Posts

Showing posts with the label ஞாபகங்கள்

ஞாபகங்கள் - திரைவிமர்சனம்

Image
படம் ஆரம்பத்தில் தன் நண்பர் கதிரவனின் வாழ்க்கையில் நடந்த உண்மைகதை என்கிறார் பா.விஜய். ஆனால் படம் ரிதுபர்னோ கோஷின், ஐஸ்வர்யா, அஜய் தேவ்கன் நடித்து வெளிவந்த ரெயின் கோட் மறுபதிப்பு போல் இருக்கிறது. ஆங்காங்கே சின்ன சின்ன மாறுதல்களுடன். அந்த படமே ஓஹென்றியின் ஒரு சிறுகதையை தழுவி எடுக்கப்பட்ட படம். தேசிய விருது பெற்ற கவிஞர் ஹரித்துவாரில் தன்  பழைய காதலியை ஒரு மழை நாளில் பார்க்க போகிறார். வீட்டிற்கு வந்தவரை வாய் நிறைய வரவேற்று பேசியபடி தான் தன் வாழ்கையை பற்றியே அவனின் காதலி பேசிக் கொண்டிருக்க, இவனின் இன்றைய கவிஞர், தேசியவிருது பற்றி கொஞ்சம் கூட அறியாதவளாய் இருக்க,  ஒரு நேரத்தில் அவள் காய்கறி வாங்க போயிருக்கும் போது, வரும் ஒருவர் அவளின் கணவன் பெரிய டைமண்ட் வியாபாரியாய் இருந்ததாகவும், வியாபரத்தில் லாஸ் ஆனதால் தூக்கு மாட்டி இறந்து போய்விட்டதால், மிகப்பெரிய கடனில் அவள் இருப்பதாகவும், இந்த வீடும் அவளும்தான் பாக்கி அவளை எடுத்து கொண்டு, சின்ன வீடாய் வைத்து கொள்கிறேன் என்று கேட்டால் பதில் சொல்ல மாட்டேன் என்கிறாள் என்று சொல்லிவிட்டு சொல்ல, தன் காதலியின் அவலவாழ்வு தெரிந்து தன் தேசியவிருதைய...