

கேபிள்ஜி,
வாஸ்தவமான புலம்பல், இது தேவையான பகிர்வுதான்..! இதே போல் ஏர்டெல் நெட்வொர்க்கின் கசப்பான அனுபவம் என் நண்பருக்கும் நடந்திருக்கு சார்..! நீங்க சொன்ன அத்தனையும் உண்மை, நாளேக்கு முதல் வேலையா அவர் ஃபோனை பிடுங்கி, அந்த 121 நம்பருக்கு SMS அனுப்புறேன்..! நான் வோடாஃபோன் நம்பர் வச்சிருக்கேன். அது என்னிக்கி பிரச்சினை பண்ணப்போகுதோ..!

-
DREAMER

Unknown said...

உங்கள் தகவலுக்கு நன்றி. இப்போழுதே நானும் ஒரு கம்ப்ளெய்ன்ட் அனுப்புகிறேன்

Anonymous said...

நான் reliance, hutch இரண்டிலும் வேலை பார்த்திருக்கிறேன்.சுமார் 60% மேலான customer care call அனைத்தும் வீணானது. இலவசம் என்பதால் பொழுதுபோக்குக்காக தொடர்பு கொண்டு கடுப்பு ஏற்றுவார்கள்.எல்லா customer care executive களும் வாடிக்கையாளர்களின் பேச்சால் மன அழுத்தத்திற்கு ஆளாகிறார்கள்.குறிப்பாக பெண்களிடம் மிக தவறாக பேசுவார்கள் , அவர்கள் அழுவதை பல முறை பார்த்திருக்கிறேன்.sadist போலவே பேசி நாங்கள் பதிலுக்கு திட்ட முடியாததால் அதை கண்டு ரசிப்பார்கள். பலர் மன அழுத்தம் தாங்காமல் வேலையை விட்டு சென்று விடுவார்கள்.சூடு சுரனை இல்லாதவர்கள் மட்டுமே customer care executive ஆக வேலை செய்ய முடியும்.நாங்களும் மனிதர்கள் என்று நினைக்காமல் அவர்கள் பேசுவதை சொன்னால் உங்களுக்கே இப்போது செய்திருக்கும் செயலின் நியாயம் புரியும். airtel மட்டுமல்ல எல்லா நிறுவனங்களும் இதை செய்திருக்கின்றன.