Posts

Showing posts with the label bramosthavam

கொத்து பரோட்டா - 23/05/16

Image
ஸ்கீரின் ப்ரெசென்ஸ் என்பது ஒரு வரம். ரஜினிக்கு, கமலுக்கு, அஜித்துக்கு, விஜய்க்கு என்று இருப்பது போல, டிவிக்களில் எஸ்.பி.பியின் ஸ்கிரீன் ப்ரெசென்ஸ் இன்ஸ்பயரிங் அண்ட் க்யூட் என்றே சொல்ல வேண்டும். மிக சுவாரஸ்யமாக, பேசக்கூடியவர். முடிந்த் வரை யாரையும் புண்படுத்தாமல், நகைச்சுவை இழையோட, மிகவும் தன்னடக்கத்தோடு பேசுவார். பாடுவார். மிமிக்கிரி செய்வார். அவருடய நாஸ்டால்ஜியா பயணங்கள் படு சுவாரஸ்யமாய் இருக்கும். இவரின் பேட்டிகளை பார்க்கும்போது மனதினுள் ஒரு விதமான பாஸிட்டிவ் வைப்ரேஷன் கிடைப்பதை மறுக்க முடியாது. அந்த வகையில் நடுநடுவே பாஸ்கியின் இடைச்சொருக இடைஞ்சல்கள் இருந்தாலும் அருமையான, சுகமான பேட்டி. டூ வாட்ச் இட்.