Posts

Showing posts with the label video blogging

வீடியோ ப்ளாகிங் மற்றும் ஆடியோ பாட் காஸ்டிங். - உங்கள் யுடான்ஸ் டிவியில்.

வீடியோ ப்ளாகிங். உட்கார்ந்து எழுத யோசிக்கும் பலருக்கு இது வரப்பிரசாதம். கம்ப்யூட்டரில் இருக்கும் வெப்கேம், மொபைல் போன் கேமராக்கள், காம்கார்டர்கள், இருந்தால் போதும் ஒரு ஐந்து நிமிட வீடியோவில் நீங்கள் மனதில் நினைத்ததை பேசி வெளியிட்டு விடலாம். யுடான்ஸ் டிவி ஆரம்பித்தவுடன் இதைப் பற்றி யோசித்துக் கொண்டிருந்தேன். இதற்கு முன்பே நம் பழம் பெரும் பதிவர் ஓசை செல்வா இணைய பேண்ட்வித், வீடியோ அப்லோடிங் சிரம்ங்கள் எல்லாம் இருந்த காலத்திலேயே சிறப்பான வீடியோ ப்ளாகிங் செய்தவர். இருந்தாலும் இன்றைய காலத்தில் எல்லாமே சுலபமாய் இருக்கும் வேளையில் ஏன் மீண்டும் நம் மக்களுக்கு அறிமுகப்படுத்தக்கூடாது என்று யோசித்ததில் வந்த எண்ணம்தான் இது. யுடான்ஸ் டிவியில் உங்கள் வீடியோ ப்ளாக்கிங்கை வெளியிடலாம்.