Posts

Showing posts with the label Neram

கொத்து பரோட்டா-08/04/13

Image
கேட்டால் கிடைக்கும் குழுமத்திலிருந்த ஒர் நண்பர் எனக்கு போன் செய்து அவருடய ஏரியாவில் ஒர்  பிரச்சனை என்றும், அதற்காக போராட வர வேண்டும் என்று சொன்னார். அவரின் பிரச்சனை கார்பரேஷன் மேட்டர். நான் அவரிடம் என் வேலையைப் பற்றி சொல்லிவிட்டு, இதை நீங்களே பார்த்துக் கொள்ள முடியுமென்று எப்படி செய்ய வேண்டுமெனவும் சொன்னேன். அவர் திட்ட ஆரம்பித்துவிட்டார். சும்மா குழு என்று ஆரம்பித்து ஒரு பிரச்சனைன்னா வர மாட்டேன் என்கிறீர்கள் என்றார். அவருக்கு எப்படி புரிய வைப்பது என்று தெரியவில்லை. அவர் கோபமெல்லாம் அடங்கியவுடன் இதற்கு முன் இம்மாதிரியான ப்ரச்சனைகள் வரும் போது என்ன செய்தீர்கள்? என்று கேட்டேன். சற்றே யோசித்து என்ன பண்றதுன்னு புரியாம கேட்காம விட்டிருவேன். என்றார். ஆனா இப்ப மட்டும் ஏன் கேட்கணும்னு நினைக்கிறீங்க? என்று கேட்டேன். இப்போது யோசிக்காமல் அதான் குழுவில் போடும் செய்திகளை எல்லாம் படிக்கிறேன் இல்ல.. கேட்டாத்தான் கிடைக்கும்னு சொல்றீங்க.. அப்படி கேட்டு கிடைச்சவங்க அனுபவங்கள் இருக்கு. அதுக்கும் மேல ஏதாவது சந்தேகம்னா உடனே அதுக்கு என்ன செய்யணுங்கிற் ஆலோசனை கொடுக்கிறாங்க.. அந்த தைரியத்துலதான் கேட்ட...